சாந்தி சரவணன் ஹைகூ கவிதைகள்

சாந்தி சரவணன் ஹைகூ கவிதைகள்

ஒரு சாப்பாட்டுத் தட்டில்
பல கைகள்
நண்பர்கள்
****
அச்சமில்லை அச்சமில்லை
பாடல் ஒலிக்கிறது
ஆஸ்பத்திரி வாசலில்
***
ஜாதிகள் இல்லையடி பாப்பா
நிதர்சனமானது
அனாதை இல்லத்தில்
****
அன்று கிடைத்தது
இன்று கிடைக்கவில்லை
குழந்தைக்குத் தாய்பால்
****
நான் அனுபவித்த இன்பம்
என் பிள்ளைக்குக் கனவு
காவேரிக்  குளியல்
****
காதலிக்கு காவல்
இடைவெளிகளில்
ரோஜா முட்கள்.
****
கண்ணில் புலப்படாத தீநுண்மி
இடம்பெற்றது
உலக வரலாற்றில்
****
உயிரற்ற கரோனா
உயிர் பெறுகிறது
ஊடக விளம்பரங்களில்
****
திருமதி.சாந்தி சரவணன்
சென்னை 40
Show 1 Comment

1 Comment

  1. S V VENUGOPALAN

    அருமை…வாழ்த்துகள் 
    எஸ் வி வேணுகோபாலன் 94452 59691

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *