எரிக் லியோனல் ஜோன்ஸ் (Eric Lionel Jones) செப்டம்பர் 21, 1936இல் பிறந்து மார்ச் 1, 2024இல் மறைந்த பிரித்தானிய-ஆஸ்திரேலியா பொருளாதார அறிஞர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார். Oxford and Reading universities, Northwestern University, La Trobe University போன்ற பல்கலைக் கழகங்களில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். முதன்மையாக 1981இல் வெளியிடப்பட்ட The European Miracle: Environments, Economics, and Geopolitics in the History of Europe and Asia என்ற புத்தகம் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். 15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா எவ்வாறு எழுச்சி பெற்றது, முன்னேற்றம் கண்டது என்பதை கருப்பொருளாக இப் புத்தகம் கொண்டுள்ளது. ஜோன்ஸின் கூற்றுப்படி, ஐரோப்பாவின் மாநிலங்களின் பொதுவான கலாச்சார பாரம்பரியம் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியைக் கூர்மைப்படுத்தி அதன் நன்மைகளை மேம்படுத்தியது என்பதாகும். ஆசியப் பேரரசுகள் ஏழைகளாகவும், முன்னேற்றம் இன்றியும் இருந்தன, இருபதாம் நூற்றாண்டில் மட்டுமே ஆசியா இந்த நிலையிலிருந்து வெளிவரத் தொடங்கியது என்று குறிப்பிடுகிறார்.
ஜோன்ஸினால் 2018இல் வெளியிடப்பட்ட Landed Estates and Rural Inequality in English History: From the Mid-Seventeenth Century to the Present புத்தகம் இங்கிலாந்தின் கிராமப்புற நிலவுடைமையினைப் பற்றி விவரிக்கிறது. நிலவுடைமை வர்க்கங்கள் தங்கள் பொருளாதார ஆதிக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்து, கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு நிலம் மற்றும் அதன் வளங்களை வழக்கமாகப் பெற முடியாதபடி அதைப் பயன்படுத்தினர் என்பதை எரிக் லியோனல் ஜோ விவரிக்கிறார். 2021இல் வெளியிடப்பட்ட Landscape History and the Rural Society in Southern England: An Economic and Environmental Perspective என்ற புத்தகம் நில அமைப்பும் கிராமப்புறமும் எவ்வாறு ஒன்றோடு ஒன்று பிணையப்பட்டுள்ளது என்பதை பற்றி விளக்குகிறது. பொருளாதார வரலாறு, சுற்றுச்சூழல் வரலாறு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் பல புத்தகங்களையும் எரிக் லியோனல் ஜோ எழுதியுள்ளார். கடைசியாக அவர் 2023இல் A History of Livestock and Wildlife: Animal Wealth and Human Usage என்ற புத்தகம் வேளாண்மையின் வரலாற்றினைப் பற்றியதாக இருந்தது.
ஆதாரம்: www.buckingham.ac.uk; www.world-economics-journal.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

