சிறுகதை : சிறு தொடக்கமே சால வெற்றி – மு. வனிதா

சிறுகதை : சிறு தொடக்கமே சால வெற்றி – மு. வனிதா

 

 

 

என் பெயர் மு வனிதா. நான் கல்லூரியில் வரலாற்று துறையில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறேன். நான் 12 ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்த தருணமது. 2020 கொரோனா ஆரம்ப உச்ச நிலையில் இருந்த சமயம் என் அம்மா ஊரடங்கு காரணமாக ஓட்டல் வேலைக்கு செல்வதை நிறுத்தினார். உண்ணும் உணவிற்கே வறுமை சூழ்ந்ததால் நான் பூக்களை தொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தேன் ஒரு மாதத்தில் 500 ரூபாய் சம்பாதித்தேன். அதில் தான் என் வீட்டு வாடகை மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் சந்தையில் சென்று என்னம்மா வாங்கி வந்தார்.

இந்த வறுமையில் வாழ்ந்திருந்த குடும்பம் அது. சில நாட்களுக்குப் பிறகு என் அம்மா உடல் நிலை குறைவால் என் கண் முன்னே இறந்தார். என் இதய துடிப்புகள் சில வினாடிகள் நின்றிருந்ததை உணர்ந்த நொடிகள் அவை. அப்பாவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களை விட்டு விட்டு சென்றுவிட்டதாலும் எனக்கு ஒரு தங்கையும் இருந்தாள்.

சொந்தக்காரர்கள் யாரும் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பு கருதி சென்னை அடையாறில் உள்ள அவ்வை இல்லத்தில் என்னையும் என் தங்கைக்கும் இறைவன் அருளால் உண்ண உணவும் இருக்க இருப்பிடமும் தடையின்றி பயில படிப்பிற்கான வசதியும் கிடைத்தது.

இதற்கு உதவி புரிந்த எமது மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எம் இருவரது நன்றிகள்! இருப்பினும் அவ்விரண்டு ஆண்டுகள் யாம் இருவரும் மனதளவில் மிகுந்த வருத்தம் நிறைந்திருந்தது அம்மாவின் பிரிவு, அங்குள்ளவரின் பேச்சுக்கள் என பல இதில் எனக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது.

எனது வாழ்வின் மிக முக்கிய திருப்புமுனை நான் யார் என நான் உணர்ந்த நாள் ஒன்று தொடங்கியது. அங்குள்ள காலாவதியான பொருட்கள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் நேரமே ஆகும் மேலும் இதைப்பற்றி பலரிடம் உரையாடினேன்.

இவ்வாறான காலாவதியான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன என்றதும் அவர்கள் என்னிடம் கூறியது, அவ்வாறு கொடுப்பது வழக்கமானது இதை கண்டு கொள்ளாதே! விட்டுவிடு! தேவையில்லாத பிரச்சினை வரும் என்றனர்.

இருப்பினும் என் மனமானது அதை ஏற்று கொள்ளாததால் , ஒரு நாள் காலைபொழுதில் காரியதரசி அவர்களிடம் சென்று இவ்வாறு உரையாடினேன்.

நான்: “குட் மார்னிங் மேம். இங்கு காலாவதியான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.இது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றேன்”.

காரியதரிசி: “நிச்சயமாக இருக்காது, நான் நம்ப மாட்டேன்! அதன் பொறுப்பாளர் அவ்வாறு செய்ய மாட்டார் என்றும் மேலும் எனக்கு ஆதாரங்கள் காண்பி என்றார்”.

(கோபத்துடன்) நான் சரி என்று வந்து விட்டேன். (மனதில் வருத்தத்துடனும் கோபத்துடனும் நினைத்தேன் உணவுக்கிடங்கை திறந்து பார்த்தாலே தெரிந்து விடும் என்று )

அதன் பிறகு பச்சிளம் குழந்தை முதல் பெரியவர் வரை அந்த காலாவதியான உணவு பொருட்கள் உண்பதை பார்த்தேன். அதனால் ஆதாரத்திற்காக திட்டமிட்டு, தினம் வழங்கும் உணவுப் பொருட்களை குறிப்பேட்டில்

1.காலாவதியான உணவுப் பொருள் வழங்கிய நாள்

2.காலாவதியான் முடிந்த நாள் என்று குறிப்பிட்டு எழுதி வைத்தேன்.

சமையல் செய்த பிறகு போடும் குப்பைத் தொட்டியில் உள்ள நெகிழிப்பைகளை ஆராய்ந்து பார்த்தேன்.

அந்த குறிப்பேட்டில் தொடர்ந்து பத்து நாட்கள் காலாவதியான பொருட்களை தனியாக ஒரு பையிலும் அதன் விவரங்களையும் எழுதி வைத்தேன். இது நடப்பதற்கு முன் அந்த உணவுப் பொருட்கள் வழங்கும் போதும் நானும் வாங்கினேன்.

தேதிகளை பார்த்தேன். என் தங்கை தேநீரில் தொட்டு தின்ன பிஸ்கட் துண்டுகளை விரும்பிய போது அதை தட்டி விட்டு, அவளை அழைத்துக் கொண்டு அந்த பொறுப்பாளரிடம் சென்றேன். இரு பாக்கெட்டுகளையும் அவர்களிடம் தந்து இதை வேண்டாம் என்று சொன்னேன்.

அவர் வேறு பிஸ்கட் பாக்கெட்டுகள் தர முடியாது என்று சொன்னார். நான் அவர்களிடம் அந்த காலாவதியான தேதியை குறிப்பிட்டு இதை தின்றால் உடலுக்கு கேடு! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன்.

பிறகு நம் உலகில் ஏற்கனவே உணவில் கலப்படம் சேர்க்கப்படுதலும் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஆகும். இதிலும் அந்த உணவுப் பொருட்களை உணவுக் கிடங்கில் வைத்து பல நாட்கள் கழித்து கொடுப்பது உடலுக்கு மெல்ல கொள்ளும் நஞ்சு என்று எண்ணங்களின் ஓட்டம்.

அப்பொழுது எங்கள் இல்லத்திற்கு ஏதோ ஒரு வழக்கு சம்பந்தப்பட்ட வழியில் காயத்ரி என்ற பெண்ணும் வந்திருந்தால் அவளிடமும் இதைப் பற்றி கூறினேன் அவள் எனக்கு உதவுகிறேன் என்று சொன்னால். சில நாட்களுக்குப் பிறகு அவள் உடனடியாக அவ்வில்லத்திலிருந்து செல்ல தயாரானாள்.

அதனால் இவ்வில்லத்தின் காரியதரிசி என்ன பிரச்சனை காரணமாக செல்கிறாய்? என கேட்டார். அதற்கு அவள் அங்கு காலாவதியான உணவுப் பொருட்கள் வழங்குகின்றன என்று கூறினால் அதற்கு அவரே ஆதாரங்களை கேட்க அவள் என்னை நோக்கி வந்தாள். இதை எண்ணி மிகுந்த சந்தோஷத்தில் இருவரும் சென்று காரியதரிசி அவர்களிடம் எனது குறிப்பேட்டையும் நெகிழி பையில் உள்ள காலாவதியான பொருட்களோடும் சென்று பேசினோம்.

நான் அவர்களிடம், நான் இதைப் பற்றி உம்மிடம் ஏற்கனவே பேசினேன் தாங்கள் என்னை நம்பாமல் ஆதாரத்தை கேட்டீர்கள் அதனால் கொண்டு வந்து மேலும் கொடையாளர்களும் யாரும் காலாவதியான பொருட்கள் வழங்கவும் இல்லை என்று கூறினேன். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்லி சொன்னேன்.

ஆனால் காரியதரிசி அவர்கள் தயங்க துணைக் காரியதரசி அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் எனது குறிப்பேட்டை புகைப்படம் எடுத்துக் கொண்டனர் மேலும் பிறகு சோதனை இட்டதில் கிட்டத்தட்ட மூன்று நான்கு அட்டை பெட்டிகள் நிறைய காலவதியான பிஸ்கட்டு மற்றும் மிட்டாய் பாக்கெட்கள் வெடித்து உமிழ்ந்து சேர்ந்து பிசுபிசு என்ற நிலைமையிலும் இருந்தன.

அனைத்தும் வெளியேற்றப்பட்டன. நீங்கள் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள் ஒரு சிறிய ஹமாம் சோப் காலாவதியாகி 15 ஆண்டுகள் பிறகு பயன்பாட்டிற்கு என்னிடம் வந்தது.

முடிவாக எனது ஒரு சிறிய நன் முயற்சியாக கருதுகிறேன் மற்றும் ஏழை குழந்தைகளாகிய எங்களைப் போன்றோருக்கு இவ்வாறான காலாவதியான உணவுப் பொருட்கள் வழங்குவது நிறுத்த ஆசைப்பட்டேன் நான் எப்பொழுதும் அங்குள்ள தோழியிடம் பேசினாலும் காலாவதியான பொருட்கள் வழங்கப்படுகிறதா அல்லது இல்லையா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வேன்.

இதுவரை அந்த மாதிரியான காலாவதி பொருட்கள் வழங்கவில்லை என்று சொல்லுவாள். மேலும் இதைத் தவிர அவ்வில்லம் எமக்கு பல அனுபவங்களையும் ஆங்கிலம் கற்றுத் தந்தது, பொது அறிவு ஒழுக்கம் என்று பல விஷயங்கள் மெருகேற்றி எம்மை இரண்டு ஆண்டுகள் வளர்த்தது.

நான் இவ்வாறு செய்தது நல்லது என்று அல்ல சரியென கூட நினைக்காமல் பலரும் திட்டவும் மனதை காயப்படுத்தவும் செய்தனர்.

பெரும்சக்தியும் மற்றும் தகுதிவுள்ளவை வாழ்வில் தப்பிக்கும் என முடிக்கிறேன்.

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *