புற்றுநோய் ஒழிப்பு அறிவியலின் உலகறிந்த இந்திய விஞ்ஞானி சிவப்பிரியா கிருபாகரன் (Sivapriya Kirupakaran)!
தொடர்- 25 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
சிவப்பிரியா கிருபாகரன் (Sivapriya Kirupakaran) காந்தி நகரிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி புற்றுநோய் ஆய்வகத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டம் வேதியியலில் பெற்றவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தில் உயிரி தொழில் நுட்பத்தை எடுத்து படித்து பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக புற்றுநோய் மருந்து இயல் எனும் துறையை தன் பாடமாக எடுத்துக் கொண்டார்.
புற்றுநோய் என்பது இன்று உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய அவலம் ஆகும் . 10 ஆண்டுகளுக்கு முன் ஒன்பது மனிதர்களில் ஒருவருக்கு புற்றுநோய் பரவும் அபாயம் இருந்ததாக அப்போதைய உலக சுகாதார நிறுவனம் ஒரு. விவரத்தை வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்போது மூன்று பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய அதே உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரம் நம்மை எச்சரிக்கிறது.
புற்றுநோய் என்பது என்ன? புற்றுநோய் என்பது உடலில் பிற பகுதிகளுக்கும் படை எடுக்கும் அல்லது வேகமாக பரவும் திறன் கொண்ட அசாதாரண உயிரணு வளர்ச்சியை உள்ளடக்கிய நோய்களின் குழுவாகும். இவை அதிகம் பரவாத தீங்கற்ற கட்டிகள் உடன் வேறுபடுகின்றன. சாத்தியமான ஒரே அறிகுறி ஒரு கட்டியாக இருக்கலாம் அல்லது அசாதாரண ரத்தப்போக்கு நீடித்த இருமல் விவரிக்க முடியாத எடை இழப்பு மற்றும் குடல் இயக்கங்களில் மாற்றம் இவற்றையெல்லாம் புற்றுநோய்க்கான அறிகுறி என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
இன்று புற்று நோய்கள் பல வகைப்பட்டதாக உள்ளன. நுரையீரல் புற்றுநோய் பிரோஸ்டேட் புற்றுநோய் பெரும் குடல் புற்றுநோய் வயிற்று புற்றுநோய் ஆகியவை ஆண்களில் மிகவும் பொதுவாக பரவுகின்றன புற்று நோய் ஆகும்.
பெண்களை பொறுத்தவரையில் மார்பக புற்றுநோய் பெருங்குடல் புற்றுநோய் நுரையீரல் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஆகியவை இன்று மிகப்பெரிய ஆபத்தாக உலகெங்கும் பரவிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மொத்த புதிய புற்றுநோய்களின் வகைகளை சேர்த்தால் ரத்த புற்றுநோய் மற்றும் தோல் புற்று நோய்களையும் சேர்த்து 40% உலகினுடைய மரணங்களுக்கு புற்றுநோய் காரணமாகிறது.
இதற்கான பொது மருந்தியலில் தனக்கென்று ஒரு முத்திரையை பதித்த இந்திய விஞ்ஞானிதான் சிவபிரியா கிருபாகரன். HELICOBACTER PYLORI எனும் வகை பாக்டீரியாக்கள் மூலம்.. ஏற்படும் வயிற்று புற்றுநோய் குறித்த ஆய்வில் பெரிய அளவில் வெற்றி கண்டவர் சிவப்பிரியா கிருபாகரன்.
HELICOBACTER PYLORI பாக்டீரியா முதலில் வயிற்றுப்பகுதியில் செரிமான சுவரில் ஒரு வகையான வீக்கத்தை ஏற்படுத்துகிறது.. இந்த வீக்கம் மெல்ல மெல்ல அல்சர் பெப்டிக் என்று அழைக்கப்படும் புற்று நோயாக மாறுகிறது. இந்த நோய்க்கு மருத்துவர்கள் பொதுவாக ஆன்டிபயாட்டிக் வகை மருந்துகளை தான் எப்போதும் பரிந்துரைகிறார்கள். இந்த வகை மருந்துகளை உட்கொள்ளும் பொழுது மோசமான பாக்டீரியாக்களுடன் சேர்ந்து பல நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள்வும் அழிந்துவிடுகின்றன. இதனால் காலப்போக்கில் இந்த அல்சர் பெப்டிக் புற்றுநோய் குணமாகாமலேயே ஆனால் மருந்துகளை மட்டும் நோயாளிகள் தொடர்ந்து உட்கொண்டு வருவதை சிவப்பிரியா கிருபாகரன் 1,00,000 நோயாளிகளை ஆய்வு செய்து கண்டுபிடித்தார்.
சிவபிரியா கிருபாகரன் (Sivapriya Kirupakaran) இன பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தார் H.PYLORI வகை பாக்டீரியாவைஅழிப்பதற்கு நேரடியாக செயல்படுகின்ற ஒரு வகை மருந்தை நம்முடைய உடலினுடைய மரபணு மூலக்கூறுகளில் செலுத்துவதற்கான முறையை அவர் அறிமுகம் செய்தார். இந்த வகை பாக்டீரியா மனிதர்களை மட்டுமே தாக்குகிறது. இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த புற்று நோயில் ஐந்தில் நால்வருக்கு இந்த வகை புற்றுநோய் தான் முதலில் ஏற்படுகிறது. இந்த உலகத்திலுள்ள ஒட்டு மொத்த மக்கள்தொகையில் சரி பாதி பேருக்கு வயிற்றில் H.PYLORI பாக்டீரியாக்கள் உள்ளன.
உயிரிவேதியியலில் தனக்கு ஏற்கனவே இருந்த அறிவாற்றலை பயன்படுத்தி H.PYLORI பாக்டீரியாவுக்கு எதிரான யுத்தத்தை அவர் தொடங்கினார். இந்த பாக்டீரியாவின் உடலுக்குள் இருக்கின்ற ஒரு வகை புரதத்தினுடைய அடிப்படையை நேரடியாக தாக்குகின்ற ஒரு மருந்து மட்டுமே இந்த பாக்டீரியாவை தனித்து எடுத்துக் கொன்றுவிடும் என்பதை விரைவில் அவர் கண்டறிந்தார். இந்த புரதம் இருந்தால் மட்டுமே இந்த பாக்டீரியாக்கள் உயிர் வாழ முடியும் என்கிற வகையில் ஒரு அடிப்படை புரதம் H.PYLORI பாக்டீரியாக்கள்ல் உள்ளது.
அதுதான் INOSINE 5 எனும் வகை புரதம்.. MONOPHOSPHATE DEHYDROGENASE (IMPDH) வகையைச் சேர்ந்த பாக்டீரியாகளுக்கு உள்ளே இருக்கும் அவை உயிர் வாழ்வதற்கான பிரதான புரதத்தை நேரடியாக சிவப்பிரியா கிருபாகரன் தயாரித்த மருந்துகள் தாக்கத் தொடங்கின. இவ்விதத்தில் இந்த பாக்டீரியாக்கள் உடனடியாக அழிந்து போவதை கண்டு உலகமே வியந்து போனது.
கட்டமைப்பு வேதியியல் என்னும் துறையில் தன்னுடைய அறிவாற்றலை வளர்த்துக் கொண்ட சிவப்பிரியா கிருபாகரன் இந்த மருந்தை கண்டுபிடிப்பதோடு நிறுத்தாமல் இதைத் தயாரிப்பதற்கான எளிய முறைகளையும் அறிமுகம் செய்தார். இதன் மூலம் இன்று இந்த வகை புற்று நோயை முற்றிலும் அழிப்பதற்கான கூட்டு மருந்தியல் என்கிற ஒரு விஷயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மூன்று வகை மருந்துகளை ஒரு மருந்தாக்கி இந்த புற்றுநோய் எந்த நிலையில் இருந்தாலும் அதை அழிப்பதற்கான சாத்தியங்களை சிவப்பிரியா கிருபாகரனின் ஆய்வுகள் இன்றைக்கு சாதித்துள்ளன.
ஆய்வகத்தில் இரவும் பகலும் அயராது உழைத்த சிவப்பிரியா கிருபாகரன் இன்று உலகம் வியக்கும் விஞ்ஞானியாக இருந்தாலும் அவருக்கு சொந்த மண்ணில் எந்த அங்கீகாரமும் இல்லை. வழக்கம் போல நம்முடைய நாட்டில் பெண் விஞ்ஞானிகள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள்.
உலக அளவில் நோபல் பரிசு பெற்ற மாபெரும் வேதியியல் அறிஞர் ஜே ராபின் வாரன் சமீபத்தில் இவரைப் பற்றி குறிப்பிடும் பொழுது பெப்டிக் அல்சர் புற்றுநோய் பொறுத்தவரை இவர் கண்டுபிடித்து இருக்கின்ற இந்த மாதிரியைக் கொண்டு ஏனைய புற்று நோய்களில் உடைய அடிப்படைகளை நம்மால் அதே மருந்தியலுக்கு உட்படுத்த முடியும் என்று தெரிவிப்பதோடு. ஒரு நாள் இந்த கண்டுபிடிப்பை அதன் அவசியத்தை புரிந்துகொண்டு இந்தியாவிலிருந்து சிவப்பிரியா கிருபாகரன் நோபல் பரிசு பெறுவது உறுதி என்று அறிவித்திருப்பது. இந்த கண்டுபிடிப்பின்னுடைய முக்கியத்துவத்தை நமக்கு விளக்கி நிற்கிறது.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்திய நுண்ணுயிரி பூஞ்சையியலின் அறிஞர் சஞ்சீவா நாயக்கா (Sanjeeva Nayaka)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
ஆய்வகத்தில் இரவும் பகலும் அயராது உழைத்த சிவப்பிரியா கிருபாகரன் இன்று உலகம் வியக்கும் விஞ்ஞானியாக இருந்தாலும் அவருக்கு சொந்த மண்ணில் எந்த அங்கீகாரமும் இல்லை. ஆம். உண்மை தான். ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடிக்கும் நடிகருக்கு கிடைக்கும் விளம்பரமும் புகழும் கூட இரவும் பகலும் ஆய்வகங்களில் உழைக்கும் அறிவியலாளர்களுக்குக் கிடைப்பதில்லை. உங்களின் முயற்சி இந்திய அளவில் பல்வேறு அறிவியல் துறைகளில் பங்காற்றும் அறிவியலாளர்களுக்கான ஒரு அங்கீகராம். அறிவியலாளர்களுக்கும் அவர்களை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ள தங்களுக்கும் வாழ்த்துகள்.
Pingback: இந்திய வானொலி வானியலாளர் Dhruba J Saikia - bookday