சா.சமீமா சிரினின் ஹைக்கூப் பூக்கள் | சா.சமீமா சிரின் எழுதிய ஆறு புதிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | Tamil Kavithaigal (Tamil Poetry) Tamil Poems | www.bookday.in

சா.சமீமா சிரினின் ஹைக்கூப் பூக்கள்

சா.சமீமா சிரினின் ஹைக்கூப் பூக்கள்

***********************************************

சாவியைக் கண்டதில்லை
பூட்டை உடைக்கும்
கொள்ளையர்கள்

***********************************************

மழைநீரில் கப்பல் விட்ட
குழந்தையை அதட்டியது
சத்தமாக முழங்கிய இடி

***********************************************

கோடை காலம்
குளிர்ச்சி தந்தது
ஏசி விற்பனையாளர்களுக்கு

***********************************************

விரிசல் விழுந்த விளைநிலங்களை
படம்பிடித்துக் கொண்டிருந்தது
மின்னல்

***********************************************

அசைவற்ற பொம்மை
அமைதியாய் ரசிக்கும்
குழந்தையின் குறும்புகளை

***********************************************

கூவிக் கூவி விற்கிறான் சிறுவன்
விலகி நின்றி வேடிக்கை பார்க்கும்
சட்டங்கள்

***********************************************

📚 எழுதியவர் : 

✍🏻சா.சமீமா சிரின்
இராமநாதபுரம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *