நூல் அறிமுகம்: ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களின் *’சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’* – பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்‘கோழி’ ஒன்று ஒரு குவியலைக் கிளறிக் கொண்டிருந்தது.அப்பொழுது , அதில் ஒரு மண் வில்லை இருந்தது. மாணிக்கம் போல் மின்னியது பறவையின் கண்கள்.அதில் , தன்னைப் போன்ற ஒரு பறவையைக் கண்டு வியந்தது. உயிர் பெற்ற அந்தக் கோழி விர்ரெனப் பறந்து அந்தரத்தில் ஒரு சுற்று சுற்றி கீழே வந்து , நின்றிருந்த கோழியிடம் கூற ஆரம்பித்தது,

‘உனக்குத் தெரியுமா?நம் பெயரில் , அதாவது கோழியூர் என்ற பெயரில் சிந்துச் சமவெளியில் ஊர் இருந்தது. அதன் தொடர்ச்சியாக, உறையூரில் உள்ள கோவிலில் ஒரு புடைப்புச் சிற்பம் ஒன்று உள்ளது.தெரியுமா?’ என்றது.

‘என்ன, நாம் அந்த அளவு பாரம்பர்யம் உள்ளவர்களா?’ என்றது.
ஆம், அதனைப் பற்றி அறிவியல் பூர்வமாக, ஒரு நூல் உள்ளது.

நூலின் பெயர்: ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’
எழுதியவர்: ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அதிகாரி, இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளர்.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்.
பக்கம் : 174
விலை : ரூ.150                                                                

புத்தகம் வாங்க:  https://thamizhbooks.com/product/sindhuveli-panpattin-thiravida-adithalam-9981/

‘சரி, விசயத்திற்கு வருவோம்.

புத்தகத்தின் முக்கியச் சிறப்பு..
சிந்துசமவெளி விட்ட இடத்திற்கும் சங்க இலக்கியம் தொட்ட இடத்திற்குமான உள்ள வேர்நிலைத் தொடர்பு பற்றி விளக்கும் நூல். சிந்துசமவெளியின் ‘மேல்-மேற்கு:கீழ்-கிழக்கு’ என்ற இருமைப்பாகுபாடு , திராவிடப் பண்பாட்டுப் புவியியலின் தாக்கத்தாலான நேர் விளைவு என்கிறார்.உலகின் பல்வேறு நாடுகளில் புலங்கும் ஊர்ப்பெயர்களின் வழியான ஆராய்ச்சி நூல்.

இதற்கு அடிப்படையாக , மதுரைக்கு அருகே உள்ள கீழடியின் உன்னத பொருட்கள் கட்டியம் கூறுகிறது.
ஏன் கீழடி ?

கீழடியில்

தமிழகத்தில் தொன்மையான நகர்ப்பண்பாடு இருந்ததற்கான தடயங்கள் கிடைக்க ஆரம்பித்ததுள்ளது.
சிந்துசமவெளி மஹாராஷ்டிராவைத் தாண்டியுள்ளது, என்பதற்கான கட்டிடப் பொருட்கள் கிடைத்ததுள்ளது.
கீழடி , வேளாண்மை தாண்டி வணிகம் சார்ந்தும் உள்ளதாற்கான பொருட்கள்.
சமய வழிபாடிற்கான அடையாளங்கள் தூக்கலாக இல்லை.தமிழத் தொன்மங்களின் அணுகு முறையோடு இணக்கம் காட்டுகிறது.’

கேட்ட கோழி சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது.
பிறகு கேட்டது,
‘இந்த அளவிற்கு நாகரிகம் கொண்டவர்களை இனம் காண்பது, அகழ்வாராய்ச்சி செய்வது மிக முக்கியம்.

அதை விட முக்கியம் இதனை ஆராய்ச்சி நோக்கில் விளக்கி, வரைபடங்கள் மற்றும் தகவல்களை வடிவாக தகவமைப்பது. அதனை ஒரு அமைப்பிற்கள் புரியும் வண்ணம் கொண்டு வருவது. அதனை புவியியல் மற்றும் இலக்கியங்களோடு அறிவியல் பூர்வமாக ஒருங்கிணைப்பது. கருத்துகளை சார்பில்லாமல் எழுதுவது.
உதாரணத்திற்கு, இசை ஆய்வாளர் N Mammathu அவர்களின் வினாக்களுக்கு விளக்கம் கூறியதைக் கூறலாம்

அனைத்தையும் , உடன் அறிந்து கொள்ளும் வகையில் தகவல் மேசைகளாக வடிவமைப்பது. இந்த நூலின் ஒவ்வரு பக்கமும் சவாலான பணியாகவே நான் கருதுகிறேன் இந்த நூலின் ஆசிரியரின் உழைப்பும் நேர்மையான உணர்வும் புத்தகம் எங்கும் பரவியுள்ளது’ என்றது.

தொடர்ந்து, இது போன்ற நூல்கள் ஆங்கலத்தில் அதிகம் கிடைக்கும். தாய் மொழியில் கிடைப்பது என்பது அரிது. நமக்குத் தமிழில் இது போன்ற ஆய்வு நூல் வந்துள்ளது. ஒவ்வரு வரியிலும் அசிரியரின் உழைப்புத் தென்படுகிறது.

இன்னொரு முக்கியமான சங்கதி, உயர் அதிகாரி தான் சார்ந்த புலம் தாண்டி , இது போல் மக்களுக்கான நூல் எழுதுவது, சாதாரண மக்களை அவர்களுக்கு அருகில் சேர்க்கிறது. அந்தப் பணியானது, மக்களின் ஆட்சிக்கு , புரிதலின் வழியாக வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது
அந்த வகையிலும், இது போன்ற நிகழ்வுகள் , நமக்கு அத்யாவசியமாகிறது.

நாகரிகங்களின் அடுக்குகள் கீழே செல்லச் செல்ல பல பொதுப் புத்திக் கருத்துகளும் கட்டுமாணங்களும் உடைகிறது. பெருமை என்பது சாதாரண மனிதனில் தொடங்குகிறது.

அவனின் செயல்கள் நேசித்தலை மட்டுமே அடிப்படையாக் கொண்டது. அவன் நிலம் பிடிக்கும் பேராசக்காரனல்ல .
தொழில் பொருட்டே நகர்கிறான்.இயற்கைச் சீற்றத்திலிருந்து தப்பவே நகர்கிறான் போன்ற என் மன ஆசைகள் ஒரு நாள் உண்மையாகலாம்’ என்று கூறி முடித்தது கோழி.

இரண்டு கோழிகளுமே உரையாடலை முடித்து , இறக்கைகளை மகிழ்ச்சியோடு படபடவென அடித்தது.

அருகே இருந்த கேட்ட எனக்கு , அந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. புத்தகம் கிடைக்க உதவினார் Muthusamy Jeya Prabakar

………….
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். ஆழமும் எளிமையும் , நல்ல புரிதலை நோக்கிய புத்தகம். தரமாக அச்சடிப்பட்டுள்ளது. தாளும் தரம்.புத்தகமும் தரம்.

ஆசிரியர் அவர்களுக்கு பேரன்பு!

பொன்னம்பலம் காளிதாஸ் அசோக்
இரயில்வே துறை
மதுரை

முக நூல் பதிவு