எத்தன தடவ போன் பண்றேன் எடுக்கவே இல்லம்மா…?
இல்லம்மா ரூபி ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர போனேன் வீட்டிலேயே போன் வைத்துவிட்டுப் போய் விட்டேன்.
பாப்பா  சாப்பிட்டாளா…?
ஸ்கூல்ல இருந்து வந்ததும் ஹோம் ஒர்க்கை எழுதினா எல்கேஜி க்கு எவ்ளோ ஹோம் வொர்க் கொடுக்கிறாங்க முடிச்சுட்டு, சாப்பாடு ஊட்டி விட்டேன்  சாப்பிட்டுவிட்டு வாசல்ல விளையாடிகிட்டு இருக்கா மா.
மாப்பிள்ள போன் பண்ணாங்களா சுதா?
நேத்து நைட்டு டெல்லி போய் சேர்ந்து போன் பேசினாங்க இங்கே பெங்களூர் குளிரை விட அதிகமாய் இருக்காம்  வேலையை முடிச்சுட்டு இன்னும் ரெண்டு நாள்ல பெங்களூர் ரீச் ஆயிடுவாங்க.
சரிமா  புள்ளையவச்சுக்கிட்டு ஜாக்கிரதையா இரு.
ஒன்னும் பயம் இல்ல மா நான் பார்த்துக்கிறேன் நீங்க தைரியமா இருங்க.
போனை வைத்துவிட்டு புதினாவை கிள்ளி கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் சுதா.
இப்பொழுதுதான் திருமணம் ஆன மாதிரி இருக்கு அதுக்குள்ள அஞ்சு வருஷம் வேகமாக ஓடியதை எண்ணி ஆச்சரியமா இருக்கு.  தன் கணவன் தன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வது எண்ணி பெருமையாக இருந்தாலும் தன்னை விட தன் குழந்தை என்றால் ஒரு படி மேல்தான். …
ரூபி மிகவும் சுட்டி நல்ல கலர், ஒல்லியான உருவம். அவள் எங்கு இருந்தாலும் எல்லோர் கவனமும் அவள் மேல் இருக்கும்.. தன் வயது விட சிறிய, பெரிய குழந்தை என  விளையாடும் இடத்தில் அவள்தான் கேங் லீடராக இருப்பாள்.
தன் கணவன் ஊரில் இல்லை என்றாலும் குழந்தைக்காக கீரை பருப்பு பொரியல் என தினமும் சமையலுக்கு குறைவில்லை ஆனால் அவளை சாப்பிட வைப்பதற்குள் பெரும்பாடாக ஆகிவிடும்.
அப்பா ஊருக்கு போயிட்டா அம்மா ஒரு ரசத்தை வைத்து வத்தலை வறுத்து வைத்து விடுவார்கள்.
நம்ம காலத்துல கிடைக்கிறது சாப்பிட்டோம் இப்ப அப்படி இல்லை அப்படிங்கிற ஒரு பெருமூச்சு இருக்கும்.
பாட்டி எப்பொழுதும் ரொம்ப ரசனையோட பேசுவாங்க அவங்க சாப்பாட்டை பத்தி பேசினா அதுல ஒரு ஏக்கம் இருக்கும். காலையிலிருந்து வேலையா இருக்கு பசிக்கு மாமியாருக்கு தெரியாமல் ஆள கரண்டியில் கேப்ப மாவை போட்டு தண்ணீர் ஊற்றி விரகு அடுப்பு குள்ள விட்டு யாருக்கும் தெரியாமல் எடுத்து விட்டு அரை வேக்காட்டு மாவு சாப்பிட்டு பசியை தனிச்சிபாங்க. முறுக்கு பிழியும் போதும் கூட மாமியாருக்கு தெரியாம சாப்பிடுவதற்காக  முறுக்கு எண்ணெயில் போட்டு உடனே எடுத்து சத்தம் வராமல் சாப்பிடுவாங்க. அப்பதான் கடக் முடக் க்குன்னு சத்தம் வராது இப்படி பாட்டி சொல்றது ரசிச்சு கேட்ட ஞாபகங்கள மனதில் அசைபோட புதினாவை கிள்ளி கொண்டிருந்தாள்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ரூபி அம்மா. … மன்னிச்சிடுங்க அம்மா அடிக்காதீங்க மா திட்டாதிங்க மா என்று கதறிக் கொண்டே உள்ளே ஓடி வந்தாள். அவள் கதறியது ஈரக்குலை  நடுங்கியது என்னடா என்று புதினாவை அப்படியே போட்டுவிட்டு குழந்தையை வாரி அணைத்து கேட்டாள் .வாசல்ல ஒரு ட்யூப் இருந்துச்சு அது சிசி ஸ்டிர்நெனச்சி முழுகிவிட்டேன் என்று சொன்னதும் தலைசுற்றியது.
தினமும் பயன்படுத்தும் செருப்பின் பக்கல் பிஞ்சு போனதை ஒட்டுவதற்காக 5 ரூபாய் பேபி குயிக் வாங்கி செப்பல் ஸ்டாண்ட் மீது வைத்த ஞாபகம் வந்தது.
அந்த பேபி குயிக் டியூப் உடன் முழுங்கி விட்டாள் என்று குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு முதுகில் தட்டினால் ஒன்றும் வந்த மாதிரி தெரிய வில்லை சட்டென விளையாடிக் கொண்டிருந்த இடத்தை போய் பார்த்த அந்த கவரி பிடிக்கப்பட்டு வெறும்டியூப் கிடந்தது .
FEVIKWIK 500MG – Ekartin
அவள் படிக்கும் பள்ளியில் குழந்தைகளின் மிகவும் விருப்பமான தின்பண்டம் இந்த சிசி ஸ்டிக். . ஒரு பாக்கெட்டுக்குள் 10 எண்ணிக்கை சுண்டு விரல் உயரத்திற்கு ரீபில் போல் இருக்கும் அதற்குள் க்ரீம் அடைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் அதை தன்முன் பல்லை வைத்து கடித்து உறிந்து சாப்பிடு வார்கள். அது என்று நினைத்து கம்மை குடித்துவிட்டால் என்று பதற்றத்துடன் வாயைத் திறந்து வை மூடி விடாதே என்று படபடப்புடன் கூறினாள் சுதா.
சட்டென்று தன் அக்காவிற்கு போன் செய்தால் அவளுக்கு ஒரு ஹோமியோபதி மருத்துவரை நன்றாக தெரியும். தன் அக்கா மிகவும் தைரியமும் துணிச்சலும் ஆன பெண். தன் அக்காவை பல விஷயங்களில்  ரசித்தும் ஆச்சரியத்துடனும் பார்ப்பாள்.
அவளுக்கு போன் செய்து விவரங்களைக் கூறியதும் பதறாதே அடுத்த இரண்டு நிமிஷத்தில் வரேன் என்று போனை வைத்தாள். குழந்தையை திட்டுவதும் வாயில் துணியை வைத்து துடைப்பது என மாற்றி மாற்றி செய்து கொண்டிருந்தாள்.
அடுத்த ஒன்றரை நிமிடத்தில் போன் வந்தது பயப்படாத வாழைப்பழமும் தண்ணியும் கொடு உடம்புல  ஒன்னும் ஆகாது உடம்பு மாய்சரைசிங் இருக்கும் ஒன்னும் ஆகாது  என்று பேசிக் கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரர் உள்ளே நுழைந்ததும் சரி நான் அப்புறம் பேசுறேன் என்று போனை வைத்து விட்டாள்.
புட்டானிக்கு ஏன் ஆகித்து ?
என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்கள்.
ஏன் இல்ல ஆன்டி பேபி குவிக் தின்புட்டாள்  என்று அழுதுகொண்டே சொன்னது ஓகி ஃபர்ஸ்ட் டாக்டர் தரா ஓகி என்று அவர்கள்
சொன்னதும் மூளை ஒன்றும் வேலை செய்யவில்லை. சட்டென பணத்தையும் கிரெடிட் கார்டையும் எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு பைக்’கில் தன் குழந்தையை முன்னிறுத்திக் கொண்டு வேகமாக கிளம்பினாள். போகும் வழியெல்லாம் தலை சுற்றுகிறதா வாந்தி வருகிறதா என்று கேட்டுக்கொண்டே போனாள். குழந்தை ஒண்ணுமில்லம்மா தொண்டை தான் ஒரு மாதிரி இருக்கு என்றாள். ஸ்கூலுக்கு பக்கத்திலுள்ள ஹாஸ்பிடலுக்கு செல்லலாம் என்று முடிவு செய்தாள். அங்கு உள்ள சில நர்சுகள் குழந்தை ஸ்கூல் போகும் பொழுது எல்லாம்  இவள் அவர்களுக்கு டாட்டா சொல்வாள் அவர்களும் இவளைப் பார்த்தால் ஏதோ ஒன்று பேசுவார்கள்  கொஞ்சம் தெரிந்த முகங்களாக இருக்கும் என்று அங்கே சென்றாள்.
அழுதுக்கொண்டே ஹாஸ்பிட்டலில் உள்நுழைந்ததும் பாப்பா அழுவதை பார்த்து என்னாச்சு என்று சற்றுப் பரிட்சயமான அந்த நர்சே வந்தார்கள். விவரத்தை சொன்னதும். மணி ரெண்டு ஆச்சு டியூட்டி டாக்டரும் இல்லை என்று சொல்லிக்கொண்டே பாப்பா இதுல ஏறு என்று வெயிட் ஹைட் எல்லாம் செக் செய்தார்கள்.
What should I do when feviquick enters someone's eyes? - Quora
குழந்தை பேபி குயிக் குடித்துவிட்டால் இப்பொழுது தேவையில்லாம ஹாய்டையும் வெயிட்டை யும் செக் பண்ணுகிறார்கள் என்று மனம் வெறுப்பாக இருந்தது. தெர்மாமீட்டரை வைத்து ஜுரம் இருக்கா என்றும்  பிபியும் செக் செய்தார்கள்  செய்தார்கள் மனம் ஏனோ ஒட்டவே இல்லை அதே நேரத்தில் வேறு ஒரு நர்ஸ் டாக்டருக்கு போன் பேசி விஷயத்தை சொன்னார்.
டாக்டர் அட்மிட் பண்ண சொன்னாங்க ஈவினிங் வந்து பார்க்கலாம் என்று கூறினாள்.
தூக்கிவாரிப்போட்டது தெரிந்தவர்கள் யாரும் இல்லாத ஊரில் கணவன் வேறு ஊரில் இல்லை அட்மிஷன் செய்தால்  என்ன ஆகும். ஏதோ மருந்து மாத்திரை கொடுப்பார்கள் என்று நினைத்தால்  இப்படி சொல்லி விட்டார்களே, தன் கணவனை நினைத்து மனம் மேலும் பீதியை கிளப்பியது தன் மகளை சரியாக கவனிக்கவில்லை என்று சத்தம் போடுவார் சில சமயம் தன் தந்தைக்கு போன் செய்து இவ ஏன் இப்படி இருக்கா என்று குறை சொல்லுவார் தன் தந்தையும் சேர்த்து அறிவுரை வழங்க ஆரம்பித்து விடுவார்.
இத்தனை குழப்பங்களுக்கும் நடுவில் தன் அக்கா சொன்னது மின்னல்போல் வெட்டியது உடம்புக்குள்ள மாய்சரைசிங் இருக்கு அதெல்லாம் ஒன்னும் ஆகாது என்று கூறியது நினைவிற்கு வந்தது.
அட்மிஷன் போட்டுவிடலாம் என்று கூறிக்கொண்டே அப்ளிகேஷன் ஃபார்ம் எடுத்ததும்., இல்ல ஹஸ்பன்ட் வெளியூர் போயிருக்காங்க ஏதாவது பிரச்சனைனா வரேன் என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்கு திரும்ப தயாரானாள்.
ராதிகா
பெங்களூர் 
3 thoughts on “சிறுகதை: ஐந்து ரூபாய் ஃபேபிகுவிக் – ராதிகா”
  1. கதை நன்றாக உள்ளது.
    கதையின் போக்கு, அதை கொண்டு சென்ற விதம், எல்லாம் நன்றாக உள்ளது. நேரில் பார்த்து போல் உள்ளது.
    கதையின் முடிவு எதிர்பாராத விதமாக உள்ளது.

  2. விறுவிறுப்பாக இருக்கு.. வாழ்த்துகள் ராதிகா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *