ஷேக்ஸ்பியரின் ரோமியோ மற்றும் ஜூலியட்
களம் 3, காட்சி 4 (Act 3, Scene 4)
பாத்திரங்கள்:
- முதிய கேபுலெட்
- திருமதி கேபுலெட்
- பிரபு பாரிஸ்
(இரவு நேரம். கேபுலெட், திருமதி கேபுலெட் மற்றும் பிரபு பாரிஸ் உள்ளே நுழைகின்றனர்.)
கேப்லெட்
பாரிஸ் , நடந்த நிகழ்வுகள் யாவும் மிகவும் துரதிர்ஷ்டவசமாக அமைந்து விட்டதால் , எங்கள் மகளிடம் அவளது திருமணத்தை குறித்துப் பேச எங்களுக்குச் சற்றும் அவகாசம் கிடைக்கவில்லை. அவள் தன் உறவினரான டைபால்டை உயிராக நேசித்தாள்; நானும் அவ்வாறே தான் அவனை நேசித்தேன். ஆனால் …….. ஆனால் சரி , சரி , நாம் அனைவரும் ஓர் நாள் இறப்பதற்காக பிறந்தவர்கள் தானே !.
சரி அதை விடு
இப்போது நேரம் ஆகிவிட்டது. இன்றிரவு அவள் கீழே வரமாட்டாள்.
அதை உறுதியாகச் சொல்கிறேன், இன்று உன்னை சந்திக்காமல் இருந்திருந்தால் , நானும் கூட ஒரு மணி நேரத்திற்கு முன்பே படுக்கைக்குச் சென்றிருப்பேன்.
(கேப்லெட், திருமதி கேப்லெட் மற்றும் சீமான் பாரிஸ் ஆகியோர் உள்ளே நுழைகின்றனர்.)

பாரிஸ்
இந்த துயரமான காலங்களில் காதலை நினைப்பதற்கு நேரமேது ?
சீமாட்டியே , இனிய இரவு வணக்கத்தை உரித்தாக்குகிறேன். உங்கள் மகளிடம் என்னைப் பற்றி நல்லவிதமாகப் எடுத்துச் சொல்லுங்கள் .
திருமதி கேப்லெட்
நிச்சயமாக சொல்லுகிறேன் . உங்களைத் திருமணம் செய்துகொள்வதைப் பற்றி அவள் எண்ணம் என்ன என்பதை நாளை அதிகாலையில் நான் கண்டறிவேன். இன்று இரவு அவள் தனிமையில் தன் துயரத்துடன் தன் அறையில் அடைபட்டிருக்கிறாள்.
கேப்லெட்
பாரிஸ், நான் என் மகளின் மீது கொண்ட எல்லையற்ற அன்பை அப்படியே உனக்கு பரிசளிக்கிறேன்.
நான் சொல்வதையெல்லாம் அவள் செய்வாள் என்று தான் நினைக்கிறேன்.
நினைப்பதென்ன அவள் நிச்சயம் நிறைவேற்றுவாள் . மனைவியே, நீ உறங்கச் செல்வதற்கு முன் அவளைப் போய்ப் பார். சீமான் பாரிஸ் அவள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறான் என்பதை அவளுக்கு எடுத்துச் சொல்
அதாவது புதன்கிழமை அன்று,
நான் சொல்வதைக் கேள்— நில் ஒரு நிமிடம் — ஆமாம் இன்று என்ன கிழமை ?
பாரிஸ்
இன்று திங்கட்கிழமை, பிரபுவே.
கேப்லெட்
திங்கட்கிழமை! ஹாஹா ஹா, ஹா! சரி சரி , புதன்கிழமை திருமணம் என்பது மிகவும் சீக்கிரம் அல்லவா ? . சரி அப்படியானால் அதை வியாழக்கிழமையாக மாற்று . சரி வியாழக்கிழமையன்று ஜுலியட் இந்த உன்னத பிரபுவை மணக்கப் போகிறாள் என்று அவளிடம் சொல்.
பாரிஸ், இதற்கு நீ தயாராக இருக்கிறாயா? அல்லது இப்படி நாங்கள் அவசரப்படுத்துவதை நீ எதிர்க்கிறாயா? நாம் பெரிய விருந்து எதுவும் நடத்தப்பேபாவதில்லை ஒரு சில நண்பர்களை மட்டுமே திருமணத்திற்கு அழைப்போம். டைபால்ட் இப்போதுதான் கொல்லப்பட்டிருப்பதால், நாம் இதை அதிகமாகக் கொண்டாடினால், நம் உறவினர் மீது நமக்கு அக்கறை இல்லையென்று மக்கள் நினைக்கக்கூடும். எனவே, திருமணத்திற்கு ஒர் அரை டஜன் நண்பர்களை மட்டுமே அழைப்போம், அதற்கு மேல் கூடாது சரியா ? , சரி வியாழக்கிழமை திருமணம்
நீ என்ன நினைக்கிறாய்?
பாரிஸ்
என் பிரபுவே, நாளையே வியாழக்கிழமையாக இருந்தால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன் .
கேப்புலேட்
சரி, சரி, இப்போது நீ வீட்டிற்குச் செல். வியாழக்கிழமையே திருமணம் நடக்கட்டும் .
[தன் மனைவியிடம்] மனைவியே, நீ உறங்கச் செல்வதற்கு முன் ஜூலியட்டைப் போய் பார்த்து விடு
இந்தத் திருமண நாளுக்காக இப்போதிருந்தே அவளைத் தயார் செய்ய வேண்டும் .
[பாரிஸிடம்]
விடைபெறுகிறேன், பிரபுவே. நான் உறங்கச் செல்கிறேன். அடடா, நேரம் மிகவும் ஆகிவிட்டது, இன்னும் கொஞ்ச நேரத்தில் விடிந்துவிடும் போலிருக்கிறது. இனிய இரவு .
(அவர்கள் அனைவரும் வெளியேறுகிறார்கள். )
தொடரும்
📚 எழுதியவர்:
மூலம் : ஷேக்ஸ்பியர்
மொழி பெயர்ப்பு : தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

