நாங்கள் மிகவும் சமாதானமாக இருந்தோம்
எமது நீர், வனம், நிலம் மற்றும் மலைகளோடு
எமது நம்பிக்கை மற்றும் சடங்குகளோடு.
பிறகு வந்தார்கள்
வட்டிக் கடைக்காரர்கள்
அவர்கள் உப்புக்குப் பதிலாக
கொள்ளையடித்தார்கள் எங்களிடமிருந்து ,
எமது நிலம்
நாங்கள் எழுந்தோம் அவர்களுக்கு எதிராக
வில்
செய்தது சத்தம்
மற்றும்
சொன்னது அவர்களுக்கு
வனவாசி.
பிறகு வந்தது சர்ச்
அவர்கள் சொன்னது ” எமது மதம் மோசமானதாக இருக்கிறது ”
மற்றும் அங்கே இருக்கிறது
எமது
எல்லாப் பிரச்சனைகளின் காரணம்
அவர்கள் கொள்ளையடித்தார்கள் எங்களிடமிருந்து
எமது மதம்
நாங்கள் எமது பிரச்சினைகளை விரும்பி இருந்தோம்
முடிவு
எங்களிடமிருந்து பலவற்றிற்க்காக அவர்களுடைய
சங்கம்.
பிறகு வந்தது லால் ஸலாம் (சிவப்பு வணக்கம்)
அவர்கள் சொன்னது
“அவை கொடுக்கும் எங்களுக்கு முக்தி”
நிறுவப்படும் எங்களது ராஜ்யம்
அவை பிடுங்கியது எம்மிடமிருந்து
எமது குழந்தைகள்
மற்றும் வைத்திட தந்தது அவர்களின் மென்மையான தோள்களின் மேல்
துப்பாக்கி
தங்கக் கோட்டின் நீராக தொடங்கியது
சிவப்பு.
மற்றும் பிறகு இந்த துப்பாக்கிகளின் பின்னே _ பின்னே வந்தது
பூட்ஸ்களின் சத்தம்
ஸாரண்டாவின் காடு அமைதியில்
பறவையாகத் தொடங்கியது
கோலாகலம்
தாக்கத் தொடங்கின
குண்டுகள்
சகுவாவின் மரங்கள் மூடிக்கொண்டன தமது கண்களை
எங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது எமது
வாழ்க்கை.
தூறிக் கொண்டிருக்கிறது மழை
நான் நீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறேன்
எனது ரத்தத்தால்
நெல்லின் பயிர்.
நான் சைமன் மரக்கட்டை
என்னுடைய சவம் வீழ்ந்து கிடக்கிறது
நெல்லின் வயல் மேல்.
ஹிந்தியில் : நீரஜ் நீர்
தமிழில் : வசந்ததீபன்

நீரஜ் நீர்: ராஞ்சி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஒரு தனி கவிதைத் தொகுப்பு ” ஜங்கல் மே ஹாத்தி அவுர் டோல் “வெளிவந்துள்ளது , அதற்காக முதல் மஹேந்ர ஸ்வர்ண ஸாஹித்ய ஸம்மான் கிடைத்தது. இதைத் தவிர ஆறு கவித்தொகுதிகளும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது.
ஹன்ஸ் உள்ளிட்ட பல ஹிந்தி இதழ்களில் இவருடைய சிறுகதைகளும் கவிதைகளும் பிரசுரிக்கப்பட்ட உள்ளன. ஆகாசவாணி மற்றும் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக சிறுகதைகளும் கவிதைகளும் ஒலிபரப்பப்பட்டன. தற்போது மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக் கண்காணிப்பாளராக ஜார்க்கண்டின் ராம்கட் என்னும் ஊரில் பதவி வகிக்கிறார்.