ஷேக் ஹசீனா மக்கள் உணர்வுகளை மதிக்கத் தவறினார்| Sheikh Hasina (Bangladesh) failed to respect people's sentiments - M. A.Baby - https://bookday.in/

இரும்புப் பெண்மணியின் வீழ்ச்சி! சாதனை படைத்த ஷேக் ஹசீனா மக்கள் உணர்வுகளை மதிக்கத் தவறினார்

இரும்புப் பெண்மணியின் வீழ்ச்சி! சாதனை படைத்த ஷேக் ஹசீனா மக்கள் உணர்வுகளை மதிக்கத் தவறினார்..

வங்கதேசத்தை உலுக்கி எடுத்த மாண வர்களின் தலைமையிலான போராட்டம் மாபெரும் மக்கள் எழுச்சியாக பரிணமித்தி ருக்கிறது. பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா வுடன் ஒரு கட்டம் நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பெயரளவில் மட்டுமே அதிகாரம் கொண்ட வங்கதேச ஜனாதிபதி, இராணுவப் பிரதி நிதிகளுடனும், போராட்டத்தில் ஈடுபட்ட மாண வர்களின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடிய பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

முகமது யூனுஸ்

மாணவர் பிரதிநிதிகள் பரிந்துரைத்தபடி, எண்பத்து மூன்று வயதான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்காலப் பிரதமராகிறார். ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தற்காலிகமாக தஞ்ச மடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் கொள்கைகளை விமர்சித்து வந்தவர் முகமது யூனுஸ். இவர் கிராமிய வங்கி மூலம் ஏழைகளுக்கு சிறுகடன் வழங்கி, வறுமை ஒழிப்பில் உலக கவனத்தைப் பெற்ற மாதிரியை உருவாக்கியவர். விமர்சனங்களால் கோபமடைந்த பிரதமர் ஷேக் ஹசீனா, நிதிக் குற்றங்களுக்காக முஹம்மது யூனுஸை கைது செய்து, சிறையில் அடைக்க முயன்றது விவாதமானது.

முகமது யூனுஸ் நோபல் பரிசுத் தொகையை ஏற்றுக்கொண்டது மற்றும் புத்தகங்களுக்கு ராயல்டியை வாங்கியதுதான் ஹசீனா கூறிய மிகக் கடுமையான குற்றம். ஒரு முதலாளித்துவ ஆட்சியா ளர் எதேச்சதிகாரமாக நடக்க முயன்றால், தனது பழைய ஜனநாயகப் பாரம்பரியத்தை எப்படி இழக்க நேரிடும் என்பதற்கு வங்கதேசம் ஒரு உதாரணம். இரண்டு கட்டங்களாக 20 ஆண்டுகள் வங்கதே சத்தின் பிரதமராக இருந்தவர் ஹசீனா. 2024 தேர்த லில் ‘வெற்றிபெற்ற’ அவர் தனது பதவிக் காலத்தை ‘வெற்றிகரமாக’ முடித்திருந்தால், கால் நூற்றாண்டு காலம் வங்கதேசத்தை வழிநடத்தி வரலாறு படைத்திருப்பார். எவ்வளவு சீக்கிரம் இரும்புப் பெண்மணி எனப் பெயர் பெற்றாரோ அந்த அளவுக்கு ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அளவுக்கு பொதுமக்களின் கோபத்திற்கு ஆளானார்.

மாணவர் போராட்டத்தை குறைத்து மதிப்பிட்ட ஹசீனா

ஒரு மாதத்திற்கு முன்பு – ஜூலை 1 அன்று, இட ஒதுக்கீட்டுக் கொள்கையை புதுப்பிக்கக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் போராட் டத்தைத் தொடங்கினர். அவர்கள் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளை முற்றுகையிட்டனர். கடந்த ஜனவரி மாதம் ஐந்தாவது தேர்தலில் வெற்றி பெற்ற ஹசீனா, மாணவர்கள் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி இந்தப் போராட்டத்தை மறுதலித்தார். இந்த நேரத்தில் ஹசீனாவின் தேர்தல் வெற்றி குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கதேச கம்யூனிஸ்ட் கட்சியும், முக்கிய எதிர்க் கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியும் கடந்த தேர்தலைப் புறக்கணித்தன. ஒரு இடதுசாரிக் கட்சி யான வங்கதேச தொழிலாளர் கட்சி, ஹசீனாவின் அவாமி லீக்குடன் கூட்டணி வைத்திருந்ததால் இயல்பா கவே தேர்தல் களத்தில் இருந்தது. பயங்கரவாதக் கொள்கைகளைப் பின்பற்றியதற்காக ஜமாத்தே இஸ்லாமி தடை செய்யப்பட்டதால் அது தேர்தல் களத்தில் இல்லை.

அடக்குமுறையும் உயிரிழப்புகளும்

மாணவர்களின் ஜூலை போராட்டத்தை ஒடுக்க அரசு காவல்துறையைப் பயன்படுத்தியது நிலை மையை தீவிரப்படுத்தியது. ஆளும் கட்சியான அவாமி லீக்கின் விளையாட்டுக் குழு, காவல்துறையினருடன் இணைந்து போராட்டக்காரர்களை எதிர்கொள்ள முனைந்தது, இரு தரப்பிலும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி, நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்த னர். 14 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். முன்னாள் ராணுவத் தளபதி இக்பால் கரீம் துய்யால், துருப்புக்களை திரும்பப் பெறவும், அமைதியை மீட்டெடுக்கவும் அரசாங்கத்திற்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.

தற்போதைய இராணுவத் தளபதி ஆகஸ்ட் 4 ஆம் தேதி இராணுவம் மக்களுடன் இருப்பதாக அறிவித்தார். மாணவர்களும் மக்களும் காவல் நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களை ஒவ் வொன்றாகக் கைப்பற்றத் தொடங்கினர். தொலைக்காட்சி நிலையம் தீ வைத்து கொளுத் தப்பட்டது. பிரதமரின் இல்லத்தை போராட்டக்கா ரர்கள் கைப்பற்றுவார்கள் என்பதை உணர்ந்து பிரதமரின் மீது அனுதாபமுள்ள ராணுவ வீரர்கள் உதவிக்கு வந்ததால்தான் ஹசீனா விமானப்படை விமானத்தில் தப்பிக்க முடிந்தது.

வங்கத் தந்தையின் மகளது சோக முடிவு

வங்கதேசத்தை நிறுவிய ‘வங்கத் தந்தை’ என்கிற ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அன்பு மகள் ஷேக் ஹசீனா, தனது சாகசம் நிறைந்த பொது வாழ்வின் கடைசி அத்தியாயம் இப்படி ஒரு சோகமாக முடிவதற்கு தானே காரணமாகி உள்ளார். பொரு ளாதார வளர்ச்சியில் பல குறிப்பிடத்தக்க சாதனை களை நிகழ்த்தியவர் பிரதமர் ஷேக் ஹசீனா என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்தியா வுடனும் சீனாவுடனும் நல்லுறவைப் பேணுவதற்கான இராஜதந்திர சாமர்த்தியம் அவரிடம் இருந்தது. மத தீவிரவாத சக்திகளுக்கு எதிராகவும் கடும் நட வடிக்கை எடுத்தார்.

அப்படியென்றால் எங்கே தவறு செய்தார்? அர சாங்கத்திலும் அவாமி லீக்கிற்குள்ளும் தனது தலைமையை உறுதிசெய்த பிறகு, அவர் தன்னைச் சுற்றி திரண்டிருந்த புகழ்ச்சியாளர்களின் தகவல் களை மட்டுமே கேட்கும் சூழ்நிலை வளர்ந்தது. ஷேக் ஹசீனாவின் தனிப்பட்ட செல்வாக்கு கேள்விக்கு இடமில்லாமல் போய்விட்டது. ஊழல் தலைவிரித்தாடியது. ஊழல்வாதிகள் அவாமி லீக் ஆதரவாளர்களாக மாறினால் பிரச்சனை இல்லை என்கிற நிலை ஏற்பட்டது. விமர்சிப்பவர்கள் மீது சகிப்புத்தன்மை இல்லாத அணுகுமுறையும் ஏற்பட்டது.

தேர்தல் வெற்றியில் குற்றச்சாட்டு

ஷேக் ஹசீனா தமது புத்திசாலித்தனமான, ஆனால் ஜனநாயகமற்ற சூழ்ச்சிகளைப் பயன்படுத்தி தேர்தல் வெற்றியை உறுதி செய்தது வங்கதேசத்துக்குள்ளும் வெளிநாட்டிலிருந்தும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. கடுமையான வேலையில்லாத் திண்டாட்டத்தின் பின்னணியில், இடஒதுக்கீட்டுக் கொள்கையை மாற்றக் கோரி தொடங்கிய மாணவர் போராட்டம், தீவிர மக்கள் இயக்கமாக மாறியதில் இரண்டு காரணிகள் உள்ளன. ஒன்று காவல்துறை மற்றும் அவாமி லீக் கும்பல்களின் இரத்தக்களரி அடக்கு முறை பாணி. இரண்டாவதாக, ஷேக் ஹசீனா எதிர்ப்பா ளர்களை ‘ரசாக்குகள்’ என்று வர்ணித்தார். வங்கதேச விடுதலைப் போரின் போது, வங்கதேசத்தில் மக்களைக் கொல்லவும், பெண்களை பலாத்காரம் செய்யவும் தயாராக இருந்த மேற்கு பாகிஸ்தான் வீரர்கள் தான் அன்றைக்கு ‘ரசாக்’ என்று வர்ணிக் கப்பட்டனர்.

நிச்சயமற்ற மாற்றம்

தற்போது நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ள சூழலில், வங்க தேசத்தில் என்ன வகையான அரசியல் மாற்று அமைப்பு உருவாகிறது என்பது மிக முக்கியமானது. வங்கதேசத்தில் உள்ள வலதுசாரி – தீவிரவாத சக்திகளால் தற்போதைய சூழ்நிலையை சுரண்ட முயற்சிக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமான விசயம். வங்க தேச கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேற்கு பாகிஸ்தானைப் போல இல்லாவிட்டாலும், இராணுவம் ஆட்சியதிகாரத்தை தனது பிடிக்குள் கொண்டுவர ஆர்வமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் வங்கதேசத்திலும் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் கழுகுக் கண்கள்

உலகின் எந்த மூலையிலும் தலையிட ஆர்வம் காட்டும் அமெரிக்காவும், சிஐஏவும் கலங்கிய குட்டையில் ஆதாயம் தேட கழுகுக் கண்களுடன் பறந்து கொண்டிருப்பதை மறந்து விடக்கூடாது. வங்க தேச விடுதலைப் போரின் போது இந்தியா வையும் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அச்சுறுத்து வதற்காக அணு ஆயுதம் ஏந்திய 7ஆவது கடற் படையை நிலைநிறுத்த முனைந்தது அமெரிக்க ஏகாதி பத்தியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் நம்பிக்கையைப் பெற்று, இந்தியா பின்பற்றும் அணிசேரா இயக்கத்தின் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும். அதன் அடிப்படையில், வங்க தேசத்தின் நிகழ்ச்சிப் போக்குகளில் ஒன்றிய அரசு தனது அணுகுமுறையை வகுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

– எம்.ஏ.பேபி
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
நன்றி : தீக்கதிர்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *