ஷம்பாலா (Shambala) - நூல் அறிமுகம். அரசியல் (Politics) நாவல் (Novel) - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியீடு - https://bookday.in/

ஷம்பாலா (Shambala) – நூல் அறிமுகம்

ஷம்பாலா (Shambala) – நூல் அறிமுகம்

ஷம்பாலா ஓர் அரசியல் நாவல் என்ற புத்தகத்தைப் பேராசிரியர் தமிழவன் எழுதியுள்ளார். ஷம்பாலா என்ற சொல் கருணையின் மையமாகக் கொண்ட இடம் என்று விஷ்ணுபுராணத்தில் இருக்கிறது.
மற்றொன்று ஷம்பாலா என்ற இடம் தீபெத்தில் இருப்பதாகவும், அது உலகத்தில் அதிகமான அதிகாரம் நிறைந்த இடமாகவும், ஆக்கவும், அழிக்கவும் நிறைந்த வல்லமை பொறுத்தியதாகவும் இருக்கிறது. ஜெர்மனியில் சமஸ்கிருதம் பரவியப் போது இச்சொல் பலரின் கவனத்திற்கும் வந்தாக புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கின்றது.

மனிதன் தன் வாழ்க்கையில் எல்லாச் சூழல்களிலும் ஒரு அரசியலை கடந்துதான் செல்ல முடியும். ஒவ்வொரு மனிதனுக்குள் ஒரு அரசியல் இருக்கும். தான் எந்த அரசியல் தேர்ந்தெடுக்கிறேன் என்பது தான் இந்த நாவலின் கருத்தாக இருக்கிறது. தனிமனிதன் வாழ்வில் பயணம் செய்யும் போதும், பொதுச்சிந்தனையோடு செல்லும் போதும் அவனுக்கும் இருக்கும் நெருக்கடிகளை எப்படி கடந்து செல்கிறான் என்பதுதான் நாவல் சொல்கிறது.

இந்த நாவலின் கதாநாயகன் அமர்நாத் என்ற எழுத்தாளர், கலை மற்றும் சமூகத்தின் மீது மிகுந்த அன்புக்கொண்ட மனிதராக இருந்து வருகிறார். அவருக்கு பதின்மூன்று வயது அமிரா என்ற குழந்தையும், வேலைக்கு செல்லும் மனைவியுடன் ஒரு வீட்டில் வசித்து வருகிறார் என்று நாவலின் பக்கங்கள் கொஞ்சம் கடந்துவிடுகிறது.

இந்தப் புத்தகம் பதினைந்து இயல்கள் கொண்ட நாவலாக இருக்கிறது. ஒவ்வொரு இயல்களும் இரண்டு கதைகளை நோக்கி முன்னோக்கி செல்லும், முதல் கதை அமர்நாத் நோக்கியும், இரண்டாவது கதை ஹிட்லர் என்ற கதையில் வரும் அமைச்சர் குறித்தும் எழுதப்பட்டிருக்கும்.

” ஒன்றுக்குப் போகவேண்டுமா” என்று ஒற்றக்கண்ணன் மூக்கை தடவிக் கொண்டே கேட்டான். ஆம் என்று அமர்நாத் சொல்லிக் கொண்டே கழிப்பறைச் சென்றான்.
” நீங்கள் ஒன்றுக்கு இருந்தபின்பு நீர்விடாமல் வரவேண்டும்” என்று மற்றொரு காவலர் சொன்னார். இப்படி விடியற்காலையில் இரண்டு காவலர்கள் வீட்டிற்கு வந்து அமர்நாத்தை கேள்விமேல் கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத மனிதர்கள் போல் பிஸ்டல் வைத்து பேசுவதுமாக சிந்தனை போலீஸ் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கும் அமர்நாத் ஒவ்வொரு கேள்விக்கும் நுணுக்கமாக பதில் சொல்வதாகவும் புத்தகத்தில் நாவல் தொடங்குகிறது.

போலீஸ் என்றால் வார்த்தை கேள்விப்பட்ட வார்த்தையாக எல்லோரும் இருக்கும். ஆனால் இந்த நாவலில் சிந்தனைப் போலீஸ் என்ற வார்த்தை வருகிறது. அப்படியென்றால் அவர்கள் வேலை என்ன? அவர்கள் ஏதற்காக அமர்நாத்தை சந்திக்க வந்தார்கள். இப்படி பல கேள்விகளைக் நாவல் வாசிக்க தொடங்கிய போது தோன்றியது. பிறருக்கு இருக்கும் சிந்தனையை அழிப்பதற்காக தான் இதுமாதிரியான காவலர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று யோசித்துக் கொண்டே வாசிக்க ஆரம்பித்தேன்.

கொஞ்சம் நாட்களாக மிகவும் நுட்பமான கருத்துகளைக் கூறும் எழுத்தாளர்களின் நடவடிக்கைகளை இந்த ஆட்சியாளர்கள் எடுப்பதாக அமர்நாத் புரிந்து கொள்கிறார். இந்த மாதிரியான கருத்துக்கள் நம் ஆட்சிக்கு பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று சிந்தனை போலீஸ் என்று உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று யோசித்து கொண்டே நாவலில் கடந்து செல்கிறார். தனக்கு எதிராக நடந்த நிகழ்வுகளை மனைவி, குழந்தையிடம் சொல்ல முடியாமல் போவதும், சட்டை அணிந்து கொள்ளலாமா? என்று அமர்நாத் சிந்தனை போலிஸ்யிடம் கேட்பதும், ஒரு மனிதனை எந்த அளவுக்கு துன்பத்தை மனதளவில் அவனுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்று நாவல் கூறுகிறது.

ஷம்பாலா (Shambala) - நூல் அறிமுகம். அரசியல் (Politics) நாவல் (Novel) - பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) வெளியீடு - https://bookday.in/

 

” உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா, படித்தவன் ஒருவன் மாணவர்களுக்கு நாட்டுப்பற்று ஏற்படுத்த எப்போதோ உடைந்துபோன டாங்கியை எல்லோர் கண்களிலும் படும்படி தொங்கவிடுகிறேன் என்று கூறுவதைக் கேட்டு” என்று ராம்நாத் காபிக்கடையில் இருக்கும் தொலைக்காட்சியை பார்த்து கொண்டே அமர்நாத்யிடம் கேட்கிறார். நாட்டுப்பற்று என்றால் என்ன? ஆட்சியாளர்கள் நாட்டுபற்று என்று மாணவர்களிடம் கற்பிக்கிறார்கள் என்று நாவலில் நிறைய கருத்துக்கள் முன் வைக்கப்படுகிறது.

” பெரியம்மா இறந்துட்டாங்க ” எப்படி தெரியும். என்று அமர்நாத் பெரியப்பா மகன் கண்ணையா, கிராமத்தில் இருந்து வரும் அண்ணனுடன் உரையாடல்கள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ” டிமானிட்டைஸேஷன்… பணமதிப்பு குறைப்பு” சமயங்களில் மக்களின் அறியாமையும், ஆட்சியாளர்களின் மோசமான பொருளாதார கொள்கை மூலமாக எப்படி இறப்புகள் நடந்தது என்றும் பெரியம்மா எப்படி இறந்ததாகவும் கண்ணையா கூறுகிறார். சிவப்பு நிற நோட்டுகள் கையில் இருந்தவாறு பெரியம்மா இறப்பதாக நாவலும் சொல்கிறது.

“சிந்தனை போலீஸ் என் வீட்டிற்கும் வந்தது” என்று அமர்நாத் நண்பன் சுரேஷ் கூறினார்.
” அவர்களுக்கு என்ன வேண்டுமாம்? என்று அமர்நாத் கோபமாக கேட்கவும், ” இங்கு ஆள்பவர்களின் சிந்தனை மட்டும்தான் இருக்க வேண்டுமாம், சுகந்திரமாக சிந்திக்கும் உரிமையை பறிக்கிறார்கள்” என்று சுரேஷ் பதில் சொல்லிக்கொண்டே பதிப்பகத்தில் உரையாடல்கள் நடந்து கொண்டதாக இருக்கிறது. சிந்தனைகள் உண்மையிலே உளவு பார்க்க முடியுமா? மலம் கழித்த மனிதர்களை வைத்து யார் மலம் என்று அறிய முடியுமா? டிக்கெட் விலை கூடிவிட்டது என்று சொன்னாலும் போலீஸ் அந்த நபரை உளவு பார்க்குமோ? என்று நகைச்சுவைகளோடு உரையாடல்கள் நாவலில் இயல் முடிந்ததைப் பார்க்கலாம். அமர்நாத் பெற்ற மனஅழுத்தத்தை சுரேஷ்யும் பெற்று இருப்பதாக அறிய முடிகிறது. கருத்துகளில் சுகந்திரம் இல்லையென்று பேராசியராக சுரேஷ் வருத்தத்தோடு கூறியதாக நாவல் எடுத்துரைக்கிறது.

” பையன் இந்துவாம், கொன்றவர்கள் முஸ்லீம் கிராமத்துவர்களாம்” என்று மக்கள் பேசுவதாக அமர்நாத் பக்கத்து வீட்டில் வசிக்கும் இராம்நாத் கூறுகிறார். அமர்நாத் வீட்டின் அருகே இடதுபுறம் வயலும், வலதுபுறம் குளம், நடுவில் இருக்கும் கிணற்றில் விழுந்த பையன் யார்? என்று கேள்விகளுக்கு பதிலைத் தேடிக்கொண்டே இருவரும் நடந்து செல்கிறார்கள்.

“உங்கள் மகள் அமரி. மகளைக் காணவில்லை என்று ஒரு கம்ப்ளெயிண்ட் கொடுத்துள்ளீர்கள்” என்று தொலைபேசியில் விளம்பரம் செய்வதுபோல் வருவதாக நாவல் இருக்கிறது. ஒரு தந்தைக்கு தன் மகள் குறித்து இப்படி ஒரு தகவல் வரும்போது முதலில் ஒரு பயம் வரும், அதன் பிறகு தன் மகளைப் பார்க்க வேண்டும் என்று உடனே செல்வார்கள். அதுதான் அமர்நாத்யிடம் இயல்பாக நடந்தது. நாளடைவில் தினமும் இதுமாதிரியான அழைப்புகள் வருவதால், அதுவும் பழகிப்போனதாக அமர்நாத் கூறுகிறார்.

மீண்டும் சிந்தனை போலீஸ் அமர்நாத் வீட்டிற்கு வருகிறார்கள். ஒல்லி ஆசாமி போல் இருப்பவர்” நீங்கள் ஐந்து வருடங்களுக்குமுன் ஒரு கறுப்பு அட்டைபோட்ட ஒவியம் வெளியிட்டதாகவும், அப்ஸ்ட்ராக்ட் ஓவியம் இருந்தது” என்று கூறினார். அது புகழ்பெற்ற நூல், வெளிநாட்டு சிந்தனையாளர் பற்றி இருப்பதாக சொல்லி அமர்நாத்யிடம் மற்றொரு சிந்தனை போலீஸ் கேட்டதாக நாவலில் இருக்கிறது. அப்படி என்ன நாவல் அமர்நாத் எழுதினார். அதில் இருக்கும் நபர் யார்? என்று நிறைய கேள்விகள் நாவலில் வாசிக்கும்போது தோன்றும். கடைசியாக “சிந்தனைப் போலீஸ் டாக் ஸ்க்வாட்” அமர்நாத் பார்த்து பேசிக்கொண்டிருப்பதை புரிந்து கொண்டார். இவர்கள் வாக்கியங்கள், சொற்கள், பத்தி இவற்றை இயங்கும் விதத்தை கண்டுபிடித்து தீவிரவாதிகளை கண்டுபிடிப்பார்களாம். இப்படியெல்லாம் ஸ்க்வார்ட் இருப்பதையெல்லாம் இந்த நாவலின் தான் முதன்முதல் தெரிந்து கொள்கிறேன். தனிமனிதன் உரிமையை சிதைத்தும் வரும் இந்த ஆட்சியாளர் மனநிலையை கண்முன் நாவலில் எழுத்தாளர் கொண்டு வருகிறார்.

அமரியின் மீது பாசத்தோடு இருக்கும் அமர்நாத். இப்போதெல்லாம் அமரியை பயத்தோடு பேசுகிறான். அடிக்கடி கவனமாகப்போ, கவனமாக வா என்று மகளிடம் கூறுகிறான். ஏதோ அவன் மகள்மீது பயம், நிறைந்த பாசமும் இருப்பதை உணர முடிகிறது. ” தேங்க்ஸ் பா” என்று அமரி தின்பண்டங்களை அப்பாவிடம் வாங்கிக்கொண்டு சொல்கிறாள். எல்லாவற்றையும் பார்த்த அமர்நாத் தன்னுள் இருக்கும் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்து தன்னை புதுமனிதனாக நினைக்கிறான்.

அமர்நாத் மனைவிக்கு மகள் அமரி குறித்த அதே அழைப்பு வந்தது, பின்பு அமர்நாத் என்ன சொன்னார்? அமரிக்கு தெரிந்ததும் அவளும் அப்பாவிடம் என்ன கூறினாள் என்பதுதான் நாவலின் முடிவாக இருக்கிறது.

கடைசியாக சிந்தனைப் போலீஸ் வந்ததுக்கு காரணம் அவர் எழுதிய புத்தகம்தான், அப்படி அமர்நாத் எழுதிய புத்தகத்தின் சிந்தனையாளர் பெயர் தான் ” ஹிட்லர்”. அந்தக் கதை முழுவதும் நாவலில் பயணிக்கிறது. அதை நாவலில் படித்து பாருங்கள் இன்னும் சுவாரசியமாக இருக்கும். மூன்றாம் ஹிட்டலரின் கதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இங்கு இருக்கும் மனிதர்கள் இரண்டு விதமான அரசியலை பின்பற்றுகிறார்கள். ஒன்று வலதுசாரி அரசியல், மற்றொரு இடதுசாரி அரசியல் இந்தியாவில் பொதுவாக இருக்கிறது. முதலாளித்துவம், ஆன்மீகம், பாசிசம் நிறைந்து இருப்பது வலதுசாரி அரசியலாக இருக்கிறது. தொழிலாளி வர்க்கம், பொதுவுடமை, சமத்துவம் என்பது இடதுசாரி அரசியலாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் அமர்நாத் எந்த அரசியலை முன் வைக்கிறார். அதனால் ஆட்சியாளர்கள் கோபம் எந்த அளவுக்குச் செல்கிறார்கள் என்று எழுத்தாளர் எளிய உரைநடையில் புரிந்து கொள்ளும் முறையில் புத்தகத்தில் கூறுகிறார்.

இந்நாவல் தன் படிப்பு, எழுத்து, மனிதாபிமானம், சிந்தனை அனைத்தும் அரசு இயந்திரம் தனி மனிதனை உளவு பார்க்கிறது என்ற மையக்கருத்தை வைத்து நாவலில் எழுத்தாளர் எழுதி இருக்கிறார். இந்த நாவல் நேரடியாக அரசியல் பேசவில்லை என்று தோன்றினாலும், மறைமுக அரசியலை பேசிக்கொண்டு தான் சென்றிருக்கிறது.

அருமையான நாவல், அரசியல் பேசும் நாவல். எழுத்தாளர்.தமிழவன் அவர்களுக்கும் அன்பும், நன்றியும்.

அரசியல் பேசுவோம்.

நூலின் தகவல்கள் : 

நூல் : ஷம்பாலா(ஒரு அரசியல் நாவல்)
ஆசிரியர் : தமிழவன்
விலை :  230
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு  : 044 24332924

நூல் அறிமுகம் எழுதியவர் : 

சு.வினோத்குமார்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *