சீதாராம் யெச்சூரி -நாடாளுமன்ற உரைகள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : “சீதாராம் யெச்சூரி -நாடாளுமன்ற உரைகள்”
தமிழில் : ச.வீரமணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு: அக்டோபர் 2017
பக்கங்கள் : 144 பக்கங்கள்
விலை : ரூபாய் 150
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களே இந்த நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார். இந்நூலில் 10 .8 .2017 அன்று யெச்சூரி அவர்கள் தன்னுடைய மாநிலங்கள் அவை உறுப்பினர் பணி நிறைவாக ஆற்றிய பிரியாவிடை உரையுடன் துவங்குகிறது .
வெள்ளையனே வெளியேறு இயக்கம் குறித்து 75 ஆவது ஆண்டு விழா நினைவாக 2017 ஆகஸ்ட் 9 அன்று ஆற்றிய உரை வரலாற்று சிறப்புமிக்கதாக உள்ளது ..
அயல் துறை கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் உள்நாட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு அதனால் மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் பற்றி ஆகஸ்ட் 3, 2017 யெச்சூரி அவர்கள் உரையாற்றியிருக்கிறார்.
மதவெறி அமைப்புகளை தடை செய்ய கோரி 19. 7. 2017 அன்று மாநிலங்களவையில் ஒரு குறுகிய கால விவாதத்தில் ஈடுபட்டார்.
பொருள்கள் மற்றும் சேவைகள் வரி ஜிஎஸ்டி பற்றி ஏப்ரல் 5, 2017 அன்றும்.. தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி வலியுறுத்தி 22.3.2017அன்று ஆற்றிய உரையும் கருத்தாழமிக்க பேச்சாக இடம்பெற்றுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தை அழித்துவிட அனுமதியோம் என்று 27 .3 .2017 அன்று பேசியிருக்கிறார்.
6. 2 .2017 அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆற்றிய சிறப்பான உரையும் நமக்கு பல்வேறு மக்கள் பிரச்சனைகளை கவனப்படுத்துகிறது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் ஏற்பட்டுள்ள துன்ப துயரங்களை பற்றி நவம்பர் 2016 ..16ஆம் தேதி பேசியதும்.. தேசிய கல்விக் கொள்கை என்பது ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கல்விக் கொள்கையேஎன்பதை ஆதாரப்பூர்வமாக 2016 ஆகஸ்ட் 12 அன்று பேசிய பேச்சும் …காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்று அழுத்தம் திருத்தமாக பேசிய பேச்சும்… தலித்துகளை தாக்காதீர்கள் என்று சொல்வதற்கான அர்த்தம் என்ன என்று ஆகஸ்ட் 9 2016 அன்று பசு பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் தலித்துகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை குறித்து பேசினார்..
காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது என்று ஆகஸ்ட் 8.. 2018 அன்று பேசினார்..
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகள் மூலம் மாநிலங்களின் உரிமைகள்பறிக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.
ஊகவணிபத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜூலை 27.. 2017 பல்வேறு தரவுகளோடு மக்களின் கவனத்தை ஈர்த்தார்..
தலித்துகள் முன்னேறி விடக்கூடாது என்பதற்காகவே மதவெறியாளர்கள் வன்முறை வெறியாட்டங்களை அதிகரித்திருக்கிறார்கள் என்று 2016 ஜூலை 21 அன்று கருத்துக்களை கூறினார். 2016 மார்ச் 8 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஹிட்லரையும் மிஞ்சி விட்டார்கள் என்று ஆணித்தரமாக உரையாற்றினார் ..
தேச விரோதம் என்றால் என்ன என்பதை நாடாளுமன்ற குழுவை ஏற்படுத்தி வரையறுப்போம் என்று பிப்ரவரி 25.. 2016 அன்று நடைபெற்ற குறுகிய கால விவாதத்தில் கூறினார்..
டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களுடைய 125 ஆம் ஆண்டு தினத்தில் நவம்பர் 27 ..2015 பேசிய பேச்சும் வரலாற்று சிறப்புமிக்க கருத்தாழமிக்க உரையாக உள்ளது.
பாஜக ஆட்சி ஊழல் அற்ற ஆட்சியா என்று 2015 பிப்ரவரி 26 அன்று ஆற்றிய உரை என 20 உரைகள் அவருடைய மாநிலங்களவை உறுப்பினராக கடைசி 3 ஆண்டுகளில் பேசியதை இந்த நூல் மிகச் சிறப்பாக வாசகர்களுக்கு சிறப்பான அரசியல் பொருளாதார வரலாற்று கல்வியை போதிக்கின்ற விதத்தில் அமைந்துள்ளது.
யெச்சூரி அவர்களின் பேச்சு வன்மை, ஆதாரப்பூர்வமான தரவுகள்,எதிரிகளையும் தன் கருத்தை மறுக்க முடியாத அளவுக்கு ஏற்க வைக்கும் பண்பான உரை, என இந்நூலின் ஒவ்வொரு பக்கமுமே யெச்சூரியின் பல பக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இது ஏதோ தனி மனித புகழ் பாடுவது அல்ல மாறாக நாடாளுமன்றத்தையும் மக்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்த எப்படி எல்லாம் பயன்படுத்து முடியும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான உரைகளாக இவை அமைந்துள்ளன. இந்த உரைகளை நேரடியாக நாடாளுமன்ற மேலவையில் சுருக்கெழுத்து முறையில் குறிப்பெடுத்து அவற்றை மிகச் சிறப்பாக தமிழ் வடிவில் படைத்துள்ள தஞ்சை தோழர் வீரமணி அவர்களின் பங்கு மகத்தானது.. யெச்சூரி அவர்களின் மறைவிற்குப் பின் நூலை வாசிப்பது என்பது அவருக்கு நாம் செலுத்தும் அர்த்தமுள்ள அஞ்சலியாக இருக்கும் ..வாசிப்பது மட்டுமல்ல.. அந்தக் கருத்துக்களை மக்கள் மத்தியில் பொருத்தமாக கொண்டு செல்வதும்.. புரிந்து கொண்டு உள்வாங்கி பொது வாழ்வில் ஈடுபடுவதும்… பொருத்தமான செயல்பாடாக இருக்கும் ..
நூல் அறிமுகம் எழுதியவர் :
இரா இயேசுதாஸ்
அறிவொளி வாசிப்பு இயக்கம்- மன்னார்குடி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமையான நூல் அறிமுகமாக, ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்தது.
வாழ்த்துகள் தோழர் 💐