ஜோன் கோஸ்டா-ஐ-ஃபாண்ட் (Joan Costa-I-Font) செப்டம்பர் 20, 1974இல் பிறந்த ஸ்பானிஷ்-பிரித்தானியப் பொருளாதார அறிஞர், இவர் லண்டன் பொருளாதார பள்ளியில் சுகாதார கொள்கை மற்றும் அரசியல் பொருளாதாரத் துறையின் தலைவராகப் பணியாற்றிவருகிறார். இத்துடன் Harvard University, Princeton University, Oxford University போன்ற பல்கலைக் கழகங்களில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார். உலக சுகாதார அமைப்பிற்கான ஆலோசகராகவும் (WHO) உள்ளார். சுகாதார பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார்.
கோஸ்டா-ஐ-ஃபாண்டின் ஆராய்ச்சியின் தளமானது, (i) முதுமையானவர்களின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு, (ii) சுகாதாரப் பொருளாதார தோற்றம் மற்றும் விளைவுகள், இதில் நடத்தை ஊக்குவிப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, சமத்துவமின்மை மற்றும் வீட்டு நடத்தை ஆகியவற்றில் நிறுவனக் கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும். அவரது பெரும்பாலான ஆராய்ச்சிகளைச் சுகாதாரப் பொருளாதாரத்தில் உள்ள அனைத்து முன்னணி இதழ்களிலும் (Journal of Health Economics, Health Economics, American Jounral of Health Economics), நடத்தை பொருளாதாரம் (Journal of Economic Behaviour and Organization, Journal of Risk and Uncertainty), அத்துடன் பொருளாதாரத்தில் உள்ள இதழ்களிலும் (Journal of the European Economic Association, European Economic Review< Economica) மற்றும் கலவை அறிவியல் இதழ்களிலும் (Social Science and Medicine, Journal of the Royal Statistical Society, PNAS) தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.
ஜோன் கோஸ்டா லண்டன் பொருளாதார பள்ளியில் சுகாதாரப் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிகிறார், அங்கு அவர் Ageing and Health Incentives Lab (AHIL) (முதியவர்கள் மற்றும் சுகாதார ஊக்கத்தொகை ஆய்வகம்) வழிநடத்துகிறார். கூடுதலாக, அவர் International Inequalities Institute (சர்வதேச ஏற்றத்தாழ்வுகள் நிறுவனம்) சமத்துவமின்மை திட்டங்களின் கருத்துக்களின் இணைத் தலைவராக உள்ளார்.
ஆதாரம்: www.lse.ac.uk; www.iza.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

