நான் சந்தித்த மனிதி (சிறுகதை)- ரங்கராஜன்

“பட்டாசித்தி ”
இவர் எப்படி இருப்பார்? சிறுஉதாரணம், குடியிருந்த கோயில் சினிமாவில் நாகேஷ், அவரின் தந்தையாக நடிக்கும் விகே ஆரை ஏமாற்ற பாட்டி வேடம் போட்டு கையில் கோல் மற்றும் துப்பாக்கிவைத்து மிரட்டுவார். நாகேஷ் கலர்புடவை.

பட்டாசித்தி சிறு வயதிலேயே கைம்பெண்ஆகி அந்த க்காலகுல வழக்கப்படி, சிகை மழித்து வெள்ளைப்புடவை உடுத்தி, கண்ணாடிப்போட்டு கிராமத்தை காலை, மாலை இருவேளை சுற்றிவருவார்.

நண்டு சிண்டு முதல் பல் போன கிழவன் வரை பட்டாசித்தி என்றுதான் அழைப்பார்கள், ஆமாண்டா, நான்என்ன பட்டா போட்டு வைத்திருக்கிறேன் என சிரிப்பார், அந்த சிரிப்பு வெள்ளந்தியான சிரிப்பு.

இந்த ப்பாட்டியைப்பற்றி ஏன் இவ்வளவு பில்ட் அப்? என்தாயார் காலமான பிறகு என் தந்தை இரண்டாம் திருமணம் செய்யும் வரை என் தந்தைக்கு சமையல் செய்த பாட்டி இந்த பட்டாச்சித்தி தான்.

என் தந்தை சென்னையில் தமிழ்நாடு அரசின் ரெண்ட் கண்ட்ரோல் அலுவலகத்தில் பணிபுரிந்த போது பாட்டி சென்னைக்கு வந்தார்.

மயிலாப்பூரில் என் தந்தை வாடகைக்கு வசித்து வந்தார்.அங்கே மந்தைவெளி மார்க்கெட்டில் இருந்த மிஷனுக்கு முதல் தரமாக மாவு அரைக்க ச்சென்றபோது, உரிமையாளர் பெயரை விசாரித்து வேணு கோபாலன் எனத்தெரிந்து ஊரைவிசாரிக்க, மாம்பாக்கம் என்றதும்பாட்டிக்கு ஒரேசந்தோஷம்.

மந்தைவெளியில் உள்ள மாவுமிஷனில் அரிசி யில் பைசா போட்டு அப்படியே அரைத்து விட நிறைய முறை பாதி எட்டணா, 10 பைசா போன்றவை வீட்டுக்கு வரும்.
கிராமத்தில் மட்டமல்ல மயிலாப்பூரிலும் யாருக்காவது, ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக தீர்வு சொல்வாள்.

இப்போது இந்த மாதிரியான செய்கைகளை எதிராபார்க்க இயலாது.

மறக்க முடியாத பாட்டி. சாவிஎழுதும் கேரக்டர் போல இருந்தாள்.

 

எழுதியவர் 

பாரதிராஜன் என்கிற ரங்கராஜன்

அமெரிக்கா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

3 thoughts on “நான் சந்தித்த மனிதி (சிறுகதை)- ரங்கராஜன்”
  1. சிறப்பு. யதார்த்தம் நிறைந்த எழுத்து.
    நா. நாகராஜன்,
    ஊரப்பாக்கம்.
    செல் 8778935252.
    நாவல், சிறுகதை, நகைச்சுவை எழுத்தாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *