வங்க கவிஞர் சங்கா கோஷ் எழுதிய *ரவீந்திர பவன்* கவிதை – மொழியாக்கம்: மு. தனஞ்செழியன்

Shankha Ghosh Bengal Poetry *Rabindra Bhavan* Tamil Translation By dhananchezhiayan m. வங்க கவிஞர் சங்கா கோஷ் எழுதிய *ரவீந்திர பவன்* கவிதைரவீந்திர பவன்

பேசவில்லை வெறும் வார்த்தைகள்
ஒளியில்லா ஓலியின் பிரிக்கப்படாத
கீற்றுகள் முகம் அறியாமல் மிதக்கின்றன
மனித மனம் மனிதர்களின் மனைதைத்தேடுகிறது
என்பதை நாம் மறந்து விட்டோம்
நான் உன்னைப் பார்த்து நீண்டகாலம் ஆகிறது
இந்த நிலவில்லா, உணர்வற்ற இருளில்
மனிதர்கள் வெறும் பிஆர் இயந்திரம் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்
ஒரு நாள் அவர் இதை என்னிடம் இதைச் சொன்னபோது
அவரது கண்களில் இருந்த வெறுப்பு எனக்கு நினைவிருக்கிறது
ரவீந்திர பவாவின் பாதையில் நின்றேன்
அநேகமாய், அந்தப் படிக்கட்டுகள் அவருக்கு
இதைக் கற்றுத் தந்துதிருந்தன

தாகூர் வழியே, நீங்கள் அதைக் கேட்க வேண்டும்
மனிதர்கள் வெறும் பிஆர் இயந்திரங்களென்று
ஆயினும் மனித மனதைத் தவிர
உங்களுக்கு வேறு எதுவும் தெரியாது
தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை
இயற்கையையும் தேடவில்லை
அமைதியாக, இரகசியமாய் இருந்து கொண்டீர்.
அதனால், தான் இயற்கை இப்பொது பழிவாங்க விரும்புகிறது
ஒவ்வொரு நாளும், மீண்டும், மீண்டும்,
இந்த நிலவு இல்லாத, உணர்வற்ற இருளில்.

வங்க கவிஞர் சங்கா கோஷ்
தமிழில்: மு. தனஞ்செழியன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.