அடுப்பு எரிகிறது, சட்டி சுடுகிறது, எண்ணை கொதிக்கிறது, கடுகு பொறிகிறது, வெங்காயம் வதங்குகிறது, பால் பொங்குகிறது, கிரைண்டர் அரைக்கிறது, தேங்காய் மசிகிறது, கொழும்பு கொதிக்கிறது, கூக்கர் கூச்சலிடுகிறது!
ஆனால், அந்த அடுப்பங்கரையில் நீ மட்டும் ஏன், உன் மூளை திரியை பற்ற வைக்காமல் முடங்கி கிடைக்கிறாய்!
இருண்ட உலகில் இருந்து வெளியே வா இறைவியே!
அடுப்பங்கரை, மணவறை, கருவறை அத்தனையையும் படிக்கட்டுகளாக்கி மேல் ஏறி வா மகளே!
நீ நீயாக இருக்க, நீயாக பின்னி கொண்ட உன்
மனசங்கிலியை கழற்றி வீசி வெளியே வா மகளே வா !
சாதனைகள் படைத்த பெண்களின் பட்டியலில் உன் பெயரை பதித்திடவீர் கொண்டு, நேர் கொண்டு வெற்றி நடை நடந்து வா மகளே வா!
பாட்டன் பாரதி, தந்தை பெரியார், தமையன் பாரதிதாசன் யுகதிகள் நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க
யுகங்கள் யுகங்களாக போராடியாவர்கள் அவர்களின் கனவை நிதர்சனம் செய்வோம் , வா மகளே வா!
விடியலை நோக்கி விசாலமாக வான் நோக்கி பயணிப்போம்,
வெற்றி நிச்சயம்


எழுச்சி மிகு கவிதைவரிகள் வாழ்த்துகள் தோழர்
அருமையான வரிகள் தந்த தோழருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
சிறப்பானதொரு கவிதை வரிகள்.. அருமை தோழர் 💐👏👏
தோழமையுடன் தங்களின் கவிதை வரிகள் நிச்சயம் ஒரு சிலரிடமாவது எழுச்சியை ஏற்படுத்தும். வாழ்த்துகள் தோழர்
எழுச்சி தரும் வரிகள். வாழ்த்துக்கள் தோழர்.