Subscribe

Thamizhbooks ad

சிறுகதை: ஒரு குள்ளநரியின் சாகசங்கள் – கே.என்.சுவாமிநாதன்

வன மிருகங்கள் நிறைய இருந்த காட்டில், ஒரு குள்ளநரியும், முள்ளம்பன்றியும் நண்பர்களாக இருந்தார்கள். ஒரு நாள் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது குள்ளநரி சொல்லியது “அருகில் ஒரு கொட்டகை முழுவதும் சோளம் வைத்திருக்கிறார்கள். நாம் சென்று பசியாற சாப்பிடுவோம்” என்றது.

இரண்டு மிருகங்களும் கொட்டகைக்குச் சென்றன. குள்ளநரி காலணி அணிந்திருந்தது. சத்தம் போடாமல் இருக்க காலணியைக் கழற்றி விட்டு முள்ளம்பன்றியுடன் கொட்டகையில் நுழைந்தது. இருவரும் வயிறு முட்ட சோளம் தின்று விட்டு வெளியே வந்தார்கள். குள்ளநரி காலணி அணிந்து முள்ளம்பன்றியுடன் நடந்து சென்று கொண்டிருந்தது.

காட்டில் கொஞ்ச தூரம் சென்றதும் எதிரே சிறுத்தை ஒன்று வந்தது. மிகவும் பணிவாக குள்ளநரியிடம், “உங்களுடைய காலணி மிகவும் நன்றாக இருக்கிறது. இதை செய்தவர் யார் என்று சொல்ல முடியுமா?” என்று கேட்டது. “ஆமாம், உண்மையிலேயே இந்த காலணி நல்ல காலணி. நான் தான் இந்தக் காலணியைச் செய்தவன்” என்றது குள்ளநரி.

“எனக்கும் இது போன்ற காலணி செய்து தர முடியுமா?” என்று கேட்டது சிறுத்தை.

“செய்ய முடியும். ஆனால், அதற்கு பசுவின் தோல் வேண்டும். நீங்கள் ஒரு பசுவைக் கொல்ல வேண்டும். நாங்கள் அதன் மாமிசத்தை சாப்பிட்டு முடித்தவுடன், பசுவின் தோலைக் கொண்டு காலணி செய்து தருவேன்” என்றது.

சிறுத்தை பசுவைத் தேடிச் சென்றது. பசுக் கூட்டத்திலிருந்து பிரிந்து தனியாக பசு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அதன் மீது பாய்ந்த சிறுத்தை பசுவைக் கொன்றது. பின்னர் பசு இருந்த இடத்திற்கு வரச் சொல்லி நரியைக் கூப்பிட்டது. குள்ளநரியும், முள்ளம்பன்றியும், பசு மாமிசத்தை திருப்தியாக உண்டனர். அதற்குள் இரவு நெருங்க, இரண்டு மிருகங்களும், உண்ட களைப்பிற்கு நன்றாக உறங்கின.

காலையில் எழுந்து குள்ளநரி காலணி செய்ய ஆரம்பித்தது. அருகில் அமர்ந்து சிறுத்தை ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது. காலணி தயாரித்து முடிந்ததும் சிறுத்தையைக் கூப்பிட்டு, “காலணியை சூரிய வெய்யிலில் வைக்க வேண்டும். சில மணி நேரங்களில் காலணி அணிவதற்குத் தயாராக இருக்கும். காலணி வெய்யிலில் காயாமல் முன்னரே அணிந்தால், உன்னுடைய காலுக்கு மிகவும் தொல்லையாக இருக்கும். வெய்யில் கடுமையாவதற்குள் நாங்கள் கிளம்புகிறோம்” என்று சொல்லி குள்ளநரி புறப்பட்டுச் சென்றது.

சிறுத்தை, யார் எதைச் சொன்னாலும் நம்பி விடும். குள்ளநரி சொன்னது போல, இரண்டு மணி நேரம் கழித்துக் காலணியை காலில் அணிந்து கொண்டது. காலணி தன்னுடைய பாதங்களுக்கு அழகாக இருக்கிறது என்று பெருமிதம் கொண்டது. ஆனால், நடக்க ஆரம்பித்தவுடன் கால் மிகவும் வலிக்க ஆரம்பித்தது. காலணி மிகவும் கடினமாக இருந்தது காலிலிருந்து கழட்டவும் முடியவில்லை. வலி பொறுக்காமல் சிறுத்தை அழ ஆரம்பித்தது.

அந்த வழியாக கௌதாரி பறவைகள் சில வந்தன. சிறுத்தை கௌதாரி பறவைகளை வேட்டையாடாது. ஆகவே அந்தப் பறவைகள் நல்ல நண்பனாக சிறுத்தையுடன் பழகும். சிறுத்தையின் அருகில் சென்ற கௌதாரி, “நீ மிகுந்த வலியில் துடிக்கிறாய் என்று தெரிகிறது. என்ன உதவி வேண்டும், சொல்” என்றது

“குள்ளநரி எனக்கு இந்தக் காலணியை செய்து கொடுத்தது. இவை கடினமாகவும், இறுக்கமாகவும் உள்ளது. இதை அணிந்து நடக்க முடியவில்லை. காலிலிருந்து இந்தக் காலணிகளை கழட்டவும் முடியவில்லை” என்றது.

“கவலைப்படாதே, கடினமானதை நாங்கள் மிருதுவாக மாற்றுகிறோம்” என்று சொல்லியது கௌதாரி. பறவைகள் தங்கள் அலகினால், அருகிலிருந்த ஆற்றிலிருந்து நீர் எடுத்துக் கொண்டு வந்து காலணிகள் மீது ஊற்றியது. தோல் மிருதுவாக மாறும் வரை காலணிகள் மீது பறவைகள் நீர் ஊற்றின. தோல் மிருதுவானதும், சிறுத்தை காலணியைத் தன் கால்களிலிருந்து சுலபமாக எடுத்து விட்டது. உதவி செய்த நண்பர்களுக்கு நன்றி சொல்லித் தன்னை ஏமாற்றிய குள்ளநரியைத் தேடிச் சென்றது சிறுத்தை.

குள்ளநரியின் காலடியை பின்பற்றித் தேடிச் சென்றது சிறுத்தை. சிறுத்தை தன்னைத் தேடி வரும் என்று எதிர்பார்த்த குள்ளநரி காட்டில் குறுக்கும், நெடுக்கும் ஆக நடந்து சென்றது. வெகு நேரத் தேடலுக்குப் பின் குள்ளநரியைப் பார்த்தது சிறுத்தை. அதே நேரத்தில் குள்ளநரியும் சிறுத்தையைப் பார்த்து விட்டது. குள்ளநரியைத் தாவிப் பிடிக்க அதன் மீது சிறுத்தை பாய்ந்த அதே நேரத்தில், குள்ளநரி புதருக்குள் தாவி மறைந்து விட்டது.

குள்ளநரியை நழுவ விட்டு விட்டோம் என்று சிறுத்தைக்கு பயங்கர கோபம். எவ்வாறு அதைப் பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, ஒரு மனிதன் வந்தான். அவனிடம் தன்னுடைய கதையைக் கூறிய சிறுத்தை, குள்ளநரியைப் பிடிக்கும் உபாயம் ஒன்றைக் கூறும்படிக் கேட்டது.

“நீ ஒரு பசுவைக் கொன்று எல்லாக் குள்ளநரிகளையும் விருந்திற்கு கூப்பிடு. குள்ளநரிகள் சாப்பிடும் போது அவர்களைக் கவனித்துப் பார். எல்லாக் குள்ளநரிகளும் தாங்கள் சாப்பிடும் மாமிசத்தின் மீது கண்ணாக இருப்பர். ஆனால், நடு நடுவே நீ என்ன செய்கிறாய் என்று எந்தக் குள்ளநரி உன் பக்கம் தலையைத் திருப்புகிறதோ, அது தான் உனது எதிரி” என்று சொல்லியது.

பசுவைக் கொன்று விட்டு, விருந்திற்கு வருமாறு எல்லாக் குள்ளநரிகளுக்கும் தன்னுடைய நண்பர்கள் கௌதாரி மூலம் செய்தி அனுப்பியது சிறுத்தை. குள்ளநரிகள் எல்லாம் ஒன்று போல இருந்ததால் தன்னுடைய எதிரியை, சிறுத்தையினால் அடையாளம் காண முடியவில்லை. விழுந்து விட்ட மரக்கிளைகளின் அருகே விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இறந்த பசுவை நடுவில் வைத்து அதைச் சுற்றியும் மர இருக்கைகள் போடப் பட்டிருந்தன. மர இருக்கைகளில் அமர்ந்திருந்த குள்ளநரிகள் நடுவிலிருந்த பசு மாமிசத்தை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு குள்ளநரி மட்டும் அடிக்கடி சிறுத்தை இருக்கும் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. எதிரியை கண்டு பிடித்து விட்ட சிறுத்தை எதிர்பாராத நேரத்தில் பாய்ந்து குள்ளநரியின் வாலைப் பிடித்துக் கொண்டது. அருகிலிருந்த கத்தியை எடுத்து தன்னுடைய வாலை வெட்டி விட்டு குதித்து காட்டுக்குள் சென்று விட்டது குள்ளநரி. அதனுடன் மற்ற குள்ள நரிகளும் காட்டிற்குள் தாவிச் சென்று விட்டன.

“இனி என்ன செய்வது, குள்ளநரியைப் பிடிக்க” என்று மனிதனைக் கேட்டது சிறுத்தை.

“இங்கிருந்து சில தூரம் தள்ளி முலாம் பழத் தோட்டம் இருக்கிறது. குள்ளநரிகளுக்கு முலாம் பழம் பிடிக்கும். இங்கிருந்து போன குள்ளநரிகள் அங்கு தான் இருக்கும். அங்குள்ள குள்ளநரிகளில்  ஒன்றிற்கு வாலிருக்காது. அது தான் உன்னுடைய எதிரி.” என்றான் மனிதன்

சிறுத்தை தன்னைத் தேடி வரும் என்று எதிர் பார்த்தது குள்ளநரி. மற்ற நரிகள் முலாம் பழத்தைத் தின்று கொண்டிருக்கும் போது, அவர்களின் பின்னால் சென்று வால்களை ஒன்றுக்கொன்று இணைத்துக் கட்டி விட்டது. எங்கிருந்தோ சத்தம் கேட்டவுடன் “கவனம், தோட்டக்காரன் வருகிறான்” என்று குரல் கொடுத்தது நரிகள் நாலா பக்கமும் ஓட அவற்றினுடைய வால்கள் அறுந்து விழுந்தன. சிறுத்தை வந்து பார்த்த போது வாலில்லாத நரிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. சிறுத்தை அதனுடைய எதிரியை கண்டு பிடிக்க முடியவில்லை.

“குள்ளநரிகள் எல்லாம் வாலை இழந்து விட்டன. இனி என்னுடைய எதிரியைக் கண்டு பிடிப்பது கஷ்டம். நான் என்னுடைய வேலையைப் பார்க்கப் போகிறேன்” என்று சிறுத்தை சென்று விட்டது.

இனி என்னை அடையாளம் கண்டு கொள்ள சிறுத்தையால் முடியாது என்று மகிழ்ந்த குள்ளநரி, தன்னுடைய நண்பன் முள்ளம்பன்றியைத் தேடிச் சென்றது. “என்னுடைய வால் போய் விட்டது. எல்லாக் குள்ளநரிகளின் வாலும் போய் விட்டது” என்று நண்பனிடம் சொன்னது.

“எனக்கு ஆட்டுக்கறி சாப்பிட ஆசையாக உள்ளது. ஆடு மேய்ப்பவனிடமிருந்து ஒரு ஆடு வாங்கி வரலாம்” என்று ஆடு மேய்ப்பவனிடம் கூட்டிச் சென்றது.

“எனக்கு பழுத்த ஆடு ஒன்று வேண்டும். உனக்குப் பணம் தருகிறேன்” என்று ஆடு மேய்ப்பவனிடம் கேட்டது.

“நீ நாளை வரை காத்திருக்க வேண்டும். சிறிது தொலைவில் ஒரு பழுத்த ஆடு மேய்வதற்கு வரும். அதைப் பிடித்துத் தருகிறேன்.” என்றான் ஆடு மேய்ப்பவன். “சரி, ஒரு நாள் காத்திருப்போம்” என்று குள்ளநரி தன் நண்பனுடன் அருகிலுள்ள குகைக்கு இரவை கழிக்கச் சென்றது.

குள்ளநரி, முள்ளம்பன்றியுடன் சென்றவுடன், ஆடு மேய்ப்பவன் தன்னிடம் உள்ள ஆடு ஒன்றை வெட்டி, அதன் தோலை உரித்து, அவனுடைய வேட்டை நாயின் மீது வைத்துத் தைத்தான். வேட்டைநாயை மரத்தில் கட்டி வைத்தான்.

காலை எழுந்ததும், குள்ளநரி ஆடு மேப்பவனை எழுப்பி, கொழுத்த ஆடு எங்கே என்று கேட்டது. மரத்தில் கட்டி வைத்திருக்கிறேன், இழுத்துச் செல் என்றான் ஆடு மேய்ப்பவன்.

மரத்தில் கட்டியிருந்த வேட்டை நாயைத் தங்கள் இருப்பிடத்திற்கு இழுத்துச் சென்றன இரண்டு மிருகங்களும். “ஆடு நன்றாக கொழு கொழுவென்று இருக்கிறது” என்றது குள்ளநரி. “காலைப் பார்த்தால் ஆட்டின் கால் போல இல்லை” என்றது முள்ளம்பன்றி.

குள்ளநரிக்கு தான் மற்றவர்களை விட புத்திசாலி என்ற எண்ணம் உண்டு. ஆகவே, மற்றவர் சொல்வதைக் கேட்காது. “உனக்கு ஒன்றும் தெரியாது. நன்றாகப் பார்த்துச் சொல்” என்று முள்ள்ம்பன்றியிடம் சொல்லியது.

வேட்டைநாயை நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்த முள்ளம்பன்றி, “இது ஆடு இல்லை. ஆபத்து இருக்கிறது. தப்பிச் செல்வது நல்லது” என்று முடிவு செய்தது. ஆகவே, குள்ளநரியிடம், “நீ சொல்வது சரி. நான் குளித்து விட்டுத் தான் சாப்பிடுவேன்” என்று சொல்லி அங்கிருந்து தப்பிச் சென்றது.

முள்ளம்பன்றிக்குக் காத்திருந்து வெகு நேரம் வராததால், வேட்டைநாயின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்த்து அதைக் கடிக்க ஆயத்தம் ஆனது குள்ளநரி. அப்போது குலைத்துக் கொண்டே, குள்ளநரியின் மீது பாய்ந்தது வேட்டை நாய். குள்ளநரி தப்ப முயற்சி செய்தது. போராடிப் பார்த்தது. முடியவில்லை.

மற்றவர்களை ஏமாற்றிய குள்ளநரி, வேட்டை நாயிடம் உயிர் இழந்தது.

(ஆப்ரிக்க நாட்டின் நாட்டுப்புறக் கதை)

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here