சிறுகதை: கொள்கை – மு தனஞ்செழியன்

தம்பா ஒரு கல்லை எடுத்து கட்டை விரலை நசுக்கி கொண்டு இருந்தாள். “சொல்றது புரியுதா?… இல்லையா…? படிக்க சொன்ன… படிக்க மாட்டியா? உன் எழவுக்கு  வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய்…கெட்டப் காட்ட வேண்டி இருக்கு.” என தனது ஐந்து வயது குழந்தையின் பிஞ்சு விரல்கலை நசுக்கி கொண்டு இருந்தாள்.

“அட என்டி அது வாலு… வாலுனு‌… காத்து. செவுலு மேலேயே.. இரண்டு போடு..” என அழுதுக் கொண்டிருந்த குழந்தையை மேலும் அடிக்கச் சொன்னான் நேரு.“நான் போயி நைட்டெல்லாம் லேத்து மெஷின்ல கண்ணு முழிச்சு வேலை செஞ்சா தான்?  உனக்கு ஸ்கூலுக்கு பணம் கட்ட முடியும். நீ என்னடான்னா கொஞ்சம் கூட படிக்கவே மாட்டேன்றிய‌. நாங்க என்னதான் செய்ய ஒன்ன வச்சுக்கிட்டு?.என தேம்பித்தேம்பி அழுதுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து கடும் கோபத்துடன் கடுமையாக கடித்துக் கொண்டிருந்தான்.

அமுதா, இவர்கள் சொல்லுவது எதுவும் புரியாதவாறு, தன் அம்மா நசுக்கிய கட்டைவிரலை மறு கையில் ஏந்தி இரு கண்களிலும் அதிகமான நீருடன்,  மூக்கிலிருந்து சளி வழிய, வலி பொறுக்காமல் தன் தொண்டை கிழிய அம்மா…ஆம்மா….ஆஆ….ஆம்மா…ஆஆஆ…. ஆம்மா …..ஆஆஆஆஆ…. என கதாரிக்கொண்டிருந்தாள். 

  நேரு மறுபடியும்…  “இந்த வருஷம் நீ ஒன்னாவது பாஸ் பண்ணா தான் இரண்டாவது போக முடியும்.  நீ பப்ளிக் எக்ஸாம் எழுத போற அப்படிங்கற நினைப்பு உனக்கு கொஞ்சமாவது இருக்குதா இல்லையா ?”

  “நீ  ஃபெயிலு… கியலு.. ஆயி தொலைஞ்சனா நான் கட்டுன காசு திரும்பி வராது சனியனே…..” என  நேரு தன் குழந்தை அமுதாவை திட்டி கொண்டு இருந்தான்.

  தன் அப்பாவின் அதட்டாலுக்கு பயந்து விம்மி விம்மி அம்மா…..உஉஉ..அம்மா…உஉ….”  என சோர்ந்துபோய் கண்ணீரும், கட்டைவிரல் வலியுடனும்  தொண்டையில் நீர் வற்றிப்போய், கண்கள் சிவந்து விட பயமும் ஏக்கத்துடனும் எதுக்களிக்க ஆரம்பித்தால் இரும்பல் வரத்தொடங்கியது. 

“அப்பல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல் இருந்துச்சு  ஃப்ரீயா படிப்பு  கொடுத்தாங்க இப்போ அத தெல்லாம் இல்ல ! வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கட்டினாதா தான் உன்ன பள்ளிக் கூடத்திலேயே சேர்க்க முடியும். அப்பல்லாம் ஃபிரியா சோறு போட்டு,  துணி கொடுத்து,  எங்களை வா… வா… படிங்கனங்க. எங்க  புத்தியை செருப்பால அடிக்கணும். அணைக்கு கூப்பிடும் போதே போயிருந்தா. இன்னைக்கு 7 ஆயிரத்துக்கு அந்த நாய்க்கிட்ட பேச்சு வாங்க வேண்டிய அவசியம் இல்ல.”என நேரு ஆவேசத்துடன் கூறிக்கொண்டு, 

 இங்க பாருஅப்படின்னு சொல்லி அவர் போட்டிருந்த முண்டாசு பனியனைக் கழற்றி தனது ஒரு பக்க வயிற்றில் இருந்த காயங்களை காட்டிக் கொண்டிருந்தான். 

அவ்விடத்தில் மிகவும் சிவந்து நெருப்பாலான காயங்கள் பல இருந்தன. அந்த காயங்களில் இருந்து சிவப்பாய் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. “இப்படி எல்லாம் கஷ்டப்பட்டாதால தான்  ஒன்னாவது வரைக்கும்  உன்னைய  படிக்க வைக்க முடிஞ்சது. நான் வாங்குற ஏழாயிரம் சம்பளத்தில் உன்னை படிக்க வைக்க  முடியுமா?  வருஷத்துக்கு ஒரு லட்சத்த கட்ட முடியுமா ?” 

“உங்க அம்மாவும் தான் வேலைக்கு போறா அவ சம்பளத்திலிருந்து இந்த குடும்பத்த ஓடினாலும். உனக்கு படிப்புக்கு மட்டும் ஒரு லட்சம் போயிறுது. இதில் எங்கிருந்து குடும்பத்தை பார்க்கிறது?”.

“இவ வேற அடிக்கடி வயிறு வலினு  வேலைக்கு போகாமாட்டா. நெடுவா முனு, நாலு நாள்  லீவ் போட்டுட்டு வா.  நேப்கின் வாங்க கூட அந்த மாசம் காசு இருக்காது. அத நால போக மாட்டா. “

“இங்க இருந்து பஸ்ல முப்பது கிலோமீட்டர் பேய் சேறாதுக்குள்ளேயே லேட் ஆயிடும்.இதுல லேட்டா போனா !.”

 அந்த மேனேஜர் “ஏம்மா லேட்டு ? உன் புருஷன் கூட  நைட்டெல்லாம் என்ன பண்ணேன்னு கேட்கிறானா?”

“அவன் கேட்ட கேள்விக்கு அப்படியே… அவன் தலையை ரெண்டா வெட்டனும்  போல தோணும். ஆனா என்ன பண்றது? அவளுடைய சம்பளம் ஆறாயிரமும் வேண்னுமே. வேலை போயிருச்சுனா… வேற எங்க போய் வேலை  தேடுறாது?” “எங்கு வேலைக்கு போனாலும் இந்த மாதிரி பொறுக்கிகள் தொல்லை இருக்க தானே செய்யும்!  என்ன செய்யறது. அது பெண்களுக்கு விதிக்கப்பட்ட சாபம்.”

“இந்த மாதிரி  கஷ்ட  சமயத்துல அதையெல்லாம் பொறுத்துக் கொள்ளதானே வேணும். இப்படி எல்லாம் நாங்க கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறோம். நீ கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம இப்படி பன்றியே. இது நியாயமா?”  என நேரு கேட்க அவன்  கூறியதில் ஒன்று கூட அந்த குழந்தைக்கு புரியாமல். அழுது ஓய்ந்து கலைப்பில், அரைக்கண் மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்தது.தாம்ப தனக்கென வைத்திருந்த ஒரே ஒரு கிழிந்துபோன நைட்டியை அணிந்து கொண்டு அடுப்படிக்கு சென்று அன்று இரவு சமையல் வேலைகளைத் தொடங்க ஆரம்பித்தாள். எல்லா பாத்திரங்களையும் திறந்து… திறந்து… மூடிக் கொண்டிருந்தாள். ஒரே கடமுடாவென சத்தம். அனைத்து பாத்திரங்ளும்  காலியாகவே இருந்ததன.இதில் பல பாத்திரங்கள் ஓட்டை உடைசலாகவும் இருந்தது. குடங்களில் தண்ணீர் ஊற்றி வைத்தால் அன்றைக்கு மதியத்திற்குள் அனைத்து தண்ணீரும் ஒழுகி விடும் அளவிற்கான குடங்கள் இருந்தன.  ஓட்டை குடங்களுடன் குறைந்த அளவிலான பாத்திரங்கள் தான் இருந்தன. அனைத்தையும் அவள் திறந்து பார்ப்பது வழக்கமான நிகழ்வுதான். அன்றைக்கும்  இருவருக்கும் கடுமையான பசி எடுக்க ஆரம்பித்துவிட்டது. தனது வீட்டு அடுப்படி… அலமாரியி…. முழுவதிலும் எதுவுமே இல்லை  என்பதை அவள் நன்கு அறிந்தவள்,,    இருப்பினும் தேடிக்கொண்டிருந்த போது தன் குழந்தைக்காக வாங்கிய திணை மாவு. அதை எடுத்து ஒரு டம்ளரில் அரை அரை ஸ்பூன் கலந்து தன்னுடைய கணவருக்கு “இந்தங்க  இன்னிக்கு நைட் இத குடிங்க”. அப்படி என்று தனது கணவருக்கு நீட்டிவிட்டு அவளும் அந்த திணை மாவு கலந்த தண்ணீரை ஒரு மடக்கு குடித்துவிட்டு, குழந்தை  அமுதாவுக்கு பால் கொடுக்க அருகில் போனாள். அழுத களைப்பில் உறங்கிய அவளை எடுத்து தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். 

பசியாலும், வலியாலும் மயங்கிய அமுதா தூங்கிய நிலையில் மெல்ல வாயைத் திறந்து தனது பசியைப் போக்கிக் கொண்டாள்.  பால் கொடுத்துக் கொண்டிருந்த தனது மனைவி தம்பாவின் கண்களைப் பார்த்தான் அவளுடன் பேச ஆரம்பித்தான். “இந்த உலகத்துல நம்மளையும் ஒரு மனுஷனா படைக்க வச்சு  நமக்கு ஒரு ஜீவனை பொறக்க வச்சு ! ! அதை இந்தப் பாடு படுத்துற அளவுக்கு அந்த ஆண்டவன் நமக்கு இப்படி ஒரு விதியை விதைச்சு இருக்கானே !… இத நெனச்சு நாம என்னதான் செய்கிறது.”

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி

“அப்பல்லாம் இந்த மாதிரி பொம்பள புள்ள பொறந்தா?  கள்ளிப்பால் கொடுத்து உடனே கொன்னுடுவாங்க அது ஒரே நாள்  வலியோட முடிஞ்சு போயிரும். ஆனா இவள நாம இப்படி தினம் தினம் கொடுமை செய்கிற அளவுக்கு இந்த சமூகம் நம்மள மாத்திருச்சு. இதுக்கு யார் தான் காரணம்? இந்த மாதிரி ஒன்னாவது  பாஸ் பண்ணா தான் அடுத்த கிளாசுக்கு போக முடியும்னு விதிச்சா!  எப்படி?  ஏற்கனவே படிக்காம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிற பெத்தவங்க இன்னும் பதறிப்போய்  பிள்ளையோட எதிர்காலம் வீணாப் போயிடும்னு  நினைச்சு தான்,  பிள்ளைய…  எப்படியாவது படிக்க வைக்கணும்னு நெனச்சு செய்கிற வேலை எல்லாம் பார்க்கும்போது நமக்கு  ஈரக் கொலையே.. நடுங்கிப் போய்ருது.” இந்த மாதிரியான நிலையை நமக்கு ஏற்பட வச்சதுக்கு அந்த ஆண்டவன் தான் பதில் சொல்லணும்?” என நேரு தன் ஆதங்கங்களை தன் மனைவியிடம் கொட்டிக்கொண்டு இருந்தான்.

“கண்ணு இருந்ததால் ? அந்த கடவுள் நம்மளை எப்போயோ காப்பாத்தி இருப்பாரே ! ” என்று தம்பா தன் கணவரிடம் கூறிக்கொண்டு  தனது குழந்தையை அடுத்த மார்பாகத்திர்க்கு மாற்றினாள். நேரு ஒரு பழைய காகிதத்தை எடுத்து தனது அக்கிளின் கீழ் விலா எலும்புகளில் இருந்து தீக்காயங்களில்  கசிந்து கொண்டிருந்த ரத்தத்தை ஒரு நாளிதழில் துடைத்துக் கொண்டு ஸஹ …ஸ்..ஆஆ.ஆ….உ…’ என்கிற வலியுடன்  நேரு துடித்தான்.“ஏங்க அதை சும்மா நோண்டாதிங்க வலிக்க போகுது” என தம்பா அன்பாய் கூறிக் கொண்டிருந்தாள்.

இன்னொரு கையால் இரண்டு கால்களையும் நீட்டி அந்த கால்களுக்கு வலி தீரும் அளவிற்கு இதமாய் தன்னுடைய கைகளை வைத்து அமுக்கிக் கொண்டிருந்தான்.

நேரு வேலை செய்வது ஒரு லேத் பட்டறை அங்கு பல்வேறு வகையான இரும்பு பொருட்களை உருக்குவார்கள். அதில் இவருக்கு உருக்கு அறையின் அருகில் நிற்கும் வேலை. அந்த உருக்கு ஆலையில் தீயால் ஒரு பக்கமாக நின்று நின்று வேலை செய்வதன் காரணமாக ஒரு பக்கம் முழுவதும் வெந்து போய் அவ்வப்போது தீக்காயங்களில் இருந்து சிவப்பு இரத்தம் கசிந்து கொண்டிருக்கும். 

அந்த கம்பெனியில் உணவு இடைவேளை எல்லாம் கிடையாது தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

 அந்த கம்பெனியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு உணவு கொண்டு வர தடை. உணவு வேலை நேரத்தைக் கூட அவர்கள் வேலை வாங்கிக் கொள்வார்கள். அவ்வளவு நயவஞ்சக நல்லவர்கள். அந்த கம்பெனியின் கேண்டினில் தான் உணவு வழங்கப் படும். உணவை வாங்கிக் கொண்டு. எங்கேயும் போய் அமர்ந்து சாப்பிட முடியாது. அதற்கான ஏதுவான இடங்கள் எதுவும் அங்கே இருக்காது. நின்று கொண்டே சாப்பிட வேண்டாம்.

எவ்வளவு நேரம் தான் நின்று கொண்டே சாப்பிட முடியும்? ஏற்கனவே நின்று கொண்டிருப்பதால் கால்கள் கூடுதலாக வலிக்கும் என்பதால். அவர்கள் களி போன்ற ஏதோ ஒன்றை ! அவசர அவசரமாகத் தின்றுவிட்டு தட்டை கழுவி வைத்து விட்டு செல்ல வேண்டும். இப்படியாக அந்த கம்பெனியில் சாறுகளை பிழிந்து  சக்கையாய் கிடந்தான் நேரு.

தம்பா அமுதாவை ஒரு நியூஸ் பேப்பர் விரித்து அதன் மீது படுக்க வைத்தாள்.‌

 அன்றிரவு இருவரும் நன்றாக தூங்கி விட்டனர் வெறும் தரையில் தான் படுத்தார்கள்.  அவ்வளவு குளுமை தம்பாவின் கதகதப்பில் நேரு அன்று இரவு உறங்கி விட்டான்.

 மறுநாள், காலையில் தங்கள் குழந்தை அமுதாவை ஒண்ணாவது பொதுத்தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருந்தார்கள்.

 அன்று அமுதாவிற்கு முதல் பரீட்சை ஹிந்தி.

நன்றி 

அன்பும் தோழமையுடன்

மு. தனஞ்செழியன்