கணந் தோறும் வியப்புகள் புதிய தோன்றும்
கணந் தோறும் வியப்புகள் கனவு தோன்றும் –
என கவி படைத்த முன்டாசு கவி பாரதியே !
இன்று நீ இருந்திருந்தால்,
உன் எழுதுக்கோல், இப்படி கவி படைத்திருக்குமோ!
மழலையர் பள்ளி சென்று பயில்வது வியப்பு!
நீட் தேர்வில்லா மருத்துவ படிப்பு வியப்பு!!
விவசாயி கடனற்று வாழ்வது வியப்பு!
ஏழைக்கு ஒரு வேலை சோறு வியப்பு!
பணக்காரனுக்கோ பசி என்பதே வியப்பு!
விலைநிலம் வீட்டு மனையாகாமலிருப்பது வியப்பு!
வீடுகள் இல்லா மக்கள் சாலையில் உயிரோடு வாழ்வது வியப்பு!
மேடு பள்ளமில்லா சாலைகள் வியப்பு!
பழுதில்லா வாக்கு எந்திரம் வியப்பு!
மருத்துவமனையில் குணமாக்கல் வியப்பு!
மருந்தில்லாமல் சுகமாய் வாழ்வது வியப்பு!
பெண்ணுக்கு சுகபிரசவமாவது வியப்பு!
இயற்கை வாழ்வியல் கடைபிடித்து வாழ்வது வியப்பு
மது கடைகள் முடக்குவது வியப்பு!
பெட்ரோல் விலை குறைவது வியப்பு !
கைகோர்த்து நடப்பது வியப்பு!
கை தூக்கி விடுவது வியப்பு!
பாலைவனத்தில் வெள்ளம் வியப்பு!
பனி பிரதேசத்தில் சுடும் வெயில் வியப்பு!
ஈமசடங்குகளில் உறவுகள் கூடல் வியப்பு!
ஊரடங்கு தடை உத்தரவு நீங்குவது வியப்பு!
அச்சமில்லை அச்சமில்லை என்று விளிப்பது வியப்பு!
மரண பயத்தை விதைக்கும் ஊடகங்கள் வியப்பு!
காவேரியில் நீராடுவது வியப்பு!
குளக்கரையில் குளிப்பது வியப்பு!
சுத்தமான காற்றை சுவாசிப்பது வியப்பு!
ஆற்று நீர் அருந்துவது வியப்பு!
வனவிலங்குகள் வனத்தில் வாழ்வது வியப்பு!
மலக்குழி மரணங்கள் இல்லாதது வியப்பு!
பகலில் கூட பெண்கள் சாலையில் பாதுகாப்பாக நடப்பது வியப்பு!
பெண் சுதந்திரம் என்பதே வியப்பு!
பெற்றோர்கள் பிள்ளைகள் வீட்டில் வாழ்வது வியப்பு!
“முதியோர் இல்லம் ” இல்லாமல் போவது வியப்பு!
“மழலையர் இல்லம் ” இயங்காமல் இருப்பது வியப்பு!
தாய் மொழியாம் தமிழில் பயில்வது வியப்பு !
படித்தவனுக்கு வேலை கிடைப்பது வியப்பு !
மத கலவரமில்லா நாடு வியப்பு!
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று கூறினால் வியப்பு!
வியப்பு வியப்பு வியப்பு இனி வரும் காலம் கணந்தோரும் வியப்பு!
எனினும் நம்பிக்கையோடு வாழ்வதே நமது இலக்கு!!
நன்றி
திருமதி.சாந்தி சரவணன்
email: shanthi1798@gmail.com


சிறப்பான கவிதை வரிகள் தோழர் 💫
இலக்கு – சிறப்பு.. வாழ்த்துக்கள் தோழர். இனிமையான படைப்பு
நன்றி
ஜெயஸ்ரீ