சிறுகதை: “ஈர்ப்பு” – கீர்த்தி மதி சுரேஷ் 

ஆனந்து சிறுது தூங்கி விட்டான், எழுந்தவுடன் பர பரப்பாக ஆலுவலகம் செல்ல தயார் ஆனான்.
“டிபன் ரெடியா  ஆபிஸ்க்கு நேரமாச்சு” சர்ட் போட்டுக் கொண்டே கேட்டான்.
இன்று திங்கள் வார முதல் நாள் மேனேஜருடன் சந்திப்பு ,ஆலோசனை , கலந்துரையாடல் மற்றும் சில  முடிகள் ஒவ்வொரு வாரம் முதல் நாள் காலை நடப்பது வழக்கம்.
” திங்ககிழமை மீட்டிங் இருக்குனு தெரியும்ல சீக்கிரம் எழுந்து ரேடி யாகவேண்டியது தான? “பரோட்டாவை தட்டில் வைத்து சொல்லிக் கொண்டே அவன் முகம் பார்த்தால் பிரியா. வழுவழப்பபான சவரம் செய்த முகம், ஒதுக்கிய மீசை, லேசா உப்பிய கண்ணம், வெளிர் நீல ஷர்ட் இன் செய்து  கண் நிறைவாக தெரிந்தது.விட்டிற்கு வந்தவுடன் லுங்கி பணியனும் மாக இருப்பான். பணியனில் சில ஒட்டைகள் இருக்கும் தலை வர மாட்டான் வியர்வை வாசனையுடன் தான் இருப்பான்.
மெது மெதுவென இருந்த பரோட்டாவை அவசரமாக சாப்பிட்டான். திங்கள் அன்று வேலை அதிகமாக இருக்கும் அதனால் திடமான காலை உணவு பரோட்டா, சப்பாத்தி பொங்கல், இப்படி சாப்பிடுவது வழக்கம்.
இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து அலுவல் தேவையானது, பர்ஸ் மொபைல் உள்ளனவா? என்று சரிபார்த்து பிரியாவிடம் கை ஆட்டிய படி விடைப்பேற்றான்.
பிரியா நல்ல அழகு கோதுமை நிறம் அளவான கூந்தல் காதுகள் ஓரம் சுருளும் முடி, வட்டமான முகம்அகலமான நெற்றி நீட்டு போட்டு போன்றவை தான் ஆனந்த விழுந்தது காரணம்.
மனதில் பிரியா முகம் வந்தது. காதில் கம்மல் இல்லை. அல்லி முடித்த முடி நிறம் வெலுத்த நைட்டியுடன் விடைப்பெற்றது அவன் கவனிக்க தவறவில்லை.
Asianet-Breaking News |Kerala Local News |Kerala Latest News | Kerala  Breaking News|News
“என்ன சார் முகம் டையர்டா இருக்கு நைட்டு துங்கலையா? ” காலை பரபரப்பு முடிந்து மதிய உணவு சற்று தாமதமாக சாப்பிட்டு இளைப்பாறும் பொது கீர்த்தி கிண்டலாக கேட்டு வந்தால்.
“அதலாம் இல்ல மேடம், டிப் ஸிலிப் இல்லை அதான் டையரடா இருக்கு.” பதில் சொல்லி கீர்த்தி பார்த்தான். கீர்த்தி நல்ல உழைப்பாளி, அட்மின் ஊழியர் நன்றாக பழகுபவர், ஆனந்தின் நேர்மையான நடத்தை கணித்ததால் கீர்த்தி அனந்திடம் சற்று உரிமையுடன் பழகுவார்.
ஆனந்து கீர்த்திய கவனித்தான் அவள் பேசும் போது ஆடும் கம்மல், வட்ட முகத்திற்கு ஏற்ற பொட்டு, பின்னிய கூந்தல், அளவான சிரிப்பு, தெளிவாக எப்பொழுதும் இருப்பாள், அது ஒரு  ஈர்ப்பு. தீடீர் என்று ஒரு எண்ணம் தோன்றியது. அதை இன்றே நடைமுறை படுத்தனும்னு முடிவு செய்தான். இத்தனை காலம் ஏன் தோன்றவில்லை என்று தன்னை கடிந்து கொண்டான்.
பிரியா ஆனந்து கிளம்பியவுடன் இரண்டாவது படிக்கும் மகனை பள்ளி வாகனத்தில் அனுப்பி விட்டு விட்டு வேலை தொடர்ந்தால். சிறுது ஓய்வுக்கு பின் மதியம் விடு பெருக்கி சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். கண்ணாடி துடைக்கும் பொழுது ஏதோ கவனம் வந்தவலாய் தன் உருவத்தை பார்த்தாள். எண்ணை வழியும் முகம், விட்டில் தான் இருக்கிறோம் என்று கம்மல் இல்லாத காது, சோர்வான முகம், வாராத கூந்தல், வெலுத்த நைட்டி தன்னை பார்க்க அவளுக்கு பிடிக்கவில்லை. குழந்தை பிறந்ததில் இருந்து இப்படி தன்னை கவனிப்பது குறைந்து போனது உணர்ந்தால். ”ஈர்ப்பு” என்ற சொல் அவள் அறியாமல் மனதில் ஓடியது.
அன்று மாலை ஆனந்து விட்டுக்கு வந்தவுடன் பிரியாவிடம் வழக்கமான விசாரிப்பு மகனுடன் உரையாடல் முடிந்தவுடன் தன் எண்ணத்தை நிறைவேற்ற ஆயத்தம் ஆனான் குளித்தான் உள்ஆடை மாற்றினான், நைட் பேண்ட , டீ சார்ட்டுக்கு மாறினான் தலை வாரினான் பிரஷ்ஷாக வந்துபிரியாவிடம் டீ வாங்கும் பொழுதுதான் பிரியாவை கவனித்தான்.
அடம்பரம் இல்லாத சேலையை நேர்த்தியாக உடுத்தி இருந்தால், பின்னிய கூந்தல், நீண்ட பொட்டு, மெலிதாக புவுடர் தடவிய முகம், கண் நிறைவாக தெரிந்தால் ஆனத்திற்கு.
இனிமேல் இந்த ஈர்ப்பு தொடரும் , அவர்கள் காதல் மேலும் ஆழமாகும், வேட்கை குறையும் என்பது சந்தேகம் இல்லை.