ஆலிவர் இ. வில்லியம்சன் (Oliver E Williamson) செப்டம்பர் 27, 1932இல் பிறந்து மே 21, 2020இல் மறைந்த அமெரிக்கச் சமூக விஞ்ஞானி ஆவார். 2009ஆம் ஆண்டில், வில்லியம்சனும் எலினோர் ஆஸ்ட்ரோமும் கூட்டாகப் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசை பொருளாதார நிர்வாகம் அல்லது பெருநிறுவன மோதல் தீர்வு அடிப்படையில் சந்தைக்கு வெளியே பொருளாதார அமைப்புகள் மற்றும் தொன்றுதொட்ட அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் அவர்களின் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. வில்லியம்சன் தனது ஆராய்ச்சி மூலம் புதிய நிறுவன பொருளாதாரம் எனப்படும் பொருளாதார சிந்தனையின் ஒரு புதிய கிளையை உருவாக்கியவர் ஆவார்.
நிறுவனங்கள் வெளிப்புறச் சந்தையிலிருந்து சீரான அல்லது குறிப்பிடப்படாத உள்ளீடுகளை (external market inputs) வாங்கும் என்று வில்லியம்சன் முன்மொழிந்தார். சிறப்பு வாய்ந்த உள்ளீடுகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார். Transaction Cost Economics – TCE (பரிவர்த்தனை செலவு பொருளாதாரத்தின்) நிறுவனரான வில்லியம்சனின் ஆராய்ச்சி, பரிவர்த்தனைகளில் உள்ள மாறுபாடுகள் வணிக நிறுவனங்கள் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் வர்த்தகத்தை நிர்வகிக்கும் மற்ற அனைத்து அமைப்புகளின் இருப்பு மற்றும் கட்டமைப்பை எவ்வாறு விளக்குகின்றன என்பதில் கவனம் செலுத்தியது.
1968ஆம் ஆண்டு Economics as an Antitrust Defence என்ற தனது கட்டுரையில், வில்லியம்சன், சந்தை சக்தியை அதிகரித்து அதிக விலைகளை விளைவிக்கும் நிறுவனங்களின் கிடைமட்ட இணைப்புகள் கூட, செயல்திறனை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தார். காரணம், இணைப்புகள் செலவுகளைக் குறைத்தால், அதன் விளைவாக ஏற்படும் செலவுக் குறைப்பு, அதிக விலைகளால் நுகர்வோர் ஏற்படுத்தும் இழப்புகளை விடப் பொருளாதாரத்திற்கு அதிக நன்மைகளை உருவாக்க முடியும் என்றார். வில்லியம்சனின் TCE கோட்பாடு அவரது பணியைப் பொருளாதாரத்திற்கு வெளியேயும் மிகவும் செல்வாக்கு மிக்கதாக மாற்றியுள்ளது, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அவரை “பொருளாதார வல்லுநர்கள் அல்லாதவர்களால் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட பொருளாதார நிபுணர்” என்று அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.britannica.com; www.econlib.org; www.nobelprize.org; www.investopedia.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

