சிறுகதை: சூப்பர் பாஸ் – ஜமீல் அஹ்மத்

சிறுகதை: சூப்பர் பாஸ் – ஜமீல் அஹ்மத்

என்ன ப்ரோ நீங்க வரலையா..
இல்லப்பா…
 நீங்க கிளம்புங்க உங்களுக்கு தான் தெரியுமே நம்ஆள் போக விடமாட்டார். நேத்தே பேசியாச்சு..  இது பத்தி… கொஞ்சம் சோகமா சிகந்தர் பதில் சொன்னான்.
ஓகே ப்ரோ சொல்லி விஜயும் அவங்க டீம் கிளம்பின்னு இருந்தாங்க…
சிகந்தருக்கு கொஞ்சம் பீலிங் இருந்தாலும் பசங்க கிளம்பின் இருந்ததை பார்த்துட்டே கம்பியுட்டர் கீ போர்ட்ல கையை வச்சிகிட்டு சீட்லே சாந்சிட்டு பசங்களோடு பேசிட்டே இருந்தான்.
சிகந்தர் வேலை பார்கிர  ஐ.டி கம்பெனிலே இன்னிக்கு வெள்ளி விழா…இவங்க எல்லோருமே சென்னை அடையார் லே ஐடி என்ஜினீயரா வேளை பார்கிரவங்க..அடையார் தவிர சென்னைல நான்கு கிளைகள் இருக்கு..அவங்க எல்லாருமே இன்னிக்கு ஈசிஆர்ல ஒரு பெரிய அரங்கத்தில் சந்திக்கப் போறாங்க.. இன்னிக்கு முழுக்க ஆட்டம் பாட்டம் தான்..பல விளையாட்டுக்கள் தவிர ஈவினிங் ஷோலே யாரோ கதாநாயகி வராங்களா..நைட் டின்னர் வேற..
சிகந்தருக்கு  இந்த என்டர்டெயின்மென்ட்லே அவ்வளவு  ஈடுபாடெல்லாம் கிடையாது….
லீவ் நாட்களை விட  வேலை  செய்ர  நால்ல லீவ் கிடைச்சா அது அவனுக்கு  கொஞ்ச நிம்மதியா இருக்கும்.


சிகந்தரும் ரமேஷும் மட்டும்தான்  அமெரிக்கா ப்ராஜெக்ட்காக வேலை பார்க்கிறவங்க.. ஆக  இந்தியா லீவும் அவ்வளவாக இவர்களுக்கு கிடைப்பதில்லை.. ஒரு வாரம் ஒருத்தரு மதியத்திலிருந்து நைட்டு  பத்து மணி வரை பாக்கணும்.. இன்னொருத்தரு நைட்டு பத்து மணியிலிருந்து காலை 7 மணி வரை பார்கனோம்..இப்படியே இருவருகளுக்கு இடையே ஷிப்ட் வாரம் வாரம்  மாறினே இருக்கும். இந்த வாரம் சிக்கந்தருக்கு  பகல் ஷிப்ட் இருந்ததால மதியம் ரெண்டு மணிக்கு வந்தவன் தான்..  ரமேஷும் பார்ட்டிக்கு போறதுக்கு ரெடி ஆயிட்டு இரண்டு மணிக்கு ஆபீசுக்கு வந்துட்டான்.. பார்ட்டி முடிச்சு நைட் டியூட்டி பண்ணிக்கலாம்னு அவன் பிளான்… இவன் நேத்து நைட்டு இவங்க மேனேஜர் சித்தார்த் அமெரிக்கால இருக்காரு அவர்கிட்ட பார்ட்டிக்குப் போவது பற்றி கேட்டிருக்கிறார்கள்… அவர் சிம்பிளா  அதெல்லாம் வேண்டாம்பா  நாம தனியா  வாய்ப்பு கிடைக்கிற போது  கொண்டாடலாம்  சொல்லிட்டாரு…
ரமேஷும், சிகந்தரும்  அத நினைச்சு கிண்டலடிச்சு பேசிட்டு இருந்தாங்க, இவர் அமெரிக்காவிலுருந்து எப்ப வந்து நாம கொண்டாடி விலங்கிடும்னு. சரின்னு ரமேஷும் கிளம்பினு இருந்தான்… திடீர்னு எதிரிலே முருகன் சார்,
 என்னப்பா சிக்கந்தர் நீ வரலையா,
இல்ல சார் சித்தார்த் வேண்டான்னு சொல்லிட்டாரு,
 அட என்னப்பா ஆபீஸ் முழுக்க கிளம்பிறோ  நீ மட்டும் தனியா வேலை செய்ஞ்சிட்டு,
 ஏதாவது முக்கியமான வேலை இருக்கா,
அப்படி ஒன்னும் இல்ல,..
அப்புற என்ன கிளம்பு பார்த்துக்கலா
இல்ல சார் சித்தார்த் ஏதாவது,
நான் பேசிக்கிறேன் பா, நீ கிளம்பிரது பாரு,
சிகந்தருக்கு ஒரே குஷி, இருந்தாலும் உள்ள  பயம் சித்தார்த்த நினைச்சு, ஆனாலும் முருகன் சார் சொல்லிடாரேன்னு கிளம்பத் தயாரானான்.
முருகன் சார் சித்தார்த்துக்கு மேனேஜர் அதாவது ஜெனரல் மேனேஜர் பாஸுக்கு பாஸ்னு சொல்லலாம்.
சித்தார்த்துக்கு ஈமெயில்லே தெரியப்படுத்தி  சிக்கந்தர் கிளம்பினான்.
கம்பெனி பஸ்களும் தயார் நிலையில் இருந்தன.
என்ன ப்ரோ வரலைன்னு சொன்னீங்க வந்துட்டீங்க.. விஜய் கேட்டான்
ஆமாப்பா முருகன் சார் சொன்னதுனால  வந்துட்டேன்,
நம்ம பாஸ் சூப்பர் பாஸ் ஆச்சே..
உங்க பாஸ் சூப்பர் பாஸ் தான்.
 ஆனா நம்ம பாஸ்  சைக்கோ ஆச்சே…  நைட்டுக்கு எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல.
உடுங்க நம்மால் பார்த்துப்பாரு வாங்க இங்கே இடம் இருக்கு  சொல்லி  விஜய் பக்கத்திலேயே சிக்கந்தருக்கு இடமளிக்க ரமேஷீம் பக்கத்தில…மற்ற பசங்களும்   ஒரே பஸ்ஸில்  ஒரே உற்சாகம் தான்…


 போன வருஷம் பார்ட்டியோட இந்த வருடம் சமயா இருக்குன்னு  பசங்க பேசிட்டு  இருக்க..பஸ்ஸும் அடையாரிலிருந்து ஈசிஆர் ரோடு வழியாக போயிட்டு இருந்தது..
 போயிட்டு முதல்ல சாப்பிடலாம், அப்புறமா விளையாட்டில் இறங்கலாம் என பல பிளானிங்கோட போயினுருந்தாங்க.. சிக்கந்தருக்கும் ஒரே குஷி… ஒரு நாள் வேலையை விட்டு வரதுல என்ன சுகம்டானு பசங்களோட  அரட்டை அடிச்சிட்டு அதுலயும் இன்னிக்கு வெள்ளிக்கிழமை நாளைக்கு  சனி ஞாயிறு தொடர்ந்து இரண்டு நாள்  லீவு வேர.. ஒரே என்ஜாய் தான்..கடைசியா இசிஆர் ரோட்டில் பெரிய அரங்கத்தில் பஸ் வந்தடைந்தது.
வரவேற்பெல்லாம் பலமாக இருந்தது.  பல விளையாட்டு ஏற்பாடுகள் செய்திருந்தன.. சிகந்தருகம்  ரமேஷும் சேர்ந்தே ஒவ்வொரு நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்த்துட்டே போய்ட்டு இருக்கும் போதே  திடீருன்னு பார்த்தா பக்கத்துல  முருகன் சார்..
என்னப்பா கடைசியா அவன் ஒத்துக்கிட்டானா..
தெய்வமே…சிக்கந்தர் மனசுக்குள்ள ஓடியது… தூரத்திலிருந்து சங்கு சத்தம் கேட்பதுபோலவும் இருந்தது..
நன்றி,
ஜமீல் அஹ்மத்,
வாணியம்பாடி.
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *