நூல்: சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர்: ச. சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 140
தொடர்பு எண்; 044 24332924
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும் : thamizhbooks.com
பயணம் என்ன செய்யும் மாற்றத்தை நம்முள் நிகழ்த்தும். நேற்று தான் தோழர். சுப்பாராவ் எழுதிய ” சில இடங்களும் சில புத்தகங்கள் ” என்ற நூலை படித்து முடித்தேன். சிறு வயது முதலே ஐரோப்பிய நாடுகள் மீது ஓரு அதீத ஈர்ப்பு. அதற்கு காரணம் ஐரோப்பியர்கள் கலை,இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றிய வர்கள் என்பதாலோ என்னவோ. எங்கள் உறவினர்களில் சிலர் பிரான்ஸ் இருக்கின்றனர். அவர்களுடன் பேசும் போது எல்லாம் ஓரு முறை ஐரோப்பிய நாடுகள் சென்று அப்படி என்ன இருக்கும் என்று நினைத்து உண்டு. அதன் பின் பணி நிமித்தமாவது மட்டுமாட்சி போகலாம் என்று நினைத்தேன. அதற்கு பின் நான் எடுத்த படித்து வேலை பார்த்தது வேறு எதுவோ…பாரிஸ் மேற்கத்திய ஆடை வடிவ உலகத்தின் ஜாம்பவான். ஆகையால் பேஷன் துறையை எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இங்கு பாண்டிச்சேரியில் பலர் இரட்டை குடியுரிமை உள்ள குடும்பங்கள் உள்ளது. ஏன் எங்கள் வீட்டில் எங்கள் பாட்டிக்கும் கூட இரட்டை குடியுரிமை உள்ளது என்பதே பின் நாட்களில் தான் தெரியும். பிரான்ஸ் பற்றி கேட்க கூடவே ஓட்டிக்கொண்டது போன்று வரும் அதன் இலக்கியமும், அழகியலும், சுதந்திரமான நாடு என்றும். ஆகையால் நிறைய பிரஞ்சு படங்களை பார்த்திருக்கிறேன். அவற்றில் மிட்நைட் இன் பாரிஸ், ரோடு டு பாரிஸ், விவி டடூர், பிரஞ்சு கிஸ் போன்ற படங்களின் வழி ரசித்து இருக்கிறேன்.அதே போன்று இலக்கியங்களிலும் கலையும் கைதேர்ந்த கலைஞர்ள் நிரம்பிய ஊர், ஈபிள்
கோபுரம்,, ஷேக்ஸ்பியர் புத்தக கடை, மார்கஸ் வாழ்ந்த Rue Vanue,, venice ,, கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கை பிறந்த இடம் இவையெல்லாம் ஒரு பக்கம். மற்றொரு பக்கம் அவர்களின் வாழ்க்கை சௌகரியம.இவற்றை எல்லாம் டேவிட் லேபோ எழுதிய நூலான The Sweet Life in Paris ஓரு பகுதியை உணர முடிகிறது. ஆனால் நம் ஊராகாரர் நாம் பார்க்கும் பார்வையில் எழுதுவது ஆலாதி சுகம் தான். அதிலும் புளியோதரையுடன் உங்களுடனே நானும் கூடவே ஈபிள் டவர், காலோஷியம்,பைசா கோபுரம் வந்து கடைசியாக வால்காவின் ஓவியத்தை ரசித்துப், அனா பிரங்கின் துயரத்தையும் அறிய முடிந்தது. புத்தகத்தில் வரும் புத்தகத்தை எல்லாம் படிக்க முடியவில்லை யென்றாலும் சிலவற்றை குறித்து வைத்திருக்கிறேன் படிக்கலாம் என்று. அடுத்த முறை ஓரு வேலை போக வாய்ப்பு இருப்பின் நான் போனவற்றையும் சேர்த்து பேசலாம் தோழர். உங்களின் இப்புத்தகத்திற்கு என் நன்றியும் அன்பும்
ReplyForward |
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.