அ.சீனிவாசன் எழுதிய ஆறு புதிய தமிழ் கவிதைகள் | சிறந்த கவிதைகள் தொகுப்பு PDF | உலகின் சிறந்த கவிதைகள் | www.bookday.in

அ.சீனிவாசன் கவிதைகள் 

அ.சீனிவாசன் கவிதைகள் 

1. இதயம் பிளக்கும் விரல்கள்

அனுமனைப் போன்ற
வலுவான விரல்கள் தேவைப்படுகின்றன,
சில ராமர்களின்
மார்பைப் பிளந்து
இதயத்தின் புனிதத்தை வெளிப்படுத்த.

நரசிம்மரைப் போன்ற
கூரிய நகங்கள் தேவைப்படுகின்றன,
சில ஹிரண்யகசிபுகளின்
மார்பைப் பிளந்து
இதயம் உள்ளதா என்று பார்க்க.

2. வானமாய் விரிந்தேன்

மகளே,
நிலவாக நீ வந்தாய்!

வானமாய்
விரிந்தேன் நான்!

3. நிலா பிறந்த நாள்

நீயும் டிசம்பரில் பிறந்தாலும்,
அந்த நாளில்
வானில் புதிதாய்
நட்சத்திரம்
ஏதும் முளைக்கவில்லை.

ஆனால், அன்றிலிருந்து
நிரந்தரமாய்
எங்கள் வீட்டுக்குள்
ஒரு நிலா பிறந்துவிட்டது.

4. டெய்ரிமில்க் வரம்

வரங்களைப் பெற
பெரிய தவங்கள் தேவையில்லை;
ஒரு டெய்ரிமில்க் போதும்,
தினமும் வீட்டிற்குத் திரும்பும்
நேரத்தில்,
மகளே—
உனக்காக!

5. கல் எறிந்தாலும்

கலவியில் மாட்டிய நாய்க்குறியாய்,
கவிதையில் மாட்டிய தற்குறி.

சுகமளவு சோகம்.
பெருங்கல்லாய் எறிகிறார்கள்;
மெதுவாகவும் எறியலாம்.

இருக்கிறது இன்னொரு நாள்,
இன்னொரு கலவி,
இன்னொரு கல்,
இன்னொரு கவிதை—
அதே நான்.

ஆனால், ஒவ்வொரு கல்லிலும்
என் கவிதை பிறக்கிறது;
என் இதயம்
இன்னும் உயிரோடு துடிக்கிறது.

6. மழை பெய்கிறது

மழையும் அவனைப் போலவே
அவளைத் துரத்துகிறது;
அவளுக்கும் அவனைப் பிடிப்பது போலவே
மழையைப் பிடித்திருக்கிறது.

எவ்வளவு பிடித்திருந்தாலும்,
வீடு நுழைந்ததும்
உடலைத் துவட்டி
மழையை உள்ளுக்குள்
மறைத்துக் கொண்டாள்.

ஆனால், மழை இன்னும்
அவளுக்காக வெளியே பெய்கிறது—
அவனுடன் சேர்ந்து.

அவளோ, இதயத்தின் உள்ளே
அந்த மழையை புயலாக்கி,
அவனை மறக்க முடியாமல்
உள்ளுக்குள் பெய்துகொண்டிருக்கிறாள்.

எழுதியவர்:

✍🏻 – அ.சீனிவாசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *