பிர்லா அமைப்பின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான சரஸ்வதி சம்மான் விருது சிவசங்கரி அவர்களின் சூரிய வம்சம் புத்தகத்திற்காக வழங்கப்பட்டிருக்கிறது.

அந்தப் புத்தகத்தின் இரண்டு பாகங்களையும் வாசித்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட படைப்பு. அவரின் வாழ்க்கை வரலாறு அது.

அவரின் வாழ்க்கையின் சம்பவங்களையும்.. அதன் வழியாக அவரது சமூகப் பார்வையும், சிந்தனைகளும் எப்படியெல்லாம் படிப்படியாக கட்டமைக்கப்பட்டன
என்பதை நேர்த்தியாகவும், எளிமையாகவும் சொல்லும் படைப்பு அது.

சிவசங்கரி அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ளவும் நம் எண்ணங்களை மேம்படுத்திக்கொள்ளவும் உதவும் படைப்பு அது.

சிவசங்கரி தன் சொத்துக்களின் பெரும்பகுதியை ட்ரஸ்ட் அமைத்து சமூக பணிகளுக்காக உதவிவருபவர்.

இலக்கியத்திற்கு அவர் செய்திருக்கும் அரும்பணிகளை அவரே மேடைக்கு மேடையும், சமூக ஊடகங்களிலும் தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. நானே இலக்கிய ஆதி சக்தி, பிதா மகள், அவதார புருஷி என்று சொந்தமாக அபிஷேகம் செய்துகொள்வதில்லை. அடுத்தவர் சிந்தனையை தன் சிந்தனையாக சொந்தம் கொண்டாடியதில்லை.

எந்த சர்ச்சையிலும் இல்லாத, அதற்கான வாய்ப்பும் கொடுக்காத ஒரு தரமான படைப்பாளிக்கு.. உதாரணம் காட்ட வேண்டிய உன்னத மனுஷிக்கு இந்த விருது மட்டுமல்ல..இன்னும் பல விருதுகளும் தகுதியானதே.

வாழ்த்துக்கள் ஜிபுக்கா!
வாழ்த்துங்கள் ஜிபுக்கா!

(அவரின் நெருக்கமான உறவுகளும் நட்புகளும் அப்படித்தான் அழைப்பார்கள் என்று குறிப்பிட்டிருப்பார். அந்தப் புத்தகம் படித்ததிலிருந்து அப்படித்தான் நானும் அழைக்கிறேன்)

-பட்டுக்கோட்டை பிரபாகர் முகநூல் பதிவிலிருந்து….

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *