சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

 

தைக்கு கால் இருக்கிறதா..?! 

அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் வரலாறு ஆசிரியர் வழக்கம்போல் கதை சொல்லி வகுப்பைத் தொடங்கினார். சுவாரசியமாக கதை சொல்வார் என்பதால் நாங்கள் ஆவலாய் இருந்தோம்.  பிரம்பை கையில் வைத்து தட்டிக்கொண்டே சொல்ல ஆரம்பித்தார்.

”அப்போ நான் சின்னப்பையன் ஒன்னாவது படிக்கிறேன்., நம்ம ஊர் மொட்டையாண்டி கோயில்ல எனக்கு மொட்டை அடிக்கிறாங்க., அடிச்சதும் நான் அழுகுறேன். எனக்கு எங்க அம்மா சக்கரப்பொங்கல வாயில ஊட்டிவிட்டு சமாதானம் சொல்றாங்க.,” மாணவர்களாகிய நாங்கள் இப்பொழுது இருண்டு கிடக்கும் யாரும் போகப் பயப்படும் மொட்டையாண்டி கோவிலில் அன்று அவருக்கு மொட்டை எடுத்திருக்கிறார்களே என்று ஆவலோடு கேட்கிறோம்.

”எனக்கு ரெண்டு அக்கா., அன்னக்கி தண்ணி எடுக்கணும்ன்னா மொட்டையாண்டி கோவில் பக்கத்திலிருக்கிற கம்பராயப் பெருமாள் கோயில் கெணத்துலதேன் எடுக்கணும். அக்காங்க ரெண்டு பேரும் தண்ணி எடுக்க என்னையும் கூட்டுக்கிட்டுப் போறாங்க., இன்னக்கி போல அந்தக் கெணறு இல்ல., அது மொட்டக் கெணறு., பாத்தாலே பயமா இருக்கும்.,” ம்.. ம்.. என்று பூம்பூம் மாடு போல நாங்கள் தலையாட்ட அவர் கதையைத் தொடர்ந்தார். 

”நல்ல கனமான பித்தளக் கொடம்., கயத்துல கட்றோம்ன்னு சொல்லி எங்க பெரியக்கா கொடத்த கெணத்துல போட்டுருச்சு., அதுவும் தொபுக்கடின்னு விழுந்திருச்சு.,” அய்யயோ என்றவாறு கதையில் நாங்கள் கவனாமாக அவர் இன்னும் கண்கள் விரிய சொல்ல ஆரம்பித்தார்.

”அக்காவுக்கு அம்மா மேல பயம். ரெண்டக்காவுமா சேந்து என் இடுப்புல கயத்தக்கட்டி கெணத்துல எறக்குறாக., எனக்குனாலும் பயம் மொட்ட வேற எடுத்திருக்கேன். மண்டையில தேய்ச்ச சந்தனம் பயத்துல வேர்த்து தண்ணியா ஒழுகி கண்ண வேற மறைக்கிது. சமாளிச்சுக்கிட்டு கெணத்துல கெடந்த கொடத்த எடுத்துக்கிட்டு அக்கான்னேன். ரெண்டு பேரும் கைமாத்தி கைமாத்தி கயத்த இழுத்து என்ன மேல தூக்குறாக., மேல வர்றேன்., வந்துக்கிட்டே இருக்கேன்., கெணத்துப் பக்கவாட்டுச் சுவரெல்லாம் நெறைய செடி வேற. உள்ளர்ந்து பூச்சிவட்ட எட்டிப் பாத்துருமோன்னு பயம் வேற.,” வகுப்பே நிசபத்தமாக எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

”கெணத்துலேர்ந்து தரைய ஒட்டி நுனிக்கு வந்துட்டேன்., திடீருன்னு கயறு அந்துபோச்சு..”

”அய்யோ சார் நீங்க உள்ள விழுந்துட்டீங்களா..”  ஒருத்தன் கதையின் பயத்தால் கேட்க.,

”அதெப்படி.. எங்க பெரியக்கா மொட்டையாண்டி எந்தம்பியக் காப்பாத்துன்னு கண்ண மூடிக்கிட்டு எந்தலமுடியப் புடிச்சு  அச்சுவெலாக்க மேல தூக்கிட்டாங்க., இப்போ நாவொங்களுக்கு கத சொல்லிக்கிட்டிருக்கேன்.” என்றார். மாணவர்கள் அனைவருக்கும் வாத்தியார் தப்பித்துவிட்டார் என்ற நிம்மதி. கைதட்டினார்கள். அங்குமிங்கும் நடந்தவாறு கதை சொன்ன ஆசிரியர் ஆசுவாசமாகப் பெருமையோடு நாற்காலியில் உட்கார்ந்தார்.

”சார்.,” என்றேன் எழுந்து நின்று.

”சொல்லு மகனே.,” என்றார் கதை சொல்லிய பெருமிதத்தோடு. 

”நீங்க மொட்டை எடுத்திருக்கீங்க., பெறகெப்படி ஒங்க முடியப் பிடிச்சு ஒங்களத் தூக்குனாங்க..” என பளிச்சென்று கேட்டுவிட்டேன். மாணவர்கள் கெழுக்கென சிரித்துவிட்டார்கள். அமைதியான ஆசிரியர் அருகில் அழைத்தார்.

”கேக்கணும் இப்படித்தேங் கேக்கணும்.,” என்றவர் அவர் கையிலிருந்த பிரம்பால் என் கையை நீட்டச் சொல்லி கதைக்கு கால் இருக்கா கதைக்கு கால் இருக்கா என அடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் நான் சொல்லப் போகும் இந்தக் கதைக்கு கால்கள் இருக்கிறது. இக்கதை கால்களைப் பற்றிய கதை.

இந்தக் கால்கள்., காலும் காலும் சேர்ந்தே கால்கள் என்றாகிறது. இரண்டில் ஒன்றில்லாவிட்டால் உடல் மட்டுமல்ல வாழ்க்கையே நொண்டியாகிவிடும். அப்படி காலையோ கால்களையோ இழந்துவிட்டால் அதற்கு மாற்றாக ஊன்றுகோலை பயன்படுத்த வேண்டும் அல்லது அதற்கு நிகராக செயற்கையாய் வேறொன்றை இணைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி இருந்தாலும் இயற்கையான கால்களுக்கு நிகராக அவைகள் இருந்துவிடப் போவதில்லை. அப்பொழுதும் நொண்டி நொண்டி தான். ஆறுதல் வார்த்தைகளும் தன்னம்பிக்கை வார்த்தைகளும் அன்பும் காலிழந்தவர்களுக்கு சிலபல நேரங்களில் கால்களாகக்கூடும். 

புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பங்களும் அப்படித்தான் கால்களை இழந்தவர்கள் போல. அவர்களது சொந்த ஊரிலேயே அவர்களுக்கானவை கிடைத்திருக்க வேண்டும். அப்படி கிடைக்காததன் விளைவாக செயற்கை கால்களா ஊர்விட்டு ஊர் மாநிலம் விட்டு மாநிலம் நாடு விட்டு நாடு வாழ்க்கைக்காக இடங்களை தேடி வந்தவர்கள் ஏராளம் பேர். ஆனாலும் அவர்கள் காலிழந்த நொண்டி மனிதர்களுக்குச் சமம் தான். வந்த இடங்களில் சில நல்ல மனிதர்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கால்களாக கிடைத்திருக்கலாம்.

சாலைகளில் நடக்கும் வெளிமாநில ...

ருபத்தியேழு வயதான ராம்சிங் அவனது குடும்பத்தோடு உத்திரப்பிரதேசத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து இங்கே குடும்பத்தோடு வந்திருந்தான். அவனுக்கு பத்தொன்பது வயதிலேயே பதினாறு வயது ஜோதிர்மயியை திருமணம் செய்து வைத்திருந்தார்கள். அதே கையோடு அங்கிருந்து கரும்பு வெட்டும் தொழிலாளியாக இங்கு வந்தவன் தனது மூன்று குழந்தைகளையும் இங்கேயே பெற்றுக் கொண்டான். மூத்த ஆண்குழந்தைக்கு பல்ராம்சிங் என்றும், இரண்டாவ்து ஆண் குழந்தைக்கு ஜெய்ராம்சிங் என்றும் மூன்றாவது பெண்குழந்தைக்கு சீதா எனவும் பெயர் சூட்டி மகிழ்ந்தவன் இங்கே கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் தான் ஒரு இந்து என்ற பெருமையோடும் விரைவில் இந்துராஷ்டிரா அமைய வேண்டும் என்ற ஆசையோடும் கனவோடும் வாழ்ந்து வந்தான். 

தான் பிறந்த இடத்தில் கிடைக்காத சம்பளம் இங்கே கிடைப்பதற்கு காரணமே இந்துராஷ்டிரத்தை அமைக்க இருக்கும் தலைவர்களின் சாணக்கியத்தனம் என எண்ணிக் கொண்டான். அதனாலேயே இந்தி பேசக்கூடியவர்களை தென்னிந்தியா முழுக்க அவர்கள் திட்டமிட்டு வேலைக்கு அனுப்பியிருப்பதாக நினைத்தான். இவர்களை இங்கே வேலைக்கு அழைத்து வந்து அந்த கமிசன் காசில் வயிறு கொழுத்தவர்களை தூதுவர்களாய்ப் பார்த்தான்.

இந்துராஷ்டிரம் அமைந்ததும் அவனது வாழ்வில் கங்கையாறும் பலகோடிச் செலவில் தேடப்படும் சரஸ்வதியாறும் ஓடுமென்றும் அப்பொழுது அவனுக்கான வாழ்க்கை செழிக்குமென்றும் விளைந்து நிற்கிற கருபம்புகளைப் போல தன் வாழ்வு இனிக்குமென்றும் நம்பிக் கொண்டிருந்தான். 

உத்திரப்பிரதேச மாநிலத் தேர்தல் வந்த பொழுது நிறைமாத கர்ப்பிணியாய் இருந்த மனைவியை அழைத்துக் கொண்டு ஓட்டுப் போடச் சென்றான். உடன் வேலை பார்க்கும் தமிழகத் தொழிலாளிகள் சத்தம் போட்டார்கள். புள்ளத்தாச்சி புள்ளைய இங்க விட்டுட்டுப் போனா நாங்க பாத்துகிற மாட்டமா என்ன என்று. அவன் கேட்கவில்லை. ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் எனறு கங்காணியிடம் செலவுக்கு கடன் வாங்கிக் கொண்டு சென்றவன் சீதா எனகிற மூன்றாவது குழந்தையுடன் திரும்பி வந்தான். 

“ஓட்டுப் போடப் போன எடத்துல புள்ளப் பொறந்துருச்சாம். பச்ச உடம்புக்காரிய அப்படியே கூப்புட்டு வந்துட்டாண்டி., என்னா மனுசன்” என இங்குள்ள பெண்கள் வயிற்றிலடித்துக் கொண்டார்கள்.  

அந்தப் பகுதியில் கரும்புவெட்டு முடிந்து செங்கல்சூளை வேலைக்கு ராம்சிங்கின் குடும்பமும் இன்னும் சில குடும்பங்களும் மாறியிருந்தார்கள். 

ராம்சிங் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் வந்த நேரம் இவன் ஓட்டுப் போட்ட கட்சி ஆட்சியைப் பிடித்திருந்தது. சாமியார் ஒருவர் முதல்வாரானார். ராம்சிங்கிற்கோ ஏக சந்தோசம். மத்தியிலும் நம்ம ஆட்சி மாநிலத்திலும் நம்ம ஆட்சி என குதுகலமானான். 

அவனுக்குள் பனிமழை பொழிந்தது. அடிவயிறு சிலிர்த்தது. ஆனால் அவன் வாழ்க்கை செங்கல்சூளையில் வெந்து கொண்டிருந்தது.

”நம் கஷ்டமெல்லாம் தீர்ந்தது கண்ணா., நம்ம கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டது. நம் கனவு பலிக்கப் போகிறது. வா கொண்டாடுவோம்.” எனத் தன் மகன்களைத் தூக்கிக்கொண்டு ஹிந்தியில் பாடினான்.

சப்பாத்தி சுட்டுக் கொண்டிருந்த ஜோதிர்மயி., 

“உப்புக்கும் வழியில்லாமல்., துப்புக்கும் வழியில்லாமல்., சொந்தங்களை விட்டுவிட்டு சொந்த மண்ணை விட்டுவிட்டு இங்கே வந்து இருக்கிறோம். எல்லாம் இந்த வயித்துக்காக. நீ இப்படி இந்து மட்டும் தான் எனப் பேசுபவர்களை நம்பி பாடுகிறாய். ஆனால் நீ ஏமாந்து போவாய்.” என திட்டினாள் ஹிந்தியிலேயே.

”போடி., பெண் என்கிற ஈனப் பிறவியே., நீ பேசுவதற்கு அருகதையற்றவள்., உன் வேலையை மட்டும் பார். படுப்பதற்கும் வேலை செய்வதற்குமான அடிமை நீ. தீட்டானவள் பேசக் கூடாது.”  என கோபமாய் கத்தியவன் சுடுகிற சப்பாத்திக் கல்லை எடுத்து அவள் முதுகில் அடித்தான்.

”இப்படித் தான் பெண்ணை அடிப்பாயா., இதைத் தான் உன் தலைவரும் உன் கட்சியும் உனக்கு சொல்லிக் கொடுத்தார்களா., உங்களால் இந்த நாடு நாசமாகப் போகிறது.” என்று அழுது கொண்டே சிதறிய சப்பாத்திகளைப் பொறுக்கத் தொடங்கினாள் ஜோதிர்மயி.

ஒரே நாடு ஒரே நாடு என பிரதமர் அனைத்தையும் செய்து வருகிறார். பாகிஸ்தான் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார். ராமர் கோவிலை மீட்டெடுத்துவிட்டார்., அமெரிக்காவையும் சீனாவையும் தன் ராஜதந்திரத்தால் வளைத்து போட்டிருக்கிறார். உலக நாடுகள் முழுக்க சுற்றி அனைத்தையும் அள்ளி வருகிறார். யோஹா செய்கிறார்., மான்கீபாத்தில் எழுச்சியுரை ஆற்றுகிறார். விஞ்ஞானிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். டீ விற்ற சாதாரண தொழிலாளி ஏழைத் தாயின் மகன் இன்று கவுரவமாக பத்து லட்ச ரூபாயில் ஆடை அணிகிறார். ஒரு லட்சம் ரூபாய் காளான் தின்கிறார். கருப்புப் பணத்தை ஒழித்தார். தீவிரவாதிகளை எதிர்த்து நாட்டுக்காக ராணுவ வீரனாய் போராடுகிறார். நாடு முன்னேற அவ்வப்பொழுது கசப்பு மருந்த்களைக் கொடுக்கிறார். அவர் சாவதற்குள்ளாக எப்படியும் பதினைந்து லட்சம் ரூபாயை குடிமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுவார்.  என நம்பினான் ராம்சிங். பெற்றவர்களையும் உற்றவர்களையும் கூட அவன் அப்படி நம்பியிருக்க மாட்டான்.  

Image

ஓவியம் ஸ்ரீரசா

பிரதமர் அப்படி வெளுத்து வாங்க., மாநில முதல்வர் சும்மா இருப்பாரா., கோமாதா பூஜை செய்கிறார், கோமியம் குடிக்கிறார்., இந்து மதத்தின் காப்பளனாக அவர் தன்னை அடையாப்படுத்திக் கொள்ள அரும்பாடுபட்டு வருகிறார். மாட்டுக்கறி தின்போர் இந்துவோ இஸ்லாமியரோ துவம்சம் செய்கிறார். மருத்துவமனையில் இறந்தவர்களை நோயாளிகளை தோளில் சுமக்க வைத்தும் தெருத்தெருவாய் நடக்க வைத்தும் அழகு பார்க்கிறார். அவர்களது கட்சிக்காரகள் காந்தியை திரும்ப சுடுகிறார்கள். தலித்துக்களை அம்மணமாக ஓடவிடுகிறார்கள். இவர் பங்கிற்கு மாநிலம் முன்னேற இவரும் கசப்பு மருந்துகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருந்தார். 

இப்படியான செய்திகளை ராம்சிங் நாளொருவண்ணமும் பொழுதொரு வண்ணமுமாகக் கேட்டு வர., அந்தக் கசப்பு மருந்தா அல்லது விசமா என்கிற குழப்பத்திலும் கவலையிலும் வேலைகளைச் செய்து வந்தான். ஆனாலும் பிரதமரையும் முதல்வரையும் ராமனாகவும் லட்சுமணனாகவும் நம்பினான். தான் அவர்களுக்கு அனுமனாக ஜடாயுவாக இல்லாவிட்டாலும் கூட அணிலாகவாவது இருக்கவேண்டும் என எண்ணினான்.

கொரோனோ நோய்த்தொற்று என்கிற பயப்பரவல் உலகையே பயமுறுத்தும் வண்ணம் வளர்ந்து கொண்டிருக்க.. இங்கே திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமில்லாமல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது

பிரதமரின் கொரோனா ஊரடங்கு அறிவிப்பு அவனது கனவுகளில் மண் அள்ளிப் போட்டது. ஆனாலும் அவன் பிரதமரின் முடிவினை வரவேற்றான். 

களைக்கம்புகளாலும் கம்பிகளாலும் தகரங்களாலும் கயிறுகளாலும் வழி மறிக்கப்பட்டு தெருக்களும் சாலைகளும் முடங்கின. வீடுகளில் வேப்பங்கொழைகள் கட்டப்பட்டன. மஞ்சள் தண்ணி தெளிக்கப்பட்டது. 

போட்டது போட்டபடியே  அனைவரும் வீடடங்கானார்கள். ஊடகங்கள் வினாடிக்கு வினாடி நோய்தொற்று குறித்த பயத்தை உருவேற்றிக் கொண்டிருந்தன அரசாளர்களுக்குச் சளைக்காமல்.

அன்றாடங்காய்சிகளும் தினக்கூலிக்கு வேலை பார்ப்பவர்களும் இடம் பெயர்ந்த தொழிலார்களும் வெளியூர் சென்றவர்களும் என ஆங்காங்கே எல்லோரும் அடைபட்டனர் இல்லை அடைக்கப்பட்டனர்.

உணவுக்கும் தண்ணீருக்கும் இவர்கள் படும்பாடு  ஒருபுறம் இருக்க, இயற்கை உபாதைகளைக் கழிக்க பொதுக் கழிப்பிடங்களையே பயன்படுத்திவந்தவர்களின் நிலைமை இன்னும் மோசம். 

அவர்களின் கண்ணீர் மட்டும் கதைகள் சொல்லும் காலம் போய் அவர்களின் குருதியணுக்களும் கதை சொல்லும் காரண காரியங்களை ஆட்சியாளர்கள் கட்டமைத்து விட்டிருந்தனர்.

“பார்த்தாயா இந்த முஸ்லீம்கள் தான் டெல்லியில் மாநாடு நடத்தி இந்தியா முழுக்க கொரோனா வைரஸை பரப்பியுள்ளார்கள். எங்கள் பிரதமர் மக்களைக் காப்பாற்றவே ஊரடங்கில் வைத்திருக்கிறார்., மக்களுக்கான தலைவர் அவர் மட்டும் தான்.” என்றான் மனைவியிடம் ராம்சிங்.

செங்கல்சூளையின் மூலையில் கட்டப்பட்டிருந்த தகர வீட்டு முற்றத்தில் ஜோதிர்மயி கோதுமையில் கப்பிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் கைதட்ட  அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்.

கைதட்டல்கள் பாத்திரங்களின் உருட்டல்களாகவும் தட்டல்களாகவும் வானவேடிக்கைகளாகவும் மாறியிருந்தன. பிரதமர் ஒரு போர்வீரனைப் போல கவச உடைகள் அணிந்து கையில் கதாயுதமும் வாளும் கொண்டு கொரோனா வைரஸை தனி ஒரு ஆளாக  துவம்சம் செய்து கொண்டிருப்பதாக ராம்சிங் கனவு கண்டான்.

ஜோதிர்மயி ஏற்கனவே கோதுமையிலிருந்து பிரித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த கப்பிகளை மாவாகத் திரித்துக் கொண்டிருந்தாள். குழந்தை சீதா ஜோதிர்மயியின் இடது மார்பில் சுரக்காத பாலுக்கு வீறிட்டு அழுது கொண்டிருந்தாள். ஜோதிர்மயி குழந்தையை வலது மார்புக்கு மாற்றினாள். மகன்கள் பல்ராம்சிங்கும் ஜெய்ராம்சிங்கும் கையில் கிடைத்த ஒரு சப்பாத்தி ரொட்டிக்காக அடித்துக் கொண்டிருந்தார்கள்.

“உன் பிள்ளைகளைப் பார். அவர்களை சமாதனப்படுத்த மாட்டாயா., உன் தலைவர்களைப் போல நீயும் பெற்ற மக்களை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறாயா.?”  என்று ராம்சிங்கைப் பார்த்துக் கத்தினாள். ராம்சிங் கோபத்தில் பிள்ளைகளை அடித்தான்.

மக்கள் அனைவரும் வீடடைக்கப்பட்டனர். கடைகள் திறக்கவில்லை, சாலைகள் அமைதியாயின, விளைந்த பயிர்கள் விலையில்லாமல் போனதால் வீதியில் கூட கொட்டமுடியவில்லை.

ஊடகங்களின் தொடர் கொரோனா அறிவிப்பும் வேலையில்லா திண்டாட்டமும் உணவுப் பற்றாக்குறையும் வாழ்வு தேடி இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் உயிர் பயத்தினை ஏற்படுத்தியது. அரசின் நடவடிக்கைகள் இவர்களை அநாதையாய் இறந்துவிடுவோமோ என்ற அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.

ராம்சிங்கின் குடும்பமும் இவனோடு வந்த மற்ற சில குடும்பங்களும் கேட்பாரற்று செங்கல் சூளையிலேயே கிடந்தனர். 

முதல் ஊரடங்கில் கொஞ்சமாய் இருந்த பணமும்  உணவும் தீர்ந்து போனது. இவர்களை அழைத்து வந்த ஏஜெண்டுக்குப் போன் செய்தான். அந்தத் தூதுவன் திரும்ப அழைக்கிறேன் எனச் சொல்லிவிட்டு அழைக்கவுமில்லை இவன் அழைப்புகளை எடுப்பதுமில்லை. 

கரும்புத் தோட்டத்துக்கும் செங்கல் சூளைக்கும் இவனுக்கு வேலையமர்த்திக் கொடுத்த கங்காணி இவனுக்கு சொற்பமான உதவிகளைச் செய்து தேற்றின்னான். இரண்டு நாளுக்கான உணவைக் கொடுத்து இருபது நாளைக்கு ஒப்பேத்தச் சொன்னான். 

இவர்கள் சொந்த ஊர் திரும்பிவிட்டால் இங்கே வேலைக்கு ஆள் வேண்டுமே. திரும்ப கமிசன் கொடுத்து அழைக்க முடியாது. போனால் வருவார்களா எனத் தெரியாது. அதற்காகவே கங்காணியின் அந்த சொற்ப உதவி. செங்கல் சூளை முதலாளியும் சிறு உதவிகளைச் செய்தார். இடையில் பெய்த மழையில் அறுக்கப்பட்டு வேக்காடு இல்லாத பச்சை செங்கல்கள் கரைந்தன. வேகவைத்து வேலைக்குத் தயாரான செங்கல்கள் இடத்தை அடைகாத்துக் கொண்டிருந்தன. 

ஊடகங்களில் சமூகச் செயற்பாட்டாளர்கள் அரசின் நடவடிக்கைகளை விம்ர்சனம் செய்தார்கள். வறுமையும் பட்டினிச் சாவும் ஏற்படும் என எச்சரித்தார்கள். ஆனால் அரசோ ஆளும் கட்சி ஆட்களோ அல்லது அவர்களுக்கு துணை செய்வோர்களோ அதையெல்லாம் பற்றி கவலை கொள்ளவில்லை. மாறாக அசட்டையாகப் பேசினார்கள்.

இப்படியே தொடங்கிய இரண்டாவது ஊரடங்கில் மக்கள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் தங்கள் சொந்த ஊருக்கு வெளியேறத் தொடங்கினார்கள்.

இது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அரசுகள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறோம். இங்கேயே இருங்கள் உங்களுக்கான உணவுக்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள்.

ராம்சிங்கின் குடும்பம் உட்பட பல குடும்பங்கள் அரசு ஏற்படுத்திய முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அது செங்கல்சூளையைவிடவும் வெப்பமாய் இருந்தது.

பிரதமர் மக்களுக்கு விளக்கேற்ற அழைப்புவிடுத்தார். அந்த விளக்கொளியில் டார்ச்லைட் வெளிச்சத்தில் மெழுகுவர்த்தி உருகுதலில் கொரோனா செத்துவிடும்., இதை நமது பிரதமர் வேதங்களில் தேடிப்பிடித்து அறிவித்துள்ளார். வாருங்கள் விளக்கேற்றுவோம் வாருங்கள் விளக்கேற்றுவோம் என அவரது கட்சியார்கள் விடாமல் கூவினார்கள்.

மக்களும் விளக்கேற்றினார்கள். ஊரடங்கில் அவர்களுக்கு மட்டும் எப்படி வெடிகிடைத்ததோ வானத்தை வெடிவேடிக்கைகளால் புகைகக்கி மகிழ்நதனர்.

“நீ எல்லாம் மனிதனா., மிகவும் கெஞ்சி அந்த மூன்றாவது தெருவின் ஒருவீட்டில் எண்ணெய் வாங்கி வைத்திருந்தேன். தினமும் மினுக்கு மினுக்காகாப் பத்து நாட்களாகப் பயன்படுத்திவந்தேன்  அதைப் போய் விளக்கேற்றுகிறாயா.,” கோபத்தில் கடுகடுத்தாள் ஜோதிர்மயி.

“போடி இவளே., இன்று எங்கள் கட்சி தொடங்கிய நாள். எப்படி இந்தியாவே விளக்கேற்றியது பார்த்தாயா., வானவேடிக்கைகளைப் பார்த்தாயா.? இது தான் எங்கள் தலைவர்களின் ராஜதந்திரம்.” என அசட்டையாகச் சிரித்தான் ராம்சிங்.

 ”நீ உருப்படவே மாட்டாய். எங்களையும் சேர்த்து நீ நடுரோட்டில்தான் நிற்க வைக்கப் போகிறாய்.” என ஜோதிர்மயி வயிற்றிலடித்துக் கொண்டு அழ குழந்தை சீதா வீறிட்டு பசியில் கத்த ஆரம்பித்து.

அரிசியும் பருப்பும் மட்டும் போதுமா., அதை உணவாக்க அடுப்பும் விறகும் எண்ணையும் வேண்டாமா.? குழந்தைகளுக்கு பால் வேண்டாமா., தூங்குவதற்கு விரித்துக் கொள்ள ஒரு பாய் அல்லது துண்டு வேண்டாமா., தொட்டில்கட்ட ஒரு துணியும் இடமும் வேண்டாமா., எத்தனை நேரம் குழந்தையை மடியிலும் தோளிலும் கிழிந்த லுங்கியை தரையில் விரித்து தூங்க வைக்க முடியும்.

இப்படி இரவும் பகலும் கணமாயும் ரணமாயும் கழிந்து கொண்டிருந்தது. கொரோனா பாதிப்பிலிருந்து தடுத்துக் கொள்ள அடிக்கடி கை கழுவ விளம்பரங்களும் அறிவுப்புக்களும் வந்த வண்ணமிருக்க கழிப்பறையே இல்லாமலும் சுத்தமான தண்ணீர் இல்லாமலும் சூரியனையும் நிலவையும் கடந்து கொண்டிருந்த நாட்களோடு இக்குடும்பங்கள் போராடிக் கொண்டிருந்தன.    

ராம்சிங்கின் பெண் குழந்தை சீதாவுக்கு காய்ச்சல் கண்டது. சரியான மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் நாடெங்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

பசுமையைப் பிழிந்து கருமையாய் நீண்டு கிடக்கும் தார்ச்சாலைகளெங்கும் தேசத்தின் வறுமையும் மக்களின் பயமும் சுவடுகளாய் நிரம்பிக் கொண்டிருந்தன. மரங்கள் அழித்து உருவாக்கப்பட்ட அந்த சாலைகளின் சாலைப்பிரிபான்களில் ஓங்கி வளர்ந்திருக்கும் அரளிச் செடிகளில் விசம் நிரம்பிய அரளிக்காய்கள் காய்த்து தொங்கிக் கொண்டிருந்தன.

An additional 4 people in the Coimbedu market confirmed Corona ...

ப்பொழுது கோயம்பேடு மார்கெட் தொழிலாளர்களால் தமிழகம் முழுவதும் வைரஸ் பரவுவதாக ஊடகங்கள் வாசித்தன.

“போக்கிடமும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் முகத்திற்கு முகம் பார்க்க முடியாமல் இருக்கிறோம்., அநேகமாக மூன்றாவது ஊரடங்கை அறிவிப்பார்கள் போல.” என்றார் முகாமிற்கு வந்திருந்த செங்கல்சூளை முதலாளி வாயில் இருந்த பீடியை கீழே எறிந்தவாறு.

“மூன்றவதுமா., தாங்காதுண்ணே..” என்றான் ராம்சிங்.

மூன்றாவது ஊரடங்கு தொடங்கியது. 

வழக்கம்போல் பிரதமர் தன் வாயால் சுட்ட வடைகளை நாட்டு பிரஜைகளுக்கு வாரிவாரி வழங்கிக் கொண்டிருக்கிறாரென கார்டூனிஷ்டுகள் வரைந்து தள்ளினார்கள். 

அவர் பாணியிலேயே அவரது கட்சியார்களும் ஊடகங்களில் கருகக் கருக வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்களென எதிர்க்டசிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் வெடித்துக் கொண்டிருந்தனர்.

சரக்கு லாரிகள் மாநிலம் விட்டு மாநிலம் ஓடத் துவங்கியிருந்தன. லாரிகள் ஓடியது மக்கள் வாழ்க்கையில் ஓட்டம் இல்லை.

நடப்பவர்களில் கொஞ்சம் நஞ்சம் கையில் காசிருந்தவர்கள் லாரிகளில் பயணமானார்கள். அப்படி பயணப்பட்டவர்களை பிடித்து அரசு திரும்ப தனிமைப்படுத்தியது. 

சில லாரி விபத்துக்களும் தற்கொலைகளும் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்தன. ரயில் தண்டவாளங்களின் வழியாக நடந்து சென்றவர்கள் தண்டாவாளத்திலேயே சரக்கு ரயில் மோதிச் செத்தார்கள்.

இச்செய்திகள் ராம்சிங்கிற்கு குழப்பத்தையும் பயத்தையும் அதிகரித்தது. இவர்களைப் போல தானும் தன் குடும்பமும் நடக்க வேண்டாம் என எண்ணினான். அரசு எப்படியாவது தங்களை தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்கும் என நம்பினான். ஊடகங்களில் பேசும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களுக்கு அரசு செவிசாய்க்கும் என நம்பினான். 

நம் பிரதமர் என்ன செய்வார். கோரோனவை எதிர்த்து கடுமையாகப் போராடி போராடி அலுத்துவிட்டார். ஆனாலும் மனம் தளராமல் போராடி வருகிறார் பாவம்., என எண்ணினான் ராம்சிங். 

ஆனால் கரும்புத் தோட்டங்களிலும் செங்கல் சூளையிலும் சொந்த மண்ணிலும் ஓடியாடிய அவனது கால்கள் அவனது மூளையின் முடிவுகளை அவமதித்தது. கால்கள் அவனது மனச்சாட்சியாய் இருந்து கிளம்பிவிடத் துடித்தது. 

”கவலைப்படாதே., அடுத்தவாரம் நம் ஊருக்குச் செல்ல ரயில் ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள். நாம் இனி இங்கே வர வேண்டாம். ஊரிலேயே எதையாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம்.” என மனைவியைத் தேற்றினான் ராம்சிங்.

முகாமில் இருந்தவர்களும் அந்த முடிவுக்கே வந்திருந்தார்கள். 

“சரி இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டோம் இன்னும் ஒருவாரம் தானே பல்லைக் கடித்துக் கொண்டு தள்ளிவிடுவோம். ஆனால் அங்கேயும் என்ன பாடுபடப்போகிறோம் எனத் தெரியவில்லை” என்றாள் ஜோதிர்மயி.

சுத்தமாய் காசில்லாமல் போனவர்களுக்கு தங்கள் ஊர் செல்ல ரயில் பயணம் அறிவிக்கப்பட்டது கட்டணத்துடன்.

ராம்சிங் தலையில் இடி இறங்கியது. இதை கசப்பு மருந்தாக ஏற்றுக் கொள்ள ராம்சிங் மனம் மறுத்தது. 

பெரும் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை அரசு தள்ளுபடி செய்தது. இங்கே ஏழைகளின் பற்கள் பிடுங்கப்பட்டு முதுகெலும்புகள் ஒடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

எதிர்கட்சிகள் அரசின் போக்கை கண்டித்தன. ரயில் செலவை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக கூறின. ராம்சிங்கின் அரியாசனத்தில் விழுந்த ஓட்டையின் வாயிலாகப் பிரதமர் நழுவிக் கொண்டிருந்தார். 

அந்த போர்வீரர்., அய்ம்பத்தாறு இஞ்சுக்காரர்., அவர் உருவாக்கிய அய்நூற்றி தொண்ணூற்றியேழடி சிலையைவிடவும் உயர்ந்து தலையில் கொம்புகள் முளைத்து. அவரது பற்கள் வேட்டையாடும் நாயின் பற்களைப் போல மாறி., அவர் அண்டம் அதிரச் சிரித்து தன் கையிலிருந்த கதாயுதத்தால் ராம்சிங்கின் மூளையைச் சிதறடிப்பதாய் கனவு கண்டு கதறினான். 

உடம்பெல்லாம் வியர்த்து பயம் தொற்றிக் கொண்டது. மனசும் உடம்பும் ராம்சிங்கிற்கு நடுங்கியது.

மூட்டை முடிச்சுக்களை தலையில் தூக்கிக் கொண்டான் ராம்சிங். செங்கல்சூளை முதலாளி கொடுத்த ஆயிரம் ரூபாய் பணத்தை இடுப்பில் பத்திரப்படுத்திக் கொண்டு ஜெய்ராம்சிங்கை தோளில் தூக்கிக் கொண்டான். பல்ராம்சிங் மிச்ச மீதியிருந்த மாவில் சுடப்பட்ட சப்பாத்தி ரொட்டிகள் கொண்ட பையை தலையில் வைத்திருந்தான். அவனது இரண்டு தோள்களிலும் பேக்கேஜ்டு டிரிங்கிங் வாட்டர் பாட்டில்களில் முகாமின் தொட்டியிலிருந்து பிடிக்கப்பட்ட தண்ணீர் தன்னை நிரப்பிக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தது. 

குழந்தை சீதாவை இடுப்பில் சுமந்தவாறு ஜோதிர்மயியும் தயாராகிவிட்டிருந்தாள். மற்ற சில குடும்பங்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர்.

அவர்களின் கால்கள் நடக்க ஆரம்பித்தன. 

வெப்பத்தில் கானல்நீரை நிரப்பிக்கொண்டு உருகும் தார்ச்சாலைகள் இவர்கள் குருதியை உறிஞ்ச தங்கள் அசுர நாவுகளை விரித்து வைத்திருந்தன.

கங்கையாறும் தேடப்படும் சரஸ்வதியாறும் இவர்களின் கண்களில் திரண்டு நிற்க பிரதமர் நான்காவது ஊரடங்கை அறிவிக்க தயாராகிக் கொண்டிருந்தார்.

முற்றும்

அய்.தமிழ்மணி, 

கம்பம் 

தேனி மாவட்டம். 

 

Show 85 Comments

85 Comments

  1. Muthuraman

    நம்பியிருந்த உழைக்கும் வர்க்கத்தின் கால்கள் நம்பிக்கையற்றவனால் நடக்க ஆரம்பித்தன.. தன்னை காக்கும் என்று நம்பியிருந்த விசுவாசி கைவிடப்பட்டு இன்று நடந்து
    கொண்டிருக்கும் அவல நிலையை கண் முன் கடக்க வைத்துள்ளார் ,கால்கள் எனும் சிறுகதை மூலம் தோழர் அய்.தமிழ்மணி அவர்கள்.

  2. Kamalakannan Ramalaingam

    காலத்திற்கு ஏற்றால் போல் சிறுகதை அல்ல நிஜ கதை நடந்த கதை, படிக்க கதையாக இருந்தாலும் நடந்து கொண்டிருக்கும் விஷயம், மனதலவில் அனைவரும் பாதிக்கப்பட்ட நிகழ்வுகள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை, நடப்பது தெரியாமல் வாழ்வதா இல்லை… சாவதா எண் மனபோராட்டதுடன் நாட்களை நகர்த்துகிறோம், தினம் ஒரு புது மாற்றத்தை தாங்கி வாழும் நிலை நினைக்கவே கொடுமையாக உள்ளது. என்றாவது மாறிவிடும் என என்னிதான் வாழ்கிறோம், மிக விரைவில் மாற்றம் வேண்டும்.

    • கணேசன் தேவராஜ்

      இது ஒரு சாதாரண சிறுகதை அல்ல நிஜத்தில் நடந்த நிகழ்ச்சிக்கும் அந்த நிகழ்வுக்கு காரணமான தலைமைக்கும் ஊடான வலிமிகுந்த எதார்த்தத்தை நேரிடையாக பதிவு செய்து குற்றம்சாட்டுகிறது இக்கதை.” விலை இல்லாமல் போனதால் வீதியில் கூட கொட்ட முடியவில்லை விளைச்சலை” எவ்வளவு வலியான வார்த்தைகள்.. ஒரு தலைவரின் மேல் ஒரு சாதாரண குடிமகன் வைத்திருக்கும் நம்பிக்கை அறியாமையில் இருப்பதனாலா இல்லை உணர்ச்சி தூண்டலா என்று எப்பொழுதும் புரிந்து கொள்ள முடிவதில்லை ஆனால் அரசியல் நம்பிக்கைகள் எப்பொழுதும் பூதாகரமான பொய்யானவை என்பதை மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களும் அதிகார மிக்கவர்களும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதை பதிவு செய்தது எவ்வளவு முக்கியம், பதிவு செய்வதை பரவலாக்குவது அதைவிட முக்கியம். ஏனென்றால் இன்றைக்கு அது வெறும் செய்தி ஆனால் இது நாளைய வரலாற்றுப் பதிவு . அதை செய்ததற்கு தமிழ்மணி அவர்களுக்கு என் வணக்கங்கள்..

  3. R.Jeyanthi

    கால்கள் இல்லாத கதையில் தொடங்கி இன்றைய கொரானாவில் தங்கள் சொந்த ஊர் நோக்கி புறப்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் கால்களில் முடிகிறது எழுத்தாளர் அய்.தமிழ்மணி அவர்களின் “கால்கள்” சிறுகதை.

    வறுமையின் காரணமாக மாற்று ஊர்களில் குடியேறும் மக்கள் இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வளவு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை காலந்தோறும் இந்த உலகம் எந்த சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது. கொரானா காலமும் அதற்கு விதிவிலக்கல்ல. கொரானா நோயைக் காட்டிலும் பட்டினி பெருங்கொடுமை. சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற எத்தனையோ ராம்சிங்கள் தன் மத தலைவர்களை கடவுள்களாக கொண்டாடும் அவலத்தை கதை பறைசாற்றுகிறது.

    அரசிடம் இருந்து உதவி கிடைக்கும் என ஏங்கி நிற்கும் மக்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பை பரிசாக தருகிறது அரசு. மத்தியிலும் மாநிலத்திலும் அரசு அரங்கேற்றும் கூத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற கதை. கொரானா காலத்தின் ஊரடங்கு ஒரு புலம்பெயர் குடும்பத்தை எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளுகிறது என்பதை கதையின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்கிறது. கொரானா காலத்தை பற்றிய கதைகள் பல வரும் காலங்களில் எழுதப்பட்டாலும் இந்த சிறுகதை அரசின் பொறுப்பற்ற தன்மையை தோலுரித்து காட்டும் கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. புனிதமான வரலாறு என்கிற பெயரில் அரசுடன் இணைந்து ஊடகங்கள் கிளப்பிவிடும் பொய்களை முறியடித்து உண்மையை உரக்க சொல்லும் படைப்பாளர்களால் மட்டுமே வரலாறு எழுதபட வேண்டும். அத்தையை படைப்புலகில் அய்.தமிழ்மணி அவர்களின் எழுத்து பெரும்பங்கு வகிக்கிறது. அவரது படைப்புகளில் “கால்கள்” சிறுகதை ஒரு மைல்கல்.

    இரா.ஜெயந்தி
    சென்னை
    9790492284

    • ESAKKIRAJAN P

      கால்கள் : அய்.தமிழ்மணி.

      கதை சொன்ன வரலாறு ஆசிரியரிடம்
      மாணவன் கேட்ட லாஜிக்கான கேள்விக்கு பதிலாக, ” கதைக்கு கால் இருக்கா,கதைக்கு கால் இருக்கா” என ஆசிரியர் கேட்பதுபோல காமெடியாக ஆரம்பித்த “கால்கள்” உண்மையில் மிகவும் சீரியசான டிராக்கில் பயணிப்பது எதிர்பாராத திருப்பம்.

      இளம்வயதில் ஜோதிர்மயியை திருமணம் செய்த ராம்சிங் 27 வயதிற்குள் பல்ராம்சிங்,ஜெய்ராம்சிங்,
      சீதா என்ற மூன்று குழந்தைகளின் அப்பா.

      சொந்த ஊரில் செழிக்காத வாழ்வு தமிழகத்தில் செழிக்கும் என நம்பி உத்திரப்பிரதேசத்திலிருந்து கரும்பு வெட்ட வந்தவன். இந்துத்துவா கொள்கையில் ஈடுபாடு. பிரதமரையும், அவனது சொந்த மாநில முதல்வரையும்
      ராம,லட்சுமணர்களாக ம(து)திப்பவன்.

      இவனைப்போல் இதே கொள்கையையுடைய பல அப்பாவிகளை நம்பித்தான் இந்த அரசியல்வாதிகளின் பிழைப்பு நடக்கிறது போல. கரும்பு வெட்டும் வேலையில்லாவிட்டால் செங்கல் சூளையில் “செங்கலுடன் வேகும்” வேலை.

      தன் மாநில தேர்தலுக்கு நிறைமாத கர்ப்பிணி மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று
      வாக்களித்து திரும்பியதில் அவனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம்.

      கொரோனா வந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி பிரதமர் முதல் லாக்டவுண் அறிவித்து, கைதட்ட சொன்னதை செய்து முடித்து, இரண்டாம் லாக்டவுணில் இருளை அகற்ற ஒளியேற்ற சொன்னதையும் முடித்த “பொறுப்பானவன்”.

      இத்தனையும் செய்த ராம்சிங் தன் குடும்பம் சப்பாத்திக்கு சண்டை போட்டதையும்,குழந்தை பாலுக்கு அழுததையும் கவனிக்க நேரமில்லாதது
      நியாயம்தானே?

      வேலையுமில்லாமல் சாப்பிடக் காசும் இல்லாமல் போனபின் கொஞ்சம் ஞானோதயம் வந்து சொந்த ஊருக்கு திரும்பிட நினைத்து மனைவியிடம் தயாராக கூறியது நல்ல முடிவுதான்.

      காசிருந்தவர்கள் லாரியில் போக, காசில்லாதவர்கள் தண்டவாளம் வழியாக நடந்தே ஊருக்கு போக நினைத்து சிலர் சரக்கு ரயில் ஏறி சாக,
      சாப்பிடக் கூட வழியில்லாதவர்கள் தற்கொலை செய்து கொள்ள இப்படி பல காட்சிகள் நிஜத்தில் அரங்கேறின.

      ரயிலில் போகக்கூட காசில்லாத ராம்சிங் போன்றோர் குடும்பத்துடன் நடக்க முடிவுசெய்து தங்களது “கால்களை” மட்டும் நம்பியது ஹைலைட்.
      ராம்சிங் மற்றும் அனைவரும் வெட்டிய கரும்பு இனித்தது ஆனால்
      அவர்களின் வாழ்வு ஏனோ இனிக்கவில்லை. பிரதமர் “நான்காவது லாக்டவுண் ” அறிவிப்பை சத்தமாக வெளியிட்டார்.

      நிகழ்காலக்கதை அருமையான நடை.
      ஆசிரியருக்கு பாராட்டுக்கள் மற்றும்
      வாழ்த்துக்கள்.

      ப.இசக்கிராஜன், சென்னை.
      9003052700

  4. தா.ரா.தினேஷ்பாபு

    புலம் பெயர் மக்களின் நிலைமையை அச்சு பிசகாமல் எடுத்துக்காட்டிவிட்டீர்கள் தோழர். நகைப்புத்தன்மையுடன் துவங்கினாலும் இன்னல்கள் பல தாங்கி கற்பனையிலும் நடக்காத நடக்க கூடாதவையெல்லாம்
    நேரில் நடக்கிறது மக்களின் கால்களாக. நொண்டி நொண்டிதான் என வர்ணித்தாலும் இக்கால்கள் சற்று இளைப்பாறாதா? என ஏக்கம் கொள்கிறது மனம். எதிர்ப்போரையெல்லாம் ஆண்ட்டி இந்தியனாக்கும் திறமையும் இந்துக்கள் மட்டுமே இந்தியாவின் குடிமக்கள் என்ற கொள்கையையும் கொண்ட இவர்களின் தோலை எத்தனை முறை உரித்தாலும் புதுப்போர்வையுடன் சளைக்காமல் தோன்றும் இவர்களின் பின்புலமே புலம் பெயர் மக்களின் நம்பிக்கைதான். அந்நம்பிக்கை தவறானது என புரியும் வரை இக்கோரத்தாண்டவங்கள் அரங்கேற்றப்படும்.
    நன்றிகளுடன்
    தா.ரா.தினேஷ்பாபு
    திண்டுக்கல்.
    8122367695.

  5. R.Jeyanthi

    கால்கள் இல்லாத கதையில் தொடங்கி இன்றைய கொரானாவில் தங்கள் சொந்த ஊர் நோக்கி புறப்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் கால்களில் முடிகிறது எழுத்தாளர் அய்.தமிழ்மணி அவர்களின் “கால்கள்” சிறுகதை.

    வறுமையின் காரணமாக மாற்று ஊர்களில் குடியேறும் மக்கள் இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வளவு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை காலந்தோறும் இந்த உலகம் எந்த சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது. கொரானா காலமும் அதற்கு விதிவிலக்கல்ல. கொரானா நோயைக் காட்டிலும் பட்டினி பெருங்கொடுமை. சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற எத்தனையோ ராம்சிங்கள் தன் மத தலைவர்களை கடவுள்களாக கொண்டாடும் அவலத்தை கதை பறைசாற்றுகிறது.

    அரசிடம் இருந்து உதவி கிடைக்கும் என ஏங்கி நிற்கும் மக்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பை பரிசாக தருகிறது அரசு. மத்தியிலும் மாநிலத்திலும் அரசு அரங்கேற்றும் கூத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற கதை. கொரானா காலத்தின் ஊரடங்கு ஒரு புலம்பெயர் குடும்பத்தை எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளுகிறது என்பதை கதையின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்கிறது. கொரானா காலத்தை பற்றிய கதைகள் பல வரும் காலங்களில் எழுதப்பட்டாலும் இந்த சிறுகதை அரசின் பொறுப்பற்ற தன்மையை தோலுரித்து காட்டும் கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. புனிதமான வரலாறு என்கிற பெயரில் அரசுடன் இணைந்து ஊடகங்கள் கிளப்பிவிடும் பொய்களை முறியடித்து உண்மையை உரக்க சொல்லும் படைப்பாளர்களால் மட்டுமே வரலாறு எழுதபட வேண்டும். அத்தையை படைப்புலகில் அய்.தமிழ்மணி அவர்களின் எழுத்து பெரும்பங்கு வகிக்கிறது. அவரது படைப்புகளில் “கால்கள்” சிறுகதை மைல்கல் என்று குறிப்பிடலாம்.

    இரா.ஜெயந்தி
    சென்னை
    9790492284

  6. க. மாறன்

    தற்போதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை. குறிப்பாக “கங்கையாறும் தேடப்படும் சரஸ்வதியாறும் இவர்களின் கண்களில் திரண்டு நிற்க பிரதமர் நான்காவது ஊரடங்கை அறிவிக்க தயாராகிக் கொண்டிருந்தார்” அனைவரையும் சிந்திக்க தூண்டும் வரிகள்.

  7. V.Pappu rani

    வணக்கம்
    மதம் என்ற மதம் பிடித்த மனிதர்களின் கையில் சிக்கி தவிக்கும் நம் தாயகத்தின் நிலைமையை தெளிவாகவும் விளக்கமான கால்கள் என்ற கதை மூலம் நமக்கு அளித்திருக்கிறார்
    ஆசிரியர் அய் .தமிழ் மணி .
    புலம் பெயர்ந்த தொழிளார்களின்
    வாழ்க்கை அனலில் இட்ட புழுவாக இருப்பதைக் கண்டு மனம் வெதும்புகிறது. ஏழைகளுக்கு ஒரு நீதி பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்ற ஆட்சியாளர்களின் தந்திரத்தை பாட்டாளி மக்கள் உணர்ந்து மனம் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.
    புண்ணான அவர்களின் கால்கள்
    மேலும் வலிமையடையும . வலிமை மிக்க கால்கள் பல வலிகளை தூள் தூளாக்கும.
    நன்றி

    வை.பாப்புராணி
    சென்னை
    9941349710

    • Jayanthi Johnson

      கால்கள்

      கால்களுக்கு துணைக்கால் தேவை. ஆனால் இந்த கால்கள் துணையிழந்து கல்களாய் மாறிவிட்ட அரசை அம்பலப்படுத்துகிறது.
      கால்கள் – ஆம், சொந்த ஊரில் பிழைக்க வழியில்லா மக்கள் கால்களை இழந்தவர்களே.

      நம் மக்கள் மத்தியில் ஆளும் வர்க்கத்தை விமர்சிப்பதும் , எதிர்கட்சி ஆளும்கட்சியைக் குறைகூறுவதும், இந்த கொரோனா நேரத்திலும் விவாத மேடை அமைத்து, கொரனாவை விவாதிக்கும் டிவி சேனல்களும், பீதியை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் சமூக வலைதளங்களும் தங்கள் பணிகளை செவ்வனே ஆற்றின.

      பலரும் அறியா பக்கமாக இந்த கூலித்தொழிலாளர்களின் நிலை, வார்த்தைகளில் வடிக்க இயலா ஒன்றை கதையாக, படிப்போர் மனதை உலுக்கும் இந்த ஒரு குடும்பம்போல் எத்தனையோ என மனதை பிசைகிறது. சொந்த ஊரில் இருக்கும் நம்முடைய நிலையே ஊசலாட்டத்தில். புலம்பெயர் தொழிலாளியின் மனம்- வாழ்ந்தாலும், இறந்தாலும் தன் குடும்ப உறவு இருக்கும் இடத்தில் நிகழவே மனம் துடிக்கும். அநாதையாய் போய்விட போகிறோமோ என்ற ஐயமே அவனை நடைபயணியாய் மாற்றியது. அடுத்தது, உணவுத் தேவை. அதனை நிவர்த்தி செய்யக்கூட இந்த அரசு தவறிவிட்டது. ரேஷன்கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை நினைவில்கொள்ளவில்லை.

      கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்ய இந்தக்கிருமிக் காலத்தில், அதுவும் பொருளாதாரம் பின்னோக்கி செல்லும் நேரத்தில் முடிகிறது.

      நாட்டை வல்லரசாக்கும்போது ஏழைகள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என அரசு நினைத்து அனைத்தையும் செயல்படுத்தி வருகிறதோ என்ற எண்ணத்தை தந்தது.
      கீழ்த்தட்டு விளிம்புநிலை மக்களை நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறுவதைவிட கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

      ராம்சிங் போன்று இந்துத்வா பேசும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் அறிந்துகொள்ளா வண்ணம் மூளைச்சலவை செய்யப்பட்டு, விட்டால் தெய்வமாக வழிபடும் நிலைக்கு தங்களை உயர்த்தி வைத்திருக்கும் அரசியல் தலைமைகள்.

      இம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாவண்ணம் பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். தன்நிலைக்கு அரசும் ஒரு காரணம் என்பதை ராம்சிங் போல பலர் பசி பட்டினியால் வாடினாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

      அரசியல் அவலங்களை தோலுரித்து, தலையில் குட்டி சொல்லும் கதைப்பாணி.

      இந்த சூழலில் மிக அவசியமான, அனைவரையும் சென்றடைய வேண்டிய கதை. இதை எழுதவும் மிகத் துணிச்சல் வேண்டும்.

      கதையின் துவக்கம் மிக சுவாரசியமாய் கதையில் மூழ்கி போய் படித்து, ரசித்து, சிரித்து கதைக்கு கால் இருக்கான்னு பார்க்க கூடாது என்பதை படித்துவிட்டு, ராம்சிங்கில் கரைந்து, கசிந்து, கனன்று போனேன்.

      இக்கதை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலோடு பகிர்கிறேன் என் நட்புகளுக்கு.

      ஜெயந்தி ஜான்சன்
      தஞ்சாவூர்
      8220488564

  8. சத்யாராணி

    சி சத்யா ராணி சிவகாசி.
    9626821220.

    அடித்தட்டு மக்களின் அரசியல் அபிலாசைகள் இக்கதையில் விவரிக்கப்பட்டுள்ளன.
    தாங்கள் விரும்பும் தங்களை நேசத்திற்குரிய கட்சித் தலைவர்கள் தங்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் தீர்த்து விடுவார்கள் என்று ஒரேயடியாக அவர்களை நம்பி அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நியாயம் கற்பித்துக் கொள்ளும் அடித்தட்டு மக்கள் மனோபாவங்களை படிக்கையில் ஏனோ நாமும் இப்படித்தானே ஏமாந்து நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்ற ஆதங்கம் வரத்தான் செய்கிறது.
    பெண்ணாகப் பட்டவள் படுக்கைக்கு மட்டுமே கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு அல்ல என்று கருதும் சாதாரண ஆணின் மனநிலை கதையின் கதாநாயகன் மனதில் இயல்பாக வெளிப்படுகிறது. அனேகமாக இப்படித்தான் கருது கிறார்கள்.

    எல்லாவற்றையும் நியாயப் படுத்தினாலும் தன்னால் தாங்க முடியாத சமாளிக்க முடியாத சூழ்நிலைகள் வரும் பொழுது எல்லாவற்றையும் மீறிய எதார்த்தம் மனதில் இருக்கத்தான் செய்யும் நமக்கும் அப்படித்தான் கதையின் நாயகனுக்கு உறைக்கிறது.

    பணக்காரர்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும்பொழுது அப்பாவி ஜனங்களுக்கு ஏன் அந்த நீதி வழங்க முடியவில்லை இவர்களால். இவர்களையா கடவுளுக்கு நிகராக நினைத்துக் கொண்டிருந்தோம்?

    கையில் நயா பைசா காசில்லாமல் நின்றவர்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்கு ரயில்கள் விடப்பட்டன கட்டணத்துடன் என்ற வரிகளைப் படிக்கும்போது அவனுக்கு உண்மையான அரசியல் புரிந்திருக்கும் . நமக்கு புரிந்தது போலவே. மிகவும் வேதனையான இடம்.
    இவர்களா நல்லவர்கள் ?இவர்களா நம் வேதனையை தீர்ப்பார்கள் ? என்ற வேதனை வெளிப்படத்தான் செய்யும்.
    சரி இனி இவர்களை நம்பி நம் வேலை எதுவும் ஆகாது .
    நம் சொந்த ஊரைத் தேடி செல்லலாம் என்று எதார்த்தமாக கால்நடையாக உயிரைக் கையில் வைத்துக் கொண்டு கிளம்பும் இடம் மிகவும் வருத்தமான விஷயம்.
    என்னதான் நாம் ஆயிரம் எதிர்பார்ப்புகள் வைத்தாலும் உண்மை அரசியல் இப்படித்தான் இருக்கிறது.
    ஏன் இவ்வாறு நடக்கிறது எதனால் இவர்கள் இவ்வாறு அரசியல் பண்ணுகிறார்கள் அடித்தட்டு மக்களின் நிலையிலிருந்து இவர்களால் சிந்திக்கவே முடியாதா? சிந்திக்கவே முடியவில்லை என்றால் அதற்கு என்ன காரணம்?
    கக்கத்தில் குழந்தையையும் தலையில் மீதம் சுட்ட சப்பாத்தியையும் எடுத்துக்கொண்டு கால்நடையாக கிளம்பும் மக்களின் எதார்த்தம் எவ்வளவு வேதனையானது என்பது நினைத்து பார்க்கும் போலவே வேதனையான விஷயம் தற்போது நடந்து கொண்டிருப்பதும் அது தான் .
    அரிசியும் பருப்பும் மட்டும் கொடுத்தால் போதுமா? ஆக்கி தின்பதற்கு இது மட்டும் போதுமா? இந்த உண்மைகள் ஏன் ஆட்சியாளர்களுக்கு புரியவில்லை

    புரியாமல் இருந்திருக்காது ஆனால் ஏன் செய்யத் தவறுகிறார்கள் என்ற கேள்விக்குத் தான் விடை ஏதும் இல்லை.

    நாட்டில் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவும் பொழுது பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசு அவர்களை பங்கப் படுத்துகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது என்னதான் செய்வது என்ற வருத்தம் வரத்தான் செய்கிறது.

    பணக்காரர்கள் தவறிழைக்கும் போது அவர்களை பத்திரமாக வேறு நாட்டுக்கு செல்வது வரை கண்டுக்காமல் விட்டுவிட்டு அப்புறமாக அவர்களை பிடிக்கிறோம் அதற்கு செலவு என்று அயல்நாட்டுக்கு செல்வது வரைக்கும் ஒரு கதை கட்டுகிறார்கள் அதெல்லாம் கரெக்டா ஸ்கிரீன்பிளே செய்கிறார்கள்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் இப்படியும் மிகச்சரியாக ஸ்கிரீன்பிளே செய்கிறார்கள் இதெல்லாம் எப்படி என்பது தான் புரியவில்லை யார் கேட்கப் போகிறார்கள் என்கிற தைரியமா?
    தமிழ்மணி அவர்கள் இப்படி ஒரு கதையை எழுதி இருக்கிறார் என்பதை நினைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    இதெல்லாம் இப்பொழுது உள்ள அரசியல் நிலைமைக்கு சான்றுகள் போல.
    கதை நன்றாக இருக்கிறது.

    நன்றி வணக்கம்.!

  9. தமயந்தி ரமேஷ், கேரளா.

    தமயந்தி ரமேஷ்,கேரளா.
    இந்திய மக்கள் தொகையில் நடுத்தர வர்க்கத்தினரும்,வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுமே அதிகமாக வாழ்கிறார்கள். சில சதவிகித மக்கள் மட்டுமே தேவைகள் நிறைவு பெற்றவர்களாகவும், பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.
    உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும், உணவுக்காகவும், இயற்கை சீற்றங்கள் காரணமாகவும் இன்னும் பல காரணங்களுக்காக புலம்பெயர்தலைப் பார்த்திருக்கிறோம்.ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர்தல் செயற்கையாக உருவாக்கப்பட்டது.
    நியாயமாய் கேள்வி கேட்கும் அனைவருமே பிரம்படி பெறத்தான் வேண்டியிருக்கிறது. “வீடடங்கு”சிலருக்கு தொலைக்காட்சிகளிலும், குடும்பத்துடன் செலவிடக்கூடிய நேரமாகவும் மாறியிருந்தாலும்,பலருக்கோ துயரக் காலமாய் மாறியிருக்கிறது. ராம்சிங்கைப் போல் பல தொழிலாளர்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் வாழ்ந்து வருகிறார்கள். தொடரும் வீடடங்கால் பலரும் வருமானமின்றி அவரவர் தம் சொந்த இடங்களுக்கு புலம் பெயர்கிறார்கள்.”கால்கள்”சிறுகதை தற்போதைய சூழ்நிலையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.கதைக்குக் கால்கள் தேவையில்லை.ஆனால் தன் தந்தையைக் கொண்டுவர ஒரு சிறுமியின் இரண்டு கால்கள்தான் உதவியிருக்கின்றன. அதுபோல் பலருக்கும் அவரவர் தம் கால்கள்தான் சொந்த ஊருக்கு வழி காட்டிக் கொண்டிருக்கின்றன இன்றும்.

  10. மா.மன்சூர் அலி

    மா.மன்சூர் அலி
    அலைபேசி எண்: 9600381760
    ஆரணி-632301

    சிறுகதை : கால்கள்

    ஆசிரியர்: அய்.தமிழ்மணி

    வணக்கம்

    மிகவும் தெளிவான கதை, உண்மை கதையை மையபடுத்திய விதம் சிறப்பு.

    ராம்சிங்கின் நிலை, மிக மோசமான நிலையாக மாரும் என்ற விசயம் தெரியாமல் இருந்தது வேதனையை அளிக்கின்றது.

    தன் மகன்களையும் தன் மகளையும் நினைத்து தன் மனைவி படும்பாடு, அய்அய்யோ சொல்ல வார்த்தைகளே இல்லை.

    ஊரடங்கு உத்தரவின் காரணமாக நடந்த பல நடவடிக்கைகளை பற்றி மிக அழகாக மற்றும் ஆழமாக பதிந்து உள்ளது இக்கதை சிறப்பு.

    ஒவ்வொரு மனிதனும் தன்னுள் படும்பாட்டை கண் முன்னே தெளிவாக தெரிகிறது. கொரனாவை வைத்து பல விசயங்களை கண்ணுக்குத் மறைவாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    வெளிமாநிலங்களில் இருந்து வரும், தொழிலாளர்களை நாம் எப்படி பார்க்க வேண்டும், தன் பஞ்சத்தை தீர்க்க வேளைக்கு வரும் ராம்சிங்கின் நிலைக்கு என்ன சொல்ல…

    மனிதனின் அவலநிலையாக தான் இதைப் பார்க்க முடிகிறது, பிரதமரை நம்பி நம்பி ஏமாந்து நின்ற, எத்தனையோ கோடி பேர்களின், ராம்சிங்கும் ஒருத்தர்.

    இக்உண்மை கதையை வாசிக்கும் போது மனது வேதனையில் துடிக்கிறது. தான் நம்பி இருக்கும் பிரதமர் தன்னை காப்பாற்றுவார், என்ற நம்பிக்கையை உடைத்து எரிந்தது சிறப்பு.

    இப்போதைய சூயலை மையமாக கொண்டு தங்கள் எழுத்து பதிந்துள்ளது சிறப்பு, நல்ல கதைகளம் வாழ்த்துகள் மற்றும் நன்றி.

  11. V.Pappu rani

    வணக்கம்
    மதம் என்ற மதம் பிடித்த மனிதர்களின் கையில் நம் தாயகத்தின் நிகழ்காலம் சிக்கி
    சீரழிவதையும் , புலம் பெயரந்த தொழிலாளர்களின் வாழ்க்கை
    திசை அறியா பறவைகள் போல்
    அங்கு மிங்கும் அலைக்கழிக்கப்பட்டு வேதனை
    மிகுந்து வாழ்க்கையை சிரமமாக நகர்த்துவதும் மனதை வதைக்கிறது. பணக்காரர்களுக்கு ஒரு நீதி ஏழைகளுக்கு ஒரு நீதி என மக்களை தராதரம் பிரித்து ஆளும் சமூகம் செய்யும் அராஜகத்தை தோலுரித்து காட்டும் வகையில் ‘கால்கள் ‘ என்ற உண்மை கதையை அளித்திருக்கிறார் ஆசிரியர்
    அய். தமிழ்மணி அவர்கள்.
    புண்ணாண புலம் பெயர்ந்த மக்களின் கால்கள் வலிமை மிக்கதாக மாறட்டும. சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டும் அவர்களின் நிலைமை மாறட்டும்.
    நன்றி
    வை. பாப்புராணி
    சென்னை
    9941349710

  12. ஜெகநாதன்.வீ 9789177991

    அறியாமையிலேயே மக்களை வைத்து அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றி ஒரு போதும் அறிவொளி அவர்கள் வாழ்வில் படரவிடாமல் பார்த்துக் கொள்ளும் அரசியல்வாதிகளை என்னதான் செய்வது.

    மக்களுக்காக திட்டம் தீட்டுவது போன்ற மாயத்தோற்றத்தை வாக்காளர்களுக்கு காட்டிவிட்டு கமிஷன்களுக்காக திட்டம் தீட்டும் இந்த அரசியல்வாதிகள் மாய்வது எப்போது.

    பிரதமராக இருந்துகொண்டு அந்த பதவியின் பெயரால் நிதி வசூல் செய்து அதற்கான கணக்கை பணம் கொடுத்தவர்கள் கேட்கத் தகுதியற்றுப்போகச் செய்யும் இவர்களை என்ன செய்தால் தகும்.

    வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்று மூச்சுக்கு முன்னூறாய் கத்தும் இவர்கள் மக்களின் பிரதிநிதியாக வருபவர்கள் ஜனங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி வாய் திறப்பதில்லை.

    இவ்வளவுக்கும் பிறகும் கூட இவர்களின் வார்த்தைகளின் மகுடிக்கு மயங்கிக் கிடக்கும் இந்த அறியா மக்களை எப்படித்தான் மாற்றுவதோ…

    அவர்கள் வாழ்வில் அறிவொளி வீச
    இனியாவது ஒரு விதி செய்வோமா??

    • V.s.vasantha

      வ.சு.வசந்தா
      9840816840

      கால்கள்_சிறுகதை
      ஆசிரியர்_அய்.தமிழ்மணி

      ஆசிரியருக்கு வணக்கம்
      ஆசிரியர் மூலம் அழகாக கதை கூறிய விதம் பாராட்டுக்குரியது.
      கிணற்று கயிறு , அறுந்து விட்டதும் வகுப்பில் கதை கேட்ட பிள்ளைகளை போன்று நானும் கதையை படித்துக் கொண்டு இருக்கும் போதே, ‘ஐயோ’ என்று கத்தி விட்டேன். (எனக்கு வயது அறுபதை கடந்துவிட்டது)
      மிக அருமை. நன்றாக மனம்விட்டு ரசித்து சிரித்தேன்.

      ‘மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது ‘போன்று கால்கள் கதையில் தொடரும் ராம் சிங்கின் துயரம்!

      வாழ்க்கை என்னும் படகை எதிர்நீச்சலோடு செலுத்தும் எண்ணற்ற உள்ளங்களின் எதிர்பார்ப்பை ராம் சிங் வாயிலாக ஆசிரியர் காட்டிய விதம் பாராட்டுக்குரியது.

      இன்றைய அரசியல் அவலங்கள் எத்துனண திறமை மிக்கவர் களையும் திறன் அற்றவர்களாக, கைப்பாவையாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் நொந்த உள்ளங்களோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பண வெறியும், ஜாதி வெறியும், ஒரு தொற்றுநோயின் பெயரைக் கூறி மக்களை அலைக்கழிக்கும் அவலங்களை கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மனிதநேயமிக்க அனைவரையும் இத்தகைய வன்முறைகள் துன்பத்தில் அழ்த்திக் கொண்டிருக்கிறது.

      ஒரே நாடு !ஒரே தேசம் !எங்கே போனது?
      கால்கள் சிறுகதை மூலம் ஆசிரியர்அய். தமிழ்மணி அவர்கள் எழுச்சியை ஊட்டியுள்ளார். நன்றிகள் பல.

      வ.சு.வசந்தா
      9840816840

  13. SINDHUMURUGAN

    சிந்துமுருகன்
    9940129996.

    ராம்சிங் தன் கட்சித் தலைவர்கள் மீது வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கைக்கு கிடைத்த பரிசு – குடும்பத்துடன் ஊர் விட்டு ஊர் நடைப்பயணம். இப்படி எத்தனை குடும்பங்கள் இந்த ஊரடங்கில் பரிதவித்திருப்பார்கள் என்பதை இந்த சிறுகதையின் மூலம் கண் முன்னே காட்டியது.

    இது நம் நாடு எங்கு சென்றாலும் நாம் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை உடைத்தது இந்த ஊரடங்கு. சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் பிற ஊர்களுக்கு பயணிக்கும் ராம்சிங் போன்றவர்கள், கால் இருந்தும் நொண்டிகள்தான். நம்மை நம்பி வந்தவர்களை காக்க மறந்த பாவிகளாகி இருக்கிறோம்.

    தோழர். தமிழ்மணி அவர்களின் இந்தக் கதைக்கு கால்கள் இருக்கிறது. இது உண்மைக் கதை, பல ஏழை மக்களின் கண்ணீர்க் கதை. ஊர் விட்டு ஊர் வந்த மக்கள் உயிரைப் பணயம் வைத்து நரக நடைப் பயணம் செய்த கதை.

    • Anusuya

      அனுசுயா
      வேடசந்தூர்
      கால்கள்.மனிதனின் வாழ்க்கை பயணத்தை பணம் இல்லாவிட்டாலும் கால்கள் தான் கடக்கிறது.பிழைப்பிற்காக இந்த கால்கள் மூலமாகத்தான் இடம்பெயர்கிறோம்.பிழைப்பு இல்லாதபோதும் இந்த கால்களால் தான் சொந்த ஊருக்குப் போகும் அவலம் ஏற்பட்டது.

  14. புஷ்பகலா கோபிநாத்

    இக்கதையை வாசித்து முடித்தவுடன், இந்த நடைபயணத்தை மேற்கொண்ட இந்த மனிதர்களுக்கு இப்பயணத்தை முடிக்கும்போது கால்கள் இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுவிட்டது. இல்லை இதை இப்படியும் சொல்லலாம் உயிர் இருக்குமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுவிட்டது.

    தோழர்களே இக்கதை இப்போது ஆட்சியிலிருக்கும் நயவஞ்சகர்கள் நடத்திக்கொண்டிருக்கும் கூத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தினாலும், இதை வாசிப்பவர் ஐயோ என்று பரிதாப படலாம் அல்லது பொங்கி புலம்பித் தீர்க்கலாம். இல்லையென்றால் அப்படி சந்திக்கும் நபர்களுக்கு உதவி செய்யலாம். இச்செயலால் என்ன பெரிய மாற்றம் நேரிட போகிறது ஒன்றுமில்லை. ராம்சிங்கைப்போல் நிறைய பேர் என் கட்சி, என் தலைவன் தான் முக்கியம் என்று தன் மார்பை தட்டி கொண்டனர். ஆனால் இவர்களின் தலைவரும் இவர்களுக்கு மேலானவர் அல்லவா ஆகையால் இவர்களின் தலைவர் செயல் இவர்களுக்கும் ஒருபடி மேலே. பத்து லட்ச ரூபாய்க்கு துணியை உடுத்திக் கொண்டவர் பத்து ரூபாய்க்கு கூட வலி இல்லாமல் தன் மக்களை ரோட்டில் அலைய விட்டார். இதற்கு காரணம் யார் ? இப்படி ஒரு தலைவரை தேர்ந்தெடுத்த நாம் மட்டுமே.

    இனிமேலும் தாமதம் வேண்டாம் இங்கு வாழும் ஒவ்வொரு மனிதர்களும் தூக்கத்தில் இருந்து விழிக்க கூடிய நேரமாக இத்தருணம் மாறவேண்டும் சுயநலத்தை உடைப்போம் சகமனிதனின் மதிப்போம் சகஜமாக இப்பூமியில் வாழ வழிவகுப்போம். கடைசியாக மனதில் ஒரு கேள்வி மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கிறது தோழர்களே நம்பிய மக்களுக்கே இந்த நிலை என்றால் நம்பிக்கை துரோகம் செய்த தலைவனுக்கு?

  15. கவிதா பிருத்வி

    கவிதா பிருத்வி, தஞ்சை.
    7502571330.

    கதையா இது.. கதை சொல்லி துவங்கும் இடத்தில் இருந்து அத்தனையும் யதார்த்தம்..
    தினமும் செய்தி பார்த்தால், மனம் பதைக்க தான் செய்கிறது. நம்மை சுற்றி வலை பின்னப்பட்டது போன்ற உணர்வு.. என்று இதிலிருந்து மீளப் போகிறோம் நாம்..
    பழைய சுதந்திரம் கிடைக்குமா ?
    நம்..உறவுகளை சந்திக்கவே இயலாதா?
    இப்படி மனம் சமநிலை இல்லாமல் அலைபாயும் நேரத்தில் இக்கதை..

    ஒரு சாமான்யனின் வாழ்வில் வைரஸை வைத்து, அரசியல் செய்யும் அரசியல் வாதிகள் முகத்திரையை கிழிக்கிறது..

    குழந்தைகள் பசியும், அம்மாவின் தவிப்பும், மூன்றாவது ஊரங்கிலாவது
    அரசியலை புரிந்து, சொந்த மண்ணுக்கு போய் ஏதாவது வேலை செய்து பிழைச்சிகலாம்ன்னு, நடக்க துவங்கும் சாமான்யனின் நம்பிக்கை..

    இன்றைய நிகழ்வுகளை கண்முன்னே உண்மையால் உறைய வைக்கிறார் ஆசிரியர்..

  16. KALAISELVI

    மொட்டைத்
    தலையில் முடியை பிடித்து தூக்கி காப்பாற்றிவிட்டார் எனது அக்கா என்று கூறும் ஆசிரியர் (பிரதமர்). அப்பாடி எப்படியோ காப்பாற்றிவிட்டார் என நம்பும் ராம்சிங் போன்ற மக்கள் இருக்கும் வரை அவர்கள் கூறும் கதைகளுக்கு ஒருபோதும் கால்கள் இருக்கப்போவது இல்லை.

  17. DHANANCHEZHIYAN M

    கால்கள் உண்மையில் இந்தச் சிறுகதை சமூகப் பார்வையின் வெளிப்பாடாகவே திகழ்கிறது.

    அரசியல்வாதிகளின் தந்திரம் என்பது மைனாரிட்டி தாக்கிய மெஜாரிட்டியை தூக்கிப்பிடித்து அரசியல் செய்வதே.
    இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே வகையான அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது தேர்தல் நேரத்திலும் மற்ற நேரங்களிலும்.

    இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற வர்ணத்தை தன் மீது பூசிக்கொண்டு இருந்தாலும்.

    மத அரசியலை முன்னெடுத்து
    தான் அரசியல் வாதிகள் வெற்றி வாய்ப்பினை தேடிக்கொள்கிறார்கள்.
    இன்று வரையில் இந்தியாவில் கற்பித்துக் கொண்டிருக்கும் பாடம் தேசியக் கொடியில் எத்தனை வண்ணம் என்று கேட்டால் 3 வண்ணம் என்று நாம் கூறுவோம். அப்படி தான் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மையில் தேசியக்கொடியில் நான்கு வண்ணங்கள் இருக்கின்றன. அந்த நீல வண்ணத்தையும் சேர்த்து.
    இவ்வாறாக மக்கள் மதங்களாக ,ஜாதிகளாக பிரிந்து இருக்கும் வரையில் அந்தத் தீயில் அரசியல்வாதிகள் குளிர் காய்வது நிச்சயம்.
    Unity in diversity என்பது வெறும் வாசகமாக மட்டுமே இந்தியாவில் இருக்கிறது.
    இப்படியாக நமது சமூகப் பார்வை பரந்து விரிந்து இருந்தாலே மட்டும் இதைப் போன்ற மதவாத அரசியல் வாதிகளை நமது சமூகப் பார்வையின் சாட்டை கொண்டு தோலுரித்து காட்ட முடியும்.

    ஆனால் இங்கே யார் மெஜாரிட்டி என்று பார்த்தால் மக்களாகிய நாம்தான் மைனாரிட்டி என்பது அந்த சொற்பமான வெறும் ஒரு 500 லிருந்து 600 அரசியல்வாதிகள் மட்டுமே.

    இந்த 500, 600 அரசியல்வாதிகள் 120 கோடி மக்கள் தலை எழுத்துக்களை தாயக் கட்டைகளை போல உருட்டி விளையாடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.

    இந்த நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் வரையில் அவர்களின் தலையெழுத்து சின்னாபின்னம் தான் ஆகுமே தவிர ஒருபோதும் மாறாது.

    நம் பகுதியில் நம் தொகுதியில் யார் நிற்கிறார்கள் அந்த நபரின் தன்மையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும்.

    உழைப்பாளிகளை முதலாளி ஏமாற்றுகிறான் மக்களை அரசியல்வாதி ஏமாற்றுகிறான் இது காலம் காலமாக ஒன்று என்பதால் மக்களுக்கு பழகி விட்டதோ என்னவோ யாரும் இதை எதிர்த்து கேள்வி கேட்பதே இல்லை மிகவும் குறைவான நபர்களே கேட்கிறார்கள்.

    வலதுசாரி அரசியல்வாதிகள் மகனையோ மகளையோ தனது கட்சியிலேயே இருக்கக்கூடிய கடைக்கோடி ஏழையின் வீட்டில் இருந்து திருமணம் செய்து கொள்கிறான.

    தனது ஜாதி இடையே இருக்கக்கூடிய ஒரு ஏழை மாணவனுக்கு ஆவது இதுவரையில் அவர்களது பொருளியல் அல்லது மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கான இலவச சீட்டுகளை எந்த அரசியல்வாதியாவது வழங்கியிருக்கிறார்கள். இதை மக்கள் என்னி பார்க்காத வரையில் அவர்கள் ஏமாற்றுவார்கள் நாம் ஏமாற வேண்டியதுதான்.

    இந்த வரிகளுக்கு இடையில் கால்களைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய ஒரு கவிதை.

    எனது இந்தியா

    இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் நடந்தவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள்.

    நடந்தவர்களை யாரையும் தடுக்க வில்லையே என்று கேட்டால்
    அரசு சொன்னது அவர்கள் உழைப்பாளிகள் என்று.

    நீங்கள் யார் ஏன் நடக்கிறீர்கள் என்று கேட்டால் பிழைப்புக்கு வந்தோம் என்றார்கள் பிழைதீர்கள என்றோம் பிழைத்தால் போதுமென்று புறப்படுகிறோம் என்றார்கள்.

    அவர்கள் நடந்து செல்லவில்லை
    யாவையும் கடந்து செல்லுகின்றர்கள்,
    கருப்பான தர் சாலையில் சிகப்பன கால் அச்சுகள்
    முன்னேற்றமான இந்தியாவில் நடைபிணமாய்.

    மு தனஞ்செழியன்.
    பாக்கம், சென்னை

  18. மு தனஞ்செழியன்

    கால்கள் உண்மையில் இந்தச் சிறுகதை சமூகப் பார்வையின் வெளிப்பாடாகவே திகழ்கிறது.

    அரசியல்வாதிகளின் தந்திரம் என்பது மைனாரிட்டி தாக்கிய மெஜாரிட்டியை தூக்கிப்பிடித்து அரசியல் செய்வதே.
    இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இதே வகையான அரசியல் தான் நடந்து கொண்டிருக்கிறது தேர்தல் நேரத்திலும் மற்ற நேரங்களிலும்.

    இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்ற வர்ணத்தை தன் மீது பூசிக்கொண்டு இருந்தாலும்.

    மத அரசியலை முன்னெடுத்து
    தான் அரசியல் வாதிகள் வெற்றி வாய்ப்பினை தேடிக்கொள்கிறார்கள்.
    இன்று வரையில் இந்தியாவில் கற்பித்துக் கொண்டிருக்கும் பாடம் தேசியக் கொடியில் எத்தனை வண்ணம் என்று கேட்டால் 3 வண்ணம் என்று நாம் கூறுவோம். அப்படி தான் நமக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் உண்மையில் தேசியக்கொடியில் நான்கு வண்ணங்கள் இருக்கின்றன. அந்த நீல வண்ணத்தையும் சேர்த்து.
    இவ்வாறாக மக்கள் மதங்களாக ,ஜாதிகளாக பிரிந்து இருக்கும் வரையில் அந்தத் தீயில் அரசியல்வாதிகள் குளிர் காய்வது நிச்சயம்.
    Unity in diversity என்பது வெறும் வாசகமாக மட்டுமே இந்தியாவில் இருக்கிறது.
    இப்படியாக நமது சமூகப் பார்வை பரந்து விரிந்து இருந்தாலே மட்டும் இதைப் போன்ற மதவாத அரசியல் வாதிகளை நமது சமூகப் பார்வையின் சாட்டை கொண்டு தோலுரித்து காட்ட முடியும்.

    ஆனால் இங்கே யார் மெஜாரிட்டி என்று பார்த்தால் மக்களாகிய நாம்தான் மைனாரிட்டி என்பது அந்த சொற்பமான வெறும் ஒரு 500 லிருந்து 600 அரசியல்வாதிகள் மட்டுமே.

    இந்த 500, 600 அரசியல்வாதிகள் 120 கோடி மக்கள் தலை எழுத்துக்களை தாயக் கட்டைகளை போல உருட்டி விளையாடுவது எந்த விதத்தில் நியாயமாக இருக்க முடியும்.

    இந்த நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மக்கள் சின்னத்தை பார்த்து வாக்களிக்கும் வரையில் அவர்களின் தலையெழுத்து சின்னாபின்னம் தான் ஆகுமே தவிர ஒருபோதும் மாறாது.

    நம் பகுதியில் நம் தொகுதியில் யார் நிற்கிறார்கள் அந்த நபரின் தன்மையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும்.

    உழைப்பாளிகளை முதலாளி ஏமாற்றுகிறான் மக்களை அரசியல்வாதி ஏமாற்றுகிறான் இது காலம் காலமாக ஒன்று என்பதால் மக்களுக்கு பழகி விட்டதோ என்னவோ யாரும் இதை எதிர்த்து கேள்வி கேட்பதே இல்லை மிகவும் குறைவான நபர்களே கேட்கிறார்கள்.

    வலதுசாரி அரசியல்வாதிகள் மகனையோ மகளையோ தனது கட்சியிலேயே இருக்கக்கூடிய கடைக்கோடி ஏழையின் வீட்டில் இருந்து திருமணம் செய்து கொள்கிறான.

    தனது ஜாதி இடையே இருக்கக்கூடிய ஒரு ஏழை மாணவனுக்கு ஆவது இதுவரையில் அவர்களது பொருளியல் அல்லது மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கான இலவச சீட்டுகளை எந்த அரசியல்வாதியாவது வழங்கியிருக்கிறார்கள். இதை மக்கள் என்னி பார்க்காத வரையில் அவர்கள் ஏமாற்றுவார்கள் நாம் ஏமாற வேண்டியதுதான்.

    இந்த வரிகளுக்கு இடையில் கால்களைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய ஒரு கவிதை.

    எனது இந்தியா

    இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் நடந்தவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள்.

    நடந்தவர்களை யாரையும் தடுக்க வில்லையே என்று கேட்டால்
    அரசு சொன்னது அவர்கள் உழைப்பாளிகள் என்று.

    நீங்கள் யார் ஏன் நடக்கிறீர்கள் என்று கேட்டால் பிழைப்புக்கு வந்தோம் என்றார்கள் பிழைதீர்கள என்றோம் பிழைத்தால் போதுமென்று புறப்படுகிறோம் என்றார்கள்.

    அவர்கள் நடந்து செல்லவில்லை
    யாவையும் கடந்து செல்லுகின்றர்கள்,
    கருப்பான தர் சாலையில் சிகப்பன கால் அச்சுகள்
    முன்னேற்றமான இந்தியாவில் நடைபிணமாய்.

    மு தனஞ்செழியன்.
    பாக்கம், சென்னை
    8778998348

  19. Devimeenachi

    வணக்கம் !
    ஆரம்பத்தில் ஆசிரியர் மூலம் சிரிக்க சிரிக்க கதை சொல்லிவிட்டு கதை முடியும் பொழுது எங்களின் கண்களில் நீர் வரவழைத்து விட்டீர்கள்.

    ‘ஆசிரியர் கதை ‘ தொடர்ந்து வரும் ‘கால்கள் ‘ பற்றிய கதைக்கு சிறந்த உவமையாக அமைந்துவிட்டது.

    ‘ஆசிரியராக – நம் பிரதமர் ‘,
    கதை கேட்கும் குழந்தைகள் – ராம்சிங்குடன் சேர்ந்து நாமும் ‘!!!

    அவர்கள் ( மத்திய, மாநில அரசு ) கூறும் கதையை தலையை ஆட்டி ஆட்டி கேட்டு கொண்டு மட்டுமே இருக்கிறோம் செய்வதறியாது !!!!

    இந்த கொரோனா காலத்தில் சாமானிய மக்களின் வாழ்க்கை நிலையையும், மனநிலையையும் இச்சிறுகதை மூலம் அழகாக விளக்கியுள்ளீர்.

    இந்த அரசு ஊன்று கோலும் தராது, செயற்கை காலும் தராது. இருக்கும் நல்ல கால்களையும் நொண்டியாக்க வல்லது என்பதை தெளிவாகவும், தைரியமாகவும் கூறிய அய். தமிழ்மணி தோழருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் !!!!!

    S. தேவி மீனாட்சி
    8838329500

  20. பரிமளா செல்வமணி

    கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எடுக்கப்பட்ட அரசின் எச்சரிக்கை நடவடிக்கையான, ஊரடங்கு தடை பற்றிய விபரங்களை சொகுசாக வீடுகளில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் பெரும் கூட்டம் ஒருபுறம்….. தனது வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த பந்தங்களையும் பிரிந்து, பசியும் பட்டினியுமாய் அல்லல் பாடும் பெரும் கூட்டம் மறுபுறம்….. கொரோனா காலத்தில் இந்தியாவின் உண்மை நிலை இதுதான்!..

    எங்கேயோ உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு ராம் சிங்கின் குடும்பத்தின் மூலமாக இந்தியா முழுவதும் சாரை சாரையாக சென்று கொண்டிருக்க கூடிய பல கால்களின், பல ராம் சிங்களின் அவலத்தை நெஞ்சில் அறையும் உண்மையுடன் பதிவு செய்திருக்கிறார் அய்.தமிழ்மணி.

    பெருகும் கண்ணீரை அடக்கமுடியவில்லை….

    படிப்பறிவு இல்லா மக்களை இந்து ராஜ்யம் என்ற மாயையின் மூலம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பெரும் தந்திரத்தை செய்துகொண்டிருக்கும் அரசு ஒருபுறம்….. அந்த அறியாமையில் மூழ்கி தவித்துக்கொண்டிருக்கும் பாமரர்கள் மறுபுறம். தன் உயிரே பறிபோகும் நிலை வந்தபோதுதான் தன்னுடைய மயக்கம் புரிந்தது இந்த ராம்சிங்கிற்கு. ஜோடி ஜோடியாக கால்கள்!…… நடந்து கொண்டிருக்கும் அத்தனை ராம்சிங்களுக்கும் இந்த உண்மை புரியும் பொழுது ஒருவேளை இந்த நாட்டின் விதி மாற்றி எழுதப் படக்கூடும்……

    காலத்தை, காலத்தின் நிதர்சனத்தை, உண்மையாய் பதிவுசெய்த அய்.தமிழ்மணிக்கு நன்றிகள்.

  21. பரிமளா செல்வமணி

    கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள எடுக்கப்பட்ட அரசின் எச்சரிக்கை நடவடிக்கையான, ஊரடங்கு தடை பற்றிய விபரங்களை சொகுசாக வீடுகளில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் பெரும் கூட்டம் ஒருபுறம்….. தனது வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த பந்தங்களையும் பிரிந்து, பசியும் பட்டினியுமாய் அல்லல் பாடும் பெரும் கூட்டம் மறுபுறம்….. கொரோனா காலத்தில் இந்தியாவின் உண்மை நிலை இதுதான்!..

    எங்கேயோ உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் ஒரு ராம் சிங்கின் குடும்பத்தின் மூலமாக இந்தியா முழுவதும் சாரை சாரையாக சென்று கொண்டிருக்க கூடிய பல கால்களின், பல ராம் சிங்களின் அவலத்தை நெஞ்சில் அறையும் உண்மையுடன் பதிவு செய்திருக்கிறார் அய்.தமிழ்மணி.

    பெருகும் கண்ணீரை அடக்கமுடியவில்லை….

    படிப்பறிவு இல்லா மக்களை இந்து ராஜ்யம் என்ற மாயையின் மூலம் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பெரும் தந்திரத்தை செய்துகொண்டிருக்கும் அரசு ஒருபுறம்….. அந்த அறியாமையில் மூழ்கி தவித்துக்கொண்டிருக்கும் பாமரர்கள் மறுபுறம். தன் உயிரே பறிபோகும் நிலை வந்தபோதுதான் தன்னுடைய மயக்கம் புரிந்தது இந்த ராம்சிங்கிற்கு. ஜோடி ஜோடியாக கால்கள்!…… நடந்து கொண்டிருக்கும் அத்தனை ராம்சிங்களுக்கும் இந்த உண்மை புரியும் பொழுது ஒருவேளை இந்த நாட்டின் விதி மாற்றி எழுதப் படக்கூடும்……

    காலத்தை, காலத்தின் நிதர்சனத்தை, உண்மையாய் பதிவுசெய்த அய்.தமிழ்மணிக்கு நன்றிகள்.

    பரிமளா செல்வமணி
    9962090060

  22. மூ.ஜெயபால், 9787357300

    இரண்டு கதைகளும் அருமை. கெணத்துக்குள்ள குடம் விழுந்த கதை கேட்க கேட்க ஆவலையும் தூண்டியது, இரண்டாவது கதை முடியுமா அல்லது இன்னும் எத்தனை வருடங்களுக்குத் தொடரு மோ என்ற பீதியை ஏற்படுத்துகிறது. ‘கேணப் பய ஊர்ல கிறுக்குப் பய நாட்டாமையாம்’ லாக்டவுன் நம்மை மட்டுமே அடைத்து வைக்கும் மனதை அடக்காது. அது போல் லாக்டவுன் கதை மனதை திறந்த கதை.

  23. கு.சண்முகவடிவு

    கதை மிகவும் அருமை.லாக்டௌன் காலங்களில் நடந்த நிகழ்வுகளை கண்முன் கொண்டுவந்து நிறுத்தி கண்ணீர் வரச் செய்கிறது.😪

  24. Sathishkumar

    Mod(la)i yai நம்பிய கால்நடைகள்

  25. கோ. உமா மகேஷ்வரி

    “கால்கள்”

    ராம்சிங் ன் கால்கள் பிரதமரின் போலி வேஷத்தால் நகராமல் இருந்தது. அவர் மனைவி நம் குடும்பநிலையை அறிந்து கூறுகையில் கடுமையாகவும், அலட்சியமாகவும் நடந்து கொண்ட ராம்சிங் கிற்கு ஒன்று புரியவில்லை. உடலில் உள்ள சக்தியை கால்கள் வழியாக உறிஞ்சக் காத்துக்கொண்டிருக்கும் அனல் நிரம்பிய தார்ச்சாலையில் அவருடன் நடக்கப்போவது பிரதமர் இல்லை அவர் மனைவி என்று. ஒருவரின் சுயநலம் தெரியவரும்போது அடுத்தவரின் அறியாமை உடையும். அறியாமை உடையும் நேரம் நம் கால்கள் நம் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கும்.

    கோ. உமா மகேஷ்வரி
    தென்காசி
    9344860195.

    • D. M. Murugesan.

      தோழர் தமிழ் மணி ஐயா அவர்களின் சிறுகதை அருமை.
      வகுப்பு அறையில் கதை சொல்லும் ஆசிரியர்களுக்கு அப்போதெல்லாம் மாணவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு.
      மொட்டை போட்ட பையனை முடியை பிடித்து தூக்கி விட்ட பெரியக்கா!
      கேள்வி கேட்ட மாணவனுக்கு பிரம்படி. நல்ல கற்பனை வளம் (கதை) ஆசிரியர்க்கு.
      கொரேனா காலத்தின் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டு காட்டும் சிறுகதை.
      விறுவிறுப்பாக செல்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப நடக்க தயாராகிறார்கள்.
      ராம்சிங் மத்திய மாநில அரசுகள் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கும் நபர்.
      இன்றைய நடப்பகளை சுவாரஸ்யமாக சொல்லி உள்ள எழுத்தாளர் அவர்களுக்கு வாழ்த்துகளுடன் வணக்கங்கள்.

      தே.மு. முருகேசன்.
      அடையாறு ஆலமரம் வளாகம்
      சென்னை 600 020.
      94446 72833
      99629 13774.

  26. Shanmuga Lakshmi

    ரா.சண்முகலட்சுமி
    அம்பத்தூர், சென்னை
    9840263431.

    இன்றைய சூழலை அப்பட்டமாக பிரதிபலிக்கும் படியான கால்கள் சிறுகதையை படைத்த படைப்பாளர் தோழர் அய்.தமிழ்மணி அவர்களுக்கு நன்றியும் ப்ரியமும்.

    தலைவனை நம்பும் கடைக்கோடி தொண்டனின் நம்பகத்தன்மைக்கு கிடைத்த சாட்டையடி ஊர்திரும்புதல்.சிந்திக்க வைக்கும் கதையோடு துவங்கிய கதை சிந்தித்திடக் கூடாத மனிதனின் கண்ணீரில் முடிந்து எம் கண்களிலும் நீரை வரவழைத்து விட்டது.

    அதிகார வர்க்கம் ஆளும் வர்க்கம் தன்னை எதிர்த்து வெகுஜனம் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதில் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.சாமானிய மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாத அரசை என்ன சொல்வது.மனித உழைப்பை உறிஞ்சி தன்னுடல் வளர்க்கும் முதலாளித்துவமும்,இனபேதமும்,சாதிய ஆதிக்கமும் மனித மனங்களில் நிலைத்திருக்கும் வரை மனித நேயம் என்பது கேள்விக்குறியே.

    பெண் சிந்தித்து கேள்வி எழுப்பியதன் விளைவு தாய் வழிச் சமூகம் இல்லாமல் போனது.ஒவ்வொரு முறையும் ஜோதிர்மயி ராம்சிங் கிடம் அவன் தலைவனின் செயலை குறித்து பேசும்போது அவனுக்கு புரியவில்லை ஆளும் தலையாட்டி பொம்மையான தன் தலைவனை பற்றி..

    ராம்சிங் போல் எத்தனையோ தொண்டர்கள் இன்னும் தன் தலைவனின் சுயரூபம் தெரியாமல் அறியாமை இருளில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.தன் தலைவன் தன்னைக் காப்பாற்றும் கடவுள் என நினைத்திருந்த ராம்சிங்கிற்கு மூன்றாவது ஊரடங்கிலாவது புரியத் தொடங்கியதில் மகிழ்ச்சி.

    வந்தவரை வாழ வைக்கும் தமிழகம் என்ற சொல் பொய்பித்து விட்டது.எந்த ஊரும் நம் சொந்த ஊரே என்பது நம் பையில் பணம் இருக்கும் வரை மட்டுமே.எந்த இடமும் நம் சொந்த இடமில்லை காலம் காலமாக இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்து தானே வந்து கொண்டிருக்கிறாய் இப்போதும் அது தொடரட்டும் என ஆட்சியில் இருப்பவர்கள் எடுத்த முடிவு பலரின் கால்களை ரணமாக்கியுள்ளது வேதனையிலும் வேதனை.முகாம் என்ற பெயரில் அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத கைதட்ட,விளக்கேற்ற சொன்ன முட்டாள் அரசரை தேர்ந்தெடுத்த நமக்கு நாமே கொடுத்து கொண்ட சவுக்கடி ஊர்திரும்புதல்.

    காலும் காலும் கால்களாகி அக்கால்கள் நடந்து நடந்து காய்ச்சு கல்லாகி போனதே.பிஞ்சுப் பாதங்கள் கொப்புளங்களால் தகித்து சொல்ல முடியா துயரத்தை தந்து விட்டதே.பச்சிளம் குழந்தை சீதாவின் பால் மணம் மாறாத முகமும் தாய் ஜோதிர்மயின் தோற்றமும் கண்ணை விட்டு அகல மறுக்கிறதே.புத்தி வந்த கணவனோடு இனியாவது ஜோதிமயி வாழட்டும்.

    இக்கதைக்கு பொருத்தமான சித்திரைத்தை தீட்டிய தோழர் ஸ்ரீரசா அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

  27. Pughal vendhan VD

    கால்கள் – ஆம் இந்த கதையில் கால் இல்லை, கால்கள் இருக்கின்றது, இன்றைய ஒட்டு மொத்த கேலிக்கூத்து தாண்டவங்களை எட்டி உதைத்து, நைய புடைக்க…

    “கொரோனா
    கைவிடப்பட்ட வர்களுக்கு ஒரே ஆறுதல்
    கால்கள்”

    புலம்பெயர்ந்து தவிக்கும் மக்களின் பிரதிபலிப்பாக ராம்சிங், அதீத நம்பிக்கை, பெருத்த ஏமாற்றம், கேள்விக்குறியான வாழ்க்கை என உயிர்வாழ போராடிக்கொண்டிருக்கும் ஒருவனாக…

    “இன்னுமா இந்த ஊரு நம்பல நம்புது” வசனத்திற்கு இணையான பேராட்சி நடந்து/நடத்தி/நடித்துகொண்டிருக்கும் இந்த ஊர் அடங்கில், இந்தக் கால்கள் சற்றே நம்பிக்கையாக நமக்கு, கூர்மையான ஈட்டியாக அவர்களுக்கு…

    இது கதையல்ல நிஜம் என்று நாம் அறிந்தாலும், இக்கட்டான இச்சூழ்நிலையில் பரிதவிக்கும் புலம்பெயர் மக்களின் வறுமைக்கு நம்மால் இயன்றதை நாம் செய்து கொண்டிருந்தாலும், உள்ளம் வெதும்புவது பேருண்மை…

    இயல்பான, யதார்த்தமான வார்த்தைகளில் இச்சிறுகதை நம்மை கட்டிப்போட்டு, கண் கலங்க வைப்பது இதன் மாபெரும் வெற்றி…

    எழுத்தாளர் தமிழ்மணி, பெயருக்கு ஏற்ப, நம் தமிழ் மூலம் பெருத்த மணி அடித்துள்ளார், கண்டிப்பாக கேட்க வேண்டியவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்து ரீங்காரமிடும் இந்த கால்கள்…

    இறுகி கொண்டிருக்கும் இந்த ஊரடங்கு சூழ்நிலையில், இணைந்து நாம் பயணித்து புலம்பெயர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு சிறு பயனேனும் கிடைத்திட விடை தேடுவோம் என்று,
    கால்களை மட்டும் நம்பி நடந்து, கடந்து சென்று கொண்டிருக்கும் இவர்களுக்கு, நம் கைகளால் நம்மாலான உதவியை செய்து அவர்கள் உள்ளம் ஆறுதல் பெற வேண்டுமென்று
    மிகச்சரியான எண்ணத்தோடு…

    புகழ்வேந்தன் விதே, மடிப்பாக்கம், சென்னை.
    9940585765

  28. M. Jaya Susa

    மா.ஜெயசுஜா,
    திருச்சிராப்பள்ளி,
    அலைபேசி 9487 | 93 064.
    ” அவனது கால்கள் அவனது மூளையின் முடிவுகளை அவமதித்தது. கால்கள் அவனது மனசாட்சியாய் இருந்து கிளம்பி விடத் துடித்தது “.
    ராம்சிங்கின் கால்களுக்கு ப்பாராட்டுக்கள். ஒருவரது ஆராய்ந்து ப்பார்க்காத கண்மூடித்தனமான நம்பிக்கை அறியாமையைவளர்க்கும்.
    ராம்சிங்கின் கால்கள் அவனது அறியாமையை உடைத்து அவனை நிதானித்து சிந்திக்க வைக்கின்றன.
    கண் ண மூடிக்கிட்டு அடுத்தவங்க சொல்றத கேட்டு நம் பாத சொல்றவங்க எப்படிப் பட்ட வங்கஎன்று அறிந்து செயல்படு என்றுவீட்டில்பெரியவர்கள் உரைப்பார்கள்.
    நம்பிக்கையை விட தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் முக்கியம் .ஒருவர்தன் மேல் வைக்கும் நம்பிக்கை, சமுதாயத்தை விரித்துப் பார்க்க செய்கிறது என்றுகால்களின் எழுத்துகள் கூறும் சப்தம் அதிகமாகவே கேட்கிறது. இந்த சப்தம் சமுதாபத்தை தூசி தட்டி எழுப்பும்.
    நாம் வாழும் மதமுலாம் பூசப்பட்ட சமுதாயம் இப்படி இருக்கிறது என்று எண்ணாமல், அதன் போக்கில் மனசாட்சியை மறந்து செல்லாமல் தனி மனிதன் அறத்தோடு வாழ்தல் நலம் என தோழர் எழுத்தாளர் அய். தமிழ்மணியின் கால்கள் நமக்கு உரைக்கிறது.
    ராம்சிங் கிற்கு கால்கள் மனசாட்சியாய் இருந்தது போல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். தெளிந்து உணர வேண்டும்.
    படைப்பாளருக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.
    “சிந்தனை செய் மனமே”.

  29. kALAIMAHAL GANESAN

    கலைமகள் கணேசன்.
    ஈரோடு.
    கால்கள்– இக்கதை இந்த கொரானோ வைரஸ் தனிமைப்படுத்தல் காலத்தில் புலம்பெயர்ந்த மக்கள் பட்ட துயரங்களை காட்டுகிறது.

    இதற்கான காரணம் திரும்ப ஓட்டுப்போட்டு பழைய ஆட்சியையே கொண்டுவந்து ஆட்சியாளர்களை கண்மூடித்தனமாக நம்பும் ராம் சிங் போன்ற நிறைய பேரால் வந்தது.

    ஒரே நாடு ,ஒரே மொழி ,பெண்களுக்கு உரிமை இல்லாதது ,இல்லாத சரசுவதி நதியை நிறைய பணம் செலவு செய்து தேடுவது, பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்வது, ஏழை மக்களிடம் கட்டணம் வசூலிப்பது இவையெல்லாம் தற்போது உள்ள ஆட்சியில் நடைபெற்று வருவதை நினைவூட்டுகிறது.

    “லாரிகள் ஓடியது மக்கள் வாழ்க்கையில் ஓட்டம் இல்லை”. என்பது புலம்பெயர் மக்களுக்கு மட்டுமில்லை எல்லா ஏழை மக்களுக்கும் பொருந்தும்.

    இந்து ராஜ்ஜியம், எல்லோரும் இந்துக்கள் என்பதில்” இந்து “யார் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம் வருகிறது.

  30. Hemalatha G.

    ஹேமலதா கு
    தேனி.
    9486331762

    கால்கள்.. கொரோனோ ஊரடங்கு காலத்தில் புலம் பெயர்ந்த வடமாநில தொழிலாளர்களின் நிலையையும்,சொந்த நாட்டிலேயே தங்களை கைவிட்ட அரசை குறை சொல்ல மனம் வராத அவர்களின் அறியாமையையும் உணர்வுப்பூர்வமாக பதிவு செய்துள்ள கதை.

    வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப விமான சேவையும், விளிம்பு நிலை புலம்பெயர் மக்கள் ஊர் போய் சேர கட்டண ரயில் விடுவது என ஆளும் அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொள்வது அவர்களின் குரூரத்தை காணமுடிகிறது.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பல மைல்கள் நடக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளது அரசு.

    ‘முறைசாரா தொழிளார்கள்’ என அவர்களின் வாழ்வாதாரத்தை நித்தமும் கேள்விக்குறியாக்கி வைத்திருக்கும் அரசு, இந்த ஊரடங்கிலும் அவர்களின் கண்ணீரை அலட்சியம் செய்து, அவர்களை தண்டவாளங்களில் காவு கொடுத்தது. நான்கு முறை மக்களிடம் பேசிய பிரதமர், இவர்கள் விஷயத்தில் மட்டும் கள்ள மௌனம் காட்டியது ஆளும் அரசின் கொடூர முகத்தை காட்டுகிறது.

    அரசின் நேசக் கரம் கிடைக்காமல்,தேய்ந்த செருப்பும் ஓய்ந்த கால்களுமாக அவர்களின் முடிவில்லா பயணத்திற்கு, நம்மை கைதட்டவும், விளக்கேற்றவும் வைத்ததுதான் அரசின் மறைமுக வெற்றி.நன்றி.

  31. Jayasusa manikam

    மா.ஜெயசுஜா,
    திருச்சிராப்பள்ளி,
    அலைபேசி 9487 | 93 064.
    ” அவனது கால்கள் அவனது மூளையின் முடிவுகளை அவமதித்தது. கால்கள் அவனது மனசாட்சியாய் இருந்து கிளம்பி விடத் துடித்தது “.
    ராம்சிங்கின் கால்களுக்கு ப்பாராட்டுக்கள். ஒருவரது ஆராய்ந்து ப்பார்க்காத கண்மூடித்தனமான நம்பிக்கை அறியாமையைவளர்க்கும்.
    ராம்சிங்கின் கால்கள் அவனது அறியாமையை உடைத்து அவனை நிதானித்து சிந்திக்க வைக்கின்றன.
    கண் ண மூடிக்கிட்டு அடுத்தவங்க சொல்றத கேட்டு நம் பாத சொல்றவங்க எப்படிப் பட்ட வங்கஎன்று அறிந்து செயல்படு என்றுவீட்டில்பெரியவர்கள் உரைப்பார்கள்.
    நம்பிக்கையை விட தன்னம்பிக்கை ஒவ்வொருவருக்கும் முக்கியம் .ஒருவர்தன் மேல் வைக்கும் நம்பிக்கை, சமுதாயத்தை விரித்துப் பார்க்க செய்கிறது என்றுகால்களின் எழுத்துகள் கூறும் சப்தம் அதிகமாகவே கேட்கிறது. இந்த சப்தம் சமுதாபத்தை தூசி தட்டி எழுப்பும்.
    நாம் வாழும் மதமுலாம் பூசப்பட்ட சமுதாயம் இப்படி இருக்கிறது என்று எண்ணாமல், அதன் போக்கில் மனசாட்சியை மறந்து செல்லாமல் தனி மனிதன் அறத்தோடு வாழ்தல் நலம் என தோழர் எழுத்தாளர் அய். தமிழ்மணியின் கால்கள் நமக்கு உரைக்கிறது.
    ராம்சிங் கிற்கு கால்கள் மனசாட்சியாய் இருந்தது போல் ஒவ்வொருவருக்கும் இருக்கும். தெளிந்து உணர வேண்டும்.
    படைப்பாளருக்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.
    “சிந்தனை செய் மனமே”.

  32. Acu Hr.Jissy Darvin

    அய்.. தமிழ்மணி அவர்கள் எழுதிய “கால்கள்” சிறுகதை இன்றைக்கு நடந்து கொண்டிருக்கின்ற சமூக அவலங்களை படம் பிடித்து காட்டி,,மனதில் வேதனையையும், கண்களில் கண்ணீரை மட்டும் தான் வரவழைக்க முடிந்ததுஅதுவும் வீட்டிற்குள்ளிருந்தபடியே.
    ஒரு கிருமி என்ற பெயரை வைத்து ,மக்களுக்கு பயத்தை விதைத்து, உலகத்தையே முடக்கி போட்டு, எவ்வளவு பெரிய அரசியல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.. இந்த நாட்களில் எவ்வளவு கேடான திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் போராட்டம் எதாவது வந்து விடக் கூடாது , என்பதற்காகவே மக்களை முடக்கவே “ஊரடங்கு ” .
    இதில் பாதிக்கபடுவது தினமும் வேலை செய்து ,குடும்பத்தை நடத்தும் அன்றாடம் காச்சிகள் அதிகம் வசிக்கும் இந்தியா போன்ற நாடுகள் தான். அதிலும் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலமை மிகவும் பரிதாபத்திற்குரியது. அடி தட்டு மக்களை பற்றி யோசிக்காத அரசு, அதற்காக பரிந்து பேசும் அரசியல் பக்தன். இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் வரை நாட்டை திருத்துவது கடினம்தான். இப்படி பொய்களை நம்ப வைத்து கூட்டத்தை உருவாக்கும் பல குழுக்கள். எதிர்த்து பேசுபவர்கள் முட்டாளாகவும், தேசதுரோகியாகவும் முத்திரை குத்தப்படுவர்..
    இதற்கு யதார்த்தமாக யோசித்து பேசும் பெண்ணை அவமதிப்பது, காலத்தின் கொடூரம்.
    எந்த உயிர்கொல்லி வைரஸ்ம் ,எங்களை கொன்று விடும் என்று பயமுறுத்தி வெளியே வர முடியாது படி செய்தாலும் கடைசியில் எங்கள் கால்கள், எந்த பயமுமின்றி, உணவுமின்றி எங்கள் மாநிலத்தை நோக்கி படையெடுக்கிறது. கிருமி எங்களை ஒன்றும் செய்ய போவதில்லை, தன் தேவைக்கு மீறிய உடலையும், உடமைகளையும் சேர்த்து வைத்தவனுக்கு தான் கிருமி பயம், ஊரடங்கெல்லாம்.
    ஆனால் எங்கள் உயிரை பறிக்க போவது “வறுமை” மட்டும் தான்.
    மொத்தத்தில்
    “மக்களின் கோவணத்தையே பருந்து தூக்கிக் கொண்டு போகும் போது , இன்றைய அரசு அதை |காஞ்சிப்புரம் பப்டு கட்டி ரசித்து “கொண்டிருப்பதாக தான் தெரிகிறது.

  33. agardaliya,

    கு. அகர் டாலியா . கொளத்தூர் , சென்னை 99.
    வணக்கம் ,
    கால்கள் கதை மிகவும் வலிமிக்க வேதனையை தருகிறது . நாட்டின் இடம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையினை தத்ரூபமாக எடுத்து கூறுகிறார் . நிச்சயமாக இந்த இக்கட்டான இச்சூழ்நிலையை இரண்டுவிதமாக நான் பார்க்கிறேன் ஒன்று இயற்க்கையால் வந்த நோய் அதனை இயற்க்கையாலே சரிசெய்யப்படும் . ஆனால் இரண்டாவது இடம் பெயர் தொழிலாளர்களின் அவலநிலை அதற்க்கன தீர்வு அரசிடம்தான் உள்ளது. அதற்க்கான முன்னெடுப்பாக அவர்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் . நான் சொல்வதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும் .நிச்சயமாக கால்கள் கதை நடந்து செல்வதால் வந்த கால்வலியாக இல்லாமல் மன வலியாக உள்ளது மனது கனத்து கண்ணீர் வருகிறது . நன்றி ஐயா .

  34. Shanthi Saravanan

    சாந்தி சரவணன்,
    சென்னை
    9884467730

    “கால்கள்”

    கி.பி கி.மு போல் தீ நுண்ணிக்கு முன் தீ நுண்ணிக்கு பின் என நமது வரலாற்றில் தீ நுண்ணி இடம் பிடித்துவிட்டது. ஒரு எழுத்தாளரின் கடமை, சமகால நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுவது. எழுத்தாளர் அய்.தமிழ்மணி தன் “கால்கள்” படைப்பின் வாயிலாக கடந்த மார்ச் 2020 மாதம் துடங்கி இன்று வரை நடந்த சம்பவங்களை மனித சமூகத்தின் வலிகளை தன் எழுத்துக்களின் ஊடே கோர்வையாக நமக்கு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

    கதையின் துவக்கத்திலேயே கேள்வி கேட்க கூடாது அதுவும் சரியான கேள்வி அம்புகள் ஆசிரியரை நோக்கி ஏய்த கூடாது, மிறினால் தண்டனை தான் என்பதை சுசகமாக சொல்லிய விதம் அருமை. மொட்டையும் உறுதியானது.

    ஊரடங்கு காலத்தில் பாரதம் பார்க்கும் மகாபாரதத்தில் தர்மர் யார் மகிழ்ச்சியானவர் என்ற கேள்விக்கு

    1.கடன் இல்லாதவர்
    2.சொந்த மண்ணில் சொந்தவிட்டில் வாழ்பவர்
    3.ஒரு வேலை சோறும் கீரையும் உண்பவர் ..

    என் பதில் அளித்துக் கொண்டு இருந்தார். இந்நிலை நம் நாட்டில் எப்போது உதயமாகும் என்ற கேள்வி எழுகிறது.

    ராம்சிங், ஜோதிர்மயி, குழந்தைகள் பல்ராம்சிங், ஜெய்ராம் சிங், இந்து குடும்பத்தோடு வசித்த அனுபவத்தை அளிக்கிறது இந்த வாசிப்பு.

    “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” – கணியன் பூங்குன்றனார் சொன்னது நிதர்சனம் என்றால் ஏன் இந்த வெடித்த பாதங்கள் நடை பயிற்சி மேற்கொள்கிறார்கள். ஒருவேலை இன்று கணியன் இருந்து இருந்தால் அவரின் சிந்தனை சிதறல்கள் திசை மாறி இருக்குமோ. வேண்டாம் கணியன் வரவேண்டாம். திட்டங்கள் ஏட்டில் இருப்பது போல் இந்த பாடல் ஏட்டிலாவது இருக்கட்டும்.

    உனக்கு நான் இருக்கிறேன் என்று அன்பு கலந்த ஒரு சொல் நம்மை எந்நிலையில் இருந்தும் மீட்டெடுக்கும் வலிமை கொண்டது. நாம் நலமாக வாழ நம்முடைய மனமே அதை தானே சார்ந்துள்ளது. அந்த ஒரு நம்பிக்கையை ஒவ்வொரு தனிமனிதனும், இந்த சமூகம் புலம் பெயர்ந்த மக்களுக்கு அளிக்க தவறவிட்டு விட்டது.

    தீ நுண்ணி தாக்குதலை விட பசியின் கோர தாக்குதல்களுக்கு பலி ஆனோர் அதிகம்.

    தீ நுண்ணி காரணமாக பீகார் மாநிலம் பக்ஸர் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படும் மையத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து திரும்பிய 23 வயது புலம்பெயர் தொழிலாளி மஞ்ச்வாரி தனிமைப்படுத்தும் மையத்தில் காலையில் 40 சப்பாத்தியும், மத்தியத்துக்கு 10 தட்டு சாப்பாடும் சாப்பிடுவது என்ன தவறு. பல புலம் பெயர்ந்த மக்களின் உணவு அவன் வாயிலாக இந்த சமூகம் கொடுத்தே ஆக வேண்டும். ஏட்டிலுள்ள திட்டங்கள் எல்லாம் அருமை ஆனால் தட்டில் சோறு இல்லையே.

    10ம் வகுப்பு தேர்வு ரத்து என அரசு ஊடகங்கள் வாயிலாக அறிவித்த செய்தி கேட்ட செவி மகிழ்ந்த தருவாயில் ஏன் இந்த பாரபட்சம். எனக்கும் பசியை ரத்து செய்து கொடுக்க சொல் என விளிம்பு நிலை மக்களின் வயிறு உறுமுகிறது. இது தான் நிதர்சனம்.

    குழந்தை இந்துவுக்கு பசி என்றவுடன் பால் கூட தாயின் இடது பாகம் தான் முதலில் கொடுக்கிறது. இந்நிகழ்வு தலைநகர் போபால் அருகே, தாமோஹ் பகுதியில், ரயில் தண்டவாளம் அருகே, ஒரு பெண் இறந்து கிடப்பதையும், அருகே, ஒரு வயது குழந்தை, அழுதபடி, தாயிடம் பால் குடிப்பதையும் கேட்ட செய்தி நிழலாடுகிறது. என்ன மொழியில் அந்த குழந்தைக்கு நாம் புரியவைக்க முடியும் உன் தாய் இறந்து விட்டாள் என்று. ராம்சிங் குழந்தைகளுக்கு கூட இந்நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. மறுபுறம் தண்டவாளங்கள் இரயிலை தன் மேல் சுமந்து கொண்டு ஊருக்கு அழைத்து செல்வதை ஊரடங்கு காலத்தில் மறந்து உயிர்களை பறித்து செல்கிறது.

    கால்கள் தளர்ந்தாலும் ராம் சிங் நம்பிக்கை தளரவில்லை. காளை ஆயிற்றே. அவன் அரசின் அடிமை. அவனின் அடிமை மனைவி, பிள்ளைகளோடும் பழகிக் கொள் மந்திர சொற்கள் முணமுணுப்போடு
    பழகிக் கொள் பழகிக் கொள்
    கொரோனாவோடு வாழ பழகிக்கொள்
    பழகிக் கொள் பழகிக் கொள்
    பசியோடு வாழ பழகிக் கொள்
    பழகிக் கொள் பழகிக் கொள்
    வெடித்த பாதங்களோடு நடைப் பயிற்சி பழகிக் கொள்….
    வரிகள் நிண்டு கொண்டே நெடுஞ்சாலையில் பயணிக்கிறது ராம்சிங்கின் நடைப் பயணத்தை மன கண்கொண்டு இந்த கதை பார்க்க வைக்கிறது. நாம் எல்லாவற்றையும் படித்து, பார்த்து கேட்டு “அச்சோ பாவம்’ என்று சொல்லால் மட்டுமே சொல்வது போல் சொல்லி முடிக்கிறேன்.

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். துன்பத்தில் பினைந்து இருக்கும் மக்களின் வாழ்க்கைக்கு இந்த ஒரு ராம்சிங் கதை சான்று. விரைவில் சரஸ்வதி நதியில் இவர்களின் கண்ணீர் தண்ணீராக ஓடும்,

    மரங்களுக்கு வேர் தான் கால்கள். சமூகத்தில் மக்கள் தான் வேர்கள். அதை சமூகம் உணரும் காலம் வரை அவர்களின் கால்கள் நொண்டியாக தான் பயணிக்க வேண்டியுள்ளது அது இந்துராஷ்டராவாக இருந்தாலும் கூட.

    புத்தகத்தின் சில வரிகள்.

    ராம் சிங் “போடி., பெண் என்கிற ஈனப் பிறவியே., நீ பேசுவதற்கு அருகதையற்றவள்., உன் வேலையை மட்டும் பார். படுப்பதற்கும் வேலை செய்வதற்குமான அடிமை நீ. தீட்டானவள் பேசக் கூடாது….” ஆண் ஆதிக்கத்தை எந்நிலையிலும் செய்வான் என்பதற்கு சான்று.

    ஆசிரியர் அய் .தமிழ்மணி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். ஓவியத்தின் மூலம் வலிகளை காட்சிப்படுத்திய ஓவியர் ஸ்ரீராச அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  35. P. umaramani

    பே.உமாரமணி.
    கரூர்.
    9487476267

    தோழர் தமிழ்மணி அவர்களின் கால்கள் சிறுகதை இன்றைய காலகட்டத்தில் நடக்கும் கொரோனோ பீதியை, பீதியை என்று சொல்வதைவிட கேலிக்கூத்து என்றுதான் சொல்ல வேண்டும். அரசியல்வாதிகள் மேல் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உள்ள கோபத்தை கைவசம் எடுத்துக்கொண்டு அழகாக சிறுகதையை சித்தரித்து இருக்கின்றார். அதற்காகவே தமிழ்மணி அவர்களுக்கு பாராட்டுதல்களும் ,நன்றியும்.

    ராம்சிங் கைபோல இன்னும் எவ்வளவோ பேர் அரசியல்வாதிகளை தங்களுக்கு வரம்தரும் தெய்வமாகவே பார்க்கின்றனர். தோழர் நாளைமக்களைகூறியதுபோல அவர் கட்சி ஆரம்பித்த நாளைமக்களை வைத்து ஒரு பெரிய திருவிழாவாகவே விளக்கேற்றி கொண்டாடித் தீர்த்து விட்டார்.

    எதைச் சொன்னாலும், செய்தாலும் மக்கள் கேட்பார்கள் என்பதற்காக கைத்தட்ட சொல்லுவதும், விளக்கு ஏற்றச் சொல்வதும் சரியான விஷயமா? இனிமேலாவது ராம் சிங் கைபோன்றவர்கள் அரசியல்வாதிகளின் சுயநலத்தை புரிந்து கொள்வார்களா? தெரியவில்லை.

  36. ராஜேஸ்வரி சரவண குமார்

    வணக்கம்.இந்த ஊரங்குடங்கள் கொரோனா இவை இந்த ஆட்சியாளர்களின் முகத்திரையை நன்றாகவே கிழித்தெரிந்துள்ளது. ராம்சிங்கைப்போல் எத்தனையோ புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசுகளை நம்பி நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பிக்கொண்டு ஊரு விட்டு ஊரு வந்து உழைக்கும் வர்க்கமாக இவர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் இந்த அரசாங்கம் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென்று அனைத்து போக்குவரத்துக்களையும் நிறுத்தி சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. பணக்காரர்களுக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த ஊரடங்கை சமாளிக்கவே பெரும் திண்டாட்டமாக இருக்கும் வேலையில் அன்றாடங் காய்ச்சிகள் அன்றன்றைக்கு சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் இந்த மக்கள் ,அடுத்த நாள் வாழ்வாதாரத்திற்கு உழைத்தால்தான் சாப்பாடு என்று நிலையில் இருக்கும் இவர்களை பற்றி சற்றும் சிந்திக்காத இந்த அரசை என்னவென்று சொல்வது. இப்படிப்பட்ட அரசு நாட்டில் தான் நாம் வாழ்கிறோம், சர்வாதிகார ஆட்சியை விட மிகக் கேவலமாக கொடுமையாக நடத்தப்பட்டுகொண்டிருக்கிறோம்.
    ஆங்கில ஆட்சி முறையே தேவலாம் போல் அந்த அளவிற்கு மிகக் கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கம் என்ன செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடை பயணமாய் செல்லும் போதும் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது .ரயில்களையும் கட்டணத்துடன் அறிவித்தது. அடிமட்ட தொண்டர்களின் அடிப்படை நம்பிக்கையை சிதைக்கும் இந்த காலகட்டத்தில் அவர்கள் நன்கு புரிந்து இருப்பார்கள் இந்த அரசாங்கங்களை பற்றி. பெரிய பண முதலைகளுக்கு அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏழை விவசாயின் சிறிய கடன் தொகையை கூட வட்டியோடு வசூலிக்கும் இந்த அரசாங்கம் .இப்படிப்பட்ட அரசாங்கத்தின் கீழ் தான் நாம் வாழவேண்டிய கட்டாயம் என்பது மிகவும் கஷ்டமாகவே இருக்கிறது.இந்த கதையை படிக்கும் பொழுது அன்றாட வாழ்வில் நமது வாழ்வில் நடந்த நம் கண்ணெதிரில் நம் வீட்டின் அருகில் நடக்கும் அவலங்களை கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்த இந்த நிலையை கதையாக படிக்கும் போது மிகவும் வேதனையைத் தருகிறது.ஊடகங்கள் மேலும் மேலும் கொரானாப் பற்றிய அச்சத்தை மட்டுமே ஏற்றிக்கொண்டே இருக்கின்றனவே தவிர இந்த அரசும் ஊடகங்களும் இதிலிருந்து மீள்வதற்கான வழியை யாரும் சொல்லித் தருவதில்லை சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று சொல்கிறார்கள் பசி பட்டினியால் எப்படி செத்தாலும் பரவாயில்லை என்று இந்த அரசாங்கம் மெத்தனப் போக்கில் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    ராஜேஸ்வரி சரவண குமார்
    பூந்தமல்லி
    சென்னை
    9003247032

  37. M.Paramadayalan

    மு.பரமதயாளன்,
    பாண்டிச்சேரி.
    9944176293.

    கதையை படிக்கும் போதே மனசு வலிக்கிறது. இன்றைய காலங்களில் நடக்கும் காலச் சுவடுகளையும், கால்களால் நடந்து நடந்து சூடேறி சுவடுகளான கால்களைப் பற்றியும் கொரோனோவின்
    கொடுமையான சூழ்நிலையை தத்ரூபமாக மையப்படுத்தி கால்கள் என்ற கதை வடிவில் கொடுத்த ஆசிரியர் தோழர் அய். தமிழ் மணி சாருக்கு வணக்கம்.

    “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும்” என்ற வாக்கியத்தை பொய்யாக்கி, நம்பியவர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி மக்களை பாழ்படுத்துவது
    எந்த வகையில் நியாயம்.

    திட்டமிட்டு செயலாற்றாமல் மனித மனங்களை மறிக்கசெய்வதேன். மனித நேயமற்ற செயல்களால் மக்கள் படும் துயரம் வேடிக்கை பார்ப்பதற்க்கா, இடம் பெயர்ந்தவர்களின் இன்னல்களை இழிபடுத்துவது நியாயமா,போராடும் மக்களை சாகடிப்பது என்ன சரித்திரம் படைக்க போகிறீர்கள். முகாம் என்ற பெயரில் அவர்களை முட்டாளாக்கியது போதாதா, கைத்தட்ட, விளக்கேற்ற செம்மறி ஆட்டுக் கூட்டம் என்று நினைத்தீர்களா,
    முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதையாய் எதை மறைக்க மக்களை முட்டாளாக்குகிறீர், மனித தன்மை இல்லாமல் போனது எப்படி மக்களின் அறியாமையை மழுங்க செய்வதுதான் நோக்கமா.

    கருப்பு பணத்தை ஒழிச்சாச்சி, பேங்க்ல எல்லோரையும் அலைய விட்டாச்சி, தீவிரவாதிகளை ஒழிச்சாச்சி, ராமர் கோயிலை மீட்டாச்சி, ஊர் உலகத்த சுத்தியாச்சி, மான் கி பாத் ஆராய்ச்சி கட்டுரைகளை அள்ளித் தெளிச்சாச்சி, டீ விற்ற காசில் ஆடை அணிந்தாச்சி, எல்லோருடைய கணக்கில்
    15 லட்சம் போட்டாச்சி, மக்களின் அறிவை அறியாமையை பயமாக்கியாச்சி, அப்புறம் என்ன சாதனை,போதனை, கொள்கை ஆகும்.

    உண்மையிலேயே கால்கள்
    கதையை படிக்கும் போது
    கால் நரம்புகள் புடைத்து வலித்து மறத்துபோனது.

  38. Kalpana Senthil

    கல்பனா செந்தில் – சென்னை

    கால்கள் – கதை முடிப்பதிற்க்குள் ஏனோ மனம் அழுதது. இப்படி கஷ்டப்படும் மக்களுக்கு இந்த அரசு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறதே என்றும், நம்மாளும் ஒன்றும் செய்ய முடியாமல் கை கட்டி நிற்கிறோமே என்ற ஆதங்கம் வலியாக இருந்தது…

    முடி இல்லாத மொட்டை தலையை பிடித்து உயிர் பிழைத்து வந்தது போல இங்கு கொரனோவில் ஏழை மக்களுக்கு எல்லா வசதியும் செய்து மக்கள் நன்றாக வாழ்வது போல அரசியல் தலைவர்கள் பேசுவதும் பொருத்தமாக உள்ளது.

    “இந்து” பெருமை பேசி, நிறை மாத கர்ப்பனியான மனைவியை தன் தலைவன் ஜெயிக்க ஒட்டு போட வைத்த ராம்சிங், தனக்கு கஷ்டம் என்றதும் தலைவன் காப்பாற்றுவான் என்ற அவனது நம்பிக்கை பொய்த்த போது தான் அரசியலை புரிந்து கொள்கிறான். புரிந்து என்ன லாபம் ஒவ்வொரு ஊரடங்காக இருப்பது அனைத்தையும் இழந்து, கால் நடையாக தன் 3 குழந்தைகள், மனைவியோடு செல்பவன், தன் குடும்பத்தோடு, ஊர் போய் சேருவானா என்று தெரியவில்லையே. நல்லபடியாக அவன் செல்ல வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

    “நெஞ்சு பொறுப்பதில்லை, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைக்கையில்” என்ற பாடல் வரிகள் தான் தோன்றுகிறது. பஞ்சம் பிழைக்க வெளிநாட்டில் இருந்து உழைக்க வந்த வடநாட்டாவர்கள் இப்போது கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு, தன் வாழ்வை காப்பாற்ற எந்த அரசியல் தலைவர்களோ, சக மனிதர்களோ வரப்போவதில்லை என்று தெரிந்து கால் நடையாக பல மைல்கள் நடக்க ஆரம்பிப்பதை பார்க்கும் போது இந்த கொரனோ ஏழை மக்களின் வாழ்க்கையை அக்கு வேறாக பிடுங்கி எறியத்தான் வந்துள்ளதோ என்ற கேள்வி தான் தோன்ற வைத்தது இக்கதை. ஆசிரியர் தமிழ்மணி ஒவ்வொரு ஊரடங்கு அறிவிப்பின் போதும் மக்களின் மனநிலையையும், வலியையும் உணர்வோடு வெளிப்படுத்தி உள்ளார் 👏

    நாட்டின் பிரதமர் எந்த அளவுக்கு சிறப்பாக செயலாற்றுகிறார் என்று தவறாக நினைத்து இருப்பதையும்,, 15 லட்சம் ஏழை மக்களுக்கு கண்டிப்பாக வழங்குவார் என்ற நம்பிக்கையில் ராம்சிங் போன்ற பலர் நம்பி ஏமாறுவதை அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்.

    பெண்கள் பிள்ளைப் பெற்று வளர்க்கவும், வீட்டு வேலை செய்யவும் தான் பிறந்தவள் என்ற அடிப்படையில் அவளை அலட்சியப்படுத்தி, அடித்து கொடுமைப்படுத்தும் ராம்சிங் போன்ற மனிதனுக்கு, இந்த நிலை தேவை தான் என்று நினைக்கும் போது, அவனுடைய நிலையை புரிய வைக்க இப்படி ஒரு கஷ்டமான நிலையை ராம்சிங்கோடு சேர்ந்து, அவள் மனைவியும் குழந்தைகளும் அனுபவிக்கும் நிலை, கதையாக மட்டுமில்லாமல் உண்மையாகவும் மக்களின் நிலை இப்படி உள்ளதே என்று மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    கால்கள் என்ற தலைப்பு மிகவும் பொருத்தமாக தேர்ந்தெடுத்து உள்ளீர். இக்கதையில் வட நாட்டு மக்களுக்கு உள்ள கஷ்டம் மட்டுமில்ல, நம் மக்களும் ஊரில் விவசாயம், விளைச்சல் இன்றி, வறுமையை ஒழித்து முன்னேற சென்னை போன்ற ஊருக்கு வந்து , இந்த கொரோனா காலத்தில் பிளைக்க வலியின்றி அவர்கள் படும் வேதனையை பார்க்கும் எனக்கு இக்கதையின் வலியை உணர முடிகிறது. நம்மால் ஆன உதவி செய்தால் கூட, அவர்கள் இதிலிருந்து மீண்டு வெளியேற இன்னும் எத்தனை வருடம் ஆகுமோ..

    “வெப்பத்தில் கானல்நீரை நிரப்பிக்கொண்டு உருகும் தார்ச்சாலைகள் இவர்கள் குருதியை உறிஞ்ச தங்கள் அசுர நாவுகளை விரித்து வைத்திருந்தன”… இந்த வரிகள் கால்நடையாக நடந்து செல்லும் அவர்கள் நிலையை பார்க்கும் போது மிகவும் பயமாக வலியாக இருக்கு …

  39. Acu Hr S PERINBARAJAN

    அக்குஹீலர் சி.பேரின்பராஜன், 9443136267 கரூர்.

    ஜேம்ஸ்பாண்ட் படங்களில்… எழுத்து பிக்சர் போடறதுக்கு முன்னாடி.. ஒரு சின்ன எபிசோட் போடுவாங்க… இந்தப்படம் எதைப்பற்றியது…என்பதை அதிலேயே கோடிட்டு காட்டிவிடுவார்கள். 15 நிமிடமென்றாலும் முழுப்படத்தையும் அந்த முன்கதை விழுங்கி ஏப்பமிடும்…

    அதற்கு நிகரான …அந்த அறிமுக கதை அட்டகாசம்… “கதை சொன்னா … அனுபவிக்கனும்… ஆராயக்கூடாது..” என்பதை கதைக்கு காலிருக்கா…காலிருக்கா… என கேட்டு நன்றாகவே “புரிய” வைக்கிறார் அந்த ஆசிரியர்…

    ஒரு சங்கியே…சங்கிப்போகும் கதையை படிக்கும்போது…அந்த அப்பாவி சங்கிகளுக்காக இதயம் கண்ணீர் சிந்துகிறது… பிறந்த இடத்தில் வாழகதியற்று பிழைப்பு தேடி மொழியறியா ஊருக்கு உழைக்க வந்தவனை… தன் கடினவாழ்வை மறக்க … மதவெறி என்னும் கஞ்சாவை தந்து அவனை வெற்று கர்வத்தோடும், மூட எதிர்பார்ப்போடும்…. தாங்கள் செய்வதெல்லாம் நன்மைக்கே என்று நம்ப வைக்கும் கதைகள் சொல்லி… தனது இன்றைய நிலைக்கு அரசு காரணமல்ல… அந்த “மற்றவர்கள்” தான் காரணம் என் ஆழபதிய வைத்த ஆண்டைகளின் தகிடுதத்த திறமையை கண்டு வியக்கத்தான் வேண்டியிருக்கிறது..

    இத்தகைய கண்மூடித்தனமான தொண்டர்களுக்கு… உண்மை புரிய இப்படி ஒரு நரக சோதனை தேவைப்படுவதை நினைத்தால்.. பாவமாக இருக்கிறது…

    பல இடங்களில் சிறுகதை வடிவிலிருந்து கட்டுரை வடிவுக்கு கதை தடம் புரண்டு இருப்பது ஒரு சிறு குறை…

    கொரொனா பெருந்தொற்று ஊரடங்கையும்… அதில் வெளித்தெரியாத புலம்பெயர் தொழிலாளர்களின் பாடுகளின் இருண்ட பகுதியையும் பதிவு செய்து தனது இலக்கியகடமையை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார் ..தோழர் அய்.தமிழ்மணி… மனம் நிறைந்த வாழ்த்துகள்…

  40. Sreedevi

    செ.ஸ்ரீதேவி, சென்னை,9003097088

    என்ன கொடும. சரவணா என்று சொல்ல தான் தோன்றுகிறது. வலி நிறைந்த போராட்டமான வாழ்க்கையை, ராம்சிங் என்று நாம் அன்றாடம் பார்க்கும் சகமனிதனின் வாழ்க்கை வழியாக நூலாசிரியர் எடுத்துரைக்கிறார். எத்தனை பட்டாலு நம்மாளுக்கு புத்தி வராதே. இன்னும் எத்தனை நாள் நம்மை காப்பாற்ற ஒரு தியாகி இருக்கிறார். அவர் நம்மை எப்போதும் கைவிடமாட்டார் என்று மடத்தனமாக நம்பி கொண்டிருப்பவரகள் இருக்க தான் செய்கிறார்கள். அந்த அப்பாவி மக்களின் போக்கிடம் தான் என்ன? அவர்கள் வாழ்க்கையை யார் தீர்மானிக்கிறார்கள்? இதற்கான தீர்வு தான் என்ன? பொருளாதாரம் அதள பாதளத்தில் இருப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

    குளிர்சாதன வாகனங்களில், நவீன ஊர்திகளில் பயனம் செய்யும் சொகுசு ஆசாமிக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியவா போகிறது. இங்கே மக்களுக்காக அவர்களிடையே இறங்கி வேலை செய்ய யாரும் தயாராக இல்லை. ஏழைகளின் தயவு செல்ஃபி எடுத்து கொள்ள தான் இவர்களுக்கு தேவைப்படுகிறது. இதற்கு பிறகாவது மாற்றம் வருமா? தெரியவில்லை. பொறுதத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    நன்றி

  41. S.Malarkodi

    இயற்கை பேரிடர்கள் வருவதை முன்கூட்டியேகண்டுபிடித்து மக்கள் காப்பாற்றப் படுகிறார்கள். மக்களால் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட அரசினால்வரக்கூடிய பேரிடர்களை கண்டுபிடிக்கவும் அதிலிருந்து அவர்களை காப்பாற்றிக் கொள்ளவும் வழி தெரியாமல் மக் கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    அரசின் வெறும் வாய் வார்த்தைகளில் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.மக்கள் நலனில் பெரும் அக்கறை உள்ளவர்களாக வெளிப்புறத்தில் ஒரு முகமும், அகத்தில் இன்னொரு பல கொடுமைகளை மக்களுக்கு இழைக்கும் செயல்களை செய்ய திட்டம் தீட்டி கொண்டுள்ள அவர்களிடமிருந்து நாம் ஒவ்வொருவரும் தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்கான வழி வகைகளை அறிந்து ஆகவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளோம்.

    மத ஒற்றுமைக்காக பாடுபட்ட தேசத்தில் மதவெறியினை மக்கள் மனதில் புகுத்தி, தேசத்தை கூறாக்கி மாள்பவர்கள் எத்தனை பேரோ? இயற்கை இம்மக்களை இத்தகைய வஞ்சகர்களிடம் இருந்து காப்பாற்ற அவர்களை கால்நடையாக சொந்த ஊர் சேர செய்திருக்கிறது.

    கதைக்கு கால்கள் இல்லை ஆனால் நிஜத்தில் இம்மக்களுக்கு கால்கள் மட்டும் இல்லையென்றால் அவர்களின் கதை காலமாகியிருக்கும்.

    இன்றைய நிஜ கால கொரோனா வாழ்க்கை,ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் நிறைய உண்மையான தேடல்களை உருவாக்கி விட்டுள்ளது. ( உணவு, பணம், இருப்பிடம் மற்றும் மக்களுக்கான அரசு)
    இன்னும் நிறைய ராம்சிங் மற்றும் ஜோதிர்மயிகளைவிழித்துக்கொள்ள செய்துள்ளது.
    இந்த இந்து ராட்சசர்களால்
    அமுதம் அமுதமென்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, இப்பொழுது விசமாக கக்கி கொண்டுள்ளதை கண்டு ஓடிக்கொண்டு இருக்கிறார்கள் மக்கள்.

    தோழர் அய். தமிழ்மணியின் கால்களின் கதைகள்,இயக்குனர் ராஜூ முருகனின் ஜிப்ஸி படத்தை ஞாபகப்படுத்திச் சென்றது.
    இந்துமத வெறியினால் தூண்டப்பட்டுத்தான் செய்யும் தவறுகளை நியாயப் படுத்தி செயல்கள் செய்யும் ஒருவனின் இருக்கைகளும், ஓம் மதவெறியர்களால் கீழ் சாதி இந்து இவன் எனக்கருதி மேல் சாதியினரால் துண்டிக்கப்பட்டு விடும். அதன்பின்னரே அவன் புரிந்து கொள்வான். அதைப் போன்று இவர்கள் புரிந்து கொள்வதற்கு தங்கள் கால்களை தேசம் முழுவதும் பதித்துக் கொண்டுள்ளனர்.இனிமேலாவது அவர்களின் வாழ்க்கை ஒளிர, அவரவர்களே அவர்களின் மூளையை தட்டி ஒலி எழுப்ப செய்யட்டும்.

    செ. மலர்க்கொடி, மதுரை.
    9626119659.

  42. Sakthi Bahadur

    காலாகாலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட பெண்கள் உரத்த குரலில் கேள்வி கேட்காமல் இருக்க அவர்களுக்கிடையே மாமியார் மருமகள் சண்டை…. நாத்தனார்,ஓரகத்தி, சக்களத்தி போன்ற போன்றஉறவு முறைகளில் பெண்ணுக்கு வில்லிகளை உருவாக்கி அவர்களுக்குள் மோத வைத்திருக்கும் ஆணாதிக்க சமுதாயம்.

    அதேபோலத்தான் ஜாதி, மதம், இனம் என்று மக்களை மக்கள் உடனே மோதவிட்டு ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்காமல் திசை திருப்பி வைத்திருக்கும் அதிகார வர்க்கம்.

    நாம் சுரண்டப்படுவது நமக்கு தெரியாமல் இருக்கவும், தெரிந்தாலும் கேள்வி கேட்காமல் இருக்கவும் நம் மனதை பொய்யான கதைகளால் மாயத்திரை போட்டிருக்கும் இன்றைய சமுதாய நிலையை அழகாக உரித்து காட்டும் கதை அய். தமிழ்மணி அவர்களின் கால்கள்

    இந்தக் கதையை படிக்கும்போது நான் சிறு வயதில் கேட்ட ஒரு கதை நினைவுக்கு வருகிறது. வீட்டில் சுவையான கொழுக்கட்டை செய்து சுடச்சுட தானும் தன் மக்களும் உண்டுவிட்டு தன்னுடைய கண்தெரியாத மாமியாருக்கு பூனை குட்டியை அவித்து கொழுக்கட்டை என்று சொல்லி கொடுக்கிறாள் மருமகள்.

    கையால் தடவியயும் மூக்கால் முகர்ந்தும்
    அது என்னவென்று அறிந்து அதை தூக்கி வீசிவிட்டு அந்த தாய்க்கிழவி …

    பொருளீட்ட சென்றிருந்த தன் மகன் வந்தவுடன் அவனிடம்,” கொழுக்கட்டைக்கு கண்ணுன்டா மகனே…
    கொழுக்கட்டைக்கு கால் உண்டா மகனே….
    கொழுக்கட்டை வால் உண்டா மகனே…”

    என்று சொல்லி அழுது பாடுகிறாள்.
    கதைகள் என்பது மக்கள் தங்கள் வலியையும் வேதனைகளையும் கடத்துவதற்கும், தங்கள் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கும் பயன்பட்டது.

    ஆனால் அதே கதைகள்தான் மக்களை புராணங்கள் என்னும் பெயரில் நினைத்த மாதிரி எல்லாம் ஆட்டிவைக்கும் ஆட்டு மந்தைகளாக மாற்றி வைக்க பயன்படுகிறது.

    இன்றைய அரசியல் வாதிகளும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் ஆதாரமற்ற விதவிதமான கதைகளை சொல்லி மக்களை மக்கள் கூட்டத்தை மந்தைகள் ஆக்கி வைத்துள்ளார்கள்.

    சற்று விபரம் தெரிந்த கேள்வி கேட்டால்… கதைக்கு கால் உண்டா… என்று பிரம்பால் அடித்த ஆசிரியர் ஆக தான் இன்றைய அதிகாரசமுதாயம் இருக்கிறது என்ற உண்மையை உரக்கச் சொல்லி, இந்த லாக் டவுன் மூலம் மக்கள் பட்ட சிரமங்களையும், இன்னும் சொல்லப்போனால் யாருக்கு ஓட்டு போடுவதற்காக, யாரின் அரசு அமைவதை கணவாய் இலட்சியமாய் கொண்டு இருந்தார்களோ… அந்த அடித்தட்டு மக்களின் வலியையும் உணர்த்தக் கூடிய ஒரு அருமையான கதை சொல்லிய தோழர் தமிழ்மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  43. Darvin Raj P

    இலக்கியங்களுக்கு ஒரு சிறப்பு உண்டு. அவை சமகாலத்து சமூகத்தை காட்சிபடுத்தும் மற்றும் காலம் கடந்தும் அவற்றிற்கு சாட்சியாக, வரலாறாக நிற்கும். சிறுகதைகளும் இலக்கியங்களே. மேற்கண்டவாறு, இக்கால சமூகத்தை அதன் உண்மை தன்மையை பதிவு பண்ணும் விதமாக அமைந்துள்ளது இச் சிறுகதை – கால்கள். கரோனா ஊரடங்கு காலத்தை அதன் இயல்போடும் அதனோடு இணைந்த போலித்தனமான அரசியலையும் பதிவு செய்கிறது. முக்கியமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பொதுவான மனநிலையையும் அவர்கள் அனுபவிக்கிற கஷ்டங்களையும் அறியாமைகளையும் பதிவு செய்கிறது இச்சிறுகதை .
    மொட்டை அடித்த சிறுவனை முடியை பிடித்து தூக்கி விட்டு காப்பாற்றியதாக கூறும் கதைக்கு கால்கள் இல்லை என்ற அறிவு விளக்கத்துடன் துவங்கும் சிறுகதை, மக்களை மொட்டையடித்து கொண்டே முடியை பிடித்து பின்னாளில் காப்பாற்றுவோம் என்ற வகையில், பதினைந்து லட்சம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கபடும் என்ற வார்த்தை ஜாலங்களை நம்பி இன்னும் எதிர்பார்த்து கொண்டு அரசியல் களப்பணி செய்யும் மதஅபிமான தொண்டார்களை அடையாளபடுத்துகிறது. வண்டி குதிரைக்கு முன் கட்டபட்ட கொள் -ளை தாவிபிடிக்க முயற்சித்து வண்டியை இழுத்து கொண்டே ஓடி கொண்டிருக்கும் அஞ்ஞான விலங்குகளுக்கு இணையாக தொண்டர்களை முன்னேற்றிய, நாட்டை ஆளும் அரசியல் தலைவர்களின் திறமையை ஏதோ ஒரு வகையில் பாராட்டியே ஆகவேண்டும். அத்தகைய ஒரு உண்மை தொண்டனாக ராம்சிங்கும், நிகழ்காலத்தை உணர்ந்து கொள்ளும் மனசாட்சியாக அவனது மனைவி ஜோதிர்மயி-யும் உள்ளனர். அணில்கள் முதுகில் ராமரின் கோடுகளோடு அழகாக துடிப்புடன் வலம் வந்தாலும், ராமர் காலத்திலும் இன்றும் எவ்வளவு விசுவாசமாக இருந்தாலும், கவண்களாலும் கற்களாலும் அடிப்படுவதும் தொடரவே செய்கிறது. டீ வித்து பிழைத்தவர் ஒரு லட்சத்திற்கு காளான் உணவும், 10 லட்சத்திற்கு ஒரு உடை உடுத்தும் வண்ணம் சொந்த கடும் உழைப்பில் முன்னேறிய தலைவர்கள் ஆளும் நாட்டில் ஒரு அணில் போன்ற தொண்டனுக்கு 15 லட்சம் கிடைக்காமலா போய்விடும் என்ற சராசரி தொண்டனின் எதிர்பார்ப்பு அவனை பொறுத்து அறிவுடைய நம்பிக்கையே. கூடவே மற்ற மதத்தினரை விரட்டியும் இழிவு படுத்தியும், இந்துராஷ்டிரம் நிறுவபடும் என்ற போனஸ்-வுடன் கிடைக்குமென்றால் கசக்கவா செய்யும்? எவ்வளவு உரிமைகள் – பிற மதத்தினரை அடிக்கலாம், கொன்று விடலாம், கற்பழிக்கலாம், பொருட்களை சூறையாடலாம் – வீரத்தையும் தேசபக்தியையும் நிரூபிக்க இவ்வளவு வாய்ப்பு முன்பு கொடுக்க படவில்லையே. இந்த சுதந்திரத்தையடைய சில கசப்பு மருந்துகளை தற்போது தலைவர்கள் கொடுப்பது மொத்த நலனுக்காக என்று ராம்சிங் உறுதியாக நினைத்ததில் இந்த கரோனா வந்து மனஉறுதியை அசைத்து விட்டது.

    இச்சிறுகதையில் கூறப்படுவதுபோல, எல்லாவகையிலும் நவீனம் என்று கூறப்படுகிற இக்காலத்தில் அடித்தட்டு மக்களுடைய கண்ணீர் அல்ல குருதியே பல கதைகளை கூறிக் கொண்டு இருக்கிறது. நவீனத்திற்குள் மனங்கள் சிதைந்து கொண்டு இருக்கிறது. அதற்கு மருந்தாகவா நெடுஞ்சாலை முழுதும் மரங்கள் அழிக்கபட்டு அரளி செடிகள் தினமும் தண்ணீர் விட்டு அழகாக வளர்க்கபட்டு அரளி காய்கள் காய்த்து தொங்கவிடபடுகிறது? நடந்து செல்லும் கால்களுக்கு தண்ணீர் கொடுக்கத்தான் முன்னேற்பாடுகள் இல்லை. ஆசிரியர் குறிப்பிடுவது போல, பசுமை பிழிந்து கருமையான தார்சாலை போல, மனங்களும் மாறி கொண்டிருப்பதாக கதை உணர்த்துகிறது. நாடகத்தில் காட்சி மாறுவது போல் இல்லாமல், இயல்பான தொடர்ச்சி இருந்தால் இச்சிறுகதை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். நன்றி.

    டார்வின் ராஜ் பி
    9840285958.

  44. R. Jayalakshmi

    இரா. ஜெயலக்ஷ்மி
    சென்னை.
    9710615006

    ஆரம்பமே அசத்தல். மொட்டை கிணறு கதை போல் , என் கதையில் பொய்கள் இல்லை. உண்மையான உன்னத உணர்வுகள் நிறைந்த கதை என்பதை ஆழமாக ஆரம்பத்திலேயே உணர்த்தி விட்டார் ஆசிரியர் அய். தமிழ்மணி அவர்கள். ஆதிகார வர்க்கத்தை எதிர்த்து கேள்வி கேட்டால் “கதைக்கு கால்கள் உண்டா?” என்று கேட்டு விளாசி விடுவார்கள் என்பதே நிதர்சன உண்மை, என்பதை பதிவு செய்திருக்கும் ஆசிரியர் அய். தமிழ்மணி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பூம்பூம் மாடுகள் நிறைந்த இச்சமுகத்திற்கு, இக்காலகட்டத்திற்கு ஏற்ற சிறுகதை கால்கள்.

    ஆள்பவனை கண்மூடித்தனமாக நம்பும் மாக்களுக்கு தேவையான சிறுகதை கால்கள். தன் இனணையரின் வார்த்தைகளுக்கு ஒருபோதும் செவிசாய்க்காத ஆணாதிக்க சமுதாயம் இது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுறுத்துகின்றது இச்சிறுகதை.

    வேலைக்காக புலம் பெயர்ந்த மக்களின் நிகழ்கால வேதனைகளை கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர் அவர்கள்.

    லாக்டவுன் காலத்தில் சக மனிதனுக்கு தேவையான அனைத்தையும் பகிர்ந்தளித்து, மனிதாபிமானத்தை காட்ட வேண்டிய தருணத்தில், ஆளும் அரசை மட்டும் குறை சொல்லி பயனில்லை. தலைவனை தேர்ந்தெடுத்து நாம். அதனால் வரும் விளைவுகளை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே நம் விதி. ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், இன்னும் எத்தனையோ ராம்சிங்குகள் தலைவனை இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான்.

    ஶ்ரீரசா வரைந்த பொருத்தமான ஓவியம் சிறுகதைக்கு கூடுதல் அழகை சேர்க்கிறது.

    இந்த வலி நிறைந்த கால்களுக்கான விடைகளாக வலி நிறைந்த விளைவுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒவ்வொருவரும் சந்திக்க வேண்டிய சூழல் வெகுதொலைவில் இல்லை என்பதையும் இச்சிறுகதை நினைவுறுத்துகிறது.

    அய். தமிழ்மணியின் எழுத்துநடை கண்களில் நீரை வரவைக்கும் உணர்ச்சிகரமாக வரிகள். மொத்தத்தில் இன்றைய நிஜத்தின் நிழல் கால்கள்.

  45. Rukhsana Jameel

    Rukhsana Jameel
    Vaniyambadi
    8072009878

    வணக்கம்.

    இந்த கதையில் கால் இருக்கும் என தொடங்கும் சிறுகதை
    ஊரடங்கு நேரத்தில் நடந்த ஆட்சியாளர்களின் அநியாயங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்…

    தலைவர்கள் மக்களுக்கு நல்லது செய்கிறார் என பெருமை கொள்ளும் ராம்சிங் போல் ஆட்க்கள் இருக்கவே செய்கிறார்கள்…
    ராம்சிங் தன் மனைவியை தன் ஆட்சி தலைவருக்காக அடிப்பது இங்கு நமக்கு சாப்பிறதுக்கு உணவில்லை தலைவன் தலைவன் என்று இருக்கிறீங்ளே என கேட்கும் மனைவியை அடிப்பது பொருப்பற்ற ஆட்சியாளரின் தொண்டர்கள் இதுபோல் இருக்கவே செய்கிறார்கள்…

    அந்த ஆட்சியாளர்கள் பொருப்பற்றவர்களாக கையை தட்டுங்கள்,விளக்கையேற்றுங்கள் என்று சொன்னதையும் சிலர் செய்தது தான் காமெடி…

    மறக்கமுடியாதவை…

    ஊரடங்கு நேரத்தில் நடந்த கால்கள்
    மனிதாபிமானம் இல்லாத ஆட்சியாளர்களால்…

    மற்றும்,

    மதம், சாதி என்று சாதாரண மக்களின்
    மனதில் தவறான விதையை விதைப்பது…என் கட்சி என் தலைவர் என்று ஓட்டு போட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்யாத இந்த ஆட்சியாளர்கள்…

    உண்மையை சிறுகதையினன் மூலமாக வெளிப்படுத்திய எழத்தாளர் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்…

  46. Saira Banu

    பா. சாய்ராபானு,
    கோவை.

    ஒரு கதையை சொல்லி அதன் வழியே மற்றொரு கதையை தொடர்ந்து இருக்கிறார் ஆசிரியர். கால்கள் சிறுகதையின் ஒவ்வொரு வரிகளும் வறுமை, வேலையின்மை, பொருளாதார சரிவு, சமூக அமைதியின்மை, நோய், , மதச்சகிப்பின்மை என மூழ்கடித்துக் கொண்டிருக்கும் இன்றைய அரசியலைப் பற்றி ஓங்கி ஒலிக்கும் மக்களின் குரல், தங்களுடைய எழுத்துக்கள் மூலமாக தீக்கனலாக உருவெடுத்துள்ளது. மேலும் சிறக்கட்டும் தங்களது பணி. ஏளனச் சிரிப்பையும், ஆணவச் செருக்கையும் எரித்து சாம்பலாக்க, ஒரு எழுதுகோலின் முனையை கொண்டு ஒரு வாசகனின் நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்திவிட முடியும் என்றால் அது ஒரு எழுத்தாளனால் மட்டுமே முடியும்..

    “ஒரு வாள் சாதிக்க இயலாததை ஒரு பேனா முனையால் சாதிக்க இயலும்” என்பார்கள். உங்களைப் போன்ற எழுத்தாளர்களின் எழுதுகோல் முனையே போதுமானது. ஒவ்வொரு எழுத்துகளில் இருந்தும், புத்தகங்களில் இருந்தும்(வாசகன்) பல ஆயிரம் கோடி எழுத்தாளர்கள் உருவாகி கொண்டே இருப்பார்கள். நெஞ்சத்தில் எழுச்சியையும், நற்புரட்சியையும் விதைக்க ஒரு எழுதுகோலின் முனையே போதுமானது. நீதி நிலைநாட்டப்படும். வலிமை வாய்ந்த சர்வாதிகாரிகள் வீழ்ந்த கதையை எல்லாம் எழுதுகோல் முனைகள் நினைவுபடுத்தி பயமுறுத்தாமலா இருக்கும்??!!

    மறைத்தது எவ்வளவு??!! திரித்த உண்மைகள் எவ்வளவு?!! எவ்வளவு அநீதிகள், ஊடகங்களின் மூலம் நீதியென பரப்பப்பட்டது. உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் இல்லாவிட்டால் பொய்கள் எல்லாம் சந்தியில் கூடி நின்று உண்மையின் நாயகன் நான்தான் என சத்தியம் செய்யும். பெயர் என்ன என்று கேட்டால், எனது பெயர் தூயபொய் என்று சொல்லி பல்லிளிக்கும். பூசை முதல்வர் மாநிலத்தில் சிறுவர்களுக்கு மதிய உணவில், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு கொடுத்ததும், அதை வீடியோ பதிவு செய்த பத்திரிகையாளர் மீது மாநில அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்தது..
    “டீ விற்ற சாதாரண தொழிலாளி ஏழைத் தாயின் மகன் இன்று கவுரவமாக பத்து லட்ச ரூபாயில் ஆடை அணிகிறார். ஒரு லட்சம் ரூபாய் காளான் தின்கிறார்”… என்னும் வரிகளை படித்தேன். வானிலேயே பறந்து கொண்டிருப்பார். மேலும் எங்க தலைவரோட ஒன்றரை லட்ச ரூபாய் “கூலிங் கிளாஸ” மறந்துட்டீங்களே ஐயா…

    “அவர்களின் கண்ணீர் மட்டும் கதைகள் சொல்லும் காலம் போய் அவர்களின் குருதியணுக்களும் கதை சொல்லும் காரண காரியங்களை ஆட்சியாளர்கள் கட்டமைத்து விட்டிருந்தனர்”… தலைமுறைகளை எல்லாம் கார்ப்பரேட்டுக்கு விற்பனை செய்தாயிற்று.. “மத்தியிலும் நம்ம ஆட்சி, மாநிலத்திலும் நம்ம ஆட்சி என குதுகலமானான்”.. பாவம் வாயில் விழுந்தது மண் என்று அறியாமல், வயிற்றில் விலையபோகிறது பொன் என்று ராம்சிங் நினைத்திருப்பார் போலிருக்கிறது…

    “அந்த விளக்கொளியில் டார்ச்லைட் வெளிச்சத்தில் மெழுகுவர்த்தி உருகுதலில் கொரோனா செத்துவிடும்., இதை நமது பிரதமர் வேதங்களில் தேடிப்பிடித்து அறிவித்துள்ளார். வாருங்கள் விளக்கேற்றுவோம் வாருங்கள் விளக்கேற்றுவோம் என அவரது கட்சியார்கள் விடாமல் கூவினார்கள்”.. அதன்மூலம் வரும் வெளிச்சத்தில் பக்கோடா சுட்டு வறுமையை விரட்டிவிடலாம் என்று ராம்சிங் குதூகலம் அடைந்திருப்பார் போல… “வழக்கம்போல் பிரதமர் தன் வாயால் சுட்ட வடைகளை நாட்டு பிரஜைகளுக்கு வாரிவாரி வழங்கிக் கொண்டிருந்தார்”… எங்க தலைவர் வாரி வாரி வழங்குவதில் மட்டுமல்ல, கொடுப்பதிலும் வல்லவர்??!! வாயால் சுட்ட வடைகளை வாரி வாரிக் கொடுப்பதில் மட்டுமா, புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதிலும் தான். விளம்பரம் ரொம்ப முக்கியம். அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை கோடியோ கோடி!!

    “கங்கையாறும் தேடப்படும் சரஸ்வதியாறும் இவர்களின் கண்களில் திரண்டு நிற்க பிரதமர் நான்காவது ஊரடங்கை அறிவிக்க தயாராகிக் கொண்டிருந்தார்… பசுமையைப் பிழிந்து கருமையாய் நீண்டு கிடக்கும் தார்ச்சாலைகளெங்கும் தேசத்தின் வறுமையும் மக்களின் பயமும் சுவடுகளாய் நிரம்பிக் கொண்டிருந்தன. மரங்கள் அழித்து உருவாக்கப்பட்ட அந்த சாலைகளின்” = சுத்தமான இந்தியா…. இதற்கு பெயர்தான் கிளீன் இந்தியா…

    ‘அவர்களின் கால்கள் நடக்க ஆரம்பித்தன’… ராம்சிங்கின் சிந்தனை தெளிந்தது, இனி பாதையும் தெரியும்…

  47. திவ்யா செந்தூரன்

    கதைக்கு கால் இல்லை , தங்கல் சிறுகதை அறிமுகம் நன்றாக இருந்தது. என் தந்தையும் இராணுவ கதை அடிக்கடி சொல்லுவார் , எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் தான் ரியாக்ஷன் தருவேன் , மனுஷன் அலுக்காம சொல்லுவார். ஒரு முறை சொன்னதுண்டு, வட மாநிலங்களில் நாட்டு பற்று மிக அதிகம். இராணுவ வீரர்களை கண்டால் அவர்கள் அந்த அளவுக்கு மரியாதை தருவார்கள். கதாநாயகன் போல் மதிப்பார்கள், அப்போதுலாம் பெருமையா இருக்கும், ஆனா இங்க வந்தா ஒரு பயன் மதிக்கமாட்டான். . இதை கேட்கும் போது காலம் மாரி போய் இருக்கும் என்று நினைப்பது உண்டு, ஆனால் இக்கதை வாசிக்கும் போது இன்னும் நிலவுகிறது என்று புரிகிறது.
    இராணுவ வீரர்களுக்கே நல்ல மரியாதை என்றால் தலைவர்களுக்கு சொல்லவா வேணும்.
    அறியாமையில் மூழ்கி இருக்கும் இம்மாதிரியான மனிதர்களை குத்தம் சொல்வதா அல்லது அடுத்தவரின் பாதகத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொல்லும் அரசியல்வாதியின் சுயநலமா , யாரை சொல்வது.
    ” எல்லாம் மேல் இருக்குறவன் பாத்துப்பான்” என்பது போல தலைவன் பார்த்துப்பான் நான் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் , கல்வி வேண்டாம் , பகுத்தறிவு வேண்டாம் என்று ஒரு குருடனாக இருந்து என் தலைவரே எனக்கு கண்ணாக இருந்து வழிகாட்டுவார் என்று நம்பும் மக்கள் இருக்கும் வரை இது தொடரும்.

    “நன்மையும் தீமையும் பிறர் தர வாராய்”

  48. Acu Hr S PERINBARAJAN

    அக்குஹீலர் சி.பேரின்பராஜன், 9443136267 கரூர்.

    ஜேம்ஸ்பாண்ட் படங்களில்… எழுத்து பிக்சர் போடறதுக்கு முன்னாடி.. ஒரு சின்ன எபிசோட் போடுவாங்க… இந்தப்படம் எதைப்பற்றியது…என்பதை அதிலேயே கோடிட்டு காட்டிவிடுவார்கள். 15 நிமிடமென்றாலும் முழுப்படத்தையும் அந்த முன்கதை விழுங்கி ஏப்பமிடும்…

    அதற்கு நிகரான …அந்த அறிமுக கதை அட்டகாசம்… “கதை சொன்னா … அனுபவிக்கனும்… ஆராயக்கூடாது..” என்பதை கதைக்கு காலிருக்கா…காலிருக்கா… என கேட்டு நன்றாகவே “புரிய” வைக்கிறார் அந்த ஆசிரியர்…

    ஒரு சங்கியே…சங்கிப்போகும் கதையை படிக்கும்போது…அந்த அப்பாவி சங்கிகளுக்காக இதயம் கண்ணீர் சிந்துகிறது… பிறந்த இடத்தில் வாழகதியற்று பிழைப்பு தேடி மொழியறியா ஊருக்கு உழைக்க வந்தவனை… தன் கடினவாழ்வை மறக்க … மதவெறி என்னும் கஞ்சாவை தந்து அவனை வெற்று கர்வத்தோடும், மூட எதிர்பார்ப்போடும்…. தாங்கள் செய்வதெல்லாம் நன்மைக்கே என்று நம்ப வைக்கும் கதைகள் சொல்லி… தனது இன்றைய நிலைக்கு அரசு காரணமல்ல… அந்த “மற்றவர்கள்” தான் காரணம் என் ஆழபதிய வைத்த ஆண்டைகளின் தகிடுதத்த திறமையை கண்டு வியக்கத்தான் வேண்டியிருக்கிறது..

    இத்தகைய கண்மூடித்தனமான தொண்டர்களுக்கு… உண்மை புரிய இப்படி ஒரு நரக சோதனை தேவைப்படுவதை நினைத்தால்.. பாவமாக இருக்கிறது…

    பல இடங்களில் சிறுகதை வடிவிலிருந்து கட்டுரை வடிவுக்கு கதை தடம் புரண்டு இருப்பது ஒரு சிறு குறை…

    கொரொனா பெருந்தொற்று ஊரடங்கையும்… அதில் வெளித்தெரியாத புலம்பெயர் தொழிலாளர்களின் பாடுகளின் இருண்ட பகுதியையும் பதிவு செய்து தனது இலக்கியகடமையை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார் ..தோழர் அய்.தமிழ்மணி… மனம் நிறைந்த வாழ்த்துகள்…

  49. Jeyanthi.R

    கால்கள் இல்லாத கதையில் தொடங்கி இன்றைய கொரானாவில் தங்கள் சொந்த ஊர் நோக்கி புறப்படும் புலம்பெயர் தொழிலாளர்களின் கால்களில் முடிகிறது எழுத்தாளர் அய்.தமிழ்மணி அவர்களின் “கால்கள்” சிறுகதை.

    வறுமையின் காரணமாக மாற்று ஊர்களில் குடியேறும் மக்கள் இயற்கை பேரிடர் காலங்களில் எவ்வளவு இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதை காலந்தோறும் இந்த உலகம் எந்த சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறது. கொரானா காலமும் அதற்கு விதிவிலக்கல்ல. கொரானா நோயைக் காட்டிலும் பட்டினி பெருங்கொடுமை. சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகின்ற எத்தனையோ ராம்சிங்கள் தன் மத தலைவர்களை கடவுள்களாக கொண்டாடும் அவலத்தை கதை பறைசாற்றுகிறது.

    அரசிடம் இருந்து உதவி கிடைக்கும் என ஏங்கி நிற்கும் மக்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பை பரிசாக தருகிறது அரசு. மத்தியிலும் மாநிலத்திலும் அரசு அரங்கேற்றும் கூத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற கதை. கொரானா காலத்தின் ஊரடங்கு ஒரு புலம்பெயர் குடும்பத்தை எவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளுகிறது என்பதை கதையின் ஒவ்வொரு வார்த்தையும் சொல்கிறது. கொரானா காலத்தை பற்றிய கதைகள் பல வரும் காலங்களில் எழுதப்பட்டாலும் இந்த சிறுகதை அரசின் பொறுப்பற்ற தன்மையை தோலுரித்து காட்டும் கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. புனிதமான வரலாறு என்கிற பெயரில் அரசுடன் இணைந்து ஊடகங்கள் கிளப்பிவிடும் பொய்களை முறியடித்து உண்மையை உரக்க சொல்லும் படைப்பாளர்களால் மட்டுமே வரலாறு எழுதபட வேண்டும். அத்தையை படைப்புலகில் அய்.தமிழ்மணி அவர்களின் எழுத்து பெரும்பங்கு வகிக்கிறது. அவரது படைப்புகளில் “கால்கள்” சிறுகதை மைல்கல் என்றே குறிப்பிடலாம்.

    இரா.ஜெயந்தி
    சென்னை
    9790492284

  50. B.Began

    பா.பேகன்
    செங்கல்பட்டு

    மிக எளிமையான வரிகளில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அசாதாரண சூழல்களை தெளிவாக விளக்கியுள்ளார் தோழர் தமிழ் மணி அவர்கள்.

    கதையின் தலைப்பான “கால்கள்” மிகப் பொருத்தமான தலைப்பு. கண்டிப்பாக நமக்கு கால்கள்(எதிர் கேள்விகள்) இருக்கக்கூடாது. இல்லையென்றால் நாம் தேசவிரோதிகள், நக்சலைட்டுகள் …..என்று முத்திரை குத்தப்படுவோம்.

    அப்படி குத்தப்பட்டாலும் பரவாயில்லை என்று தன்னுடைய கால்களை நன்கு உயரமாக தூக்கி காண்பித்துள்ளார் தோழர் தமிழ்மணி.

    இந்தியை பரப்ப நினைத்தவர்களால் இந்தியை பேசுபவர்களை காப்பாற்ற முடியவில்லை.

    இந்தி பேசினால் இந்தியாவெங்கும் பயணிக்கலாம் என்று கூறினார்கள். ஆம் உண்மைதான்… இந்தி பேசினால் இந்தியாவெங்கும் பயணிக்கலாம் கால்நடையாக.

    இந்தி பேசுபவர்களால் ஆட்சியமைக்கும் இவர்கள், இந்தியை பரப்ப விரும்பும் இவர்கள், இந்தி பேசுபவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு துளியேனும் கவனம் கொள்ளவில்லை.

    இதை அறியாத இந்தி பேசுபவர்களும் சரி , அவர்களை மானசீக தலைவர்களாக ஏற்றுக் கொண்வர்களும் சரி, இவர்களை தூக்கி சுமந்து கொண்டிருக்கிறார்கள். கொரோணா போன்ற மேதைகளால் மட்டுமே இந்த மாதிரியான பாரம் சுமப்பவர்களுக்கு பாடம் புகட்ட முடிகிறது…

    இவர்களைத் தூக்கி சுமப்பதால், தாங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடும் பாதிக்கப்படுகிறது என்பதை சுமப்பவர்கள் புரிந்து கொள்வதுமில்லை, புரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை, புரிந்து கொள்ள விடுவதுமில்லை…

    பெரும்பாலான மத்திய அமைச்சர்கள் இந்தி பேசுபவர்களே! வட இந்தியர்களே! இவர்கள் நினைத்திருந்தால் தென்னிந்தியர்களை வேலை தேடி வட இந்தியா வர செய்திருக்கலாம். அந்த அளவிற்கு வட இந்தியாவை பொருளாதாரத்திலும் வாழ்க்கை தரத்திலும் முன்னேற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. அதை விரும்பவும் இல்லை.

    அதேபோல ஆட்சியாளர்களை மட்டுமே குறை சொல்லிவிட முடியுமா என்றால் இல்லை என்ற பதிலே கிடைக்கிறது.

    கொரனோ போல இன்னும் பல மேதைகள் வரவிருக்கின்றனர்… வரும் ஒவ்வொருவரும் நமக்கு பல படிப்பினைகளை கொடுக்கப் போகின்றனர்.

    ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வது மட்டுமல்லாமல் தனி மனிதனாக நாம் என்ன செய்ய வேண்டும், இந்த சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும், என அனைத்தையும் நாம் புரிந்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. இதிலிருந்து ஒருவரும் தப்பிக்க முடியாது.

    தயாராவோம்….

  51. Jameel Ahmed

    ஜமீல் அஹ்மத்,
    9840906260,
    வாணியம்பாடி,

    வணக்கம்,

    பொறுப்பற்ற ஆசிரியரின் விளக்கமும் மற்ற மாணவர்கள் கை தட்டுவதும், தவறை தட்டிக்கேட்ட மாணவனுக்கு அடி விழுவது பற்றிய கதையை சொல்லி ஆரம்பித்து, தற்போதைய பொறுப்பற்ற ஆட்சியாளரும் மற்றும் குருட்டு நம்பிக்கையில் வாழும் மக்களின் அறியாமையை, இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் நம் சிந்தனையை தூண்டி தற்போதைய சூழ்நிலையை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    காலம்தான் மாறியது தவிர மனிதன் எப்போதுமே சுயநலக்காரன் ஆகவே வாழ்கின்றான் மிகச்சிலர் தவிர.

    இதன் விளைவாகவே ராம் சிங் போன்றோரின் நம்பிக்கையும் அதிகாரத்தில் இருக்கும் சிலர் மீது ஏற்பட காரணமாக அமைகிறது. அது பெரும்பாலும் தன் இன, நிற மற்றும் மத அடிப்படையில் அமைந்திருப்பதும், மற்றும் அதுவே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அவனுள் விதைக்கப்பட்டு இருப்பதையும் உணர்வதில்லை. அதில் குளிர் காய்ந்து வாழ்ந்துவிடலாம் என்ற தவறான குருட்டு நம்பிக்கையின் விளைவால் ஏற்பட்ட துயரங்கள் மற்றும் பெரும் ஏமாற்றம் தவிர கடைசிவரை சாதி அரசியல் பற்றி அறிந்திராத ராம் சிங்கின் அறியாமையும் வேதனைக்குரியதே.

    நம்பி தன் வயிற்றுப் பிழைப்பிற்காக வேலைக்கு வந்தவர்களை பல வருடங்களாக வேலையை வாங்கி கொண்டு அவர்களை கால் நடைபயணமாக வெளியேற்றுவதில் அரசின் பங்கு மட்டுமல்ல. அதில் நம்முடைய பங்கும் உண்டு. காரணம் அவர்கள் மட்டும் வெளியேறவில்லை அவர்களுடன் நம் மனிதாபிமானும் எப்போதோ வெளியேறிவிட்டதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

    கவனிக்க வேண்டியவை,

    இச்சம்பவத்திலும் ராம் சிங்கிற்கு இருந்த ஆணாதிக்கமும் எட்டிப் பார்க்காமல் இல்லை. ஒரு பெண் எவ்வளவுதான் உண்மையான நிலவரத்தை எடுத்துக்கூறியும் ராம்சிங் தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. இது அவனுடைய ஆணாதிக்கமே வெளிப்படுத்துகிறது.

    மற்றும்,

    பெண்ணினத்தை மிகவும் கீழ்தரமாக பேசும் ராம் சிங்கின் மனதிற்கு தன் தலைவர்களின் பார்வையில் தன்னுடைய இடமும் மிகவும் கீழ் தரமாக இருப்பதை ஏன் தெரிவதில்லையோ.

    வரலாற்று மிக்க இச்சம்பவத்தை பகிர்ந்துகொண்ட கதாசிரியர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  52. S PERINBARAJAN

    அக்குஹீலர் சி.பேரின்பராஜன், 9443136267 கரூர்.

    ஜேம்ஸ்பாண்ட் படங்களில்… எழுத்து பிக்சர் போடறதுக்கு முன்னாடி.. ஒரு சின்ன எபிசோட் போடுவாங்க… இந்தப்படம் எதைப்பற்றியது…என்பதை அதிலேயே கோடிட்டு காட்டிவிடுவார்கள். 15 நிமிடமென்றாலும் முழுப்படத்தையும் அந்த முன்கதை விழுங்கி ஏப்பமிடும்…

    அதற்கு நிகரான …அந்த அறிமுக கதை அட்டகாசம்… “கதை சொன்னா … அனுபவிக்கனும்… ஆராயக்கூடாது..” என்பதை கதைக்கு காலிருக்கா…காலிருக்கா… என கேட்டு நன்றாகவே “புரிய” வைக்கிறார் அந்த ஆசிரியர்…

    ஒரு சங்கியே…சங்கிப்போகும் கதையை படிக்கும்போது…அந்த அப்பாவி சங்கிகளுக்காக இதயம் கண்ணீர் சிந்துகிறது… பிறந்த இடத்தில் வாழகதியற்று பிழைப்பு தேடி மொழியறியா ஊருக்கு உழைக்க வந்தவனை… தன் கடினவாழ்வை மறக்க … மதவெறி என்னும் கஞ்சாவை தந்து அவனை வெற்று கர்வத்தோடும், மூட எதிர்பார்ப்போடும்…. தாங்கள் செய்வதெல்லாம் நன்மைக்கே என்று நம்ப வைக்கும் கதைகள் சொல்லி… தனது இன்றைய நிலைக்கு அரசு காரணமல்ல… அந்த “மற்றவர்கள்” தான் காரணம் என் ஆழபதிய வைத்த ஆண்டைகளின் தகிடுதத்த திறமையை கண்டு வியக்கத்தான் வேண்டியிருக்கிறது..

    இத்தகைய கண்மூடித்தனமான தொண்டர்களுக்கு… உண்மை புரிய இப்படி ஒரு நரக சோதனை தேவைப்படுவதை நினைத்தால்.. பாவமாக இருக்கிறது…

    பல இடங்களில் சிறுகதை வடிவிலிருந்து கட்டுரை வடிவுக்கு கதை தடம் புரண்டு இருப்பது ஒரு சிறு குறை…

    கொரொனா பெருந்தொற்று ஊரடங்கையும்… அதில் வெளித்தெரியாத புலம்பெயர் தொழிலாளர்களின் பாடுகளின் இருண்ட பகுதியையும் பதிவு செய்து தனது இலக்கியகடமையை சிறப்பாக நிறைவேற்றியிருக்கிறார் ..தோழர் அய்.தமிழ்மணி… மனம் நிறைந்த வாழ்த்துகள்…

    • தியாகு கண்ணன்

      இந்து ராஷ்டிரத்தின் மீது அசைக்க முடியாது நம்பிக்கை கொண்ட ஒரு புலம் பெயர் தொழிலாளியை மையப்படுத்தி கதையை வடிவமைத்தது சிறப்பு. ராம்சிங்கின் கதாப்பாத்திரத்தின் மூலம் இந்து ராஷ்டிரத்தில் கங்கையும், தேடப்படும் சரஸ்வதி ஆறும் பாயும் என்ற மூடநம்பிக்கை எப்படி தகர்க்கப்படுகிறது என்பதை ஒவ்வொரு நிகழ்வின் வாயிலாக விவரித்திருப்பது சிறப்பு. மோடி என்றால் வளர்ச்சி என்ற மூடநம்பிக்கை இதுபோன்ற அறியாமையில் உழலும் இந்துத்துவ அதரவாளர்களால் ஊதி பெருக்கப்பட்ட மாய பிம்பம் இன்று அவர்களாலேயே உடையது தொடங்கியிருக்கிறது. பிரதமரின் செயல்பாடுகளை அந்த கதாப்பாத்திரம் புகழ்வது போல இகழ்வது சிறந்த விமர்சன உக்தியாக அமைந்துள்ளது. புலம் பெயர் தொழிலாளியின் அனுபவத்தின் வழியே கையாலாகாத அரசு கட்டமைப்பை தோலுரித்து காட்டுகிறது கால்கள் என்ற இந்த சிறுகதை. நாம் வாழும் சமகாலத்தில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை பதிவு செய்து விமர்சிக்கும் இது போன்ற படைப்புகள் நிறைய வெளி வர வேண்டும், அதற்கு அய். தமிழ்மணி போன்ற படைப்பாளிகளை ஊக்குவிப்பது நமது கடமை. தோழர். அய். தமிழ்மணி அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சிறுகதையை பதிவேற்றிய பாரதி புத்தகாலயத்தை சேர்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

      நன்றி.

  53. Tamilselvan

    மா.தமிழ்ச்செல்வன்
    இராசிபுரம்.

    கதைக்கு கால்கள் இருக்கா இல்லையா? என்ற கேள்வியில் இருந்து தொடங்கும் கதையின் கதை இக்காலத்தில் அதுவும் கொரோனா காலத்தில் நடக்கும் அவலங்களை புட்டு புட்டு வைக்கிறது நம்மளோட ராம் சிங்கின் நம்பிக்கை கால்கள். ஒரு சாதாரண குழந்தைகளிடம் சொல்லும் கதை போலவே நமக்கும் நாட்டு நடப்பை எளிமையாக விளக்கியுள்ளார். இன்னும் எத்தனை காலம்தான் ராம்சிங் போல் ஆட்கள் தங்கள் அறியாமையை விடுவார்களோ பாவம். ராம் சிங்கின் கனவுகள் ஏதும் அளிக்காமல் அவனது நம்பிக்கை மட்டும் வலிக்கும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். ஒரு விஜய் படத்தில் வரும் டேக் டைவர்ஷன் டேக் டைவர்ஷன் போல நமக்கு கிடைத்த லாக் டவுன் ஒன்னு ரெண்டு மூணு நாலு அஞ்சு என நீண்டு கொண்டே செல்கிறது . இன்னும் என்னதான் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. போராட்டங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் இருக்கும் அரசு உட்பட அனைவருக்கும், அதனை எழுத்து மூலம் போராடலாம் என்பதை கதாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

  54. ரா. ராம்குமார்

    ரா. ராம்குமார்
    சென்னை.

    கதைகளுக்கு கால்கள் இல்லை என்ற குட்டிக் கதையுடன் ஆரம்பிக்கிறது கதை. அந்த குட்டி கதையின் கருத்து தான் இந்த கால்கள் கதையின் ஒரு மைய பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறது. சிறு வயதிலேயே தவறென படுவதை கேள்வி கேட்கும் மனநிலையை யாரும் வளர்க்க விடுவதில்லை முக்கியமாக பள்ளி கூடங்களில். அறிவை வளர்த்து கூர்மையாக்க வேண்டிய இடத்தில் அது மழுங்கடிக்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் தலைமுறை தவறை உணரவோ அதை எதிர்த்து குரல் கொடுக்கவோ செய்வதில்லை. இதை வைத்து எளிதாக மக்கள் ஏமாற்றப்பட்டு பின் அதை மறக்கடிக்கப்பட்டும் வாழ்கின்றனர். தனக்கான அரசு, தனக்கான ஆட்சி அமைந்து விட்டது என கொண்டாடிய பலரும் இன்று அடிப்படை தேவைக்கு திண்டாடும் நிலை வந்துள்ளது. இப்போதும் கூட அது பலருக்கு புரியாமல் ஆதரவு தெரிவிப்பதும் கண் மூடித்தனமாக அதை பின்பற்றுவதும் வேதனையான ஒன்று. இந்த நாடு அனைத்து மக்களுக்குமானது தானா என்று கேள்வியை இந்த கொரோனா ஊரடங்கு எழுப்புகிறது. வேலை தேடி பல மைல் தூரங்கள் தாண்டி வந்தவர்களை இந்த கடினமான காலத்திலும் கண்டு கொள்ளாமல் இருக்கும் சக மனிதர்களை என்ன சொல்வது. அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய தவறிய அரசை என்ன சொல்வது. வேலை செய்த இடத்திலேயே அவர்களுக்கான தேவையை நிவர்த்தி செய்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் சொந்த ஊர் திரும்ப வழி வகை செய்திருக்க வேண்டும்.‌ இது இரண்டும் செய்யாமல் அவர்களை நெருக்கடிக்கு தள்ளி அவர்களாகவே சொந்த ஊர்களுக்கு திரும்பும் முடிவெடுத்த பிறகும் அவர்களுக்கு தேவையான போக்குவரத்தை ஏற்படுத்தி தரவில்லை. அவர்களாக நடந்து பயணிக்க ஆரம்பித்த பின் அழுத்தங்களால் ரெயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது ஆனால் கட்டணத்துடன். இரண்டு மாதங்கள் வேலை இல்லாமல் உணவு இல்லாமல் நடந்து சொந்த ஊருக்கு திரும்பும் மக்களை ரெயில் பயணத்திற்கு கட்டணம் கட்ட சொல்வது என்ன நியாயம், ஆனால் இது எதுவுமே இந்த அரசுக்கு தெரியாது அல்லது புரியாது. ஆனால் நாம் தொடர்ந்து கை தட்டியும் விளக்கேற்றியும் இந்த அக்கிரமங்களை பாராட்டுவோம். வாழ்க ஜனநாயகம். நடந்த சம்பவங்களையும் அந்த மக்களின் வேதனையும் வெளிப்படுத்துகிறது கதை. இந்த தேசத்தை தாங்கி நிற்கும் கால்கள், ஆனால் அது இப்போது தோய்ந்து போய் விட்டது. இது தான் விழித்து கொள்வதற்கான நேரம் என்பதை எல்லோரும் உணர வேண்டும்.

  55. Neya Puthuraja

    நேயா புதுராஜா
    8300022190

    தோழர் அய்.தமிழ்மணி அவர்களின் “கால்கள்” சிறுகதை தற்போது இந்தியாவையே உலுக்கி கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளிகளின் கண்ணீராலும் செந்நீராலும் நிரம்பிய கதைகளின் களத்தையும் பின்புலத்தையும் சொல்லுகிறது….நமக்கு யார் மூலமாவது நல்ல வாழ்க்கை அமைந்து விடாதா…நம் வாழ்க்கையில் ஒளியேற்ற எந்த தலைமையாவது வந்து விடாதா என்ற ஏக்கத்தோடே தான் ஒவ்வொரு முறையும் நம்பி ஓட்டு போடும் சாமானிய கூட்டம்… ஆனால் எந்த பரமாத்மாவும் காப்பாற்ற கை நீட்டுவதில்லை…மாறாக மிச்ச சொச்ச நிம்மதியையும் பறிக்க மட்டுமே அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள்….ஆனாலும் களப்பணியாளர்களுக்கும் களவாணிகளுக்கும் வித்தியாசம் அவ்வளவு எளிதில் தெரிந்து விடாமல் பார்த்து கொள்ளும் கொள்ளை கும்பல்…அவர்களுக்கு துணை போகும் படித்த திருடர்கள் என்று மொத்த தேசத்தையும் சுருட்டுபவர்களை பார்த்து எதிர்வினை ஆற்ற முடியாமல் ஒவ்வொரு சாமானியனும் புலம்ப மட்டுமே முடியும் அவலம்…

    ராம்சிங் போன்ற அப்பாவிகள் தன் மதம்,தன் சாதி,தங்கள் குடும்பம்,அதை காக்க கடவுளே தன் தலைவன் வடிவில் அவதாரம் எடுத்ததாக கற்பனையில் வாழ்கிறார்கள்… எல்லா நம்பிக்கைகளும் பொய்த்து போகும் விநாடிகளில் அவர்களின் நிலையை என்னவென்று சொல்ல…லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஊர்களுக்கு நடந்தே சென்று சேர்ந்த இல்லை வழியில் மரித்து போன துயர கதைகள்,இந்திய பாகிஸ்தான் பிரிவினை நேரத்து கண்ணீர் கதைகளுக்கு ஒப்பாக பார்க்கப்படுகிறது…. ஆனால் எதுவும் நடக்காதது போல அரசின் போக்கு பெரும் வேதனை…இத்தனை நடத்தும் இன்னும் தங்கள் வாழ்வில் ஒளியேற்ற தன் தலைவன் வருவான் என்றே நம்பும் பெரும் கூட்டம்… இவர்களுக்கு விடிவு எப்போது என்ற கேள்வியோடு….

    பொய்த்து போகாத நம்பிக்கையோடு இன்னும் விடியலை எதிர்நோக்கி காத்திருக்கும் ஒவ்வொரு சாமானியர்களும் தக்க நேரத்தில் நடந்தவைகளை மறந்து போகாமல் இருக்கக்கடவார்களாக…

    கால்கள் கதை தற்போதைய நிதர்சனத்தை அப்படியே பிரதிபலிக்கிறது….எந்த சமரசமும் இல்லாமல் இதை சொன்ன ஆசிரியர் திரு.தமிழ்மணி அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

    நன்றி.

  56. j.santhanam

    ஜெ.சக்திபானு
    சென்னை
    அதிகார வாாக்த்தையும் ராம்சிங் போன்ற குடிமகன் தலைவரை கொண்டாடி குடும்பத்திற்க்கு செய்யும் தவறையும் இது போன்ற சிறுகதைகள் முலம் வெளிக்கொண்டு வந்த எழுத்தாளா் அய் தமிழ்மணி அவா்கள்.ஊரடங்கு காலத்தில் புலம் பெயா்ந்த தொழிலா்களைஅப்படியே வட்டம் போட்டு காட்டியிருக்கும் கால்கள் சிறுகதை
    புலம் பெயா்ந்த மக்களின் நடைபயணம் சொந்தநாட்டில் அவா்களை கை விட்ட அவலம்.
    வெளிஉலகை காண வரும் முன் நாம் வருமுன் காப்பதை தெரிந்து கொள்ள வேண்டும் போல்.ஊரடங்கு சமயத்தில் நெஞ்சு திகைக்க வைக்கும் புலம் பெயா்ந்த தொழிலளா்களின் நிலை.

    அரசு மட்டும் பொறுப்பு என்று இல்லாமால் வேலை வாய்ப்பு தந்து தங்க இடம் தந்து வேலை வாய்ப்பு தந்த பொறுப்பாளா்களும் இதற்கு காரணம் தானே.நம்பி வந்தவா்களை விரட்டி அடித்து கொண்டிருப்பது தொழிலளா்களுக்கு வந்த மிக பெரிய வேதனை.

    பிற மாநிலங்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாமால் கால்நடையாக சென்று உயிரிழந்தனா்.பிழைக்க வந்த மாநிலங்களில் சொந்த ஊருக்கு செல்ல முட்டை முடிச்சுகளுடன் செல்லும் வசதியில்லாத அவா்களுக்கு ரெயில் பஸ் வசதியை விதிமுறைகளுடன் அனுமளித்துவிட வேண்டடும் என்பது தான் அரசுக்கு சழுதாயத்தின் குரல்.

    கொரானப்பீதியால் வாழ்வதாரம் காக்க தினம்தினம் போராடும் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பல்வேறு நிலைக்கு தள்ளபட்டு தவிப்புக்கு ஆளாகி கொடியசழுதாயம் தங்கள் மீது பொழிகின்ற அடிகள் காலத்தின் பெரும் போராட்டமே. இதில் மனிதம் காக்க மனிதாபித்துடன் உதவி செய்த உறவுகளும் வலம் கொண்டு தான் வந்தாா்கள்.சரியான காலத்தில் இந்த சிறுகதையை தந்த அய்.தமிழ்மணி அவா்களுக்கு நன்றி….

  57. V.s.vasantha

    வ.சு.வசந்தா
    9840816840

    கால்கள்_சிறுகதை
    ஆசிரியர்_அய்.தமிழ்மணி

    ஆசிரியருக்கு வணக்கம்
    ஆசிரியர் மூலம் அழகாக கதை கூறிய விதம் பாராட்டுக்குரியது.
    கிணற்று கயிறு , அறுந்து விட்டதும் வகுப்பில் கதை கேட்ட பிள்ளைகளை போன்று நானும் கதையை படித்துக் கொண்டு இருக்கும் போதே, ‘ஐயோ’ என்று கத்தி விட்டேன். (எனக்கு வயது அறுபதை கடந்துவிட்டது)
    மிக அருமை. நன்றாக மனம்விட்டு ரசித்து சிரித்தேன்.

    ‘மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டது ‘போன்று கால்கள் கதையில் தொடரும் ராம் சிங்கின் துயரம்!

    வாழ்க்கை என்னும் படகை எதிர்நீச்சலோடு செலுத்தும் எண்ணற்ற உள்ளங்களின் எதிர்பார்ப்பை ராம் சிங் வாயிலாக ஆசிரியர் காட்டிய விதம் பாராட்டுக்குரியது.

    இன்றைய அரசியல் அவலங்கள் எத்துனண திறமை மிக்கவர் களையும் திறன் அற்றவர்களாக, கைப்பாவையாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் நொந்த உள்ளங்களோடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். பண வெறியும், ஜாதி வெறியும், ஒரு தொற்றுநோயின் பெயரைக் கூறி மக்களை அலைக்கழிக்கும் அவலங்களை கண்கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். மனிதநேயமிக்க அனைவரையும் இத்தகைய வன்முறைகள் துன்பத்தில் அழ்த்திக் கொண்டிருக்கிறது.
    பாரத பிரதமரை தெய்வமாக நம்பிக் கொண்டிருக்கும் ராம் சிங். டீ. ஆத்திக் கொண்டிருந்தவர் பத்து லட்ச ரூபாயில் ஆடை போடுவதையும் ஒரு லட்ச ரூபாயில் காளான் சாப்பிடுவதையும் , தன்மாநில முதல்வர் கோமியம் குடிப்பதையும் கேட்டும் பெருமைப்படும் ஜீவன். பிராமணர்களை போற்றியும் தாழ்த்தப்பட்டவர்களை ஓட ஓட விரட்டியும் துன்புறுத்தும் பாரபட்சம் காட்டும் ஏகாதிபத்திய அரசை பற்றி அறிந்தும் ஆட்டு மந்தை கூட்டமாய் அவர்களையே போற்றி பேசும் ராம் சிங்.

    குரோனா வந்தது; வீட்டுக்குள் அடைக்கப்பட்ட ஆகிவிட்டது கைக்காசு கரைந்து விட்டது. ஊரைவிட்டு சொந்த மண்ணிற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.

    கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். எதுவும் செய்யமுடியாத நிலையில் பிள்ளைகளையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு கால் பாதங்கள் கொப்பளிக்க நடக்கிறான் ராம் சிங். நம் கண்களில் கண்ணீர்.

    ஒரே நாடு !ஒரே தேசம் !எங்கே போனது?
    கால்கள் சிறுகதை மூலம் ஆசிரியர்அய். தமிழ்மணி அவர்கள் எழுச்சியை ஊட்டியுள்ளார். நன்றிகள் பல.

    வ.சு.வசந்தா
    9840816840

  58. E. Bhuvana

    பொதுவாக கதைகளை வாசிக்கும் பொழுது காட்சிகள் கற்பனையில் விரிந்து நம்மை மூழ்கடிக்கும். ஆனால் இக்கதையை வாசிக்கும் போது காட்சிகள் கண்முன் அரங்கேறி நம்மை உண்மையிலேயே மூழ்கடித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ஆட்சி என்று மக்களிடம் கொண்டு சேர்க்க நினைக்கும் ஆளுமைகளுக்கு ஒரே பசி, ஒரே உயிர் என்று அவர்களுக்கான வாழ்வாதாரத்தைக் கொண்டு சேர்க்க மட்டும் தோன்ற மறுக்கிறது.

    பெரும் நிறுவனங்களின் சரிவைக் கண்டு மனம் உருகும் அரசு ஏனோ உருகுலையும் ஏழைகளிடம் பாராமுகம் காட்டுவதை தோலுரித்து காட்டியிருக்கிறார் தோழர் அய். தமிழ்மணி அவர்கள். பசித்தவன் உணவுக்காகவும், புசித்தவன் உயிருக்காவும் ஓடிக்கொண்டிருக்கும் போது கால்களைத் தடுத்து நம்மைச் சுற்றி நடப்பவற்றை நினைவு கூற வைக்கிறது இக்கதை. சொகுசாக செல்வதற்கு போடப்பட்ட தார்சாலைகளில் பாதம் வெடிக்க நடந்து செல்லும் மக்களின் நிலையை எண்ணி மனம் கசிய வைக்கிறது இறுதி வரிகள்.
    சிறப்பான சிறுகதை. வாழ்த்துகள் தோழர்…

    இ. புவனா, ஈஞ்சம்பாக்கம்.
    9789948131

  59. ESAKKIRAJAN P

    கால்கள் : அய்.தமிழ்மணி.

    கதை சொன்ன வரலாறு ஆசிரியரிடம்
    மாணவன் கேட்ட லாஜிக்கான கேள்விக்கு பதிலாக, ” கதைக்கு கால் இருக்கா,கதைக்கு கால் இருக்கா” என ஆசிரியர் கேட்பதுபோல காமெடியாக ஆரம்பித்த “கால்கள்” உண்மையில் மிகவும் சீரியசான டிராக்கில் பயணிப்பது எதிர்பாராத திருப்பம்.

    இளம்வயதில் ஜோதிர்மயியை திருமணம் செய்த ராம்சிங் 27 வயதிற்குள் பல்ராம்சிங்,ஜெய்ராம்சிங்,
    சீதா என்ற மூன்று குழந்தைகளின் அப்பா.

    சொந்த ஊரில் செழிக்காத வாழ்வு தமிழகத்தில் செழிக்கும் என நம்பி உத்திரப்பிரதேசத்திலிருந்து கரும்பு வெட்ட வந்தவன். இந்துத்துவா கொள்கையில் ஈடுபாடு. பிரதமரையும், அவனது சொந்த மாநில முதல்வரையும்
    ராம,லட்சுமணர்களாக ம(து)திப்பவன்.

    இவனைப்போல் இதே கொள்கையையுடைய பல அப்பாவிகளை நம்பித்தான் இந்த அரசியல்வாதிகளின் பிழைப்பு நடக்கிறது போல. கரும்பு வெட்டும் வேலையில்லாவிட்டால் செங்கல் சூளையில் “செங்கலுடன் வேகும்” வேலை.

    தன் மாநில தேர்தலுக்கு நிறைமாத கர்ப்பிணி மனைவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று
    வாக்களித்து திரும்பியதில் அவனுக்கு சொல்லமுடியாத சந்தோஷம்.

    கொரோனா வந்து எவ்வித முன்னறிவிப்புமின்றி பிரதமர் முதல் லாக்டவுண் அறிவித்து, கைதட்ட சொன்னதை செய்து முடித்து, இரண்டாம் லாக்டவுணில் இருளை அகற்ற ஒளியேற்ற சொன்னதையும் முடித்த “பொறுப்பானவன்”.

    இத்தனையும் செய்த ராம்சிங் தன் குடும்பம் சப்பாத்திக்கு சண்டை போட்டதையும்,குழந்தை பாலுக்கு அழுததையும் கவனிக்க நேரமில்லாதது
    நியாயம்தானே?

    வேலையுமில்லாமல் சாப்பிடக் காசும் இல்லாமல் போனபின் கொஞ்சம் ஞானோதயம் வந்து சொந்த ஊருக்கு திரும்பிட நினைத்து மனைவியிடம் தயாராக கூறியது நல்ல முடிவுதான்.

    காசிருந்தவர்கள் லாரியில் போக, காசில்லாதவர்கள் தண்டவாளம் வழியாக நடந்தே ஊருக்கு போக நினைத்து சிலர் சரக்கு ரயில் ஏறி சாக,
    சாப்பிடக் கூட வழியில்லாதவர்கள் தற்கொலை செய்து கொள்ள இப்படி பல காட்சிகள் நிஜத்தில் அரங்கேறின.

    ரயிலில் போகக்கூட காசில்லாத ராம்சிங் போன்றோர் குடும்பத்துடன் நடக்க முடிவுசெய்து தங்களது “கால்களை” மட்டும் நம்பியது ஹைலைட்.
    ராம்சிங் மற்றும் அனைவரும் வெட்டிய கரும்பு இனித்தது ஆனால்
    அவர்களின் வாழ்வு ஏனோ இனிக்கவில்லை. பிரதமர் “நான்காவது லாக்டவுண் ” அறிவிப்பை சத்தமாக வெளியிட்டார்.

    நிகழ்காலக்கதை அருமையான நடை.
    ஆசிரியருக்கு பாராட்டுக்கள் மற்றும்
    வாழ்த்துக்கள்.

    ப.இசக்கிராஜன், சென்னை.
    9003052700

  60. Vidhya.S

    வணக்கம்.
    கால்கள் சிறுகதை தற்போது நிலவும் அசாதாரண சூழலில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் நிலையையும்,அரசியல் தலைவர்களின் ஆட்சி நடத்துகிற விதத்தினையும் கூறுகிறது.

    ஆசிரியர் மாணவர்களுக்கு முதலில் கூறிய மொட்டையாண்டிக் கோயில் கதை சுவாரசியமாக இருந்தது.

    பிறகு வரும் நிகழ்வுகள் நாட்டின் நடப்பு நிகழ்வைக் கதைகளமாக கொண்டுள்ளது.நாட்டில் அனைவரது வாழ்விலும் ஏதேனும் ஒருவிதத்தில் வறுமை,பிரிவு,இழப்பு,துயரம் ஒரேகாலக்கட்டத்தில் நிகழந்துள்ளது.இன்னமும் இந்த ஊரடங்கு ஓய்ந்தபாடில்லை.
    நன்றி.

    சி.வித்யா
    9962573298

  61. கு.சற்குணம்

    கால்கள் :-
    சிறுகதையின் நடை புதிய பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது….

    தற்போதைய நடைமுறை
    (கெரோனா) பிரச்சினையின் நிகழ்வுகளை …
    புதுயுக உத்தியில் வடிவில் நகர்த்தியிருக்கிறார் நண்பர் அய்.தமிழ் மணி…

    “வறுமையிலும் கொடுமை ” “கொடுமையிலும் வறுமை”
    என்பதுபோல
    ஊரு விட்டு ஊரு வந்து ஊரு வந்து வந்து பிழைப்பைத் தேடி வாழ்வது…
    அந்த பிழைப்பிலும்….
    “கொடுமை ” முதலாளிகள் படுத்துவது…

    மத்திய ,மாநில அரசும், அரசியல்வாதிகளும் செய்யும் அவலங்களை அப்பட்டமாக அம்பலப்படுத்திய விதம்அருமை..

    ராம்சிங் கால்கள் பின்னே நமது கால்களும் பின் தொடர்ந்து செல்கிறது..

    பயணத்தில் காட்சிகளும்,கதையில் ஓவியங்களும், வெளிப்படுத்திய விதம் அருமை….
    வாழ்த்துக்களும்….
    நன்றியும்…
    அன்புடன்.
    கு.சற்குணம்.
    8124999399.

  62. K. Padmini

    கு. பத்மினி, சென்னை-59
    9176369481

    ஆசிரியர் தான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மாணவர்களுக்குக் கூறுவதாக ஆரம்பித்து அனைவரும் மிகவும் ரசிக்கும் வகையில் மிகச் சிறப்பாக விளக்கி முடிவில் பகுத்தறிவுடன் கேள்வி கேட்டது மிகவும் அருமை. கதைக்குக் கால் உண்டா என ஆசிரியர் அடித்ததை சொல்லி ‘கால்கள் ‘ பற்றி மிகச் சிறப்பான விளக்கம் தந்து தற்போது நாட்டின் தலையாய நடைமுறை சிக்கல்கள் அதாவது புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்தம் குடும்பங்களும் கால்களை இழந்தவர்கள் போல வாழ்வாதாரத்தை எதிர்கொண்டு போராடும் அவல நிலைமையை ராம்சிங் மற்றும் அவர்தம் குடும்பப் பின்னணியில் மிகத் தத்ரூபமாக விளக்கியுள்ளார் .
    மக்களால் ஏற்பட்ட நம் ஜனநாயக நாட்டில் மக்கள் உண்ண உணவு மற்றும் இருக்க இருப்பிடம் இல்லாமல் பசியால் வாடி தவிக்கும் நிலை கண்டு மனம் குமுறுகிறது.
    ராம் சிங் தன் மனைவியை பேச உரிமையில்லை என அடக்கி ஆண் ஆதிக்கம் செலுத்தியது மற்றும் பசியால் தவித்த மக்களின் நிலைமை யாவும் நம் மகாகவி பாரதியார் மொழிந்த மற்றும் போராடிய ‘பெண் சுதந்திரம் காப்போம்’ மற்றும் ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற எழுச்சிமிகு உணர்வுகள் மனதில் மிகவும் ஆழமாக மேலிடுகிறது.
    ”பசுமையைப் பிழிந்து கருமையாக நீண்டு கிடக்கும் தார் சாலைகளெங்கும் தேசத்தின் வறுமையும் மக்களின் பயமும் சுவடுகளாய் நிரம்பிக் கொண்டிருந்தன’ என்ற வரிகள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியது.
    உழைத்து வாழும் மக்களின் ஆற்றொணாத் துயரங்கள் அவர்களின் கண்களில் கங்கை மற்றும் சரஸ்வதி ஆறுகளாகத் திரண்டதைப் பார்த்து படிப்பவர்கள் மனம் மிகவும் வேதனையுற்று விரைவில் தக்க ஆவண செய்ய வேண்டுமென்ற உணர்வு மேலிடுகிறது.
    மேற்கண்ட சிறுகதையில் நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை, அதாவது கொரானா தொற்றுப் பரவலால் ஏற்பட்ட ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பை தக்க சமயத்தில் மிக அருமையாக வடித்த ஆசிரியர் அய் தமிழ்மணி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  63. ராதிகா

    வணக்கம்,
    பெங்களூரிலிருந்து ராதிகா,
    கால்கள் கதையின் ஆரம்பத்தை கதாசிரியர் தமிழ்மணி அவர்கள் தனது சிறுவயதுடன் ஆரம்பித்தது அருமை.

    புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையையும் அவர்களின் அறியாமையையும் அந்த அறியாமையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் அரசியல்வாதிகளைப் பற்றியும் தெளிவாக விளக்கியுள்ளார். நாட்டில் பலராம் சிங்கள் தன் மனைவியை மட்டுமல்ல பெண் இனத்தையே ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.தென்னிந்தியாவை ஒப்பிடுகையில் வட இந்திய ஆண்கள் மனப்போக்கும் மதவாதிகள் ஆகவும் பெண்ணை மதிக்காதவர்கள் ஆகவும் இருக்கிறார்கள்.அவர்கள் கட்சித் தலைவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குடும்பத்திற்கு கொடுத்தால் குடும்பத்தோடு சேர்ந்து நாடும் முன்னேறும். ஊரடங்கு உத்தர வில் மக்கள் எல்லாம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொழுது ராமர் கோவிலுக்கு அடிக்கல் இடும் நாளன்று கைதட்ட சொன்னதும், தன் கட்சி தொடங்கிய நாளை கொண்டாடும் எண்ணத்தில் விளக்கேற்ற சொன்னதும் எத்தனை மக்களுக்கு புரியும் என்று தெரியவில்லை.

    வறுமையின் விளிம்பில் இருக்கும் மக்களுக்கு பல தன்னார்வ குழுக்கள் உணவு அளித்தாலும் தம் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் உயிரை விட்டாலும் சொந்த ஊரில் உறவுகளுக்கு மத்தியில் விடலாம் என்று வைராக்கியத்தோடு ம் நம்பிக்கையோடும் தன் சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்ற எத்தனை லட்சம் மக்கள்,தெற்கிலிருந்து வடக்காகவும் கிழக்கிலிருந்து மேற்காகவும் எத்தனை எத்தனை கால்கள் நடந்தே சென்றனர்.

    தன் மக்களின் வறுமை நிலையில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலம் செல்வதற்கு கட்டண ரயில் விட்டதும் பின் எதிர்க்கட்சிகள் செலவு ஏற்றதும் ராம் சிங் போன்ற மனிதர்கள் இந்த தருணத்திலாவது இந்த அரசின் போக்கை உணர்வார்களா என்று தெரியவில்லை.

    மனிதநேயம் அற்ற மதவாதத்தையும் பன்னாட்டு நிறுவனங்களையும் ஆதரிக்கும் அரசு.அன்றாடம் உழைப்பையும் அந்த உழைப்பில் இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து வாழ்க்கை நடத்துபவர்களின் நிலையை மட்டுமல்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை கண்முன்னே காட்டிய ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  64. A.Punithavathi

    “கால்கள்” சிறுகதையை முதல்முறை வாசித்தஉடன் மனதில் ஏற்றப்பட்ட கனம் உடனடியாக விமர்சனம் எழுதவிடவில்லை …

    இரண்டாவது முறை வாசித்தபின்பே எழுத முடிந்தது…

    கொரோனாக் கால ஊரடங்கின் போது உலக மக்களனைவருமே ஏதோ ஒரு துன்பத்தினை எதிர்கொண்டுள்ளனர்… வாழ்வாதாரத்தை இழந்த
    எளிய மக்கள் உணவிற்காக
    சக மனிதர்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் …

    இவையனைத்தையும் விட இந்தியாவின் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்தித்த துயரம் வார்த்தைகளால் வடிக்க இயலாது …

    பாரதப்பிரதமரின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பு புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வில் பெரும் துயரை உண்டாக்கியது …

    தங்களது சொந்த மாநிலங்களில் வாழ வழி இன்றி வாழ்வாதாரத்தைத் தேடி புலம் பெயர்ந்து இந்தியா முழுவதும் பரவிக்கிடந்த தொழிலாளர்களின் நிலைமைக்கு காலம் காலமாக அவர்களை ஆட்சி செய்த, வெறும் ஓட்டு எந்திரங்களாக மட்டும் அவர்களைப் பயன்படுத்திக்கொண்ட ஆட்சியாளர்களே பொறுப்பு என்பதையும் அறியாத மக்கள் …

    “கால்கள்” சிறுகதையின் மூலம் ஆட்சியாளர்களைத் தோலுறித்திருப்பதோடு, மக்களின் அறியாமையையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்
    தோழர். தமிழ்மணி….

    “இந்து ராஷ்ட்டிரம் அமைந்தால் பலகோடி செலவில் தேடப்பட்டுக்கொண்டிருக்கும் சரஸ்வதி நதியும் ஓடும்” என்று ராம்சிங் நம்பிக்கொண்டிருந்தான்…
    இந்த இடத்தில் ஆசிரியரின் நக்கல் சிறப்பு …

    தனது அபிமானத்தைப் பெற்ற பிரதமர் செய்யும் அனைத்துச் செயல்களையும் நேர்மறை சிந்தனையோடு ஏற்றுக்கொள்ளும் அப்பாவி ராம்சிங் கதாபாத்திர வடிவமைப்பு அருமை …

    இந்த ராம்சிங்குகள்தானே பிரதமர் சொல்லியதும் கைகளைத் தட்டியவர்களும், தகரத்தைத் தட்டியவர்களும், பாத்திரத்தை உருட்டியவர்களும், விளக்கேற்றியவர்களும் என வாசகர்களை எண்ணவைக்கிறது அந்தக் கதாபாத்திரம் …

    ஜோதிர்மயி தனது கணவனைப் பார்த்துக் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் சாமானிய மக்களின் மனதில் எழும் கேள்விகளே …!

    சிறுகதைக்கு ஸ்ரீரசாவின் ஓவியம் கச்சிதமாகப் பொருந்துகிறது …

    சுடும் தோசைக்கல்லை எடுத்துத் தன் மனைவியை அடிக்கும் போது ராம்சிங் பேசும் வசனம் வலியத் திணிக்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது …

    “தேடப்பட்டுக்கொண்டிருக்கும் சரஸ்வதி நதி அவர்களின் கண்களில்” சரியான உவமை …

    கொரோனாக் கால ஊரடங்கின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த வேதனை, ஆட்சியாளர்களின் சித்து விளையாட்டு என அனைத்தையும் வருங்காலத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் சிறந்த வரலாற்றுப்பதிவு கால்கள் சிறுகதை …

    அ.புனிதவதி
    9994835457

  65. சி.கதிரேசன்

    தற்போதைய நாட்டு நடப்பின் உன்மை கதையை கண் முன் காட்டியுள்ளார் ஆசிரியர்.

    இந்து மதத்தின் பெயரால் ஒடுக்குமுறை உச்சத்தை அடைந்தது கொண்டிருந்த நேரத்தில் வந்த கொரோண மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது ஆட்சியர்கள் மூலமாக.

    குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்பது உயிருடன் இருப்பவர்கள் வாழ்நாள் வரை மறக்காது என்ற அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை தெரிவித்துள்ளீர்கள் நன்றி.

    சி.கதிரேசன், சேலம்.
    9600376905.

  66. Saradha v k

    ” கதைக்குக் கால் இருக்கா?” ஆசிரியர் கேட்ட கேள்வியையும், பிரம்படியையும் நினைவு கூர்ந்து, “ஆனால் நான் சொல்லப் போகும் இந்த கதைக்குக் “கால்கள்” இருக்கிறது.” – என ஆரம்பித்துள்ளது அருமை.

    ” கால்கள்” – சிறுகதை பெயர் பொருத்தம் சிறப்பு!

    எளிமையான நடை!

    யதார்த்த வசனங்கள்!

    இன்றைய நாட்டு நடப்புகளைத்
    தத்ரூபமாகக் காட்சிப் படுத்தும் ஓவியங்கள்!

    ராம்சிங் கதாப்பாத்திரப் படைப்பு அருமை. யதார்த்தமானது !

    கடந்த சில வருடங்களாகக் கடைநிலை மக்களின் மூளை எவ்வாறு சலவை செய்யப்பட்டுள்ளது என்பதற்கு ராம்சிங் உதாரணம்.

    “இந்துராஷ்டிரம் அமைந்ததும் அவனது வாழ்வில் கங்கையாறும்… ஓடுமென்றும் …வாழ்வு இனிக்குமென்றும் நம்பிக் கொண்டிருந்தான்” … இதுபோல் கனவுடன் வாழும் இந்தியர்கள் அனேகம் என்பது உண்மை.

    “மத்தியிலும் நம் ஆட்சி, மாநிலத்திலும் நம்ம ஆட்சி என குதூகலமானான்…… ஆனால் அவன் வாழ்க்கை செங்கல் சூளையில் வெந்து கொண்டிருந்தது.” .. யதார்த்தமான வசனங்கள்.

    வறுமையைச் சுட்டிக்காட்டும் மனைவியிடம் ” போடி பெண் என்கிற ஈனப்பிறவியே…… தீட்டானவள் பேசக் கூடாது” என சப்பாத்தி கல்லை எடுத்து அவள் முதுகில் அடித்தான். …. பெண்கள் இன்னும் அடிமைகளாக நடத்தப்படுவது கண்ணில் நீரை வரவழைக்கிறது.

    ஊடகங்கள் மூலம் பரப்பபடும் பிரதமரின் சாகசங்களை நம்பும் பிரஜைகள் ஏராளம். அவர்களில்
    ஒருவன் நம் ராம்சிங்.

    பிழைப்புக்காகத் தென் மாநிலங்களுக்கு வரும் வட இந்திய தொழிலாளிகளின் கனவுகளை ராம்சிங் மூலம் அழகாக, விரிவாகக் காட்சிப் படுத்துகிறார் ஆசிரியர்.

    “தீவிரவாதிகளை எதிர்த்து நாட்டுக்காக ராணுவ வீரனாய் போராடுகிறார்….. சாவதற்குள்ளாக எப்படியும் பதினைந்து லட்சம் ரூபாயை குடிமக்களின் வங்கி கணக்கில் செலுத்திவிடுவார்” என நம்பும் ராம்சிங்.
    ஊரடங்கு முடிவினை வரவேற்கும் ராம்சிங்.

    பிரதமர் முதல் ஊரடங்கில் கைதட்ட அழைப்பு விடுத்த போதும், இரண்டாம் ஊரடங்கில் விளக்கேற்ற அழைப்பு விடுத்தப் போதும் தவறாமல் பங்கு கொள்ளும் ராம்சிங்.

    ” இன்று எங்கள் கட்சி தொடங்கிய நாள். எப்படி இந்தியாவே விளக்கேற்றியது பார்த்தாயா?” – ராம்சிங் வாய்மூலம் வெளியே வருகிறது உண்மை.

    ஆனால் இந்துத்வ விசுவாசிகள் சொன்ன கற்பனைக் காரணங்கள் எத்தனை எத்தனை?
    எல்லாரும் உண்மையை அறிந்திருந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாத, பேசமுடியாத நிலைமை மக்களுக்கு.

    அன்றாடம் உழைத்து பிழைக்கும் தொழிலாளிகளின், புலம் பெயர்ந்த தொழிலாளிகளின் நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல் மூன்றாம் ஊரடங்கு அறிவிப்பு.

    ” நம் பிரதமர் என்ன செய்வார் . கோரானாவை எதிர்த்து கடுமையாக போராடி போராடி அலுத்து விட்டார்…” – ராம்சிங் போன்ற உழைப்பாளிகளின் நம்பிகைகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் ஆசிரியர்.

    வந்த இடத்தில் வேலை இல்லாமல் சொந்த ஊருக்குப் போக வாகன வசதிகளும் இல்லாமல் குழந்தைக் குட்டிகளுடன் வாட்டும் வெயிலில் உணவு, தண்ணீருக்குத் தவித்து உயிர்விட்ட கால்கள் எத்தனை? எத்தனை?

    “உருகும் தார்ச்சாலைகள் ராம்சிங்கின் குருதியை உறிஞ்ச தங்கள் அசுர நாவுகளை விரித்து வைத்திருந்தன.
    கங்கையாறும் தேடப்படும் சரஸ்வதியாறும் இவர்களின் கண்களில் திரண்டு நிற்க பிரதமர் நான்காவது ஊரடங்கை அறிவிக்க தயாராகிக் கொண்டிருந்தார்” – யதார்த்தமான முடிவு.

    இன்றைய நாட்டு நடப்புகளைப் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் குமுறும் உள்ளங்களின் பிரதிபிம்பம் தோழர்.தமிழ்மணி அவர்களின் “கால்கள்”.

    நன்றி!

    சாரதா வி.கி
    சென்னை.
    9445533666
    9481276751

  67. ச சுபாஷிணி திருச்சி .9842415934

    கால்கள் என்ற சிறுகதை புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய நிலையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
    அவர்கள் இந்த உலகில் எவ்வளவு கஷ்டங்களையும் ‘வேதனைகளையும் அனுபவித்தார்கள் என்பதை தெளிவாக குறிக்கிறது இக்கதை.
    இவர்களின் நிலையை பற்றி கவலைப்படாமல் அரசு எவ்வாறு தன்னுடைய இந்துத்துவ கொள்கைகளை காப்பாற்றுவதில் முனைப்பாக இருக்கிறது என்பதை இக்கதையில் ஆசிரியர் அழகாக கூறுகிறார். இன்றைய காலகட்டத்தை அப்படியே கால்கள் என்ற கதையின் மூலம் அரசியல் சொதப்பல் களையும் பித்தலாட்டங்களை கதையாக நமக்கு அளித்த ஆசிரியருக்கு நன்றி

  68. SathyaRamaraj

    சத்யா ராமராஜ்
    8838570011

    வகுப்பறையில் ஆசிரியர் கதை கூறும் நிகழ்வோடு துவங்கும் கதை சடாரென்று தடம் மாறி கொரோனா காலகட்டத்தில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்துகிறது.

    சமூக அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதனும் தற்போதைய நடப்பை எந்தெந்தக் கோணங்களில் கூர்ந்து நோக்கி விசனப்படுவானோ, அதில் கிஞ்சிற்றும் மாற்றம் இல்லாமல் இந்தக் கதையை நம் முன் கதையாக அல்ல, நிஜமாகவே முன் வைத்திருக்கிறார் கதாசிரியர்.

    எந்த மாநிலமாய் இருந்தால் என்ன? பெண் என்பவள் பிள்ளை பெறவும், பணிவிடை செய்யவும் படைக்கப்பட்ட ஒரு பிண்டம் என்னும் மனப்போக்கு இந்த ஆண்களிடம் மாற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடக்க வேண்டுமோ?என்ற ஆயாசத்தைத் தருகிறது.

    இந்துத்வா என்னும் ஒரு விஷயம் எளிய மனிதர்களின் மனதிலும் விஷம் போல் வேரூன்றிக் கிடப்பதையும், அதனைத் திட்டமிட்டுக் காய் நகர்த்தும் அரசியல் அவலங்களையும் இவர்கள் என்று புரிந்து கொண்டு இதிலிருந்து மீண்டு வருவார்கள்?என்ற ஏக்கம் பெரிதாக உண்டானது.

    தமிழகப் பெண்களின் நிலை ஒருபுறம் குடியால் கேள்விக் குறியாகத் தொக்கி நிற்கிறது.
    வடமாநிலப் பெண்களின் நிலையோ மதம் எனும் போதையில் அமிழ்ந்து போய்ப் பாலுக்கு அழும் குழந்தையின் பசியைப் போக்க முடியாத வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
    இதுவும் கடந்து போகும் என்பது உண்மையானால் அது எப்படி? எப்போது? என்று தெரிந்தால் யாரேனும் சொல்லுங்களேன் பிளீஸ்!

  69. S.Ilavarasi

    சு.இளவரசி.
    சிவகங்கை.
    9487540803.

    எத்தனையோ கதைகளை வாசித்துவிட்டு நம்பமுடியாமல் விழித்த பொழுது கதைகளுக்கு காலில்லை என்று கடந்து போனதுண்டு. ஆனால் இன்று கால்களே கதையாய் கண்முன் விரிந்திருக்கிறது.சொந்த ஊரில் வாழ்வதை சொந்த கால்களோடு ஒப்பிட்ட விதம் சற்று சிந்திக்க வைப்பதாய் இருந்தது.

    ஏதோ ஒன்றிற்கு அடிமையாகி தான்,தன் குடும்பம் என எல்லாவற்றையும் விட தான் அடிமையான அந்த விடயத்தை மேலாக நினைத்து இறுதிவரை அதற்காகவே வாழ்ந்து மடிகிறார்கள் பலர். இப்படியாய் இந்துத்துவா கட்சிகளுக்கு அடிமையாகி அவர்கள் இங்கு செய்யும் எல்லா அராஜகங்களையும் பொருட்படுத்தாமல் அவர்களின் வீர தீர செயல்களை புகழ்ந்து கொண்டே வாழ்ந்து போகின்றனர் பலர்.அப்படி இந்துதுவாவை இறுக பற்றிய, இக்கதையில் வரும் ராம்சிங் பல ராம்சிங்குகளை பிரதிபலித்தார்.தான் சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் இடம்பெயர்ந்த பொழுதே யோசித்திருக்க வேண்டும் இந்த அரசின் கையாலாகாத தனத்தை.ஜோதிர்மயி ராம்சிங்கிற்கு புரியவைக்க முயற்சித்தது போல் தன்னோடு வாழும் இணையருக்கு சொல்லி புரிய வைக்க முயற்சித்து பலரும் தோற்றபோது, கோரோனா என்ற ஒரு நுண்ணுயிர் போதித்து விட்டுப் போயிருக்கிறது ராம்சிங்கை போன்ற பேதைகளுக்கு இந்துத்துவா அரசின் லட்சனத்தை..

    இந்த இந்துத்துவா அரசின் கோர தாண்டவத்தோடு இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார கோரதாண்டவமும் சேர்ந்து மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அப்படியான இத்தருணத்தில் இப்படியான கதை மனதை இனம்புரியாத உணர்ச்சியால் நிரப்புகிறது. நாம் இங்கு எல்லாம் கொண்டிருக்க நம் சக உயிர்கள் இருக்க இடமும்,உண்ண உணவுமின்றி செத்து மடிவதை கண்டு மனம் கனக்கிறது.கோரோனாவே கண்ணீர்விட்டு தான் செல்லும் இவர்களின் நிலைகண்டு.

    எங்கு தேடியும் இரை காணா பறவைகள் ஏமாற்றத்துடன் கூட்டிற்கு திரும்புவது போல ஊர் திரும்புகிறது மக்கள் கூட்டம். ஊர் திரும்ப கூட வழியில்லாத ராம்சிங்கிற்கு,ரயில் ஏறி சென்றிட அரசு செய்த ஏற்பாட்டை எண்ணி மனமகிழ்ந்த ராம் சிங்கிற்கு, இடிமேல் இடியாய் வந்து விழுந்தது ஒரு பேரதிர்ச்சி. ரயில்களில் செல்ல கட்டணம் அளிக்க வேண்டும் என்ற விடயம் மனதை சிதறடித்தது. ஒரு வேளை உணவிற்கே வழியில்லாதவன் எங்கு போவான் ரயில் கட்டணத்திற்கு.இதைக் கூடவா யோசிக்க தவறியது இந்த இந்துத்துவா அரசு.கோடியில் புரண்டு கொண்டிருப்பவனுக்கு கடன் தள்ளுபடி ஆகிறது, தெருக்கோடியில் நிற்கும் மக்களுக்கு ஊர் திரும்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற இந்த பெரும் கொடுமை ராம்சிங்கை கலங்கடித்தது.

    பிரதமர் சுட்ட வடைக்கு பழகிய நாவுகள் உயிர் பெற்றது,இனிமேலும் ஏமாற வேண்டாம் இந்த ஊசிப்போன வடைகளுக்கென்று. ராம்சிங்கின் சிம்மாசனத்தின் ஓட்டை வழியாய் நழுவி கொண்டிருக்கிற பிரதமர். பல ராம்சிங்குகளின் சிம்மாசனத்தில் இருந்தே நீக்கப்பட்டு விட்டார். உயிருக்கு முன்னால் மதமாவது, மண்ணாவது என்று விழித்துவிட்ட மக்களிடம் இந்துத்துவா அரசு தோற்றுவிட்டது.

    இச்சூழலிற்கேற்ற, இன்று அரங்கேறிக் கொண்டிருக்கும் தொடர் சம்பவங்களை மையமாய் கொண்டு கட்டமைக்கப்பட்ட அருமையான சிறுகதையிது.முடமான கால்கள் இன்று சொந்த கால்களை தேடி புறப்பட்டுவிட்டது சொந்த தேசத்திற்கு. தங்கள் கால்களெனும் நம்பிக்கையை தவிர வேறு எந்த நம்பிக்கையுமின்றி நடக்க தொடங்கி இருக்கும் இந்த கால்கள் தூங்கிக் கொண்டிருக்கும் நம் நெஞ்சிலும் எட்டி உதைத்து செல்கின்றன விழிக்க சொல்லி.

    சொந்த ஊரை விட்டு வந்தவன் சொந்த கால்களையிழந்தவன் என்றால்,சொந்த மண்ணிலேயே ஏமாந்துகொண்டிருப்பவன் என்ன ரகமோ?இந்த கால்கள் எழுப்பி போகும் இரத்த சுவடுகளின் அச்சுகள் என் மனதிலும் பதிந்துவிட்டது.சக உயிரின் சங்கடத்தை நேர்த்தியாய் வாசிப்பவரின் உள்ளத்திற்கு கடத்தும் “கால்கள்”சிறுகதையை படைத்த தோழர் அய்.தமிழ்மணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  70. Sasikala

    தமிழ்மணி அவர்கள் கால்கள் என்ற சிறுகதையில் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
    பள்ளியில் ஆசிரியர் கதை கூறுவது போல் தொடங்கி தன் உண்மை கதையை கூறுவது இக்கதையின் சிறப்பம்சமாகும் .‌.கால்கள் இல்லாமல் மக்கள் படும்பாடு வேதனைக்குரியது.
    ராம் சிங் போன்ற எத்தனை தொண்டர்கள் தன் தலைவனை போற்றி, துதித்து ,வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இக்காலத்திலும் அறியாமையால் தலைவர்களின் சொற்களை நம்பி வாழ்கிறார்கள் பிறகு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களைப் பற்றி புரிந்து கொள்கிறார்கள் இது வருத்தமான விஷயமாகும் ‌.
    ராம் சிங் போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக தன் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு புலம் பெயர்ந்து கிடைக்கும் வேலை செய்துகொண்டு இருக்கிறாகள்‌. பெண்கள் சொல்வதை கேட்டு எப்படி நடந்து கொள்வது என்பதால் அவர்கள் வாழ்வில் துன்பத்தை அடைந்தார்கள்.
    பின்னர் ஊரடங்கு காலத்தில் அவர்கள் அடைந்த துன்பங்கள் மிகக் கொடுமையானது .இறுதியில் ராம் சிங் செய்த தவறுகளை உணர்ந்து தன் குடும்பத்துடன் சொந்த மாநிலத்திற்கு நடந்து செல்வது என்பது எவ்வளவு கொடுமையானது. அவரின் மனைவி,இருமகன்கள், மகள் துன்பங்கள் நம்மையும் கலங்க வைக்கிறது. முத்தாய்ப்பாய் இக்கதையில் ஆசிரியர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றி கூறியுள்ளது நிதர்சனமான உண்மையாகும்.
    சசிகலா ஸ்ரீரங்கம்
    9789538193

  71. Sasikala

    தமிழ்மணி அவர்கள் கால்கள் என்ற சிறுகதையில் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார்.
    பள்ளியில் ஆசிரியர் கதை கூறுவது போல் தொடங்கி தன் உண்மை கதையை கூறுவது இக்கதையின் சிறப்பம்சமாகும் .‌.கால்கள் இல்லாமல் மக்கள் படும்பாடு வேதனைக்குரியது.
    ராம் சிங் போன்ற எத்தனை தொண்டர்கள் தன் தலைவனை போற்றி, துதித்து ,வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இக்காலத்திலும் அறியாமையால் தலைவர்களின் சொற்களை நம்பி வாழ்கிறார்கள் பிறகு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களைப் பற்றி புரிந்து கொள்கிறார்கள் இது வருத்தமான விஷயமாகும் ‌.
    ராம் சிங் போன்றவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக தன் சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு புலம் பெயர்ந்து கிடைக்கும் வேலை செய்துகொண்டு இருக்கிறாகள்‌. பெண்கள் சொல்வதை கேட்டு எப்படி நடந்து கொள்வது என்பதால் அவர்கள் வாழ்வில் துன்பத்தை அடைந்தார்கள்.
    பின்னர் ஊரடங்கு காலத்தில் அவர்கள் அடைந்த துன்பங்கள் மிகக் கொடுமையானது .இறுதியில் ராம் சிங் செய்த தவறுகளை உணர்ந்து தன் குடும்பத்துடன் சொந்த மாநிலத்திற்கு நடந்து செல்வது என்பது எவ்வளவு கொடுமையானது. அவரின் மனைவி,இருமகன்கள், மகள் துன்பங்கள் நம்மையும் கலங்க வைக்கிறது. முத்தாய்ப்பாய் இக்கதையில் ஆசிரியர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை பற்றி கூறியுள்ளது நிதர்சனமான உண்மையாகும்.
    சசிகலா ஸ்ரீரங்கம்
    9789538193

  72. Jayanthi Johnson

    கால்கள்

    கால்களுக்கு துணைக்கால் தேவை. ஆனால் இந்த கால்கள் துணையிழந்து கல்களாய் மாறிவிட்ட அரசை அம்பலப்படுத்துகிறது.
    கால்கள் – ஆம், சொந்த ஊரில் பிழைக்க வழியில்லா மக்கள் கால்களை இழந்தவர்களே.

    நம் மக்கள் மத்தியில் ஆளும் வர்க்கத்தை விமர்சிப்பதும் , எதிர்கட்சி ஆளும்கட்சியைக் குறைகூறுவதும், இந்த கொரோனா நேரத்திலும் விவாத மேடை அமைத்து, கொரனாவை விவாதிக்கும் டிவி சேனல்களும், பீதியை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் சமூக வலைதளங்களும் தங்கள் பணிகளை செவ்வனே ஆற்றின.

    பலரும் அறியா பக்கமாக இந்த கூலித்தொழிலாளர்களின் நிலை, வார்த்தைகளில் வடிக்க இயலா ஒன்றை கதையாக, படிப்போர் மனதை உலுக்கும் இந்த ஒரு குடும்பம்போல் எத்தனையோ என மனதை பிசைகிறது. சொந்த ஊரில் இருக்கும் நம்முடைய நிலையே ஊசலாட்டத்தில். புலம்பெயர் தொழிலாளியின் மனம்- வாழ்ந்தாலும், இறந்தாலும் தன் குடும்ப உறவு இருக்கும் இடத்தில் நிகழவே மனம் துடிக்கும். அநாதையாய் போய்விட போகிறோமோ என்ற ஐயமே அவனை நடைபயணியாய் மாற்றியது. அடுத்தது, உணவுத் தேவை. அதனை நிவர்த்தி செய்யக்கூட இந்த அரசு தவறிவிட்டது. ரேஷன்கார்டு இல்லாத புலம்பெயர் தொழிலாளர்களை நினைவில்கொள்ளவில்லை.

    கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்ய இந்தக்கிருமிக் காலத்தில், அதுவும் பொருளாதாரம் பின்னோக்கி செல்லும் நேரத்தில் முடிகிறது.

    நாட்டை வல்லரசாக்கும்போது ஏழைகள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என அரசு நினைத்து அனைத்தையும் செயல்படுத்தி வருகிறதோ என்ற எண்ணத்தை தந்தது.
    கீழ்த்தட்டு விளிம்புநிலை மக்களை நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறுவதைவிட கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

    ராம்சிங் போன்று இந்துத்வா பேசும் வடமாநில தொழிலாளர்கள் பலரும் அறிந்துகொள்ளா வண்ணம் மூளைச்சலவை செய்யப்பட்டு, விட்டால் தெய்வமாக வழிபடும் நிலைக்கு தங்களை உயர்த்தி வைத்திருக்கும் அரசியல் தலைமைகள்.

    இம்மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாவண்ணம் பத்திரமாக பார்த்து கொள்கின்றனர். தன்நிலைக்கு அரசும் ஒரு காரணம் என்பதை ராம்சிங் போல பலர் பசி பட்டினியால் வாடினாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.

    அரசியல் அவலங்களை தோலுரித்து, தலையில் குட்டி சொல்லும் கதைப்பாணி.

    இந்த சூழலில் மிக அவசியமான, அனைவரையும் சென்றடைய வேண்டிய கதை. இதை எழுதவும் மிகத் துணிச்சல் வேண்டும்.

    கதையின் துவக்கம் மிக சுவாரசியமாய் கதையில் மூழ்கி போய் படித்து, ரசித்து, சிரித்து கதைக்கு கால் இருக்கான்னு பார்க்க கூடாது என்பதை படித்துவிட்டு, ராம்சிங்கில் கரைந்து, கசிந்து, கனன்று போனேன்.

    இக்கதை அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற ஆவலோடு பகிர்கிறேன் என் நட்புகளுக்கு.

    ஜெயந்தி ஜான்சன்
    தஞ்சாவூர்
    8220488564

  73. Shamshath

    ஷம்ஷாத்,சென்னை,
    9941108443.

    ஐ. தமிழ் மணி அவர்களின்
    “கால்கள்” சிறுகதை அரசியல்
    கட்சிகளை நம்பி அந்த கட்சி காப்பாற்றும் இந்த கட்சி காப்பாற்றும் என அரியாமையில் இருக்கும் மக்களின் மனநிலையை துள்ளியமாக விளக்குகிறது.

    எந்ந கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நம் கை கால்கள் நன்றாக இருந்து உழைத்தால் மட்டுமே வயிறு நிரம்பும் என்பதை அறியா மனிதர்கள் ஏறாளம் அதை போல ராம்சிங்
    இந்துராஸ்டிரா ஆட்சி அமைந்து
    சாமியார்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மாறும் என்று முட்டாள் தனமான நினைவில் வாழ்ந்துள்ளான்.

    பல மக்கள் தன் வாழ்வாதரத்தை இழந்து இடம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு போகும் போது அவர்கள் அனுபவித்த கோடுமைகளையும் பசியால் இறந்தவர்களையும் இரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய போது இறந்த வர்களையும் பசி கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களையும் பற்றி தினம் தினம் அறிந்து வேதனையில் இருந்தேன்.

    அவர்களுக்கு நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே
    என்று வருத்தத்துடன் இருக்கும்போது
    ராம்சிங்கின் கதையை
    படித்ததும் இப்படிபட்ட மக்கள் தன் மதத்தையும் மத தலைவர்களையும் எந்த அளவுக்கு நம்பி இருக்கிறார்கள் என்பது புரிந்தது.

    அவர்களின் வாழ்க்கை சூழலையும் அவர்களின் தினசரி வீட்டில் நிலவும் சம்பவங்களையும் குழந்தைகளின் பசியின் சூழலையும் மிக தெளிவாக எடுத்து கூறி இருக்கிறார் எழுத்தாளர்.

    கால்கள் நடந்து நடந்து கால்கள் தேயும் நிலைதான் இப்போதுள்ள நிலை அரசு
    கொரானாவால் மக்கள் இறப்பதை கணக்கெடுக்கிறது
    பசியால் மக்கள் இறப்பதை கண்டுக்கொள்ள வில்லை,
    இடம் பெயர் தொழிலாளர்களுக்கு வாகண வசதி செய்து கொடுக்கவும் தயாக இல்லை, கொரானாவல் இறந்தால் தான் இறப்பா மற்ற இறப்புகள், தற்கொலைகள் கணக்கில்லையா?

    ஏழைகளுக்கு இந்த நாட்டில் வாழ இடமில்லை என்பதை
    எடுத்துரைக்கும் அரசும் அவர்களின் செயலகளும் மிகவும் கண்டனத்துக்கு உரியது. மத்தியிலும் மாநிலத்திலும் இந்துத்துவா ஆட்சி
    ஆனால் மக்களின் வயிறு பசியால் எரிகிறது உடல் தார் சாலையில் வெயிலில் நடந்து
    கால்கள் வெடிக்கிறது
    “நல்ல ஆட்சி போற்ற தக்க ஆட்சி நிலவுகிறது.”

    தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார்கள் இங்கு ஒரு மனிதன் அல்ல பல மக்கள் தன் வாழ்வாதரத்தை இழந்து உண்ண உணவின்றி வாடுகிறார்கள் என்று மாறும்
    இந்நிலை என்று எதிர்ப்பார்பில் வாழ்கிறோம்.

    கால்கள் – சிறுகதை ராம்சிங் போன்ற ஏனைய மக்கள் வாடுகிறார்கள் என்பதையும் கதை மூலம் காட்சி படுத்தி அரசின் கண்மூடிதனமான போக்கையும் விளங்கும் விதத்தில் அமைந்தது கதை
    அனைவருக்கும் புரியம்படி
    எளிய நடையில் எழுதியுள்ளார் ஆசிரியர் ஐ.தமிழ்மணி அவர்கள் வாழ்த்துகள்.

  74. Krishnaveni T

    Cumbum Krishna Veni:
    ரா.கிருஷ்ணவேணி
    தேனி மாவட்டம்,
    கம்பம்.

    கதாசிரியர் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தன் பள்ளி அனுபவமாக, வரலாறு ஆசிரியர் வகுப்பில் ஓர் கதை சொல்ல,
    அதற்க்கு மாணவனாக இருந்த கதாசிரியர் ஏடாகூடமாக ஒரு கேள்வி கேட்க அதற்கு வரலாற்றாசிரியர் கதைக்கு கால்கள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்புவதாகவும், அதற்கு கதாசிரியர் கதைக்கு கால் இல்லை தான் என்று வகுப்பாசிரியருக்குபதில் கூறிவிட்டு,
    ஆனால் ,
    மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து வந்தவர்கள் படும் துயர சம்பவங்களையும் அவர்களின் கட்சி மோகத்தையும்,கொரோணா நோய்த்தொற்று காலத்தின் போது மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகளையும் அதற்குப் பின்னாலுள்ள அரசியல்வாதிகளின் அரசியல் பின்னணிகளையும் மையமாக வைத்து நான் கூறப்போகும் கதைக்கு கால்கள் இருக்கிறது என்று முதற்பகுதியில் கதையை அமைத்து தொடங்குகிறார் ஆசிரியர்.

    தன்சொந்த மாநிலத்திலேயே வாழ்வதற்கான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தித்தராத அரசியல் தலைவர்களுக்காகவும், வேற்று மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி சென்று கொரோனா நோய் பரவுதலால் ஊரடங்கு தடை ஏற்பட்டு உண்ண உணவில்லாமல், பச்ச குழந்தைக்கு பால் வாங்க கூட பணம் இல்லாத போதும், தனக்கு உதவ முன்வராத, ஏறெடுத்து கூட பார்க்காமல் சொகுசு பங்களாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் முகத்தைக் கூடப் பார்க்காத,
    தூய்மையான மனதோடு நாட்டை பாதுகாக்க தெரியாத நாட்டை களவரப்படுத்தி தினமும் அச்சத்தை விதைத்துக்கொண்டிருக்கும் யாரோ ஒரு அரசியல் அயோக்கிய தலைவருக்காகவும்,
    கையில் பணமே இல்லாதபோது தன் சொந்த மாநிலத்திற்கு குடும்பத்தோடு திரும்பிச் செல்ல ஒரு ரயில் கட்டணத்தை கூட இலவசமாக வழங்குவதற்கு கூட முன்வராமல் பல லட்சம் மக்களை ஈவு, இரக்கம் இல்லாமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவனுக்காகவும்,
    ஆட்சித் தலைவர், பிரதமர் முதலமைச்சர் என்பவர்கள் நல்லவனா? கெட்டவனா? அவன் நாட்டிற்கு நல்லது செய்கிறானா? கெட்டது செய்கிறானா? என்று பகுத்தறிந்து முடிவெடுக்கத் தெரியாமல் பருவ வயதில் இருந்து ஏதோ ஒரு கட்சியை தனது கட்சியாக தூக்கிப் பிடித்துக்கொண்டு தன் குடும்பத்தில் சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தாலும் ஒரு சக உயிராகக் கூட மதிக்கத் தெரியாத அரசியல் தலைவர்களை தன் உலகமாக கொண்டு,
    கதையில் கூறியதுபோல் நம் வாழ்வில் கங்கையாரும், சரஸ்வதியாரும் இந்த அரசியல் தலைவர்களெல்லாம் ஓடச் செய்து விடுவார்கள் என்றும், தன் கட்சி தலைவர் ஆட்சிக்கு வந்தால் நம் கஷ்டத்தை எல்லாம் தீர்த்து விடுவார் என்றும் குருட்டு நம்பிக்கையோடு கட்சி கட்சி என்று அடிமைகளாக திரியும் முட்டாள்தனமான இன்றைய சமூக மக்களின் ஏமாளித்தனத்தை ஹிந்தி மொழி பேசும் உத்திரப் பிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்புக்காக வந்த ராம்சிங் என்ற கதாபாத்திரத்தின் வழியாக தோலுரித்து காட்டியிருக்கிறார்.

    பால் ராம்சிங், ஜெய் ராம் சிங் சீதா என்ற மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் துயரத்தில் வாழும் ராம்சிங்கின் மனைவி ஜோதிர்மயி என்ற கதாபாத்திரம் தன் கணவனிடம் கேட்க்கும், கனல் பறக்கும் கேள்விகள் கதையின் இடையிடையே வந்தாலும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    ஊர் விட்டு ஊரு, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு என்று வாழ்க்கைக்கான இடங்களை தேடி வந்தவர்கள் ஏராளமானபேர். ஆனாலும் அவர்கள் காலிழந்த நொண்டிமனிதர்களுக்கு சமம்தான். வந்த இடங்களில் சில மனிதர்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கால்களாக கிடைத்திருக்கிறார்கள் என்ற வரிகள் என்னை கவர்ந்த உண்மையான அர்த்தமுள்ள வரிகள்.
    கொரோனா தொற்று காலத்தின்போது அடிக்கடி கை கழுவுதலில் ஆரம்பித்து கசப்பு மருந்து கொடுக்கிறது, மஞ்சள் தண்ணீர் தெளிப்பு, வேப்பங்கொழை கட்டுதல், நோய் வந்தவர்களை தனிமைப்படுத்துதல், லாரிகளில் பயணம் செய்பவர்கள். நோய் தொற்றை சாக்காக பயன்படுத்தி முஸ்லிம்களை மதவெறி பிடித்து தாக்கும் பிரதமரின் உத்திகள், போக்குவரத்து இல்லாமல் கால்நடையாக பல மைல்கள் நடந்து நடைப்பயணத்தின்போது இறந்தவர்கள், ஒரு நாட்டின் பிரதமர் என்பவர்தன்னையே கரைத்துக் கொண்டு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்தியை போல் இல்லாவிட்டாலும்கொரானா கிருமிகள் விளக்கு வெளிச்சத்தில் இறந்துவிடும் என்று அனைத்து மக்களையும் மடைமாற்றி முட்டாளாக்கிவிட்டு தன் கட்சி தொடங்கிய நாளை, இரவில் மெழுகுவர்த்தியும், வானவேடிக்கையும், விளக்கையும் ஏற்றி கொண்டாடிய மாண்புமிகு பிரதமரின் மறைமுக ரகசியத்தை கதாசிரியர் இக்கதையில் வெளிச்சம் போட்டு காட்டியதோடு,
    ஒரே நாடு ஒரே நாடு என்று அனைத்து அட்டூழியங்களையும் செய்துவரும் பெருமகனார் திரு பிரதமர் அவர்களின் முட்டாள்தனமான செயல்களை நையாண்டி யோடும், புனைவுகளோடும் புட்டு,புட்டு வைத்த விதம் அருமை.

    அனைத்தையும தனியார் கையில் கொடுத்துவிட்டு, மத்திய அரசு கோயில்களை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள துடிக்கிறது ஏன்? ஆட்சிக்கு வந்ததிலிருந்து கோவில், சாமி, மதம் என்று இந்திராஷ்டிரத்தை ம

    மட்டும் தூக்கிப்பிடித்துக் கொண்டு, நாடும் , நாட்டு மக்களும் எப்படி போனால் என்ன? தான் மட்டும் நாடு,நாடாக சுற்றிக்கொண்டு இருந்தால் போதும். ஜாதி மதம் என்ற பெயரில் நாட்டை மதக்களவர நாடாக மாற்றும்
    பெருமகனார் பிரதமர் அவர்களின் வண்டவாளங்களை உரக்கச் சொல்லி இருக்கிறார்.

    குஜராத் மக்களை ஆட்சியாளர்களின் வசதிக்கேற்ப அழித்துவிட்டு வன்முறையும் ,ஆயுதமும் எதற்க்கும் தீர்வு இல்லை என்று சித்தாந்தம் பேசிக்கொண்டு இருக்கும் ஒருவரை பிரதமராக கொண்ட நாட்டில் இப்படிப்பட்ட மனிதர்களோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது வெட்கப்பட்டுக் கொள்வதுதான் மிச்சமாக இருக்கிறது.

    காலங்காலமாக ஒவ்வொரு பிரச்சனையையும் மடை மாற்றி திசைதிருப்பி கொண்டவர்கள்தானே நம்ஆட்சித்தலைவர்களாக இருக்கிறார்கள். கொரோனாவைரசை விட கொடுமையான, முட்டாள்தனமாக சிந்திக்கின்ற ஆட்சித் தலைவர்களிடம் இந்த நாடும், நாட்டு மக்களும் சிக்கிக்கொண்டு பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறதே என்று என்னுள் சிந்திக்கச் செய்திருக்கிறது இச்சிறு கதை.

    மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்தவர்களின் கண்ணீர் மட்டும் கதைசொல்லும் காலம்போய் அவர்களது குருதி அணுக்களும் கதைசொல்லும் அளவுக்கு கங்கையாரும் சரஸ்வதியாரும் இடம்பெயர்ந்தவர்களின் கண்களில் கண்ணீராய் ஓட வெப்பத்தில் உருகும் தார்ச்சாலையில் எவரையும் நம்பாமல் தன் கால்களை மட்டும் நம்பி அவர்கள் கால்கள் நடை போட்டன. என்று கொரானாநோயின் பாதிப்புக்காலத்தின் போது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து சம்பவங்களையும் வாசிப்போரது கண்களிலும் கண்ணீர் வரவழைக்கும் நிகழ்வாக, இந்த உண்மைக் கதைக்கு உண்மையிலேயே இ “கால்கள்” உள்ளது என்று கால்கள் என்ற படைப்பில் ஆழ்ந்த கருத்துக்களோடும், துணிச்சலோடும் கண்முன்னே விரிய செய்த தமிழ்மணி சார் அவர்களுக்கு நன்றிகள் பல.🙏💐
    சமூக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் தாங்களின் எழுத்துப் பணி மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.

  75. krishnaveni R

    Cumbum Krishna Veni:
    ரா.கிருஷ்ணவேணி
    தேனி மாவட்டம்,
    கம்பம்.

    கதாசிரியர் ஆறாம் வகுப்பு படிக்கும்போது தன் பள்ளி அனுபவமாக, வரலாறு ஆசிரியர் வகுப்பில் ஓர் கதை சொல்ல,
    அதற்க்கு மாணவனாக இருந்த கதாசிரியர் ஏடாகூடமாக ஒரு கேள்வி கேட்க அதற்கு வரலாற்றாசிரியர் கதைக்கு கால்கள் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்புவதாகவும், அதற்கு கதாசிரியர் கதைக்கு கால் இல்லை தான் என்று வகுப்பாசிரியருக்குபதில் கூறிவிட்டு,
    ஆனால் ,
    மாநிலம் விட்டு இடம் பெயர்ந்து வந்தவர்கள் படும் துயர சம்பவங்களையும் அவர்களின் கட்சி மோகத்தையும்,கொரோணா நோய்த்தொற்று காலத்தின் போது மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகளையும் அதற்குப் பின்னாலுள்ள அரசியல்வாதிகளின் அரசியல் பின்னணிகளையும் மையமாக வைத்து நான் கூறப்போகும் கதைக்கு கால்கள் இருக்கிறது என்று முதற்பகுதியில் கதையை அமைத்து தொடங்குகிறார் ஆசிரியர்.

    தன்சொந்த மாநிலத்திலேயே வாழ்வதற்கான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தித்தராத அரசியல் தலைவர்களுக்காகவும், வேற்று மாநிலங்களுக்கு பிழைப்புத் தேடி சென்று கொரோனா நோய் பரவுதலால் ஊரடங்கு தடை ஏற்பட்டு உண்ண உணவில்லாமல், பச்ச குழந்தைக்கு பால் வாங்க கூட பணம் இல்லாத போதும், தனக்கு உதவ முன்வராத, ஏறெடுத்து கூட பார்க்காமல் சொகுசு பங்களாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் நம் முகத்தைக் கூடப் பார்க்காத,
    தூய்மையான மனதோடு நாட்டை பாதுகாக்க தெரியாத நாட்டை களவரப்படுத்தி தினமும் அச்சத்தை விதைத்துக்கொண்டிருக்கும் யாரோ ஒரு அரசியல் அயோக்கிய தலைவருக்காகவும்,
    கையில் பணமே இல்லாதபோது தன் சொந்த மாநிலத்திற்கு குடும்பத்தோடு திரும்பிச் செல்ல ஒரு ரயில் கட்டணத்தை கூட இலவசமாக வழங்குவதற்கு கூட முன்வராமல் பல லட்சம் மக்களை ஈவு, இரக்கம் இல்லாமல் தவிக்க வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் தலைவனுக்காகவும்,
    ஆட்சித் தலைவர், பிரதமர் முதலமைச்சர் என்பவர்கள் நல்லவனா? கெட்டவனா? அவன் நாட்டிற்கு நல்லது செய்கிறானா? கெட்டது செய்கிறானா? என்று பகுத்தறிந்து முடிவெடுக்கத் தெரியாமல் பருவ வயதில் இருந்து ஏதோ ஒரு கட்சியை தனது கட்சியாக தூக்கிப் பிடித்துக்கொண்டு தன் குடும்பத்தில் சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தாலும் ஒரு சக உயிராகக் கூட மதிக்கத் தெரியாத அரசியல் தலைவர்களை தன் உலகமாக கொண்டு,
    கதையில் கூறியதுபோல் நம் வாழ்வில் கங்கையாரும், சரஸ்வதியாரும் இந்த அரசியல் தலைவர்களெல்லாம் ஓடச் செய்து விடுவார்கள் என்றும், தன் கட்சி தலைவர் ஆட்சிக்கு வந்தால் நம் கஷ்டத்தை எல்லாம் தீர்த்து விடுவார் என்றும் குருட்டு நம்பிக்கையோடு கட்சி கட்சி என்று அடிமைகளாக திரியும் முட்டாள்தனமான இன்றைய சமூக மக்களின் ஏமாளித்தனத்தை ஹிந்தி மொழி பேசும் உத்திரப் பிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு பிழைப்புக்காக வந்த ராம்சிங் என்ற கதாபாத்திரத்தின் வழியாக தோலுரித்து காட்டியிருக்கிறார்.

    பால் ராம்சிங், ஜெய் ராம் சிங் சீதா என்ற மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் துயரத்தில் வாழும் ராம்சிங்கின் மனைவி ஜோதிர்மயி என்ற கதாபாத்திரம் தன் கணவனிடம் கேட்க்கும், கனல் பறக்கும் கேள்விகள் கதையின் இடையிடையே வந்தாலும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    ஊர் விட்டு ஊரு, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு என்று வாழ்க்கைக்கான இடங்களை தேடி வந்தவர்கள் ஏராளமானபேர். ஆனாலும் அவர்கள் காலிழந்த நொண்டிமனிதர்களுக்கு சமம்தான். வந்த இடங்களில் சில மனிதர்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் கால்களாக கிடைத்திருக்கிறார்கள் என்ற வரிகள் என்னை கவர்ந்த உண்மையான அர்த்தமுள்ள வரிகள்.
    கொரோனா தொற்று காலத்தின்போது அடிக்கடி கை கழுவுதலில் ஆரம்பித்து கசப்பு மருந்து கொடுக்கிறது, மஞ்சள் தண்ணீர் தெளிப்பு, வேப்பங்கொழை கட்டுதல், நோய் வந்தவர்களை தனிமைப்படுத்துதல், லாரிகளில் பயணம் செய்பவர்கள். நோய் தொற்றை சாக்காக பயன்படுத்தி முஸ்லிம்களை மதவெறி பிடித்து தாக்கும் பிரதமரின் உத்திகள், போக்குவரத்து இல்லாமல் கால்நடையாக பல மைல்கள் நடந்து நடைப்பயணத்தின்போது இறந்தவர்கள், ஒரு நாட்டின் பிரதமர் என்பவர்தன்னையே கரைத்துக் கொண்டு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்தியை போல் இல்லாவிட்டாலும்கொரானா கிருமிகள் விளக்கு வெளிச்சத்தில் இறந்துவிடும் என்று அனைத்து மக்களையும் மடைமாற்றி முட்டாளாக்கிவிட்டு தன் கட்சி தொடங்கிய நாளை, இரவில் மெழுகுவர்த்தியும், வானவேடிக்கையும், விளக்கையும் ஏற்றி கொண்டாடிய மாண்புமிகு பிரதமரின் மறைமுக ரகசியத்தை கதாசிரியர் இக்கதையில் வெளிச்சம் போட்டு காட்டியதோடு,
    ஒரே நாடு ஒரே நாடு என்று அனைத்து அட்டூழியங்களையும் செய்துவரும் பெருமகனார் திரு பிரதமர் அவர்களின் முட்டாள்தனமான செயல்களை நையாண்டி யோடும், புனைவுகளோடும் புட்டு,புட்டு வைத்த விதம் அருமை.

    அனைத்தையும தனியார் கையில் கொடுத்துவிட்டு, மத்திய அரசு கோயில்களை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள துடிக்கிறது ஏன்? ஆட்சிக்கு வந்ததிலிருந்து கோவில், சாமி, மதம் என்று இந்திராஷ்டிரத்தை ம

    மட்டும் தூக்கிப்பிடித்துக் கொண்டு, நாடும் , நாட்டு மக்களும் எப்படி போனால் என்ன? தான் மட்டும் நாடு,நாடாக சுற்றிக்கொண்டு இருந்தால் போதும். ஜாதி மதம் என்ற பெயரில் நாட்டை மதக்களவர நாடாக மாற்றும்
    பெருமகனார் பிரதமர் அவர்களின் வண்டவாளங்களை உரக்கச் சொல்லி இருக்கிறார்.

    குஜராத் மக்களை ஆட்சியாளர்களின் வசதிக்கேற்ப அழித்துவிட்டு வன்முறையும் ,ஆயுதமும் எதற்க்கும் தீர்வு இல்லை என்று சித்தாந்தம் பேசிக்கொண்டு இருக்கும் ஒருவரை பிரதமராக கொண்ட நாட்டில் இப்படிப்பட்ட மனிதர்களோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனும்போது வெட்கப்பட்டுக் கொள்வதுதான் மிச்சமாக இருக்கிறது.

    காலங்காலமாக ஒவ்வொரு பிரச்சனையையும் மடை மாற்றி திசைதிருப்பி கொண்டவர்கள்தானே நம்ஆட்சித்தலைவர்களாக இருக்கிறார்கள். கொரோனாவைரசை விட கொடுமையான, முட்டாள்தனமாக சிந்திக்கின்ற ஆட்சித் தலைவர்களிடம் இந்த நாடும், நாட்டு மக்களும் சிக்கிக்கொண்டு பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறதே என்று என்னுள் சிந்திக்கச் செய்திருக்கிறது இச்சிறு கதை.

    மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்தவர்களின் கண்ணீர் மட்டும் கதைசொல்லும் காலம்போய் அவர்களது குருதி அணுக்களும் கதைசொல்லும் அளவுக்கு கங்கையாரும் சரஸ்வதியாரும் இடம்பெயர்ந்தவர்களின் கண்களில் கண்ணீராய் ஓட வெப்பத்தில் உருகும் தார்ச்சாலையில் எவரையும் நம்பாமல் தன் கால்களை மட்டும் நம்பி அவர்கள் கால்கள் நடை போட்டன. என்று கொரானாநோயின் பாதிப்புக்காலத்தின் போது நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற அனைத்து சம்பவங்களையும் வாசிப்போரது கண்களிலும் கண்ணீர் வரவழைக்கும் நிகழ்வாக, இந்த உண்மைக் கதைக்கு உண்மையிலேயே இ “கால்கள்” உள்ளது என்று கால்கள் என்ற படைப்பில் ஆழ்ந்த கருத்துக்களோடும், துணிச்சலோடும் கண்முன்னே விரிய செய்த தமிழ்மணி சார் அவர்களுக்கு நன்றிகள் பல.🙏💐
    சமூக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் தாங்களின் எழுத்துப் பணி மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.

  76. THAHIRA BANU, CHENNAI.

    அய்.தமிழ்மணி அவர்களின் இந்த “கால்கள்” சிறுகதையைப் படிக்கும்போது… கொரோனாவின் ஊரடங்கைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பல நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பால் உள்ள தங்கள் சொந்த இடங்களை நோக்கி… உயிர் பிரிவதற்கு முன்பு சென்றுசேர்ந்து விடவேண்டும் என்ற தவிப்புடன் தார்ச்சாலைகளில் நடைபோட்ட அந்த ஆயிரக்கணக்கான கால்கள், சொந்த ஊர் கைக்(கால்)கெட்டுப் தூரத்தில் வந்துவிட்ட நிலையில் பசியிலும் பிணியிலும் களைத்து விழுந்து உயிர்விட்ட கால்கள், வழியில் சாலைவிபத்தில் மாண்டவர்களின் கால்கள், தண்டவாளத்தில் துண்டிக்கப்பட்டு கிடந்த கால்கள், பெட்டிமேல் கவிந்து படுத்தபடி சாலையில் பயணிக்கும் அந்த குழந்தையின் கால்கள் என்று நிறைய கால்கள் நினைவில் நிழலாடுகின்றன.

    இந்த ஒரு சிறுகதை போதும் இன்னும் நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல… இந்த பாதிப்புகள் எல்லாம் கொரோனா வைரஸினால் அல்ல… கொரோனாவைத் தடுக்கிறோம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட (அரைகுறை) நடவடிக்கைகளினால். மாதக்கணக்கான இந்த ஊரடங்கினால் சொந்த ஊரில் சொந்த வீட்டில் ஓரளவு சேமிப்புடன் இருப்பவர்களின் வாழ்க்கையுமேகூட ‘அடுத்தது என்ன?” என்ற கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இப்படி இருக்க… புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை இந்த ஊரடங்கு எப்படி புரட்டிப் போட்டிருக்கிறது என்பதை இந்த கதை தெளிவாக எடுத்து வைக்கிறது.

    பொதுவாக உதவியற்ற நிலையை ‘கையறு நிலை’ என்றும் தக்க சமயத்தில் உதவுபவர்களை ‘உடுக்கை இழந்தவன் கை’ போல என்றும் இப்படி கையை முன்னிறுத்தி சொல்லும் உதாரணங்களைத்தான் கேள்விபட்டிருப்போம். ஆனால் இங்கு தமிழ்மணி அவர்கள் சொந்த ஊர்களை விட்டு வந்தவர்களை “கால்களை இழந்தவர்கள்” என்றும் அவர்களுக்கு உதவுபவர்களை “கால் கொடுத்தவர்கள்” என்றும் சொல்வது வித்தியாசமாக இருக்கிறது இந்த “கால்கள்” கதையைச் சொல்வதற்கு முன்னுரையாக தன் ஆசிரியர் சொன்ன “கதைக்கு கால் இருக்கா?”கதையை இங்கு சேர்த்து இருப்பது கூடுதல் சுவாரஸ்யத்தைத் தருகிறது. கொரோனா காலம் கடந்த பின்பு பிறப்பவர்கள் கூட இந்த கதையை படிப்பதன் மூலம் கொரோனா காலத்தில் மக்களின் நிலையையும் அரசின் செயல்பாடுகளையும் துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்.

    கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது போன்ற அரசின் வழிகாட்டுதல்களை எல்லாம் இடையிடையே சேர்த்து கதையை கிண்டலான சர்க்காஸ்டிக் தொனியில் சொல்லியிருந்தாலும் ஒரு நிகழ்கால துயரத்தை… அதன் பின்னணி அரசியலை… அத்தனை பக்கங்களிலிருந்தும் அதன் ஆழ அகலங்களை முழுவதுமாக வெளிப்படுத்தும் விதமாக இருக்கிறது இந்த கதை. காலத்தால் மறுக்க முடியாத, மறைக்க முடியாத ஒரு சமூக அவலத்தின் சாட்சி இந்த கதை.

    வட நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு பிழைக்க வந்த ராம்சிங்கின் மனநிலை “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு” உதாரணம் போலத்தான். அரசியல் தலைவர்களை கடவுளர்களாகவும் அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் வேதவாக்காகவும் எடுத்துக் கொள்ளும் எண்ணற்ற ராம்சிங்களின் நெஞ்சில் ‘இந்துத்துவா’, ‘இந்துராஷ்டிரா’ என்று நஞ்சை விதைக்கின்றனர். உண்மையிலேயே இந்த மனநிலைதான் கொரோனாவை விடவும் கொடிய நோய்.

    தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மக்களின் நெஞ்சில் நஞ்சை கலந்து அவர்களின் அறியாமையின் மீது அரியாசனம் அமைத்துக்கொள்ளும் இந்த அரசியல்வாதிகளுக்கு… நாடு முழுவதும் நோய்ப்பரவல், ஊரடங்கு என்ற இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கூட இந்த எளிய மக்களின் அடுத்தவேளை உணவு மற்றும் வாழ்வாதாரம் பற்றி கவலைப்பட நேரமில்லை.

    பல ஆயிரம் கோடிகளில் கடன் வாங்கிய பெரும் பணக்காரர்களின் கடனை தள்ளுபடி செய்யும் தாராள மனம் படைத்த இந்த அரசுக்கு, தான்சொன்னபடி 15 லட்சம் ரூபாயை மக்களின் வங்கிக் கணக்கில் பிரதமர் செலுத்தி விடுவார் என்று நம்பிக்கொண்டிருக்கும் ராம்சிங் போன்ற கண்மூடித்தனமான பக்தர்களுக்கு ஒரு ரயில் டிக்கெட்டை கூட இலவசமாக கொடுக்க முடியவில்லை. இந்த அரசியல்வாதிகளின் உண்மை முகங்களை இந்த அப்பாவி ராம்சிங்குகள் அறிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக இருந்தால் மகிழ்ச்சி.

    அடுத்த தேர்தலிலாவது சிந்தித்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்ப்போம். ஆனால்அதுவரை ராம்சிங் உயிருடன் இருக்க வேண்டுமே…!?

    லாக்டவுன் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது 4,5,…..6???

    -தாஹிரா பானு, சென்னை.
    91760 55111

  77. ஜெ.பழனி

    கால்கள்

    மக்களின் நம்பிக்கைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, அவர்களை ஏய்த்துப்
    பிழைக்கும் அரசியல்வாதிகளின்
    ‘நிஜ’முகங்களை அடையாளம் காணும் அவசியத்தை, கால்கள்
    சிறுகதை வலியுறுத்துகிறது.

    சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாமல் புலம் பெயர்வது,
    சொந்தக் கால்களை இழந்து, செயற்கைக் கால்கள், ஊன்றுகோலுடன் சிரமப்படுவதற்கு
    ஒப்பானது; என்று, இரண்டு வரிகளில் கதையைப் பற்றிய
    முன்னோட்டத்தைத் தருகிறார்,
    ஆசிரியர், அய். தமிழ்மணி அவர்கள்.

    வயிற்றுப் பிழைப்புக்காக புலம் பெயர்ந்த ராம்சிங் குடும்பம், இங்கே
    கிடைக்கும் சொற்ப வருமானத்தில்
    வாழ்கிறது. இந்த நிலையிலும்
    ராம்சிங், தான் ஒரு இந்து என்ற
    பெருமையுடனும், மத்தியில் ஆளும்
    தங்கள் கட்சி, மாநிலத்திலும் அமைந்துவிட்டால், தன் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடும் என்று கனவு காணுகிறான்.

    ராம்சிங்கின் மனைவி ஜோதிர்மயிக்கு நடைமுறை தெரிந்திருக்கிறது. ஒரே நாடு, மொழி, இனம் என்பதன் அபத்தங்கள், புலம்பெயர்ந்த வாழ்வில் அவளுக்குப் புரிந்திருக்கிறது. இவை குறித்து அவள், தன் கணவனை எச்சரிக்கும்
    போது, அவளுக்குக் கிடைப்பது,
    வசவுகளும், அடி-உதைகளும் தான்.

    ஒரு ஓட்டு கூட வெற்றிக்கு உதவக் கூடும் என்று, நிறைமாத கர்ப்பிணி
    என்றும் பாராமல், தன் மனைவியை
    ஊருக்கு அழைத்துச் செல்கிறான்.
    கட்டிடம் கட்டுவதற்குத் தேவையான,
    ‘சாரம்’ என்கிற ஆதாரம், வேலை முடித்த பிறகு அவசியமற்றதாகிறது.
    அரசியல்வாதிகளுக்கு, சாமானியர்களும் அப்படித்தான்.
    சாதாரண மக்கள் இந்த உண்மையை உணர்வதில்லை.

    முன்னறிவிப்பில்லாத ஊரடங்கு,
    கொரானா குறித்து ஊடகங்களின்
    தொடர் பயமுறுத்தல், வேலையற்ற
    நிலை, (மிகக்) குறைவான கையிருப்பு, உயிர் பயத்தினை
    ஏற்படுத்துகிறது.

    இரண்டாவது, மூன்றாவது ஊரடங்கள்களில் ராம்சிங்கின்
    குடும்பம், அரசு முகாமில் அடைக்கலமாகிறது. முகாம்
    அனுபவம் அவர்களை, தாங்கள்
    மனிதப்பிறவிகள் தானா? என்று
    எண்ணச் செய்கிறது. இந்த நிலையிலும் அவன், தன்னுடைய
    தலைவர்களை நம்பிக்கொண்டு
    இருக்கிறான்.

    அடுத்தவாரம் புறப்பட இருக்கும்
    ரயிலில், ஊர்செல்ல இருக்கிறோம்
    என்ற செய்தி தந்த ஆறுதல், அது
    இலவசப் பயணம் இல்லை, என்பதை அறிந்தபோது அதிர்ச்சியாகத் தாக்கியது. இதையும் கசப்பு மருந்தாக ஏற்க, அவன் மனம் மறுக்கிறது. அரசின்
    வஞ்சனையை, தனது அறியாமையை, ராம்சிங்
    முதல்முறையாக உணர்கிறான்.

    பிழைப்புக்காக இல்லை;
    அநாதைகளாக இறந்துவிடக்கூடாது
    என்பதற்காக, அவனது கால்கள்
    குடும்பத்துடன் ஊர்நோக்கி நடக்கப்
    பயணமாகிறது.
    எதை நோக்கி இந்தப் பயணம்?
    யாருடைய நேர்த்திக் கடனை நிறைவேற்ற இவர்கள், பாதயாத்திரை போகிறார்கள்?
    யார் செய்த பாவத்திற்கு, இந்த
    அப்பாவி மனிதர்கள்
    சிலுவை சுமக்கின்றனர்?

    ஒரு உண்மை நிகழ்வை புனைவாகப் படைக்கும் போது,
    விரும்பிய விளைவை ஏற்படுத்தும்
    என்பதற்கு, ‘கால்கள்’ சிறுகதை ஒரு
    நல்ல உதாரணம்.

    ஜெ.பழனி
    புதுச்சேரி
    7845208765

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *