Subscribe

Thamizhbooks ad

தொடர் 8: சிறகுகளோடு சில நிமிடங்கள் (கரிச்சான்கள் (Drongo’s)) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் நாம் எல்லோரும் சாதாரணமாய் காண்பதுதான் இந்தக் குருவிகள்.. மீன் துடுப்பு போன்ற வாலினைக் கொண்டிருக்கும்.. கரிய நிறம் கொண்ட பறவை ..மின்கம்பிகளில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும்..திடீரென பறந்துசென்று பூச்சியைப் பிடித்துவந்து அதே இடத்தில் அமர்ந்து உண்ணும்..(பஞ்சுருட்டான் பற்றி சொல்லும்போது இந்தமாதிரியே இரை பிடிக்கும் என சொல்லியிருக்கிறேன்..நினைவிருக்கிறதா?) சில சமயம் ஆடு, மாடுகளின் முதுகில் ஓ.சி. சவாரி…அப்படியே கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபட்டிருக்கும் போது மேலிருக்கும் பூச்சிகளை பிடித்துத் தின்பது…

இந்த காகத்துக்கும் அதுங்களுக்கும் என்னங்க சண்டை? சதா விரட்டி விரட்டி கொத்திகிட்டே இருக்கே! அவ்வளவு பெரிய காகம்கூட இத்தனை சிறிய குருவியைப்பார்த்து பறந்து ஓடுதே!
இவருதாங்க… நாம இன்றைக்குப் பார்க்கப்போகிற கதையோட ஹீரோ!
கரிச்சான்கள்…

நம்ம பகுதியில் என்னென்ன கரிச்சான்கள் பார்க்கலாம்? பார்க்கும் வாய்ப்பிற்கு ஏற்ப வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

1.கருங்கரிச்சான் ( Black Drongo – விலங்கியல் பெயர் Dicrurus macrocerus)
2.துடுப்புவால் கரிச்சான் ( Greater Racket-tailed Drongo – விலங்கியல் பெயர் Dicrurus paradiseus)
3.வெள்ளைவயிற்றுக் கரிச்சான் ( White – bellied Drongo – விலங்கியல் பெயர் Dicrurus caerulescens)
4.கரும்பச்சைக் கரிச்சான் ( Bronzed Drongo – விலங்கியல் பெயர் Dicrurus aeneus)
5.கொண்டைக் கரிச்சான் ( Spangled Drongo / Hair-crested Drongo – விலங்கியல் பெயர் Dicrurus hottentottus)
6.சாம்பல் கரிச்சான் ( Ashy Drongo – விலங்கியல் பெயர் Dicrurus leucophaeus)
இனி எப்படி அடையாளப்படுத்துவதுன்னு பார்ப்போம்!

6 வகையான கரிச்சான்கள் இருந்தாலும் கருங்கரிச்சான் மட்டுமே இந்தியா முழுவதும், கிராமம் , நகரம் என எல்லா இடங்களிலும் காணக்கிடைக்கிறது.
மற்றவற்றை பார்க்கும் வாய்ப்பு குறைவு எனினும் தனித்த சில அடையாளங்களைக் கொண்டு உங்களுக்கு எல்லா கரிச்சான்களையும் எப்படிக் காண்பது எனச்சொல்கிறேன்..

Image
கருங்கரிச்சான் ( படம் – வை.கலைச்செல்வன்)

கருங்கரிச்சான் பரவலாக காணப்படுகிறது.குடியிருப்புப் பகுதியிலும் நீங்கள் பார்க்கலாம்..கருப்பா இருப்பதால “கருங்குருவி”, மீன் துடுப்பு போல வாலின் இறுதியில் இருப்பதால் “கருவாட்டு வாலி”, மாடு கூடவே சுத்துறதால “மாடுமேய்ச்சான்”, வால் பிளந்து இரண்டாக இருப்பதால ” இரட்டைவால் குருவி” இப்படி பல பெயர்கள் இவருக்கு.

Image
ஜாலியாய் ஒரு சவாரி- கருங்கரிச்சான் ( படம் – வை.கலைச்செல்வன்)

விடியற்காலை சேவலுக்கு முன்னாடியே எழுந்து குரல் கொடுக்கும் பழக்கம் இருக்கு.
“கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சாலும் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே” என்கிற ஆண்டாள் திருப்பாவையில் ஆனைச்சாத்தன் என்பதை தனது முதல் நூலான ‘தமிழ்நாட்டுப் பறவைகள்’ என்னும் நூலில் கருங்கரிச்சான் என்று சொல்கிறார் முனைவர்.க.ரத்னம் அவர்கள்..

இவரே பின்னாளில் எழுதிய ‘தமிழ்ச்செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்’ என்னும் நூலில் ஆனைச்சாத்தன் என்பதை “துடுப்புவால் கரிச்சான்” என்ற மாற்றுக்கருத்தையும் வைக்கிறார்.
எனக்கென்னவோ பெரும்பரவலும், நம்மிடையே கலந்துபழகும் இயல்பினை நோக்குங்கால் ஆனைச்சாத்தன் என்கிற சொல் ‘கருங்கரிச்சானையே’ (Black Drongo) குறிக்கும் என்பது எனது கருத்து இரண்டாவதாயுள்ள துடுப்புவால் கரிச்சான், வால்பகுதியில் இரண்டு மெல்லிய கம்பி நீண்டவால் கொண்டு, இறுதியில் துடுப்புபோல திரும்பி நிற்கும்..தலையில் பின்னோக்கி அமைந்த சிறிய கொண்டையுண்டு.

Image
துடுப்புவால் கரிச்சான் ( படம் – வை.கலைச்செல்வன்)

பார்ப்பதற்கு பெரிய உருவமாய் இருக்கும்.காட்டுக்கு உள்ளேயேயும், காட்டை ஒட்டியுள்ள சமவெளிப்பகுதியிலும் கண்டிருக்கிறேன்…பெரும்பாலும் இணையாக..பயங்கரமாய் குரலை மாற்றி மாற்றி மிமிக்ரி செய்து கொண்டேயிருக்கும்…ஏற்காடு மலைப்பகுதியில் துடுப்புவால் கரிச்சான் ஒரு முறை பூந்தாதினை பருகக் கண்டேன்..

Image
பூந்தாது பருகும் துடுப்புவால் கரிச்சான் ( படம் – வை.கலைச்செல்வன்)

வெள்ளை வயிற்றுக் கரிச்சான், நெஞ்சுப் பகுதியில் கருஞ்சாம்பல் நிறத்தில் தொடங்கி முடிவில் வெள்ளை நிற வயிறையுடையது.சிறிய உருவம்தான்..இதுவும் பெரும்பாலும் மலைகள், மலைகளில் அமைந்த கிராமப் பகுதிகளில் சாதாரணமாய் காணக்கூடியதாகவும் உள்ளது.(இளம்பருவ கருங்கரிச்சான் black drongo பறவைக்கும் வயிற்றுப் பகுதியில் கருப்பு, வெள்ளையாக புள்ளிகள் காணப்படும் என்பதை நினைவில் கொள்க)

Image
வெள்ளை வயிற்றுக் கரிச்சான் ( படம் – வை.கலைச்செல்வன்)

மிளிரும் கரும்பச்சைக் நிறம் கரும்பச்சைக் கரிச்சானின் தனித்த அடையாளம்..

Image
கரும்பச்சைக் கரிச்சான் ( படம் – வை.கலைச்செல்வன்)

கண்ணுக்குப் பக்கத்திலும் , கண்ணைச்சுற்றிலும் இந்த மினுக்கல் இருக்காது..கருப்பாகவே இருக்கும்..உச்சந்தலையிலிருந்து கீழிறங்கி இறக்கைகளின் மேல்பகுதியில் மற்ற கரிச்சான்களை விட ஜொலிக்கும் அந்த கரும்பச்சை நிறத்தை காணலாம்..வால் குட்டையானது.அவ்வளவாய் பிளவுபடாதது.Bronzed எனப் பெயர் வரக்காரணம் அதன் நிறமே..மலை ஓடைகளில் அமைந்துள்ள பெருமரங்களில் சுறுசுறுப்பாய் இரை பிடித்து உண்பதைக் கண்டுள்ளேன்.
கொண்டைக் கரிச்சான் Spangled Drongo/ Hair crested drongo உச்சந்தலையில் தொடங்கி பின்னோக்கி வளர்ந்துள்ள தனித்த தூவிகளை உடையது.(துடுப்பு வால் கரிச்சானுக்கும் இது இருக்கும் எனினும் அது சுருண்டபடி நீளம் மிகக் குறைவாய் தலையை ஒட்டியபடி இருக்கும்).ஆனால் இதற்கு மெல்லியதாய் சில சென்டி மீட்டர்கள் கம்பி போல வளர்ந்து தொங்கும்.வால்பகுதி அகலமாயும், இரண்டுபுறமும் மேல்நோக்கி சுருண்டும் காணப்படும்..அலகானது மற்ற கரிச்சான்களை ஒப்பிடும் போது நீளம் அதிகமாகவும், கொஞ்சமாய் கீழ்நோக்கி வளைந்தமாதிரியும் உள்ளது.

Image
கொண்டைக் கரிச்சான் (படம் -திருமலை RT வெங்கட்ராமன்)

கடைசியா இருப்பவன், உள்ளூர் வலசைக்காரன்..சாம்பல் கரிச்சான்..
பளீரென கருப்பாக இல்லாமல் உடல் முழுமைக்கும் சாம்பல் கலந்த கருப்பு நிறம், சிவப்புக் கண்களும் தனித்த அடையாளம். இதனை ‘சிலேட் கருப்பு’ என்று கூறலாம். குளிர்காலத்தில் இமயமலையிலிருந்து வருகை தருபவன்.இங்கு வந்தாலும் கண்ட இடங்களில் சுற்றாமல், மலைக்காடுகளுக்குச் சென்று விடுவான்…எனவே இவனையும் நீங்கள் மலைகளில் மட்டுமே காண இயலும்…

Image
சாம்பல் கரிச்சான் – ( படம் – வை.கலைச்செல்வன்)

கரிச்சான்கள் அனைத்துமே கூடுகட்டி முட்டையிடுபவையே..பெண்பறவை அடைகாக்கும் பொழுதில் காவலுக்கு இருக்கும் ஆண்பறவை கூடருகே மற்ற பறவைகள் வந்தால் விரட்டியடிக்கும்… எனவே அதன் கூட்டருகே வரும் பறவைகளை துரத்தி விரட்டிக் கொண்டே இருக்கும்..அதனால்தான் பொதுவாகவே சில பறவைகளுக்கும் கரிச்சான்களுக்கும் சண்டை வந்துகொண்டே இருக்கிறது.

இவரெல்லாம் சேவல், காகத்துக்கும் முன்னமே எழுந்து நம்மையும் எழுப்பி விட்டுவிடுவார்..
ஊர்ப்புறத்தில் நம்மிடையே வாழும் பறவைகளில் அதிகளவில் பூச்சிகளை உண்டு கட்டுக்குள் வைத்திருக்கும் பறவைகளில் இது முதலிடம் பிடிக்கிறது..

இயற்கை எல்லாவற்றிற்கும் சமநிலையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது..எது ஒன்றிற்கு ஆபத்தில்லையோ அது பல்கிப் பெருகி இயற்கைச் சமநிலையை சீர்குலைக்கிறது.வயல்களில் வெட்டுக்கிளிகள், பூச்சிகள், புழுக்கள் இவற்றை அழிக்க நாம் பயன்படுத்தும் இரசாயன மருந்துகள், அதனை உட்கொள்ளும் அனைத்து பறவைகளுக்குமே எமனாய் முடிந்து விடுகின்றன…

கரிச்சான்களைக் கூட கணிசமான அளவு பார்க்க முடியாததே அதற்குச் சாட்சி..!
அடுத்த கட்டுரையில் சந்திப்போம் நண்பர்களே!

அன்புடன்,
வை.கலைச்செல்வன்,
E,mail: [email protected]

Latest

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 4 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 4 கூட்டாஞ்சோறு அரங்கு –...

நான் ரசித்த கவிஞர்கள் – 1 : ஷெல்லி – தங்கேஸ்

மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஷெல்லி - பகுதி 1 தமிழில் - தங்கேஸ் ஷெல்லி (1792-1882) ஆங்கிலக்...

இரா. மதிராஜ் கவிதைகள் 

1 இந்த பூக்கள் மட்டும் எப்படி ? நல்லது, கெட்டதுக்கு என இரு வாசனையை கொடுக்க முடிகிறது ? 2 அந்த வளர்பிறையைச் சுற்றி வரையப்...

நூல் அறிமுகம்: சுளுந்தீ – அ.ம. அங்கவை யாழிசை

நூல்: சுளுந்தீ நூலாசிரியர்: இரா.முத்துநாகு வெளியீடு: ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை. பதிப்பு: எட்டாம் பதிப்பு, செப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டுத் தொடர் கட்டுரை – 4 – கவிஞர். எஸ்தர்ராணி

கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 4 கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம். காளியும் கூளியும் காக்கவில்லை: இந்த பூமி சூரியனைச் சுற்றுகிறதா இல்லை சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றதா என்று கேட்டால்...

நான் ரசித்த கவிஞர்கள் – 1 : ஷெல்லி – தங்கேஸ்

மொழிபெயர்ப்புக் கவிதைகள் ஷெல்லி - பகுதி 1 தமிழில் - தங்கேஸ் ஷெல்லி (1792-1882) ஆங்கிலக் கவிஞர் ஒரு நூற்றாண்டு உதடுகளால் உச்சரிக்கப்பட்ட பெயர் புரட்சிக்கவிஞன் ஷெல்லியினுடையது. முப்பது ஆண்டுகளே உயிர்த்திருந்த அந்த கவிஞனின் படைப்புகள் மூவாயிரம் ஆண்டுகள் தாண்டியும்...

இரா. மதிராஜ் கவிதைகள் 

1 இந்த பூக்கள் மட்டும் எப்படி ? நல்லது, கெட்டதுக்கு என இரு வாசனையை கொடுக்க முடிகிறது ? 2 அந்த வளர்பிறையைச் சுற்றி வரையப் பட்டிருக்கும் மேகக் கூட்டங்கள் நிலாவுக்கான பின்புலத்தை ஏதோ ஒரு வகையில் அழுத்தமாகத் தான் காட்டுகிறது, 3 சுழன்றடிக்கும் அந்த எதிர்க் காற்றை எதிர்த்து தென்னை மரத்தின் கீற்றுகள் அனைத்தும் ஒற்றுமையாக தான் போராடுகிறது, என்னே இத்தனைப் பெரிய வானம் வெறும் வேடிக்கை மட்டும் தானேப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here