அதிர்ச்சிக்குள்ளாகும் வாழ்வாதாரம் – சுமித் மஜூம்தார், இந்த்ரமில் ஓ.பி ஜின்டால் (தமிழில் எஸ்.ஏ.மாணிக்கம்)

அதிர்ச்சிக்குள்ளாகும் வாழ்வாதாரம் – சுமித் மஜூம்தார், இந்த்ரமில் ஓ.பி ஜின்டால் (தமிழில் எஸ்.ஏ.மாணிக்கம்)

 

ஊரடங்கு காலத்தின் விளைவுகளால் கோடிக்கான மக்கள் .நீடித்த வறுமைக்குத் தள்ளப்படுவதைத் தடுக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நீண்ட ஊரடங்கு தற்போது ஒரு முடிவிற்கு வந்துள்ளது. தளர்வுகள் துவங்கியுள்ள இவ்வேளையில் ஊரடங்கு காலத்தில் உலகம் முழுவதும் மிகக் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை வெளிப்படுத்தியது. பல்வேறு  செய்திகளின் தகவல்களும். கணக்கெடுப்புக்களும்  ஊரடங்கு காலத்தில் மிகச்சொற்பமான வசதிகளுடன்  வாழ்ந்து வந்த  உழைப்பாளிகளின் பெரும்பகுதியானர் தங்களின் வாழ்வாதாரத்தையும் வருவாயையும் இழந்துள்ள அவல நிலையைப் படம்பிடித்துக் காட்டின.  அவர்களில் பெரும்பாலானோர் பணியிடங்களில் எவ்வாறு இருந்தார்களோ அதனையொட்டி அவர்களின் வறுமையின் துயரமும் பல்வேறு ஆழத்திற்குத் தள்ளப்பட்டது. ஊரடங்கின் விளைவால் பெரும் எண்ணிக்கையில் வறுமை அதிகரித்துள்ளது. ஊரடங்கால் பல்வேறு தரப்பட்ட உழைப்பாளிகள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்கான மதிப்பீடுகளுக்கு  நாங்கள் மிகச் சமீபத்தில் வெளியான இந்தியாவின் உழைப்பாற்றல் தகவல்களையே பெரும்பாலும் பயன்படுத்தியுள்ளோம்.

இந்தியாவின் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை பற்றிய உள்ளடக்கம் குறித்து  நீண்ட காலமாகவே சர்ச்சை உள்ளதும் அது  பழமைவாத எண்ணிக்கையாகவே இருந்து வருகிறது என்பதேயாகும். வறுமைக் கோடு குறித்து அலுவல் முறையில்  புதுப்பித்தலை மேற்கொள்ளப் படாமலும்.சமீப காலமாகத் தேசிய மாதிரி ஆய்வின் நுகர்வு செலவுகள் பற்றிய தகவல்கள் கிடைக்காத நிலையிலும் இந்தியாவின் வறுமை பற்றிய மதிப்பீடுகள் தெளிவற்ற நிலையிலேயா உள்ளன.

காலமுறையிலான தொழிலாளர்கள் ஆற்றல் கணக்கெடுப்பு (ஞடுகுளு) 2017-18ம் ஆண்டுக்கான சமர்பித்தள்ள குடும்ப  நுகர்வு செலவு பற்றிய விவரப்படியும், அரசு குறிப்பிட்டுள்ள வறுமைக்கோடு விபரத்தின் படியும்,  ஊரடங்கு அறிவிப்பதற்கு  முன்னர் 42 சதவிகிதத்திற்கு மேல் அல்லது 56 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் இருந்தார்கள் என்கின்றன. மேலும் வறுமைக்கோட்டிற்கு மிக நெருக்கமாக சுமார் 20 சதவிகிதம் பேர் சற்று கூடுதலாக நுகர்வு செலவு பகிர்வைக் கொண்டவர்களாக சுமார் 20 கோடி மக்கள் இருக்கிறார்கள். நாட்டின் பல பாகங்களில் உள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களை ஒப்பிடுகையில், அதைக்காட்டிலும் சில நூறு ரூபாய்கள் மட்டுமே கூடுதலாக இருந்துள்ளது.

வருவாயில் ஏற்பட்டுள்ள பள்ளத்தினால் நுகர்வுக்கான செலவுகள் குறைந்து பெரும்பாலானவர்கள் வறுமையின் சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுடைய குறைந்த வருவாய்களும் அதிகளவிலோ அல்லது முழுமையாகவோ உறிஞ்சப்பட்டு ஊரடங்கில் தள்ளப்பட்டனர்.

காலமுறையிலான தொழிலாளர்கள் ஆற்றல் கணக்கெடுப்பு தகவல்களின்படி எங்கள் மதிப்பீட்டில் ஊரடங்கு காரணமாக 2020ம் ஆண்டில் 40 கோடி மக்கள் கூடுதலாக வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்படுவார்கள். இதில் ஊரடங்கினால் நகர்ப்புற மக்களில் 12 கோடிப்பேர் புதிதாகவும். கிராமப்புற மக்களில் 28 கோடி மக்களும் புதிதாகவும் சேருகிறார்கள். ஏற்கனவே ஏழைகளாக இருப்பார்களின் வாழ்க்கைத் தரம் மேலும் சீர்குலைந்து வறுமை ஆழமடையும். ஊரடங்கிற்கு முன்னால் மக்கள் தொகையில் 16 சதவிகிதம் பேர் தனிநபர் நுகர்வு செலவு   நாளொன்றுக்கு ரூ.30 அல்லது அதைவிடச் சற்று குறைவாக அவர்களுடைய தினசரி செலவை மேற்கொண்டனர். ஊரடங்கிற்குப் பின்னர் இது 62 கோடிக்கும் மேலான மக்களை (47 ரூ) மிகத் தீவிரமான வறுமைக்கு தள்ளியுள்ளது. தேசத்தின் வரலாற்றில் என்றும் கண்டிராத மிகப் பெரும்பான்மையான மக்கள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியடையச் செய்கிறது.

அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கு

COVID 19 has hit retail business with a loss of Rs 9 lakh in 60 days

இம்மாதிரியான சூழ்நிலையில் அரசாங்கத்தின் தார்மீக ரீதியான பொறுப்பு போதுமானதாக இல்லாமலும்  மிகவும் மோசமாகவும் இருந்தது. இரண்டாவது பொருளாதார மீட்பு சலுகைகளை அறிவித்த நிதியமைச்சரின் அறிவிப்பில் இந்த அரசாங்கத்தின் அரசியல் பகிர்மானத்தில் அதன் இயல்பான வர்க்க சாயல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்தியது. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கூலியை ரூ.20ஐ அதிகப்படுத்தி ரூ182லிருந்து ரூ. 202 ஆக உயர்த்தி ஒரு அடையாளப்பூர்வமாக அறிவித்தது. இது ஒரு பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்ட மக்களுக்கு அறிவித்துள்ள இந்த சலுகை நகைப்புக்குரியதாகும். சந்தோசத்திற்கு இடமின்றி கிராமப்புறங்களின் மறு வாழ்விற்கு சூசுழுநுஹ திட்டத்தை விரிவாக எடுத்துச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. புலம்பெயர்வு தலைகீழாகச்  சென்றதால் வேலைகளுக்கு மேலும் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் கிராமப்புற உழைப்பு சக்தியில்  தேவைப்படும்.

புதுப்பிக்கப்பட்ட திட்டத்தின் படி 9 கோடி தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு  ஒரு   மாதத்திற்கு 20 நாட்கள் உத்திர்வாதமாக வேலைவாய்ப்பு தேவைப்படுகிறது. அதாவது கூடுதலாக ரூ.1.6 லட்சம் கோடி செலவாகும்.

நாடு ழுமுவதும் ஒரே பொது விநியோக முறை பற்றி விரிவாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதன் அமலாக்கத்தில் நல்ல முறையிலான நியாயம் இருத்தல் வேண்டும். சமீபத்திய அனுபவத்தில் டெல்லியில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு உணவுக் கூப்பன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதில் பணி நிமித்தமாக வாடகை வீடுகளில் வசித்த வந்த  மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்த தலித்துகள். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட ஏழை மக்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

திட்டங்களை அமுலாக்குவதற்கு முன்னதாக உள்ளூர் மட்ட அளவில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு சிறந்த முறையில் செயல்படுத்த வேண்டும். சில சந்தர்ப்பங்களில் தகவல் தொழிற் நுட்ப  குறைபாடுகளை வைத்து வெளியேற்றப்படுவது வறுமையை மேலும் கூடுதலாக்குவதற்காகத்  தரப்படும் சமூக விலையாகும்.

நகர்ப்புற பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல்

ஊரடங்கிற்கு பிந்தைய காலத்தில் நகர்ப்புறத்தை பொறுத்தளவிலும் அமைப்பு சாரா தொழில்களிலிருந்த புலன் பெயர் தொழிலாளர்கள் திரும்பிச் சென்ற நிலையில் நகர்ப்புற பொருளாதாரத்தில் தேக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற பொருளாதாரத்தை நிலைப்படுத்த உத்தரவாதமான வேலைவாய்ப்பு திட்டத்தை அமுலாக்குவது தேவையாகிறது. நகராட்சி அமைப்புக்களின் வாயிலாக ஒரு மாதத்திற்கு 20 நாட்கள் நேரடியான வேலைவாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்.

வினவு | Tamil news analysis, alternative politics, culture ...

நகர்ப்புறங்களில்  குடிசை பகுதிகளை மேம்படுத்தல், குடிநீர் விநியோகம், கழிப்பிடங்களைக் கட்டுதல், பூங்காக்கள். மற்றும் பொதுஇடங்களில் சமூக காடுகள் அமைத்தல் போன்ற முக்கிய சமூக கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு வேலை வாய்ப்பு திட்டங்களைப்  பயன்படுத்தலாம். வேலைக்கான கூலியை  நிர்ணயிக்கும் போது மாநிலத்தில் சூசுழுநுஹ திட்டத்திற்கு வழங்கப்படும் சராசரி சம்பளத்தை விட 30 சதவீதத்தைக் கூடுதலாகச் சேர்த்தி நிர்ணயிக்கலாம்.

இந்த திட்டத்தின் முலமாக சிறு. நடுத்தர தொழிற்கூடங்களைக் கொண்டுள்ள நகரங்கள் மீண்டெழ மறைமுகமாகப் பயனளிக்கும். இத் திட்டத்தில் சிறு நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் ஒப்பந்ததார்களையம் இணைக்கலாம். நேரடித் திட்டத்தின் சம்பளத்திற்கு நிகரான  மானியத்தை வழங்குவதற்கான திட்டங்களுடன் சிறு.நடுத்தர தொழில்கள்,  கட்டுமான திட்டங்கள் மற்றும் இதர நிறுவனங்களில்  வேலை வாய்ப்பை உருவாக்கவும் இத்துடன் இணைக்கலாம். நவீன தாராளமயத்தின் வளர்ச்சி என்பது எங்களுடைய அனுபவத்தில் 1990 முதல் உழைக்கும் வர்க்கத்தின் முதுகை ஒடித்ததன் மூலமாகக் கிடைத்ததேயாகும். தொழிலாளர்களுக்கு மிக மிகக்குறைவான சம்பளத்தை வழங்குவதும், அதன் மூலமாக கிடைக்கப்பெறும் உபரியை மறுமுதலீடு செய்யப்படும் என்ற எதிர்பார்ப்புடன் உற்பத்தி சாதனங்களை வைத்துள்ள முதலாளிகள் கைகளில் லாபங்கள் குவியப்படுவதன் மூலமாக தாராளமயப் பொருளாதாரம் வளர்கிறது.

இது தடையில்லாமல்  நடைபெறுவதிற்காக அரசாங்கமும்  உறுதுணையாக  வேலை செய்கிறது. தொடர்ச்சியாகத் தீவிரமாக அமுலாக்கப்பட்டு வரும் கொள்கைகள், உழைக்கும் வர்க்கத்தை மேலும் சீர்குலைக்கிறது. அவர்களுடைய கூட்டுப்பேர உரிமையைப் பறிக்கிறது. அவர்களை தங்களது சொந்த ஊரிலிருந்து வெளியே தள்ளுகிறது, அவர்களுடைய மனச்சோர்வு அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியைக் கூட ஏற்குமாறு தூண்டுகிறது. அவர்களைக் கௌரவமான வாழ்க்கை நிலையிலிருந்து வெளியேற்றுகிறது. அவர்களின் கஷ்டமான வாழ்க்கை காலங்களில் உயிர் பிழைப்பதற்கு  இருந்த சொற்பமான சமூகப் பாதுகாப்பு சலுகைகளுக்கும்  மூடுதிரை போடுகிறது. நாம் தற்போதைய பொருளாதார திட்டங்களில் மாற்றத்தையும் வளர்ச்சி திட்டங்களை மாற்றியமைக்காவிட்டால் விளைவுகள் மிகத் தீவிரமாகி, வறுமை சார்ந்த மரணங்களும். தரித்திர நிலைமையும்  சமூக அமைதியின்மைக்கும் குற்றங்களுக்கும் வழிவகுத்திடும்.

நன்றி தி இந்து

கட்டுரையாளர்களில்  சுமித் மஜூம்தார் இங்கிலாந்தின் யார்க் பல்கலைகழத்தின் ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கான மையத்தின் ஆராய்ச்சியாளராகவும். இந்த்ரமில் ஓ.பி ஜின்டால் அரசு மற்றும் பொதுக்கொள்கை பள்ளியின் இணைப் பேராசிரியராகவும் உள்ளனர்.. தமிழில் எஸ்.ஏ.மாணிக்கம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *