செப்டம்பர் 16 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- சார்லஸ் ரிச்சர்ட் பீன் (Economist Charles Richard Bean Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- சார்லஸ் ரிச்சர்ட் பீன் – முனைவர் பு. அன்பழகன்

சார்லஸ் ரிச்சர்ட் பீன் (Charles Richard Bean) செப்டம்பர் 16, 1953இல் பிறந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் மற்றும் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதாரப் பேராசிரியர் ஆவார். புகழ்பெற்ற பொருளியல் அறிஞரான ராபர்ட் சோலேவிடம் தனது Ph.D.கான ஆய்வினை Essays in Unemployment and Economic Activity என்ற தலைப்பில் மேற்கொண்டார். அவர் பேரியல் பொருளாதாரம், பணவியல் கொள்கை மற்றும் பொதுக் கொள்கை ஆகியவற்றில் தனது பங்களிப்பு செய்தமைக்காகப் பெயர் பெற்றவர் ஆவார்.

ரிச்சர்ட் பீன், இங்கிலாந்து வங்கியில் பணவியல் கொள்கைக்கான துணை ஆளுநர் மற்றும் பிரித்தானிய அரசுக்கான வரவு-செலவு திட்டத் தயாரிப்பிற்கான உறுப்பினர் உட்படப் பல முக்கிய பதவிகளை வகித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் வேலையின்மை, பொருளாதார மற்றும் செலாவணி, பேரியல் பொருளாதாரம் குறித்த கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார். 1986 முதல் 1990வரை Review of Economic Studiesன் நிர்வாக ஆசிரியராக இருந்தார்.

சார்லஸ் பீன் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதாரப் பேராசிரியராகவும், Centre for Economic Policy Researchன் தலைவராகவும் உள்ளார். 2016 மற்றும் 2021க்கு இடையில், அவர் அரசுக்கான நிதிநிலை பொறுப்புக்கான அலுவலகத்தில் நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றினார். நிச்சயமற்ற பொருளாதார சூழல்களில் அவை எதிர்கொள்ளும் சவால்கள் உட்பட, மத்திய வங்கிகளின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து அவர் விரிவாக எழுதிப் பேசியுள்ளார்.

ஆதாரம்: www.cepr.org; www.economicsobservatory.com

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *