கவிதை: நாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய கைகள் — சிந்துநாற்றில் கை வைக்க மட்டுமே பழகிய கைகள்

இன்றைக்கு உங்களின் லட்டியை கையாள்கிறது
வானம் பார்த்து விவசாயம் செய்தே பழகிய கண்கள்
இன்றைக்கு கண்ணீர்ப்புகைக்குண்டுகளை
பார்க்கிறது
குயில்களும் மயில்களின் சத்தம் கேட்டே பழகிய காதுகளை
இன்றைக்குத் தண்ணீர் பீரங்கிகள் துலைக்கின்றன
வயிற்றுக்கு உணவு அளித்தே பழகிய கருணை
இன்றைக்கு வீதியில் நின்று கையேந்தி பிச்சையெடுக்கிறது
சட்டம் நீதியை மட்டுமே தரும் என்று நம்பியிருந்த எங்களுக்கு
கார்ப்பரேட்க்கு மட்டுமே
சேவகம் செய்யும் என்பதை உணர்த்துகிறது
போராட்டம் எங்கள் விதை எங்களுக்கு கற்றுக் தந்த பாடம்
கட்டாயம் மீண்டுயெவோம்
விதையிலிருந்து செடிகளாக……
                                                  –சிந்து