Subscribe

Thamizhbooks ad

சிறுகதை: சூழ்நிலை – கீதா சுந்தர்

” இப்போ என்னங்க பண்றது..  திடீர்னு இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு நினைச்சு கூட பாக்கலங்க.. அவன் வேற இன்னைக்கு  கண்டிப்பா வேணும்னு சொல்லிட்டு போறான்..‌ எப்படிங்க இத சமாளிக்க போறோம் ..”

“‌ நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத பாத்துக்கலாம்..‌”

” எனக்கு வேற காய்ச்சலடிக்குது.. இதுல இவன் வேற.. ” என்று கழுத்தில் கை வைத்து தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டாள்‌ பார்வதி.இருவரும் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டார்கள்..

” ரெண்டு  மாசத்துக்கு முன்ன‌ கூட  நல்லா தான்  போய்ட்டு இருந்துச்சி.. இஷ்டபடி செலவு பண்ணோம்.. அப்ப தெரியாது பின்னாடி இவ்ளோ ஒரு‌ கஷ்டம் வரும்னு… ”

” ம்… அதுக்காக இப்ப யோசிச்சி என்னங்க பண்றது.. ”

” யார்கிட்ட கேக்கறது.. ? என்று யோசித்தபடி இருந்தான் இளங்கோ. சட்டென  பார்வதியிடம் திரும்பி,

” உங்க அண்ணிகிட்ட கேக்கலாமா..பாரு” என்றான்.

” அவங்ககிட்ட வேணவே வேணாம் சாமி.. அவங்கிட்ட மட்டும் கொடுக்கல் வாங்கலே வச்சிக்க கூடாது.. போன வாரம் அவங்க பேத்திக்கு கூட அவ்ளோ செய்தாங்க.. ஆனா நமக்கு ஒன்னுன்னு கேட்டா அப்டியே‌ பஞ்ச பாட்டு தான் பாடுவாங்க.. வேற எதாவது ஐடியா‌ பண்ணலாம்… ”

” ஹாங்.. எதிர் வீட்டுல கோகி‌ அம்மாகிட்டே கேக்கலாமா.. ”

” வேணாம் பாரு… ”

” ஏங்க‌‌..? ”

” போன வாரம்,  அவங்க வீட்டுக்காரு‌,  நம்ம வண்டி நிறுத்தற எடத்துல அவன் வண்டிய நிறுத்தி இருந்தான்… ‘ எங்க வண்டி விடணும் எடு ‘ ன்னு சொன்னதுக்கு எவ்ளோ திமிரா தெனாவெட்டடா பேசனான் தெரியுமா… அங்க போய் கேக்க வேணாம்.. ”

” இப்ப என்னங்க பண்றது‌.. நேரம் ஆக ஆக ‘ பட பட ‘ன்னு வருதுங்க.. எனக்கு கொஞ்சம் சுட தண்ணி தாங்களேன்… ”

இளங்கோ அவளை முறைக்க,

” என்னங்க மொறைக்கிறீங்க.. உங்களுக்கு ஆயிர கணக்குல  நான்‌ காபியும் டீயும் போட்டு கொடுத்து இருக்கேன்.. நீங்க என்னடான்னா ஒரு‌ சுட தண்ணிக்கு‌ இப்டி பாக்கறீங்க.. ”

” எம்மா.. தாயே‌.. போடறேன், அதுக்குள்ள நீ ஆரம்பிச்சிடாத… ”

‘ ஆயிர கணக்கான தடவ கடை கண்ணிக்கு போய் வருவேன்.. அதெல்லாம் இவங்களுக்கு கணக்குலயே வராது… ‘ என்று வாய்க்குள் முணுமுணுத்துக்‌ கொண்டே சுட தண்ணி போட்டான் இளங்கோ.

” இந்தா புடி… ”

” ஆமா… என்ன முணுமுணு த்துகிட்டே  இருந்தீங்க.. ”

” நீ கூட தான் டீ காபி தரும் போது திட்டிகிட்டே தருவ.. நான் எதாவது‌ கேட்டனா… ‘ கம்மு ‘ ன்னு குடிக்கல… பேசாம குடிப்பியா.. ”

” சரிங்க… நம்ம சண்டைய அப்புறம் வச்சிக்கலாம்… இப்ப அந்த விஷயத்துக்கு என்ன தான் பண்றது.. ”

” பக்கத்து வீட்டு கற்பகத்துகிட்ட கேட்டு பாரேன்… ”  என்ற சொன்ன உடன்,

” ம்மா… நான் போய் கேக்கட்டுமா‌ ” என்று உற்சாகமாக முன் வந்தாள் பிரியா.

” அடி பிண்ணிடுவேன்…  போய் உன் வேலைய பாரு… ” என்று கோபமாக சொன்னாள்‌ பார்வதி.

” ஏய், இப்ப எதுக்குடீ அவள இப்டி‌ திட்ற..‌ ”

” ம்… அவங்க வீட்டு தருதல கூட இவ போன வாரம் மொட்ட மாடியில நின்னு ஜாடையில பேசிக்கிட்டு இருக்கா… ”

” ப்பா… அம்மா சும்மா எதாவது சொல்லிக் கிட்டே இருக்கும் .. நீங்க அவங்க பேச்சை எல்லாம்  நம்பாதீங்க… ” என்றாள் பிரியா.

” ஆமா, என் பேச்சை நம்பாதீங்க.. அவளை நம்புங்க… ” என்று கூறியவள், ” எதாவது பேசுன அடி வாங்குவ பாத்துக்க.. ” என்று மகளிடம் கத்தி விட்டு, மீண்டும் இளங்கோ பக்கம் திரும்பி,

” இப்ப என்னங்க பண்றது.. ”

என்று மீண்டும் ஆரம்பித்தாள்.

” ஆமா… என்னையே கேளு.. நீ தான்  யோசியேன்… ”

” நேரம் ஆயிட்டே இருக்குங்க.. ”  என்றவள்,

” ஏங்க உங்க அம்மாகிட்ட வேணா கேட்டு பாருங்களேன்.. ”

” அய்யையோ.. அவங்க கிட்ட நான் போய் கேக்கல‌ம்மா.. நீ ஆள விடு.. ”

” ஏங்க, உங்க அம்மாகிட்ட தான கேக்க சொன்னேன், அதுக்கு போய் அலறீங்க.. ”

” பாரு.. அப்பா இறந்த அப்புறம் கூட அவங்க நம்ம கூட இருக்க சம்மதிக்கல..‌தனியா தான் இருப்பேன்னு  அப்பாவால‌ வர‌ பென்ஷன் பணத்துல சிக்கனமா செலவு பண்ணி வாழ்ந்துக்கறாங்க.. நம்ம எப்டி அவங்கள தொந்தரவு பண்றது… ?”

” ம்… இதுவே எங்க அம்மாகிட்ட பணமும் நகையுமா வாங்கிட்டு வர சொன்னனீங்களே அப்ப தோனலையா…‌இப்ப மட்டும் இவ்ளோ யோசீக்கிறீங்க… இதுவே எங்க அம்மாவா இருந்து இருந்தா கேக்காமலே தருவாங்க… அவங்க இறந்து போன பிறகு அனாதை மாதிரி ஆயிட்டேன்… ” என்று கண்ணை கசக்கினாள் பார்வதி.

‘ அய்யோ‌.. இவ வேற எதுக்கு எதை கொண்டு வந்து முடிச்சி போட்டு பிரச்சினை பண்ணுவாண்ணே தெரியாது… ‘ என்று தலையில் கை வைத்தபடி உட்கார்ந்து விட்டான் இளங்கோ.

” ஏங்க… இப்ப போய் உங்க அம்மாகிட்ட கேக்க போறீங்களா இல்லையா..?”

” போறேன்.. போறேன்.. போய் கேட்டு தொலையறேன்.. அவங்க மட்டும் எதாவது சொல்லட்டும் அப்ப இருக்குடீ உனக்கு… ” என்று கூறி விட்டு கீழ் போர்ஸனில் புதிதாக குடி வந்து இருக்கும் தன் அம்மாவிடம் கேட்க  சென்றான்.

” ம்மா.. ”

” வாப்பா … உக்காரு, டீ போடவா.. ? ”

” வேணாம்மா… ” என்று கூறி விட்டு தயங்கி தயங்கி உட்காந்து இருக்க,

” இன்னாப்பா.. ஒரு மாதிரி இருக்க.. ”

ஒரு வழியாக வந்த விஷத்தை கூறி விட்டான் இளங்கோ.

அதுவரை ‘  ப்பா ‘  போட்டு பேசிய அம்மா இப்போது ‘ டா‌’ போட்டு பேசினார்.

” இன்னாடா… இதுக்கு தான் பக்கத்துலயே கொண்டு வந்து குடுத்தனம் வச்சியா நீ…‌

தெரியும்டா உன்ன பத்தி… இன்னா உம் பொண்டாட்டி சொல்லி அணுப்பி வச்சாளா… ‘

” இல்லம்மா…. நானே தான் வந்தேன்.. ”

” டேய்… எனக்கு தெரியும்டா எல்லாம்… இதோ பாரு எங்கிட்ட இப்ப இருக்கறதுல தரேன்… ஆனா அடிக்கடி எங்கிட்ட கேக்கற வேலை வச்சிக்காத.. ” என்று உள்ளே சென்று கொண்டு வந்து மகன்‌ கையில் கொடுத்தார்.

” டேய்… உம் பொண்டாட்டிய சிக்கனமா செலவு  பண்ண சொல்லுடா.. இப்டி எங்கிட்ட வந்து நிக்காத.. ”

” சரிம்மா… ”

” இருடா … டீ குடிச்சிட்டு போ.. ”

” வேணாம்மா.. நான் கிறம்பறேன்.. நேரமாகுது.. ” என்று கூறி விட்டு கிளம்பி விட்டான்.

” என்னங்க.. உங்க அம்மா என்ன சொன்னாங்க.. குடுத்தாங்களா.. ” கண்கள் விரிய மிக ஆர்வமாக கேட்டாள் பார்வதி.

” குடுத்தாங்க… இந்தா ”  என்று அவள் கையில் கொடுத்தான் இளங்கோ.

‘ மொழு மொழு ‘வென்று மூன்று குண்டு தக்காளிகளை கையில் வாங்கியவளுக்கு காய்ச்சல் போயே போச்சு.. வேகமாக சமையலறைக்கு சென்று தக்காளி சாதம் செய்து ‘ சுட‌ சுட’ லஞ்ச் பாக்சில் வைத்து மகனுக்கு பள்ளிக்கு கொடுத்து அனுப்பினாள்..

தக்காளி சாதத்தோடு இளங்கோவின் வண்டி பறந்தது.

Latest

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

தொடர் 32: சமகாலச் சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்

  ஆரோக்கியம்  என்பதும் சுற்றுசூழல் சவால் தானே!!!? உலக மயமாக்கம், பல்வேறு விளைவுகளை, கடந்த முப்பது ஆண்டுகளில், நம்மை சந்திக்க வைத்துள்ள நிலை ஓரளவு நாம் அறிந்து வைத்துள்ளோம். பொருளாதார மாற்றம் ஏற்பட்டு, பொருட்கள் வீட்டுக்கு,...

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here