ராபர்ட் ஜோசப் பாரோ (Robert Joseph Barro) செப்டம்பர் 28, 1944இல் பிறந்த அமெரிக்கப் பேரியல் பொருளாதார அறிஞர் ஆவார். வால்ரேசிய-கீன்ஸிய “சமநிலையற்ற” பேரியல் பொருளாதாரத்தில் பாரோ ஒரு முன்னணி பொருளாதார அறிஞராக கருதப்படுகிறார். புதிய தொன்மைப் பொருளாதாரத்தை உண்மையான வணிக சுழற்சி கோட்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் புதிய தொன்மைக் கோட்பாடு ஆகிய துறைகளில் அவர் உருவாக்கினார். புதிய தொன்மைப் பேரியல் பொருளாதாரத்தின் நிறுவனர்களில் ஒருவராக பாரோ கருதப்படுகிறார். நிதிக் கொள்கையின் விளைவுகள், குறிப்பாக மொத்த பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்க கொள்முதல்களின் தாக்கம் குறித்த அவரது அனுபவ ஆய்வுகளுக்காகவும் அவர் பெரிதும் அறியப்படுகிறார்.
Optimal taxation (உகந்த வரிவிதிப்பு) மற்றும் உற்பத்தி, நுகர்வு மற்றும் வட்டி விகிதங்களின் காலப் பாதைகளில் நிரந்தர மற்றும் தற்காலிக அரசாங்க செலவினங்களின் தாக்கம் குறித்த அவரது பணியினை, பிற பொருளாதார வல்லுநர்களால் தீவிரமாகப் பின்பற்றினர். அவரது ஆராய்ச்சியானது அரிதான பேரியல் பொருளாதார பேரழிவுகள், பெருநிறுவன வரி சீர்திருத்தம், மதம் மற்றும் பொருளாதாரத்திற்கு இடையிலான உறவு, பொருளாதார வளர்ச்சியின் ஆதாரத்துடனான நிர்ணயங்கள் மற்றும் பொதுக் கடன் மற்றும் நிதிநிலை பற்றாக்குறைகளின் பொருளாதார விளைவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.
பணவீக்கம் என்பது அரசாங்கத்திற்கும் (குறிப்பாக, மத்திய வங்கிக்கும்) பொதுமக்களுக்கும் இடையிலான ஒரு விளையாட்டின் விளைவாகும் என்பது பாரோவின் கருத்து. வேலையின்மையைக் குறைப்பதற்காக மத்திய வங்கிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த அறிவிக்கப்பட்ட பணவீக்க இலக்குகளை மீறத் தூண்டப்படுகின்றன என்பதே அவரின் வாதம். இதன் விளைவாக, பொதுமக்கள் பொதுவாகப் பணவீக்க இலக்குகள் அடையப்படாது என்று முடிவு செய்து, அதற்கேற்ப தங்கள் பணவீக்க எதிர்பார்ப்புகளை உயர்த்துவார்கள் – இது பணவீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் அறிவிக்கப்பட்ட பணவீக்க இலக்கை தொடக்கத்திலிருந்தே செயல்பட முடியாததாக மாற்றும் என்கிறார்.
ஆதாரம்: www.scholar.harvard.edu; www.link.springer.com; www.hetwebsite.net; www.aeaweb.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

