தொடர் : 1 – இன்றைய இந்திய விஞ்ஞானிகள் -100
1. கணக்கிட்டு நரம்பியல் என்னும் புதிய துறையில் இந்திய விஞ்ஞானி சீனிவாச சக்கரவர்த்தி
அறிவாற்றல்மிக்க இந்திய விஞ்ஞானிகளின் பட்டியல் வெளியிடப்படும் போதெல்லாம் அதில் சீனிவாச சக்கரவர்த்தியின் பெயர் எப்போதும் இடம் பெறுகிறது. இன்றைய மூளை குறித்த முக்கிய நவீன புதியதுறை கணக்கிட்டு நரம்பியல் என்று அழைக்கப்படுகிறது.. கணக்கிட்டு நரம்பியல் உயிரியல் ரீதியில் மனித மூளையின் நியூரான்களை செயல்படும் நிலைகள் மற்றும் இயக்கவியல் ஆகியவற்றின் அடிப்படையில் கவனம் செலுத்தி ஆய்வு செய்கிறது கோட்பாட்டு நரம்பியல் கணினி மற்றும் கணித மாதிரிகளை மையமாக வைத்து மூளையினுடைய செயல்பாடுகளை ஆராய்வதை குறிக்கிறது. ஆனால் அதையும் கடந்து உயிரியல் அமைப்பின் அத்தியாவசியமான அம்சங்களின் ஒன்றான இடஞ்சார்ந்த அளவீடுகளை மூளை எப்படி புரிந்து கொள்கிறது என்கிற விஷயம் ஆரம்பத்தில் இருந்தே சிக்கலான ஒன்றாக இருந்துவருகிறது…
உதாரணமாக மோப்ப சக்தியின் மூலம் நாய்கள் வழிகளை எளிதில் கண்டுபிடித்து விடுகின்றன.. எவ்வளவு தொலைவுக்குச் சென்றாலும் பூனைகள் திரும்பி வருகின்றன. நம்முடைய பெரிய நகரங்களில் வசிக்கின்ற காக்கைகள் வழி கண்டுபிடித்து தன்னுடைய கூட்டிற்கு சரியாக திரும்புகின்றன. மனிதர்கள் முதல் முறை செல்லும் பொழுது வழிகளை தேடி அலைகின்ற கடினத்தை கடந்து இரண்டாவது மூன்றாம் முறை செல்லும் பொழுது மிக எளியில் வந்த வழியே திரும்பி செல்வதை பழகிக்கொள்கின்றனர். மூளையின் எந்தப் பகுதி இதற்காக செயல்படுகிறது என்பதை மருத்துவயியல் மூளையியல் சார்ந்த விஞ்ஞானிகளால் இன்று வரையில் தீர்க்க முடியவில்லை.
கோட்பாட்டு நரம்பியலாளர் தீர்க்க முடியாத பல சிக்கல்களை இன்று கணக்கிட்டு நரம்பியல் தீர்த்துவைக்கிறது. அவற்றில் ஒன்றுதான் நம்முடைய மூளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நாம் இடம்பெயரும் பொழுதுவழிகளை எப்படி கண்டுபிடிக்கிறது. அது எப்படி ஞாபகம் வைத்துக்கொள்கிறது என்பது குறித்த முக்கியமான ஆராய்ச்சி ஆகும்.
கணக்கிட்டு நரம்பியல் துறை ஒரு தனி அறிவியல் துறையாக தோன்றியது 1985ல் ஆகும்.. கலிபோர்னியாவில் உள்ள கார்மல் சிஸ்டம்ஸ் டெவலப்மெண்ட் அறக்கட்டளையின் சார்பில் அப்போது ஒரு மாநாடு கூட்டப்பட்டது.. எரிக் சவார்ட்ஸ் எனும் அறிஞர் இந்த சொல்லாக்கத்தை அறிமுகம் செய்தார். இந்த அறிவியல் மிகவும் சிக்கலானது.. மூளை குறித்த நரம்பியல் உயிரியலை விட கணினியினுடைய மென்பொருள் மற்றும் வன்பொருள் இரண்டையும் இணைக்கக்கூடிய கணினி நிரலாக்க மாதிரிகளை உருவாக்கும் கணக்கிட்டு நரம்பியல் இன்னும் கல்வியை இது அதிகம் சார்ந்திருக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த துறையில் தலைசிறந்த விஞ்ஞானியாக சீனிவாச சக்கரவர்த்தி திகழ்ந்து வருகிறார். சென்னையில் இந்திய தொழில் நுட்பக்கழகம் (IIT MADRAS) எனும் பிரம்மாண்ட கல்வியகத்தில் உயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.. சீனிவாச சக்கரவர்த்தி கணிததுறையையும் நரம்பியல்துறையையும் இணைக்கின்ற தகவல் தொடர்புதுறை கோட்பாடுகளை நிறுவி இருக்கிறார். இவரை எனக்கு முதன்முதலில் அறிய வந்தது ஒரு தனித்துவமான பின்னணியாகும். அறிஞர் கார்ல் சாகன் எழுதிய காஸ்மாஸ் எனக்கும் நான் விரும்பி வாசித்த அறிவியல் கதை நூலை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தவர் சீனிவாச சக்கரவர்த்தி இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்கம் சென்னை உள்ளே அமைந்துள்ள கணக்கிட்டு நரம்பியல்துறை ஆய்வகத்தில் தன் ஆய்வுகளை அவர் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
நம்முடைய மூளையில் 86 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. நரம்பியல் அறிஞர்கள் மூளையைப் பற்றி ஆய்வு செய்யும் பொழுது இந்த நரம்பு செல்களின் எத்தகைய வகையான இணைப்புகள் உள்ளன என்பதையும் இந்த இணைப்புகளின் ஊடாக நியூரான்கள் எனும் இவ்வகைச் செயல்கள் தகவல் பரிமாற்றத்தை எவ்வளவு அதிவிரைவாக மேற்கொள்கின்றன என்பதையும் குறித்து ஆய்வு செய்கிறார்கள்.. சீனிவாச சக்கரவர்த்தி மனித மூளையின் நரம்பியல் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த கணித நிரல்களை- உருவாக்கி அதன்மூலம் கணினி வழியே மூளை சர்க்யூட்களை உற்பத்தி செய்து உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.
2014 ஆம் ஆண்டு.. JOHN OKEEFE, MAY-BRITT MOSER, மற்றும் EDVARD MOSER ஆகியோர் இந்த துறையில் ஆய்வு செய்து நோபல் பரிசு பெரும் அளவிற்கான முக்கிய கண்டுபிடிப்பை வெளியிட்டனர்…. ஆய்வுக் கூட எலிகளில் பல வகையான..-புதிர் பாதைகளை ஏற்படுத்தி ஆய்வுகளில் ஈடுபட்டு இந்த புதிர்பாதைகளை சரி செய்து எலிகள் எப்படி தப்புகின்றன என்பது குறித்த முடிவுகளை வெளியிட்டனர்.. ஆனால் சீனிவாச சக்கரவர்த்தி மற்றும் அவரது குழுவினர்கள் இந்த ஆய்வுக்கு ஒரு படி மேலே சென்று நம்முடைய கணினியில் அல்லது நம் கைபேசியில் வேலை செய்யும் GPS வழிகாட்டி போல நம்முடைய மூளையில் நரம்புகளில் செயல்படுவதை கண்டுபிடித்தனர்..
இத்தகைய முக்கியமான நியூரான்களை சீனிவாச சக்கரவர்த்தி வழிகாட்டி நியூரான்கள் என்று அழைக்கிறார்.. அவரது கண்டுபிடிப்புகளை PARKINSON நரம்பியல் நோய் மற்றும் ALZHEIMER நோய் போன்றவற்றை எதிர்காலத்தில் முற்றிலுமாக குணப்படுத்துவதற்கு உதவலாம் என்று உலகம் நம்புகிறது. இதுவரையில் இவ்வகை இரண்டு நோய்களுக்கும் சிகிச்சை உண்டே தவிர குணப்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்கிற நிலையே உள்ளது.
உங்கள் அலுவலகத்தை நோக்கி தினந்தோறும் உங்களுடைய இருசக்கரவாகனத்தில் பயணம் செய்கிறீர்கள். அப்படி நீங்கள் பயணம் செய்யும் பொழுது தினந்தோறும் வழியை கண்டுபிடித்து அதை கவனத்தில் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை. உண்மையை சொல்லபோனால் எத்தகைய கவனமும் இல்லாமல் வேறு ஏதோ ஒன்றை நாம் சிந்தித்து கொண்டு சென்றாலும் நம்மையும் அறியாமல் நாம் அலுவலகத்திற்கு சென்று சேர்ந்து விடுவோம்.. இந்த விஷயத்தை செயல்படுத்துவதற்காக வேஃப் வழிகளை ஒழுங்கமைக் சிறப்பு நியூரான்கள் உள்ளன. இது பேசல் கங்குலியா என்றழைக்கப்படும் மூளையின் பகுதியில் ஏற்படுகின்றது. இந்த பகுதியில் உள்ள செல்களில் டோப்பமின் என்கின்ற முக்கியமான ஹார்மோனை உற்பத்தி செய்கின்றன. இந்த செல்கள் இறந்துபோனால் ஒருவருக்கு பார்க்கின்சன் நோய் ஏற்படுகிறது இந்த செல்களை குறித்த சீனிவாச சக்கரவர்த்தியின் ஆராய்ச்சி MESO BRAIN என்கின்ற அவருடைய ஆய்வு முடிவாக வெளியிடப்பட்டுள்ளது கணக்கிட்டு நரம்பியல் துறையின் முக்கிய திருப்புமுனை ஆய்வாக இது கருதப்படுகிறது.
சீனிவாச சக்கரவர்த்தி எழுதிய DEMISTIFYING THE BRAIN- A COMPUTATIONAL APPROACH என்கிற புத்தகம் அவரது ஆய்வுகள் குறித்து விரிவாக பேசுகிறது. இன்று கணக்கிட்டு நரம்பியலின் மிக முக்கியமான பாடபுத்தகமாக அது கருதப்படுகின்றது. சினிவாச சக்கரவர்த்தியினுடைய இந்திய தொழில்நுட்பகழகம் சென்னையில் பணிபுரியும் அவருடைய அணியினர் இணைந்து மேலும் அற்புதமான ஒரு சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார்.. அவர்கள் பாரதி எனும் எழுத்துருவை அறிமுகம் செய்தார்கள் இந்த எழுத்துருவை பயன்படுத்தி இந்தியாவின் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 12 மொழிகளில் கணினியில் தட்டச்சு செய்ய முடியும்.
நம்முடைய தமிழகத்தில் கல்லூரியில் உயிரியல் பயின்று அமெரிக்காவினுடைய டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று 2000 ஆம் ஆண்டு முதல் சென்னை இந்திய தொழில்நுட்ப கல்வியகத்தில் கணக்கிட்டு நரம்பியல் மற்றும் கணக்கிட்டு இருதயவியல் என்கிற இரண்டு ஆய்வகங்களில் அவர் பணியாற்றி வருகிறார். சீனிவாச சக்கரவர்த்தி தன்னுடைய ஆய்வின் மூலம் மூளையினுடைய அடிப்படைகளையும் மூளை குறித்த நோய்களின் குணப்படுத்தல் முறைகளையும் கணிதம் மற்றும் கணினி வழியே ஆய்வு செய்யும் புதிய துறையை சார்ந்தவராக உலகின் வல்லுநர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நம் தமிழகத்திற்கு பெருமை.
கட்டுரையாளர் :
ஆயிஷா இரா. நடராசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஆசிரியருக்கு. அறிவியல் வளர்ச்சி மனித சமுதாயத்திற்கு பயன்பாட்டுக்கு வரும் போது மனித இனம் மேலும் வளர்ச்சி பெறும்.நன்றி.தா.சிதம்பரம்.
நல்ல ஒரு முயற்சி சமகால அறிவியலாளர்களையும் அவர்கள் கண்டுபிடிப்பையும் அறிந்து கொள்ள இந்தத் தொடர் துணையாக இருக்கும். இவருடைய புத்தகம் விலை அதிகமாக இருப்பதால் சாதாரண கல்லூரி மாணவர்கள் வாங்குவது சற்று சிரமமாக இருக்கும். இது போன்ற கண்டுபிடிப்புகளை இந்திய வெளியீடாகவும் தாய் மொழிகளும் கொண்டு வருவது பள்ளி மாணவர்களை இந்த துறையில் சேர்வதற்கு ஊக்குவிக்கும்.
நூறு இந்திய விஞ்ஞானிகளை பற்றிய கட்டுரை தொடரின் முதல் நாள் முத்தாய்ப்பாக இருந்தது
மூளை நமது எஜமான், மூளையின் செயல்பாடு மட்டுமே ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமைய வழிவகை செய்கிறது சீனிவாச சக்கரவர்த்தி அவர்களைப் பற்றிய சிறப்பு செய்தியுடன் ஆயிஷா நடராஜன் அவர்கள் கட்டுரையை துவக்கி இருப்பது மூளைக்கு பல வேலை கொடுக்க தயாராகி விட்டதை தெளிவு படுத்துகிறது தொடரட்டும் ஆயிஷா நடராஜனின் இந்த தொடர் பயணம். வாழ்த்துக்கள்
Pingback: contemporary indian scientists - 100 | Ashok Sen (அசோக் சென்)
Arumaiyaa a thuvakkam. வாழ்த்துகள். Melum anaivarin, arignarkal, therinthu kolla aavaludan kaaththu kondu irukkiren. 🙏🙏🙏🙏
அருமைங்க..இதுவரை இப்படியொரு தமிழக விஞ்ஞானி இருக்கிறார் என்பதே இப்போதுதான் தெரிந்ததுங்கோ!
Very nice information. Really it would be go to youngsters