நூலறிமுகம்: சிதார் (மரங்களில் இலைகள் பூப்பதில்லை )- சிறுகதை - நௌஷாத் கான். லி

 

 

 

கரீம் அண்ணாவின் எழுத்து வீரியம் மிக்கவை ஏனெனில் அவருடைய முதல் சிறுகதை தொகுப்பை படித்து முடித்து பல மாதங்கள் ஆகியும் கூட சில சிறுகதைகள் தந்த பாதிப்பில் இருந்து இன்னும் என்னால் வெளிவர முடியவில்லை ..நம்ம தமிழ்நாட்டில் இப்படியும் கூட நடக்குதா? சில அவலங்கள் -அக்கிரமங்கள் நடந்தும் கூட வெறும் வருத்தத்தை தவிர ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத ஒரு சாமானியனை போல் ஒரு வித குற்றயுணர்வுடன் எல்லாவற்றையும் கண்டும் -காணாமலும் நடந்து செல்வதை தவிர என்ன செய்ய? சிதார் சிறுகதை தொகுப்பை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் கடந்து விட முடியாது.

என்னால் ஒரு கதையை படித்து முடித்த பிறகு அடுத்த கதைக்கு உடனடியாக செல்லமுடியவில்லை ..ஒவ்வொரு கதையும் என்னுள் ஏதோ செய்தது ..அழ வைத்தது-சிந்திக்க வைத்தது -இந்த சமூகம் ஏன் இப்படி இருக்கிறது என கேள்வி கேட்க வைத்தது -மனிதனை மனிதாக நினைக்காத மயிரு மதம் -சாதிகளை பிடித்து தொங்கி கொண்டிருக்கும் மனித வடிவில் திரியும் மிருங்கங்களை எல்லாம் செருப்பால் அடிக்க வேண்டும் என்று தோன்றியது ….சட்டம் படித்த வக்கீலாக இருப்பதால் என்னவோ கரீம் அண்ணனால் எல்லாவற்றையும் தைரியமாக எழுத முடிகிறதோ என்னவோ?

மதங்களை கடந்து எந்த வட்டத்துக்கும் சிக்காமல் இந்த சமூக கறைகளை எல்லாம் தன் எழுத்து மூலம் சரி செய்ய இவரை போன்ற நிறைய எழுத்தாளர்கள் வர வேண்டும் எழுத்து என்பது வெறும் பொழுது போக்கு அல்ல நல்ல மாற்றத்தை இந்த சமூகத்தில் விதைப்பது  விளிம்பு நிலை மனிதர்களின் உரிமைக்காக ,வாழ்வுக்காக எந்த வித சமரசமும் இன்றி ஒன்பது நிகழ்வுகளை கதை மூலம் பதிவு செய்திருக்கிறார்
முதல் கதை இருள் வெடிகுண்டு நிகழ்வுக்கு பிறகு கலவர கூட்டத்தில் சிக்கி கொண்ட ஒரு பெண்ணின் ஒரு நாள் (யுகத்தின் ) வலியை-வேதனையை உணர்வு பூர்வமாய் எழுதி இருப்பார்  இருள் கதையில் வரும் நாயகிக்கு மட்டுமல்ல நிஜத்தில் கூட அவள் கணவனாக வரப்போறவனுக்கு ஒன்றும் ஆகியிருக்க கூடாது என்று கடவுளிடம் மனம் வேண்டி கொண்டது  இரண்டாம் கதை வெக்கை:கடைநிலை (பெண்) காவல் காக்கும் ஊழியர்களை எல்லாம் இந்த அதிகார வர்க்கமும் -அரசும் எப்படி வதைக்கும் என்பதை அழகாய் காட்சி படுத்தி இருப்பார்.

மூன்றாவது கதை சுருட்டு நாணி ஒரு வித்தியாசமான கதைக்களம் நாணி கதாபாத்திர அமைப்பு , கதை கொண்டு போன விதம் அருமை கதையின் முடிவு யாரும் எதிர்பாராதது சமூக அக்கறை கொண்ட கதைகள் மட்டுமல்ல ஹாரர் கதையும் எனக்கு எழுத வரும் என்பதை ஆசிரியர் நிரூபித்து இருக்கிறார்  நான்காவது கதை: விருத்த சேதனம் (சுன்னத் ) இந்த சிறுகதை தொகுப்பில் எனக்கு ரொம்பவும் பிடித்த, என்னை பாதித்த கதை என்றும் கூட சொல்லலாம் ஒரு மனுஷன் காதலுக்காக இவ்வளவு அவமானங்களையும் ஏற்றுக்கொள்வானா? என்பதை ஆச்சரியத்துடன் பார்க்க வைத்த கதை மதங்கள் – சாதி கோட்பாடுகள் ஏன் இருக்கிறது ..இந்த பூமி முழுதும் காதலால் நிரம்பி இருக்க கூடாதா? ஒரு வேளை இந்த கதை உண்மையாக இருக்கும் பட்சத்தில் இது மாதிரியான மார்க்கம் சொல்லாத கேவலமான விஷயத்தை (திறந்து காட்டு ) செய்த ஜமாத்தை காறி உமிழ வேண்டும்  எந்த எதிர்பார்ப்பும் இன்றி அன்பில் இணைந்த அந்த காதல் ஜோடியின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
ஐந்தாவது கதை சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை அமீர் என்னும் குதிரை மூலம் கதை சொல்லி இருக்கும் விதம் அருமை மதம் மனிதனை எப்படி மிருகமாக்கும் என்பதை ஆசிபாவின் மரணம் நமக்கு உணர்த்தி இருக்கும் இந்த கதையை படிக்கும் போது விழியில் வழிந்த கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை மயிரு மதத்துக்காக எல்லாம் காஷ்மீர் சோபியன் பகுதிகளில் ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் – பெண்கள் எல்லாம் எப்படி கொடூரமான துன்புறுத்தலோடு வன்புணர்வு செய்து கொல்லப்படுகிறார்கள் என்ற அவலத்தை பதிவு செய்து இருப்பார் ஆசிரியர்
ஆறாவது சிறுகதை பூமயில் குடிபோதைக்கு அடிமையான தன் தாத்தா மூலமே ஒன்றும் அறியாத பேத்தி சீரழிக்க பட்ட அவலத்தை இந்த கதை மூலம் பதிவு செய்து இருப்பார் ஆசிரியர்.

பொட்டம்மா பாட்டியின் பாசம் ,குணாதிசயம் தன் பேத்தியின் மீது உயிரையே வைத்திருக்கும் அதன் அன்பு, தன் கணவன் தப்பு செய்ததை அறிந்து அடிப்பது என்று கிராமத்து பாட்டியின் வீரத்தை யதார்த்தமாய் பதிவு செய்தது சிறப்பு ஏழாவது சிறுகதை அகழியாகும் கோடுகள்: இந்திய எல்லையில் அமைந்திருக்கும் வாகா மற்றும் பாகிஸ்தான் எல்லையின் பின்னிருக்கும் அரசியலின் வரலாறு -ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரத்தின் வரலாறு,பஞ்சாப் பொற்கோவில் என்று கதை பயணித்தாலும் உத்தம்சிங் மற்றும் பாட்டியின் பிளாஷ்பேக் மனதை என்னவோ போல் செய்தது உத்தம்சிங் தமிழ் நண்பனை போல் இந்த கதையை கேட்டு (படித்து ) உறக்கம் வராமல் தவிக்கிறேன் எட்டாவது கதை நிலம் இந்த கேடுகெட்ட ஆட்சியாளர்களும் – அதிகாரவர்க்கமும் கார்ப்பரேட் வீசும் எச்சை துண்டுகளுக்காக விளிம்பு நிலை மக்களை எப்படி துன்புறுத்தும் , உயிர் பலி வாங்கும் என்பதை நிஜத்தில் நடப்பது போல உள்ளது உள்ளபடி தன் எண்ணத்தின் மூலம் ஆதங்கமாய் எழுத்தில் வெளிப்படுத்தி இருப்பார் ஆசிரியர்.

ஒன்பதாவது கதை அகம் மனிதனுக்கு மட்டுமல்ல நாய்க்கு கூட சாதி பாப்போம் அதுவும் சாதி நாயை நம்ம சாதிக்காரன் வச்சிருந்தா தான் சேர விடுவோம் என்பதை படிக்கும் போதே இந்த சமூகத்தின் மீது கோபம் வந்தது எல்லாவற்றிலும் மதம் -சாதி பார்க்கும் நாய்கள் இருக்கத்தான் செய்கிறது மனிதன் மனிதனை மனிதனாய் பார்க்கும் போது இங்கு எல்லாமும் மாறும் என நம்புகிறேன் சுருட்டு நாணி ஹாரர் கதையாக இருந்தாலும் அதிலும் ஒரு சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்தது ,இருந்தாலும் சமூக அக்கறையோடு எழுதும் எழுத்தாளர்கள் இங்கு குறைவு , வெறும் பொழுதுபோக்குக்காக எழுதாமல் நாம் எழுதும் எழுத்து இந்த சமுதாயத்துக்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லதை விதைக்க வேண்டும் என்ற முயற்சியில் தொடர்ந்து பயணித்து வரும் தோழர்.கரீமை மனதார பாராட்டுகிறேன் தொடர்ந்து இம்மண்ணில் நல்லதை விதைத்து கொண்டே இருங்கள் உங்கள் எழுத்து ஏதேனும் ஒரு மதவெறியரை மனிதனாக மாற்றினால் அதுவே உங்கள் எழுத்துக்கான வெற்றி
பாரதி புத்தகாலயத்திற்கு பணிவான வேண்டுகோள் இவ்வளவு தரமான நூலை வெளியிட்ட நீங்கள் எழுத்து பிழைகள் வராமல் பார்த்து கொள்ளுங்கள்..

அன்புடன்

நௌஷாத் கான். லி

நூல் : சிதார் (மரங்களில் இலைகள் பூப்பதில்லை )- சிறுகதை  
ஆசிரியர் : அ.கரீம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *