1. மேக்ஸ் ஓட்டோ லோரென்ஸ் (Max Otto Lorenz) செப்டம்பர் 19, 1876இல் பிறந்து ஜூலை 1, 1959இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். சமூகத்தில் வருமானப் பகிர்வினை சித்தரிக்கும் ஒரு வழியாக Loewn Curve (லோரென்ஸ் வளைவை) அறிமுகப்படுத்தியதன் மூலம் மேக்ஸ் லோரென்ஸ் மிகவும் பிரபலமானவர் ஆவார். இது ஒரு சமூகத்தில் வருமானத்தின் வெவ்வேறு விழுக்காட்டினை, கீழிருந்து மேல் வரை, மக்கள்தொகையின் வெவ்வேறு ஒட்டுமொத்த விகிதாச்சாரங்களால் பெறப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. இது வருமான சமத்துவமின்மை அல்லது செல்வ சமத்துவமின்மையின் வரைபடம் மூலம் விளக்கப்படுவதாகும். வரைபடம் வருமானம் அல்லது செல்வத்திற்கு ஏற்ப கிடைமட்ட அச்சில் மக்கள்தொகையின் சதவீதங்களைக் காட்டுகிறது மற்றும் செங்குத்து அச்சில் ஒட்டுமொத்த வருமானம் அல்லது செல்வத்தைக் காட்டுகிறது. இத்தாலிய புள்ளியியல் நிபுணரான கேரடே கினி என்பவர் லோரென்ஸின் வரைகோட்டினை பயன்படுத்தி சமத்துவ நிலையினை விளக்கியுள்ளார். இதனை Gini coefficient (கினி கெழு) என அழைக்கப்படுகிறது.
ஆதாரம்: www.hetwebsite.net; www.investopedia.com; www.economicshelp.org
*********************************
2. ராபர்ட் ஜெல்வின் அலிபர் (Robert Zelwin Aliber) செப்டம்பர் 19, 1930இல் பிறந்து ஜனவரி 22, 2025இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார், இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதியினைப் பற்றிக் கற்பித்த பேராசிரியர் ஆவார். அந்நிய நேரடி முதலீட்டுக் கோட்பாட்டில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக அவர் மிகவும் அறியப்படுகிறார். அந்நிய நேரடி முதலீட்டில் Foreign Exchange Rate (அந்நிய செலாவணி விகிதம்) என்ற கருத்தை அவர் வழங்கியுள்ளார். செலாவணி விலைகள், சர்வதேச முதலீட்டு ஓட்டங்கள், வங்கி சிக்கல்கள், பன்னாட்டு நிறுவனங்கள், சர்வதேச பண ஏற்பாடுகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்து அலிபர் விரிவாக எழுதியுள்ளார். அவரது முதல் புத்தகம், Dollar as an International Currency, 1966இல் வெளியிடப்பட்டது.
நாடுகளுக்கு இடையேயான நிதி உறவுகள் மற்றும் நாடுகளுக்கு இடையேயான பணம், பத்திரங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் ஓட்டங்களை நிர்ணயிப்பவை ஆகியவற்றை மையமாகக் கொண்டு அலிபர் ஆராய்ச்சி அமைந்துள்ளது. அவர் Andy Warhol Theory of Economic Growth என்ற பொருளாதார வளர்ச்சிக்கான கோட்பாட்டை உருவாக்கினார். தொழில் மயமாக்கலின் தொடக்கக் காலத்தில் ஒவ்வொரு நாடும் பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் விரைவான வளர்ச்சியை அனுபவிக்கிறது என்று குறிப்பிடுகிறார். உள்நாட்டு சேமிப்புடன் ஒப்பிடும்போது முதலீட்டுச் செலவு அதிகமாக இருப்பதால், அவற்றின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் துரிதப்படுத்தப்படும்போது நிதி மூலதனம் நாடுகளை நோக்கிச் செல்கிறது. வளர்ச்சி விகிதங்கள் மெதுவாக இருக்கும்போது, அவற்றின் உள்நாட்டுச் செலவினங்களுடன் ஒப்பிடும்போது அதன் முதலீட்டுச் செலவு குறைந்துள்ளதால், இந்த நாடுகளிலிருந்து நிதி மூலதனம் செல்கிறது என்று அலிபர் குறிப்பிடுகிறார். எதிர்பார்க்கப்படும் பணவீக்க விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் எல்லை தாண்டிய பணப்புழக்கங்களின் திசையிலும் நோக்கத்திலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார்.
ஆதாரம்: www.chicagobooth.edu ; www.wilsoncenter.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

