
ஊக்கமளிக்கும் பேச்சுகள் வழங்குவதிலும், பல்வேறு வகையான புத்தகங்களை எழுதுவதில் வல்லவர் ‘மனிதக் கணினி’ ‘சகுந்தலா தேவி’ அம்மையார் ஆவார். அவரின் எண்கணித ஆற்றலினை உலக கணிதவியலாளர்கள் வெறும் நிகழ்ச்சியாகவே பார்த்தார்கள். ஆனால் சகுந்தலா தேவியின் வாழ்க்கையும், சாதனைகளும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு கணிதத்தின் மீது ஒரு உத்வேகம் அளித்தது.
அவர் கணிதத்தினை ஜோதிடம், சமையல் மற்றும் பல்வேறு வாழ்க்கை நிகச்சிகளுடன் ஒப்பிட்டு பல புத்தகங்களை எழுதிய கணித தத்துவ மேதையாவார்.
அவர் நவம்பர் 4, 1929 அன்று பெங்களூரில் ஒரு இந்து பிராமண குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது, எண்களை மனப்பாடம் செய்யும் அற்புதமான திறன் இருப்பதனை சகுந்தலா தேவியின் தந்தை கண்டுபிடித்தார்.
தான் பணிபுரியும் சர்க்கஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறி, தனது மகளின் கணக்கீட்டில் திறமையை முன்னிறுத்தி சாலையில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவருடைய ஐந்து வயதிலேயே, சகுந்தலா தேவி ஒரு அதிசயக் குழந்தை என்பதை உலகம் உணர முடிந்தது. அவர் மிகவும் சிக்கலான மன எண்கணிதத்தில் நிபுணராகக் கண்டறியப்பட்டார்.
சகுந்தலா தேவி தனது ஆறாவது வயதில் மைசூர் பல்கலைக்கழகத்தில் தனது கணிதத் திறனை நிரூபித்தார். முறைப்படி பள்ளிக்கு சென்று படிக்காத கணிதவியலாளரான சகுந்தலா தேவியின் கணிதத் திறமை அங்கு தான் முதலில் அங்கீகரிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது தனது எட்டாம் வயதில் தமிழகத்திலமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிலும் தனது எண்கணித புலமையை வெளிப்படுத்தினார்.
பிறகு அவர் 1944 இல் தனது தந்தையுடன் லண்டன் சென்றார். 1977 இல், தெற்கு மெதடிஸ்ட் பல்கலைக்கழகத்தில் கணித மேதை சகுந்தலாதேவிக்கும் யு.எஸ். பீரோ ஆஃப் ஸ்டாண்டர்ட்ஸில் UNIVAC 1101 கணினிக்கும் ஒரு போட்டி நடத்தப்பட்டது.
அது என்ன வென்றால் 201 இலக்க எண்ணின் 23வது மூலத்தினை கண்டறிவது . இதற்குரிய கணினி செயல் திட்டத்தினை எழுதவே மிக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது . ஆனால் கணித மேதை சகுந்தலாதேவி 201 இலக்க எண்ணினை கூறிய 50 வினாடிகளிலேயே பதில் கூறிவிட்டார். ஆனால் UNIVAC 1101 கணினி தனது பதிலை கூற 50 வினாடிகள் எடுத்துக் கொண்டது.
இதனாலேயே கணித மேதை சகுந்தலாதேவி “மனிதக் கணினி” என்றழைக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி இலண்டனில் அமைத்துள்ள இம்பீரியல் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அதில் 7,686,369,774,870 என்ற 13 இலக்க எண்ணை 2,465,099,745,779 என்ற 13 இலக்க எண்ணால் பெருக்கும்படி சகுந்தலா தேவியிடம் கேட்கப்பட்டது . அவர் அதற்கான பதிலான 18,947,668,177,995,426,462,773,730 என்ற எண்ணை 28 வினாடிகளில் கூறினார் .இந்த நிகழ்வால் அவரது திறன் 1982 ஆம் ஆண்டில் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது
குழந்தையாக இருக்கும் போதே தனது அதீத கணித்திறனால் பெரிய எண்களின் முப்படி மூலத்தினை கண்டறிவதில் முனைப்பு காட்டியவர். 1988 ஆம் ஆண்டில், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ஆர்தர் ஜென்சன் என்பவர் சகுந்தலா தேவியின் திறன்களை பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தினார் .
அந்த ஆய்வின் இறுதியாக 95,443,993 என்ற எண்ணின் முப்படிமூலமான 457 என்ற பதிலை 2 வினாடிகளிலும் 204,336,469 என்ற எண்ணின் முப்படிமூலமான 589 என்ற பதிலை 5 வினாடிகளிலும் 2,373,927,704 என்ற எண்ணின் முப்படிமூலமான 1334 என்ற பதிலை 10 வினாடிகளிலும் சகுந்தலா தேவி அவர்கள் எந்த உபகரங்களும் இல்லாமல் மனரீதியாக கண்டறிந்தார்கள் என்றார்.
அதே மேடையில் கடந்த நூற்றாண்டின் எந்தத் தேதியையும் கொடுத்தாலும், அந்தத் தேதி எந்த வாரத்தின் எந்த நாளில் வந்தது என்பதை அவர் உடனடியாகச் கூறினார். இது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கணினி உலகினை தனது உள்நிலையால் உலுக்கிய இந்தியாவின் முதல் பெண் கணிதவியலாரான விளங்கிய கணித மேதை சகுந்தலா தேவி அவர்கள் 21 ஏப்ரல் 2013 அன்று தனது 83வது வயதில் இருதய மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக பெங்களூரில் காலமானார் என்பது வருந்தத்தக்கது . எண்கணிதத்திறனை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாது அதனை கணித மேதை சகுந்தலா தேவி அவர்கள் தனது வாழ்க்கை நிகழ்வுகளில் பயன்படுத்தியதை போல நாமும் பயன்படுத்த வேண்டும்.
துணை நூல்கள்
1.“Shakuntala Devi strove to simplify maths for students”. The Hindu. 21 April 2013. Retrieved 9 July 2013.
- Pandya, Haresh (21 April 2013). “Shakuntala Devi, ‘Human Computer’ Who Bested the Machines, Dies at 83”. The New York Times. Retrieved 9 July 2013.
3.“Obituary: Shakuntala Devi”. The Telegraph. 22 April 2013. Archived from the original on 23 April 2013. Retrieved 9 July 2013.
- “‘Human computer’ Shakuntala Devi dies in Bangalore”. Times of India. 21 April 2013. Retrieved 16 December 2018.
- “Shakuntala Devi strove to simplify maths for students”. The Hindu. 21 April 2013. Retrieved 9 July 2013.
தொடர்புக்கு rpcitcbe@gmail.com

