•
எவன்டா இஞ்சினியரு
தண்டவாளத்த
இவ்ளோ பெருசா போட்ருக்கான்;
என்றது இரயில் பூச்சி.
•
தாயைப் பிரிந்த குட்டிமீன் ஒன்று பாடியது:
மீனம்மா அதிகாலையிலும்
அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே!
•
ஒல்லியாக இருப்பவன் வாங்கினான்;
குண்டாய் கார்.
•
தமிழில் அக்காவாய் இருந்து
ஆங்கிலத்தில் அம்மாவாய் ஆனது
ஏலக்காய்.
•
கெட்டுப்போன காயை;
ஊறுகாய் என்றும் சொல்லலாம்.
•
சர்வரிடம் ரகசியமாக ஆர்டர் செய்தேன்;
நைஸ் தோசையை.
•
மறந்து சென்ற என்னைத் துரத்தி வந்து பார்சலைக் கொடுத்தார் கடைக்காரர்,
வெரைட்டி ரைஸ்.
•
செருப்புத் தைக்கும் அண்ணனிடம்
வார் தைக்குமாறு சொன்னேன்.
ஊசி உடைந்துவிட்டதால் தைக்க முடியாது என்று என்
வார்த்தைக்கு மாறு சொன்னார்.
•
ஜனங்களிடம் இருந்து கிடைக்கிற வரியை;
ஜனவரி என்றும் சொல்லலாம்.
•
கார்மேகத்தின் கருணை பைக் மீதும் பொழிகிறது.
•
அன்று அடி;மை தீரும் அளவிற்குத்
தேர்வெழுதிய மாணவர்களில் சிலர்
இன்று அடிமையாக கம்பெனிகளில்
•
கான்கிரீட் ;பலகைகளுக்கு
முட்டுக் கொடுக்கின்றன
சவுக்குக் கால்கள்
•
ஊசிப்போன வடையில்தான்
நூலும் இருக்கிறது.
•
Engine-க்கு near-ல் நின்று வேலை செய்பவரை இன்ஜினியர் என்று
சொல்லலாமா?
•
ஏதோ பழக்கதோஷத்தில் சொல்லிவிட்டார்
மெடிக்கல் கடைக்காரர்
சளியும் சிரப்புமாய் வாழ்க!
•
நடு வகிட்டோடு பிறந்த வாழையிலை தலை சீவுகிறது
வாழைச்சீப்பில்.
•
பிசியோதெரபிக்குச் சென்று கொண்டிருக்கிறான் பணக்காரன்.
பசியோதெரபியைக் கற்றுக் கொண்டிருக்கிறான் ஏழை.
•
அணைக்கட்டு வரையும் போட்டியில்
பரிசளிக்க வந்தவர் சொன்னார்,
அணை வரையும் அனைவரையும் பாராட்டுகிறேன்!
•
இறந்துபோன தாயின்
கிழிந்துபோன டைரியில்
எழுதப்பட்ட வாசகம்
I always with you in all ways
•
ஏன்டா இந்த அணையை இடிக்கணும்னு சொல்றாங்க?
Dam,age ஆய்டுச்சுடா அதான்.
•
நபர்1:
என்னடா சொல்ற?
தலைவர் நோய்வாய்ப்பட்டுட்டாரா?
நபர்2:
ஆமாடா. ஒன்னுக்கு இருக்கும்போது ஒரு நாய் வாய் பட்டதனால
நோய்வாய்ப்பட்டுட்டாரு.
•
வருண பகவானிடம் தா வரம்! தா வரம்!
என்று கேட்டான்
தாவரத்தை அழித்துவிட்டு…
•
அவள் husky-யாகப் பேசும் வார்த்தை கள்
•
ஒரு கவிஞர், செய்தி வாசிப்பாளர் ஆனார்.
தி.நகரில் தீ நகர்வதைப் போல வெயில்!
•
தண்ணியும் மனுசன போலத்தான்.
நிறைவேறாத ஆசையோடு இறந்து
ஆவியா அலையுது.
•
இந்து நண்பனுக்காகப்
பட்டை; போட்டுச் சமைக்கிறான், இஸ்லாமிய நண்பன் பிரியாணியை.
•
அடடா! மாடிப்படிக் கத்துகிறதே
யாராச்சும் கொஞ்சம் படியளக்கக் கூடாதா என்று வைக்கோல் போட்டாள்,
பாட்டி.
•
எல்லா ஊர்களும் வறுமையும் பஞ்சமும்;தஞ்சாவூராக இருக்க வேண்டும்
என்று வேண்டிக்கொண்டான்.
கிழிந்த சட்டையைத் தைத்திருநாள்; போட்ட பையன்.
•
சாலையில் நடந்து சென்றபோது
பைக் டயரில் பட்டுத் தெறித்த ஜல்லிக்கல்
என் கரண்டையில் கரண்டைப் பாய்ச்சியது.
•
ஒரு கவிஞன் எழுதிய கதை இப்படித் தொடங்கியது..
இருள் சூழ்ந்த பாதையில் நடந்து கொண்டிருந்தான்.
அச் சமயம் மனதில்
அச்ச மயம்!
•
நூறு சிமிண்ட் மூட்டைகளை நாங்கள்
இறக்கும் முன்பே பணம் கொண்டுவருவதாக முதலாளி சொன்னார்.
இன்றுவரை தந்தபாடில்லை.
ஒருவேளை;நாங்கள் இறக்கும் முன்பு தந்துவிடுவதாகச்
சொல்லியிருப்பாரோ?
•
பாலை உடைய பாத்திரம் விழுந்தது
பாத்திரம் உடைய,பால் சிந்தியது.
ஒற்றுமையில் வேற்றுமை!
•
காதல் வந்த கவிஞனுக்கு எது கை? எது கால்? என்றே தெரியவில்லை
பின் எப்படி எதுகைமோனை நினைவில் இருக்கும்!?
•
சுண்டல் விற்பவனிடம் பாடினேன்
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
•
ஓர் இசுலாமிய நண்பன் எழுதிய கவிதை,
அகிலமே அல்லாது
அவன் அல்லாது
ஒன்றுமே செல்லாது
•
குடல்கறி விற்கும் கடைக்கு எதிரில்
புதிதாய் ஒரு குடல்கறிக் கடை திறப்பு
போட்டி கடை என்றும் சொல்லலாம்.
•
எனக்கு நானே சொல்வது:
உன் வரிகளால் இந்தப் பார் ஆட்டு
அதன் பின்பே கிடைக்கும் பாராட்டு
You shakes the sphere like Shakespeare
•
Award என்பது யாதெனின்
A war do by you.
•
அந்த விருது விழாவில் மேடையேறி விருது வாங்கிய சிறுவன் பேசினான்:
ஊரில்
கோலி விட்டு விளையாடிக்கொண்டிருந்த நான்,
இன்று
கோலிவுட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறேன்
•
மனிதர்களில் சிலர், ஆடுநரியாகப் பழகுகிறார்கள்
சிலர் ordinaryயாகப் பழகுகிறார்கள்
•
வாழ்க்கை
சிலருக்கு ஏணிப்படியாக இருக்கிறது
சிலருக்கு ஏனிப்படியாக இருக்கிறது.
•
சோழநாட்டு ஆண்கள், பெண்களை சைட்டடிக்கும்போது நண்பர்களுக்குள்
பயன்படுத்திய தொடர்
சோழியப் பாரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.