எழுத்தாளர் தேர்வு: எழுத்தாளர் கூகி வா தியாங்கோ  பரிந்துரைக்கும்  ஏழு ஆப்பிரிக்க நாவல்கள் – தேவப்ரியா ராய் (தமிழில் -லதா அருணாச்சலம்)

எழுத்தாளர் தேர்வு: எழுத்தாளர் கூகி வா தியாங்கோ  பரிந்துரைக்கும்  ஏழு ஆப்பிரிக்க நாவல்கள் – தேவப்ரியா ராய் (தமிழில் -லதா அருணாச்சலம்)

 

ஆப்பிரிக்காவின் மிகப் பெரும் வாழும் எழுத்தாளுமை  கூகி வா தியாங்கோ அவர்களிடம் ,சீனுவா அச்பே அவர்களின்  Things Fall Apart ,  அவரின் பிரபல புத்தகமான Decolonising the mind போன்ற புகழ்பெற்ற, அனைவரும் கேள்விப்பட்ட ஆப்பிரிக்க நூல்கள்,தவிர்த்து அவசியம் வாசிக்கப் பட வேண்டிய மற்ற நூல்கள் எவை எனக் கேட்டோம். பல கோப்பை மோர் (அவருக்கு) , பல கோப்பை தேநீருக்குப்  (எனக்கு) பிறகும் அவர் அளித்த பட்டியல் இவை. 

1 And 2. God’s Bits of Wood and Xala, ,Sembe’ne Osumane

God's Bits of Wood by Sembene Ousmane | Senegalese Writers ...

1960 ஆம் வருடம் , பிரெஞ்சு மொழி பேசும் ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வெளியான மிக முக்கியமான நாவல் God’s bits of Wood and Xala. வொலோஃப் மொழி பேசும் செனேகல் நாட்டு மீனவரின் மகனான உஸ்மானே செம்பே ,தான் படித்துக் கொண்டிருந்த  காலணி ஆதிக்கப் பள்ளியில் பிரெஞ்சு ஆசிரியரைத்  தாக்கிய குற்றத்திற்காகப் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின் டகார் நகரில் பகலில் உடல் வருத்தும் கூலித் தொழில் செய்தும் இரவில் திரைப் படங்களும் பார்த்து நாட்களை ஓட்டினார். இளமையின் அனுபவத் தடங்கள் அவருடைய உணர்ந்தறியும் திறனை  முற்றிலும் மாற்றியமைத்தன. அதன் பின் பிரெஞ்சு ராணுவத்தில் இணைக்கப்பட்டு இரண்டாம் உலகப் போரில் பங்கு பெற்றார். அங்கிருந்து டகார் திரும்பியவர் , பிரெஞ்சுப் பணியாளர்களுக்கு இணையான சலுகைகளும் ஊதியமும் கோரிப் பணியாளர்கள் ஈடுபட்ட நீண்ட கால ரயில் பாதை போராட்டத்தில் பங்கேற்றார். அந்த நிகழ்வே God’s Bits of Wood, மூல நாவல் பிரெஞ்சு மொழியில் Les bouts de bios de Dieu என்னும் பெயரில் எழுதப்பட்டது.

Amazon.in: Buy Xala Book Online at Low Prices in India | Xala ...

அவருடைய மற்றொரு நாவலான Xala என்பதையும் நான் பரிந்துரைக்கிறேன்.அது அளவில் சிறியது ஆனால் திரைப்படமாக எடுக்கக் கூடிய சாத்தியங்களை உடையது. சொல்லப் போனால் சர்வ தேச சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர் என்னும் பெயர்  பின்னாட்களில் அவருடைய மற்ற அடையாளங்களை இருட்டடிப்பு செய்து விட்டபோதிலும். அவர் தன்னுடைய புத்தகங்கள் மூலம் ,  நாட்டில் நிலவிய பின் காலணியாதிக்கத்தின் விளைவுகளையும், புதிய அரசைப் பற்றியும் அதன் ஊழல் மலிந்த கொள்கைகளையும் தன் கூர் நோக்குப் பார்வையால் விமர்சனம் செய்வதில்  முனைப்புடன் தொடர்ந்து  ஈடுபட்டிருந்தார். 1973 ஆம் வருடம் வெளியிடப்பட்ட அவரது Xala என்னும் நூல், புகழ்பெற்ற,சற்றே நேர்மையற்றுவருமான   தொழிலதிபர் ஒருவர் தனது மூன்றாம் திருமணத்தின் முதலிரவன்று ஏற்பட்ட ஆண்மைக் குறைபாட்டைப் பற்றியும் அதைக் குணமாக்கும் மருந்தை அடைய முயற்சி செய்யும் அவரின் பேரார்வத் தேடலைப் பற்றியும் அங்கத முறையில் மிக விரிவாக எழுதி இருப்பார். 

3. A walk in the night and other Stories ,Alex la Guma

A Walk In The Night & Other Stories

அலெக்ஸ் லா குமா தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளர். தற்போது உயிருடன் இல்லை. இன்றிலிருந்து பல வருடங்களுக்கு முன்பு, 1962 ம் ஆண்டு,  எனது Decolonising the Mind, நூலில் நான் குறிப்பிட்டிருக்கும்  மாநாட்டில்  , மேக்ரீர் நகரில் அவரைச் சந்தித்தேன். அப்போது அவர் தென்னாப்பிரிக்காவில் தன்னுடைய அரசியல் தீவிரவாத செயல்பாடுகளுக்காக ஏறத்தாழ வீட்டுக் காவலில் இருந்தார். அவர் தன்னுடன் பல சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு வந்திருந்தார். அவற்றில் A walk in the Night என்னும் கதை எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. அது ஒரு குறு நாவல் அல்லது நெடுங்கதை வடிவம். மைக் அதோனிஸ், தனது வெள்ளைக் கார முதலாளியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டான் என்று குற்றம் சாட்டப் பட்டு தொழிற்சாலைப் பணியிலிருந்து நீக்கப் பட்ட பின் அவன் வாழும் சேரிப் பகுதியில் இரவு முழுக்க நடந்தே கழிக்கிறான். அப்போது அந்தப் பகுதியின் இரவுகளை அச்சுறுத்தும் வேளையாக  மாற்றும் சிலருடன் அவனுக்கு சந்திப்பு ஏற்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் ’அபார்தீட் ‘ நிறபேதக் கொள்கை எவ்வளவு கொடுமையான குற்றங்களை யும் அநீதியையும் இழைத்திருக்கிறது என்பதை உணர்த்தும் புத்தகம். 1966 ஆம் வருடம் லா குமா தென்னாப்பிரிக்காவை விட்டு வெளியேற வலியுறுத்தப் பட்டு, தனது வாழ்வின்  மீதி இருபது வருடங்களை நாட்டிற்கு வெளியே மறைந்து வாழ்ந்தார்.

4.The beautiful ones are not yet Born, Ayi Kwei Armah

The Beautiful Ones Are Not Yet Born: Ayi Kwei Armah, Christina Ama ...

அர்மா காணா நாட்டைச் சேர்ந்தவர் , இந்தப் புத்தகம் 1968 ஆம் வருடம் அமெரிக்காவில் பதிக்கப்பட்டு அதன் பின் , ஹெய்னமின் ஆப்பிரிக்க க் கதைகள் என்னும் தொடரில் மறுபதிப்பாக வெளி வந்தது. விடுதலையடைந்த பின் அமைந்த தேசிய அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்த  முடிவு செய்யும்  பெயரற்ற ஒருவனைப் பற்றிப் பேசும் இந்தப் புத்தகம் பொதுவாக  மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் அப்போதைய நிலைமை மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.எனக்கு நினைவு தெரிந்த வரையில் , ஒரு ஆண்டுக்குள் நாட்டில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும், அடிமை அரசுக்கு எதிராகப் போராடிய மிகப் பெரும்  தலைவரும், 1957 ஆம் ஆண்டு நாட்டின் முதல் அதிபருமாக இருந்த  க்வாமே ந்குருமா, வின் பதவி பறிக்கப் பட்டவுடன்  அந்தப் போராட்டம் முடிந்து போனதையும் விவரிக்கும் புத்தகம். இதன் பெயரைப் பாருங்கள், அது Beautiful அல்ல, Beautiful என்பதாக உள்ளது

5.Women at Point Zero, Nawal Sadaawi

Book Review: Woman At Point Zero By Nawal El Saadawi

என்னுடைய நல்ல தோழி, எகிப்திய எழுத்தாளர், மருத்துவர் நவல் எஸ்.சாதவி, மிக அற்புதமான , புகழ் பெற்ற பல புத்தகங்கள் எழுதியவர். அதிக எண்ணிக்கையும் கூட. இந்தப் பட்டியலில்  நான் முன் வைக்கும் அவர் புத்தகம் ,Women at Point Zero. எகிப்தின்  பெயர் போன அல் கனாதிர் சிறைச் சாலையில், தூக்குத் தண்டனைக்குக் காத்திருக்கும் ஃபிர்தௌஸ் என்னும் பெண் கைதியை உளவியல் நிபுணரான சாதவி  ஒரு ஆய்வுக் கட்டுரைக்காக நேர்காணல் எடுக்கச் செல்கிறார். தன் பாலியல் தொழிலின் தரகனாக இருந்தவனைக் கொன்ற குற்றத்திற்காகச் சிறையிலிருக்கும் ஃபிர்தௌஸ் தனது தண்டனைக் குறைப்புக்காக ஜனாதிபதிக்கு அனுப்பப் படவிருக்கும் மேல் முறையீட்டு மனுவில் கையெழுத்திட மறுத்து விடுகிறாள். மரணத்தைக் கண்டு அஞ்சாதவள் மட்டுமல்ல, அதை எதிர் நோக்கி ஆவலுடன் காத்திருப்பவள் போலவும் இருக்கிறாள் ஃபிர்தௌஸ். அவளது மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முந்தைய தினம், ஆராய்ச்சியாளராகி விட்ட சாதவி  தன்னையே மறந்து ஃபிர்தௌஸ் பால் பேராவல் கொண்டவராக மாறி அவள் கதையை நினைவுறுகிறார். மிக எளிமையாக விவரிக்கப் பட்ட அழுத்தமான புத்தகம் இது. 

6. Half of a yellow Sun, Chimamanda Adichi Ngozi

Half of a Yellow Sun by Chimamanda Ngozi Adichie – Long Live Tobe

நடப்புக் காலத்தில் நான்   சிமாமந்தா அடிச்சியைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவருடைய திறமை மகத்தானது. பியாஃபரன் யுத்தப் பின்னணியில் எழுதப் பட்ட அவருடைய  , Half of a yellow Sun “ குறிப்பிடத்தக்க  புத்தகம் ஆகும். மிக அருமையாக எழுதப்பட்டது. அவர் அண்மையில் எழுதிய ‘Americanah’என்னும் புத்தகத்தையும் வாசிக்க ஆவலாக இருக்கிறேன். அவருடைய எழுத்துகளை ஒப்பீடு செய்ய உதவியாக இருக்கும். இளைய தலைமுறை எழுத்தாளர்களை அதிகமாக வாசிக்க முடியவில்லை. அவர்கள் நிச்சயமாக ,துணிவாக, சோதனை முயற்சியாக, இந்த உலகத்தினுள் மேலும் உள் நுழைபவர்களாக இருப்பார்கள் .இந்தப் பட்டியலில் கென்ய எழுத்தாளர் பின்யவங்கா வய்னைனா அவர்களை நான் ஏன் சேர்க்கவில்லை என்றால் அவர் ஒரு வரலாற்று நினைவுக் குறிப்பு( One Day I will Write About This Place)  எழுதியுள்ளார். அது மிக சுவாரஸ்யமான புத்தகமாக இருந்த போதிலும் அது அபுனைவு வகையைச் சேர்ந்தது. இருப்பினும் வாசிக்க வேண்டிய புத்தகம். அவர் இன்னும் நாவல் எழுதவில்லை என்று நினைக்கிறேன். எழுதுவார் என்று நம்புகிறேன். 

7.Nairobi Heat, Mukoma Wa Ngugi

Nairobi Heat by Mukoma Wa Ngugi | chasing bawa

இறுதியாக , கென்யா, மற்றும் அமெரிக்காவின் உண்மையான பிரச்சனைகளைக் கண்டறிய துப்பறியும் நாவல் தளத்தில் எழுதப்பட்டஎனது மகன் முகோமா எழுதிய நாவல்களைப் பரிந்துரைக்கிறேன். Nairobi Heat (2011) ,என்னும் புத்தகம்,இனவெறிக் கொலையைத் துப்புத் துலக்க அழைக்கப் படும் ஆப்பிரிக்க, அமெரிக்க துப்பறிவாளர் இஷ்மாயிலை  அறிமுகம் செய்கிறது.ஆப்பிரிக்காவின் புகழ் பெற்ற சமாதான  செயற்பாட்டாளர் ஜோஷுவா ஹக்கிஸிமனா என்பவர் , ருவாண்டன் படுகொலையின் போது நூற்றுக் கணக்கான மனிதர்களைக் காப்பாற்றியவர் , படுகொலையும், வாக்குமூலமும் என்னும் பாடப் பிரிவை , வெள்ளையர்கள் மட்டுமே வசிக்கும் நகரில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். அவரது வீட்டுவாசலில் ஒரு இளம் பெண் கொலையுண்டு கிடக்கிறார் , வெள்ளையர்கள் மட்டுமே பிரத்யேகமாக வசிக்கும் அந்த நகருக்கு, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக கு க்ளக்ஸ் கானின் வெறுப்புப் பேரணிகள் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் ஆப்பிரிக்க அமெரிக்க போலீஸ் துப்பறிவாளர் இஷ்மாயில் துப்புத் துலக்க அழைக்கப் படுகிறார். அவரது விசாரணை அங்கிருந்து அவரை நைரோபிக்கு இட்டுச் செல்கிறது.Nairobi Heat  நாவலின் தொடர்ச்சியாக அதன் அடுத்த பாகம் Black Star Nairobi (2013) பதிக்கப் பட்டது. அமெரிக்காவின் கார்னல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முகோமா அவர்களின் துப்பறியும் பாணி நாவல்கள் கென்ய இலக்கியத்திற்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. இதன் ஜெர்மன் மொழிபெயர்ப்பு அதிக விற்பனை சாதனைப் பட்டியலில் உள்ளது. 

https://scroll.in/article/883734/writers-choice-ngugi-wa-thiongo-recommends-seven-novels-from-africa-that-you-must-read

நன்றி: scroll இணையதளம்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *