(1) வெளிப்பாடு
______________________
பார்க்கும் துளியின் மேல்
ஒரு பூ
கேட்கும் கரையின் மேல்
ஒரு வாத்தியம்
தொடுதலின் அடிவானத்தின் மேல்
ஒரு தேகம்
ருசியின் முடிவின் மேல்
ஒரு பழம்
முகர்தல் வட்டத்தின் விட்டத்தின் மேல்
ஒரு நறுமணம்
மேலும்
நினைவின் ஆகாயத்தில்
சில கழிந்த நிமிடங்கள்.
அப்படியே போகவில்லை
எங்கே _ எங்கே ?
எந்த _ எந்த வடிவங்களில்
அலைந்தபடி இருக்கிறது ?
மற்றும்
அப்போது போய்
விருப்பமான நலமளிக்கும்
ஒரு கவிதை.
(2) இயலும் உணர்வு
___________________________
முதலில் எங்கே ஒரு பூ இருந்ததோ
அங்கே பார்வை போனது
ஆனால் இப்போது எங்கே பார்வை இருக்கிறதோ ?
அங்கே பூ மலருகிறது.
இது போல் மீதி ஆசைகளும்
பறவைகளைப் போல
என்னுடைய தனித்தன்மையின்
மரத்திலிருந்து பறந்து
அதனதன் காவிய ருசி பார்க்க
வெவ்வேறு இலக்குகளில்
போவது வழக்கமாய் இருந்தன
மற்றும் நான் இயலாதவனாக
வேராக ஆகி இருக்கும் வழக்கமானேன்.
ஆனால் இப்போது
எதுவும் எங்கும் போவதில்லை_
கண்கள் தம்மைத் தாமே பார்த்தபடி
மோகிக்கின்றன
காதுகள் தம்மைத் தாமே தொடுதலின் பாதையில் முன்னேறுகின்றன.
இது எப்படி இயலும் உணர்வாய் வந்து இருக்கிறது என்று _
இப்போது
தமக்கான வெளிச்சமாய் இருக்கிறது
தமக்கான கோலாகலமாய்
இருக்கிறது
மற்றும்
தமக்கான ருசியாக.
ஒருவேளை
செல்வம் இருந்தால் தான்
எல்லாம் இருக்கிறது.
ஹிந்தியில் : ஸ்ரீ நரேஷ் மேஹ்தா
தமிழில் : வசந்ததீபன்