காலை 4.00 மணி அலாரம் அமைதியான ரம்மியமான ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ….. என்ற இளையராஜாவின் குரலோசை எழுப்ப மெதுவாக படுக்கை விட்டு எழுந்தாள் கௌதமி.

நேற்று இரவே திட்டமிட்டபடி இன்று. மெரினா கடற்கரை சென்று சூரிய உதயத்தை பார்த்தே ஆக வேண்டும்.

விடியற்காலை பயணம் ஒரு அலாதி இன்பம்.

முக்கிய காரணம் பொங்கல் விடுமுறை‌. இந்நாளில் சென்னையின் ஜன தொகையை நாம் எளிதில் கணக்கிடலாம். தொழில் காரணமாக புலம்பெயர்ந்து வந்த மக்கள் தம் சொந்த ஊர்களுக்கு செல்லும் அந்த நான்கு நாட்களும் சென்னையின். சாலைகள் சுவாச பயிற்சி செய்து தன்னை தகவமைத்துக் கொள்ளும். அந்த சாலைகள் திருவிழா முடிந்த கிராமம் போல ஒரு ரம்மியமான மௌனத்தை சுமந்து கொண்டு பயணிக்கும். அந்த மௌனமான சாலையில் செல்வதே ஒரு அலாதி இன்பம் ‌

அதுமட்டுமல்ல. வரும் போது திருவல்லிக்கேணி மிஸார் பேட்டையில் மீன், இரால், நண்டு என ஒரு வாரத்திற்கு தேவையான கடல் உணவு வகைகளை பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்று திட்டம்.

மகன் ராகுல் B.Com மூன்றாம் ஆண் படித்து கொண்டு இருக்கிறான். இணையர் கௌதம் கணிபொறி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகிக்கிறார். சிறு குடும்பம்.

கௌதம் அப்பாவின் தோழி கௌரி அத்தையின் மகன். சிறுவயது முதல் அத்தை என்றே அழைத்து பழகிவிட்டது. நட்பாக இருந்த குடும்பம், குடும்ப உறவாக இவர்களின் காதல் உருமாற்றியது. கௌதம் கௌதமி எப்படி பெயரில் ஒற்றுமையோ அதே போல் மனதிலும். “Made for each other”.

கௌதமி, “கௌதம் கௌதம்…… எழுந்திருங்கள்”. ராகுல் ராகுல் எழுந்திருடா……

மணி 4, சிக்கிரமா கிளம்ப வேண்டும் என குரலுக்கு இசைந்து

“குட் மார்னிங்”, கௌதமி என்றான்‌ கௌதம் அதை முந்திக் கொண்டு மம்மி, “குட் மார்னிங்” என்றான் ராகுல்.

குட்மார்னிங் குட்மார்னிங் …4.30க்கு எல்லாம் கிளம்பி விடலாம் என அனைவரும் திட்டமிட்டபடி குளித்து முடித்து கிளம்பி விட்டார்கள்.

அண்ணா நகரில் இருந்து பயணம் தொடங்கியது. மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்த Chai Shop வந்தவுடன் கௌதம் ஒரு chai சாப்பிட்டுவிட்டு போகலாமா என்றாள் கௌதமி.

ஓகே மா, என வண்டியை ஒரமாக பார்க் செய்து விட்டு மூவரும் கரம் chai அருந்தினார்கள்‌. விடியற்காலை நேரத்தில் வெட்ட வெளியில் கரம் ஜாய் குடும்பத்தோடு அமர்ந்து அருந்தும் இன்பம் அலாதி.

அங்கு இருந்து கிளம்பி 5 மணிக்கு மெரினா அடைந்தார்கள்.

மெரினா உள்ளே செல்ல அனுமதி இல்லை என்ற பலகைகள் அங்கு அங்கே காணப்பட்டன. ஊரெடங்கு தளர்த்திய பின் ஏன் ‌இந்த அறிவிப்பு என யோசித்தப்படி அருகில் இருந்த காவலாளியிடம் கௌதம் விசாரித்தான்.

அவர் பொறுமையாக ஒன்னுமில்லை சார் , “கொரோனா தடுப்பு நடவடிக்கை” காரணமாக காணும் பொங்கல் அன்று மக்கள் கூட்டமாக ஒன்று சேர்வதை தடுக்க இந்த நடவடிக்கை. நாளை செல்லாம் என்றார்.

கௌதமி, ராகுல் ஏமாற்றம் அடைய கூடாதுயென உடனே கௌதம் சமாளித்து No issues லைட் ஹவ்வுஸ் பக்கம் செல்லலாம். அங்கு மீன்களும் கிடைக்கும். அப்படியே நாம் சூரிய உதயத்தை பார்த்து விட்டு கடலில் கொஞ்சம் நேரம் நின்று விளையாடிவிட்டு மீன் வாங்கி வரலாம்‌, என சமாளித்தான்‌. சரி என்றார்கள் கௌதமியும், ராகுலும் ‌

அவர்களின் ஆச்சரியம் மெரினா கடற்கரை வந்த மொத்த மக்களும் அங்கு குழுமி இருந்தார்கள்‌.

ஒரு பக்கம் கால்பந்து விளையாடும் ‌காளைகள் மறு புறம் கடல் அலைகளின் ஸ்பரிசத்தை ரசிக்கும் சிறுசுகள், குடும்பங்கள். அவர்களோடு கௌதம் குடும்பமும் ஒரு புறம் கடலோடு விளையாடி மகிழ்ந்தனர்.

ராகுல் ரொம்ப உள்ளே போகாதே என்ற கௌதமியை ராகுல் ஓடி வந்து வா அம்மா இன்னும் உள்ளே போகலாம் என அழைத்து சென்றான்.




கடல் அலை இருவரையும் குளிப்பாட்டியது.

கௌதம் புகைப்படம் எடுத்த வண்ணம் இருந்தான். ராகுல் சூரிய உதயத்தை ரசித்த வண்ணம் புகைப்படங்கள் எடுப்பதில் இணைந்து கொண்டான்.

சரி சரி‌ வாங்க வாங்க ‌போய் மீன் வாங்கிகிட்டு போவோம்

சரியென்று மூவரும் கிளம்பி மீன் விற்கும் இடத்திற்கு வந்தார்கள்.

இருபுறமும் கடைகள் அணிவகுத்து இருப்பது ஜகஜோதியாக இருந்தது. கடல் மண் வாசம் சேர்த்து மீன் வாசமும். சூழன்றுக் கொண்டு இருந்தது.

எத்தனை மீன் வகைகள் கடம்பா, வஞ்சரம், இரால், நண்டு, சோரா, சங்கரா, ரோகு, கட்லா………..

கடம்பா வாங்க வேண்டும் என தேடிய கௌதமி கண்களுக்கு பளபளவென கண்ணாடி போல் கடம்பா பட்டது.

அதோ, “கௌதம் கடம்பா” என்றாள்.

ஒரே கிலோ வாங்கினார்கள்.

“இங்கேயே சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு போகலாம்” என்றான் கௌதம்.

வேண்டாம் கௌதம், “நானே சுத்தம் செஞ்சிடறேன்”, எதுக்கு அதுக்கு வேற தனியா காசு, என்றாள் கௌதமி..

கௌதமி, “இங்க பாரு ஒவ்வொரு கடைகளுக்கு முன் அமர்ந்து இருக்கும் பெண்களை பார்”. இவர்களுக்கு வருமானமே இதை நம்பி தான். வா மா இங்கயே சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு போகலாம் என்றான்.

ஒவ்வொரு கடை முன் பார்த்த வண்ணம் வந்த கௌதம் ஒல்லியான உருவம் கொண்ட சுமார் 40 வயது இருக்கும் கருத்த உருவ பெண் காரியமே கண்ணாக மீன் சுத்தப் படுத்திக் கொண்டு இருப்பதை பார்த்தான். அவர் அருகே சென்று காத்திருந்தார்கள். வேறு ஒருவருடைய மீனை சுத்தம் செய்து முடித்து கொடுத்தவுடன் நிமிர்ந்து இவர்களை பார்த்தாள் அந்த பெண்.



கௌதம் கடம்பா மா. சுத்தமா சுத்தம் செய்து கொடுங்க என்றான்.

பேசாமல் கையில் வாங்கி கொண்டு அதன் கண்ணை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கௌதமி, “கடம்பா சுத்தம் செய்விங்களா” அக்கா என்றாள்‌

ஆம் என்பது போல் தலையசைத்தாள்.

பின்னர் ஏன் பார்த்துக் கொண்டே இருக்கீங்க, என்றவளை பார்த்து உயிர் இன்னும் இருக்கிறது என்றாள்.

கௌதமிக்கு ஆச்சரியம். தமக்கு அது உயிரற்று இருப்பது போல தானே தெரிகிறது…என யோசித்தபடி

எப்படி சொல்றிங்க அக்கா என்றாள்

அதனுடைய கண் பார்த்து என்ற சொல்லிவிட்டு, சிறிது நேரத்தில் சுத்தம் செய்ய துவங்கினாள்.

கௌதமி பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தாள். பல‌வகை‌ மீன்கள் இருக்கிறதே இதையெல்லாம் சுத்தம் செய்ய யார் கற்றுக் கொடுத்தது. எல்லா வகை மீன்களையும் ‌சுத்தப்படுத்த தெரியுமா, என கேட்ட கௌதமியை இடமறித்தான் கௌதம்.

அருவாமனையில் மீன் படும் பாட்டை பார்தா … இந்த கேள்வி? கௌதமி. அந்த மீனை சர‌சரவென கத்தியை வைத்து அறுக்கும் ஸ்டைலை பார்த்தும்மா தெரியலா……

அக்கா expert என்று..

மாமியார் தானே சொல்லி கொடுத்தாங்க என்ற‌ கௌதமையை ஓர கண்ணால் ….. பார்த்துக் கொண்டே கண்களால் ஆமாம் என சொன்னாள்

அட பாருடா. உங்க பெயர் என்ன.

“மலர்”

நல்ல பெயர். கடலோர சாலையில் ஒரு மலர் மீனை சுத்தப்படுத்துகிறது என்றான்.

மறுபடியும் மலர் வெட்கத்துடன் மறு புன்னகை உதிர்த்தார்..

சரி மலர் சொல்லுங்கள் உங்க மாமியார் தானே சொல்லி கொடுத்தாங்க.

ஆமாம். எங்க மாமியார் தான். கையில் குத்தி குத்தி சொல்லி கொடுத்தாங்க, என்றார்.

ஏன், “உங்க வீட்டுக்காரர் ‌ஒன்னும் கேட்க மாட்டாரா” என்ற கௌதமை பார்த்து, நீ கேட்பியா உங்க அம்மாவை, உன் பெண்டாட்டியை ஏதாவது சொன்னா… எந்த ஆம்பளை அம்மாவை கேள்வி கேட்கிறான்.

பதிலில்லை கௌதமிடம்.

நாங்கள் சண்டை போட்டு கொண்டு இருந்தால் இதோ ஒரு டீ குடிச்சிட்டு வந்துடுறேன் என சொல்லி கொண்டே வெளியே போய் விடுவார். சண்டை முடிஞ்சு சமாதானம் ஆன அப்புறமா வந்து சேருவாரு…..

பெண்ணா பொறந்தா எல்லாத்தையும் அனுபவிக்க தான் வேண்டும். இன்னொன்று அனுசரித்து தான் போக வேண்டும் என்று எழுதாத சட்டம் சொல்லுது என்ற சொன்ன மலரை பார்த்து கௌதமி மனதிற்குள், ” இது பெண் சமூகத்திற்கு ஒரு பொது பிரச்சினை தான்”, என்று நினைத்து கொண்டாள்.

வீட்டுகாரர் எங்க. கடலுக்கு போய் இருக்கிறாரா? என்ற கௌதமை பார்த்து இல்லை, “எனக்கு கடலை சொத்தா கொடுத்து விட்டு கடலுக்குள் போய்விட்டார் சூனாமி வந்த போது”, என அதே புன்னகையோடு….. சொல்லி கொண்டே வெட்டிய மீன் துண்டுகளை ஒரு கவரில் போட்டு ……. கொடுத்து விட்டு. கௌதம் கொடுத்த பணத்தை வாங்கி டப்பாவில் போட்டு விட்டு, அடுத்த நபரிடம் மீன் வாங்கி சுத்தம் செய்ய துவங்கினாள் மலர்.

எத்தனை பெரிய சோகத்தை தன்னுள் ஒளித்து வைத்து கொண்டு எவ்வளவு சுலபமாக எதார்த்தத்தை ஏற்றுக் கொண்ட மலர் Great தான் என்று மனதில் நினைத்தபடி கௌதமி நடக்க…..

அதே வேளையில், பின் தொடர்ந்த கௌதமக்கு, “கடல் அன்னை தன் பாஷையில், அலையின் ஓசை மொழியாக “ஆம்” என்று கூச்சலிட்டு சொல்வது போல் இருந்தது ‌…. ‌‌

நன்றி

திருமதி. சாந்தி சரவணன்

email: [email protected]



5 thoughts on “சிறுகதை: “மலர்” – திருமதி. சாந்தி சரவணன் ”
  1. “மலர்” தலைப்புக்கேற்றது போல அழகிய சிறுகதை. படிக்கும் போதே கடற்கரை காற்று வீசுது. இங்கிருக்கும் பெண்களுக்கு வருமானமே இதுதான் என மனதை அள்ளுகிறார் கௌதம். இணையரை பிரிந்த நிலையிலும் துயரமான காலத்தை கடந்து இயல்பாக இருக்கும் பெண்களை முன்னிலைப் படுத்துகிறார் மலர் கதாப்பாத்திரம். மலரில் கடற்கரை வாசம். வாழ்த்துக்கள் தோழர்.

    நன்றி
    ஜெயஸ்ரீ

  2. வாசித்து உடனே தங்களின் விமர்சனம் பதிவு செய்து ஊக்கப்படுத்துவதற்கு மிகவும் நன்றி தோழர்

  3. எளிமையான அழகான கதை களம். வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *