கண்ணாடி மலர் | Skeleton Flower or Glass Flower Oriented Tamil Article | வடக்கு ஜப்பான் மற்றும் சீனாவின் காடுகளில் இத்தாவரங்கள் உள்ளது.

கண்ணாடி மலர் (Glass Flower) – ஏற்காடு இளங்கோ

கண்ணாடி மலர் (Glass Flower)

– ஏற்காடு இளங்கோ

வடக்கு ஜப்பான் மற்றும் சீனாவின் காடுகளில் கண்ணாடி மலர் (Glass Flower) தாவரங்களைக் காணலாம். இது ஒரு அரிதான தாவரமாக கருதப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் டிஃபிலியா கிரேய் (Diphylleia grayi) என்பதாகும். இது பெர்பெரிடேசி (Berberidaceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

No alt text provided for this image

இது அழியாத தாவர வகையைச் சேர்ந்தது. இதற்கு மட்டத்தண்டுக் கிழங்கு உள்ளது. இது தடிமனாகவும், முடிச்சாகவும் இருக்கும். மட்டத்தண்டு கிழங்கு உறக்க நிலையில் இருக்கும். குறிப்பிட்ட பருவத்தில் அதிலிருந்து புதிய தாவரம் தோன்றும். தாவரம் விதைகளை உற்பத்தி செய்த பிறகு இறந்துவிடும். ஆனால் மட்டத்தண்டு கிழங்கு மட்டும் உறக்க நிலையில் உயிருடன் இருக்கும்.

இந்த தாவரம் காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் இயற்கையாக வளர்கிறது. ஒளி மற்றும் நிழலில் செழித்து வளரும். இது 1.3 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய ஒரு சிறிய தாவரம். இது 2 முதல் 3 அடி அகலம் வரை படர்ந்து, பிரகாசமான பச்சை பசுமையான காணப்படும். இந்த தாவரம் மே முதல் ஜூன் மாதம் வரை பூக்கும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். இதில் 6 இதழ்கள் இருக்கும்.

File:Diphylleia grayi (fruits s2).JPG - Wikimedia Commons

மழை அல்லது பனியால் பூவின் இதழ்கள் நனையும் போது கண்ணாடி போல் மாறுகிறது. அதாவது ஒளி கூடுருவக் கூடிய இதழ்களாக மாறிவிடும். ஆகவேதான் இது கண்ணாடி மலர் என அழைக்கப்படுகிறது. மேலும் இதழ்களில் உள்ள நரம்புகள் மற்றும் இதர அமைப்புகளையும் வெளிப்படுத்துகிறது. இதன் காரணமாக இதற்கு எலும்புக்கூடு மலர் (Skeleton Flower) எனப் பெயரிட்டுள்ளனர்.

இதன் இதழ்கள் மீது உள்ள நீர் உலர்ந்தவுடன் இதழ்கள் மீண்டும் வெள்ளை நிறத்திற்கு திரும்பி விடும். இது பூத்த பிறகு, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அடர் நீலம் அல்லது ஊதா நிறத்தில் பழங்களைத் தரும். பழங்களின் மீது ஒரு வெள்ளை பவுடர் பூச்சு காணப்படும். 1960 ஆம் ஆண்டில் யானகி கிமுரா (Yanagi Kimura) என்ற தாவரவியல் அறிஞர் இதன் சாற்றில் போடோபிலின் மற்றும் கொல்கிசின் போன்ற மருத்துவப் பொருளைக் கண்டுபிடித்தார். இதன் சாறு விலங்குகளின் கட்டிகளைக் (Tumors) குணப்படுத்துகிறது.

கட்டுரையாளர்:

No description available.

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *