1. மோகன்லால் லல்லுபாய் தண்டவாலா (Mohanlal Lallubhai Dantwala) செப்டம்பர் 18, 1909இல் பிறந்து ஜனவரி 1, 1998இல் மறைந்த இந்திய வேளாண் பொருளாதார அறிஞர், கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார், பலராலும் இவரை இந்திய வேளாண் பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டார். தண்டவாலா மகாத்மா காந்தியின் நெருங்கிய சகாக்களில் ஒருவராக இருந்தார், மேலும் காந்திய நடைமுறை அறங்காவலர் கொள்கையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினை அளித்துள்ளார். அக்டோபர் 1952இல் ஹரிஜனில் என்ற பத்திரிக்கையில் இதற்கான திட்ட ஆவணத்தை தண்டவாலா வெளியிட்டார்.
1977ஆம் ஆண்டு இந்தியத் திட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்ட வட்டார அளவிலான திட்டமிடல் குறித்த பணிக்குழுவின் தலைவராக அவர் செயல்பட்டார், இது வட்டார நிலையில் சமூக-பொருளாதார திட்டமிடல் செயல்முறைக்கான அமைப்பு மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்தது. இந்தக் குழு பின்னர் (Dantwala Committee) தண்டவாலா குழு என்று அழைக்கப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முந்தைய பல தசாப்தங்களாக நாட்டின் வேளாண்-பொருளாதாரக் கொள்கை வகுப்பில் தண்டவாலாவிற்கு வலுவான சித்தாந்த செல்வாக்கு இருந்தது. வறுமை, வேலையின்மை மற்றும் வளர்ச்சியின் பிற இக்கட்டான சூழ்நிலைகள் குறித்த அவரது தொலைநோக்கு சிந்தனை, வளர்ச்சி செயல்முறையின் முழுமையான நிலைப்பாட்டினை முன்னெடுக்கச் செய்தது.
1960களின் மத்தியில் பசுமைப் புரட்சியினை அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, அதனை எதிர்த்து கருத்துகளைப் பதிவிட்டார். தண்டவாலா, பசுமைப் புரட்சியினை எதிர்த்து இது “பொருளாதார வல்லுநர்களின் ஞானத்தின் வெகுமதி அல்ல, அறிவியல் ஆராய்ச்சியின் வெகுமதி” என்று கூறினார். பின்னர், வேளாண் பொருட்களின் விற்பனை விலை ஆணையத்தின் முதல் தலைவராகச் செயல்பட்டு, கொள்கை வழிகாட்டுதல் மூலம் பசுமைப் புரட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பினை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.thankyouindianarmy.com; www.business-stann.com
****************************
2. ஜோசுவா ஆங்கிரிஸ்ட் (Joshua Angrist) செப்டம்பர் 18, 1960இல் பிறந்த இஸ்ரேலிய-அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், டச்சு-அமெரிக்கப் பொருளாதார நிபுணர் கைடோ இம்பென்ஸுடன் சேர்ந்து, தொழிலாளர் சந்தைகளில் Methodological contributions to the analysis of causal relationship (காரண உறவுகளின் பகுப்பாய்விற்கான வழிமுறை பங்களிப்புகளுக்காக) வழங்கியமைக்காக 2021ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார். புகழ்பெற்ற Massachusetts Institute of Technologhy (மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்)த்தில் ஃபோர்டு பொருளாதாரப் பேராசிரியராக ஆங்கிரிஸ்ட் பணியாற்றும்போது, இயற்கை சோதனைகளிலிருந்து தரவை விளக்குவதில் அவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டார். அவரது முன்னோடி ஆராய்ச்சி, நடைமுறையிலான உலக சூழ்நிலைகளில் காரண-விளைவு உறவுகளை நிறுவ ஆராய்ச்சியாளர்களுக்கு அடித்தளத்தை அமைத்தது.
கல்வி மற்றும் பள்ளி சீர்திருத்தத்தின் பொருளாதாரம், சமூகத் திட்டங்கள் மற்றும் தொழிலாளர் சந்தை, குடியேற்றத்தின் விளைவுகள், தொழிலாளர் சந்தை ஒழுங்குமுறை மற்றும் நிறுவனங்கள், திட்டங்களை மதிப்பிடுவதற்கான பொருளாதார அளவீட்டு முறைகள் மற்றும் கொள்கை மதிப்பீடு ஆகியவை ஆங்ரிஸ்ட்டின் முக்கிய குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி ஆர்வங்கள் ஆகும்.
ஆதாரம்: www.britannica.com; www.oberlin.edu
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

