அரவிந்த் பனகாரியா (Arvind Panagariya) செப்டம்பர் 30, 1952இல் பிறந்த இந்திய பொருளாதார அறிஞர் ஆவார். அரவிந்த் பனகாரியா கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும். தற்போது பீகாரில் உள்ள நலந்தா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக உள்ளார். பனகாரியா ஆசிய வளர்ச்சி வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆவார். உலக வங்கி, பன்னாட்டுப் பண நிதியம் மற்றும் UNCTAD ஆகியவற்றிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். அவரது கல்விப் பணிகளில் சர்வதேச வர்த்தகம், பொருளாதார மேம்பாடு மற்றும் பொருளாதார வரலாறு ஆகியவை அடங்கும்.
இந்திய அரசாங்கத்தின் NITI ஆயோக் நிறுவன முதல் துணைத் தலைவராக (2015-2017) அவர் செயல்பட்டார். தொழில்துறை எவ்வாறு அர்த்தமுள்ள பங்களிப்புகளைச் செய்ய முடியும் என்பதில் அவரது கவனம் காணப்பட்டது. அரவிந்த் பனகாரியா பதினாறாவது நிதி ஆணையத்தின் தலைவர் ஆவார். பனகாரியா தனது தலைமுறையின் முன்னணி சர்வதேச வர்த்தக கோட்பாட்டாளர். வர்த்தக தாராளமயமாக்கலின் நன்மைகள், முன்னுரிமை வர்த்தக தாராளமயமாக்கலை விடப் பலதரப்பு மேன்மை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் தொழிலாளர் தரநிலைகள் போன்ற வர்த்தகம் அல்லாத பிரச்சினைகளை உலக வர்த்தக அமைப்பில் இணைப்பதற்கான எதிர் கருத்துக்கள் குறித்த அவரது எழுத்துக்கள் மிகவும் செல்வாக்கு மிக்கவை.
ஆதாரம்: www.fincomindia.nic.in; www.adriindia.org; www.thehindu.com; www.usispf .orx
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

