நூல் அறிமுகம் செய்வோம் - ரூ.10000 பரிசு வெல்வோம்: சோ.முத்தமிழ்செல்வன் எழுதிய "பாவேந்தரில் பாரதி" நூல் | So Muthamizhelvan's Pavendaril Bharathi Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: சோ.முத்தமிழ்செல்வன் எழுதிய “பாவேந்தரில் பாரதி” நூல்

“பாவேந்தரில் பாரதி”- நூல் திறனாய்வு

இருபதாம் நூற்றாண்டில், தமிழ் இலக்கிய வடிவினைச் சமைத்தவர்களில் மாபெரும் ஆளுமைகளாகத் திகழ்ந்தவர்கள் மகாகவி பாரதியும், பாரதிதாசனும் ஆவர். பண்டிதர்களின் மரபுகளை ஓரங்கட்டிப் புதுமைகளைச் சாதாரணக் கல்வியாளனுக்கும், கவிஞனுக்கும் கொண்டு போய்க் கொடுத்தவர்கள் இவர்கள் இருவரும். சமமான, சஞ்சலம் இல்லாத, பசுமையான, எதிர்காலச் சமூகத்தை உண்டாக்குவதற்கான வழி வகைகளைத் தம் எண்ணங்களில் உதித்ததை விதைகளாகத் தமிழகத்தில் தூவியவர்கள் இவர்கள் இருவரும். இவர்களின் இணைப்பு,, காலம் செய்த ரசவாததின் வெளிப்பாடுகளாக இருந்தன.

“பாவேந்தரில் பாரதி” எனும் தலைப்பிலான இந்நூலில்,

1.பாரதி வழியில் பாரதம்

2.பாவேந்தரில் பாரதி

3.மகாகவி பாரதியார் கவிதைகளில் மானுடப் பார்வை

4.பாரதியின் குயில் பாட்டு கண்ணன் பாட்டில் மொழி நடை

5.பிற்காலக் கவிஞர்களில் பாரதியின் தாக்கம்

எனும் ஐந்து கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் யாவும், பாரதியின் புகழ் பேசுவன. அணு அணுவாய் பாரதியின் எண்ணங்களை வெளிப்படுத்தும் தனித்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றன. வரலாற்றியல் அணுகுமுறையில் அணுகிப் பல இடங்களில் ஆராய்கிறார் இந்நூலின் ஆசிரியர் முனைவர் சோ.முத்தமிழ்ச் செல்வன் அவர்கள்.

பாரதி குறித்த நூல்களின் பக்கங்களில் காணலாகும் செய்திகள் ஒப்புமைப்படுத்தப்பட்டு, உண்மைகள் சுண்டவைத்து இந்நூலில் கொடுக்கப்பட்டிருக்கின்றன எனலாம். பாரதிதாசனின் ஒப்பற்ற பற்று,, பாரதி மேல் எவ்வளவு இருந்தன என்பதை இந்நூல் ஆழமாகக் காட்சிப்படுத்தி மற்றும் அவரவர் எழுத்தின் வழி விளக்கி இருப்பது புதுமையான எழுத்து நடையாக இருப்பதை அறியலாம்.

பாரதி, தமிழினத்தின் மேன்மையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ஒட்டுமொத்த பாரதத்தின் மேன்மையைத் தம் எண்ணத்தில் கொண்டவர் என்பதைப் பாரதி வழியில் பாரதம் எனும் முதல் கட்டுரை விவரிக்கிறது. இக்கட்டுரையில் பாரத நாடு எவ்வாறு உலக மக்களுக்கு எல்லாம் முன்மாதிரி மக்களாகத் திகழ வேண்டும் என்பதைக் கணித்துத் தம் பாடல்களிலும் கட்டுரைகளிலும் பாரதி எழுதினார் என்பதைப் புள்ளிவிவரமாக விளக்கி இருப்பது சிறந்த விளக்கமாக இந்நூலில் அமைந்திருக்கிறது..

இப்பெரும் கட்டுரையில், பழம் பெருமை கொண்ட பாரதம் ஏக பாரதம், சாதிகள் நீங்கிய பாரதம், மத வேற்றுமையை வேரறுத்தல்,, பெண்ணுரிமை பாரதம், ஒப்பில்லாத புதிய பொதுவுடமைப் பாரதம், கல்வியில் சிறந்த பாரதம், நதிநீர் இணைப்பு, சிங்களப் பாலமும் சேது சமுத்திரமும் எனும் ஒன்பது தலைப்புகளில் ஆழமாக, அகலமாக ஆய்வு முறையில் பாரதியின் சிந்தனைகளை மேன்மை பட விளக்கியுள்ளார் ஆசிரியர்.

“பாவேந்தரில் பாரதி” எனும் கட்டுரையில், இருபெரும் கவிஞர்களின் முதல் சந்திப்பு, பொதுநெறி பெறுதலும் பாராட்டுத் தரிசனம் கிடைத்தலும், பாரதிக்கு தாசன் ஆதலும் எதிர்ப்புகளை அடக்குதலும், நீடுதுயில் நீக்க பாரதி தோன்றலும் புதுமை செய்தலும், பாடம் புகட்டலும் உலகக் கவி என நிறுவப்படுதலும் எனும் இந்த ஐந்து தலைப்புகளில் உன்னதமான நட்பும் பற்றுதலும் அதற்கான அடிப்படை காரணிகளிலும் விளக்கப்பட்டுள்ளன. அவரவரின் கூற்றுக்கள் வரலாற்றைக் கூறுகின்ற எழுத்துநடை, முனைவர் முத்தமிழ்செல்வன் அவர்களின் இந்த வெளிப்பாட்டு விளக்கமுறையில் ஒரு புதிய உத்தியாக எழுதப்பட்டுள்ளன.

புதுமைகளைக் கொண்டு வந்தவர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதும் பொழுது, இந்த நூல் ஆசிரியரும் புதுமை படைத்தால்தானே சிறப்பாக இருக்க முடியும் என்பதை இந்நூல் ஆசிரியரின் எழுத்துத்திறனை வைத்து இதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு எழுதப்பட்ட யுக்திகள் அவரின் தனித்திறனை பறைசாற்றுகின்றன எனலாம்..

மானுடமேன்மை என்பதைப் பாரதியின் தாரக மந்திரம் என்பதைப் பன்னுள் விளக்கியுள்ளன. அதனை மூலமாகக் கொண்டு அதன் அடிநாதத்தைச் சுருங்கச் சொல்லும் கட்டுரையாக, ‘மகாகவி பாரதியாரின் கவிதைகளில் மானுடப் பார்வை’ உள்ளது. இந்நூல் ஆசிரியரின் எழுத்து நடையும், விளக்க உக்தியும் ஒப்புமைப்படுத்துவதும் ஆசிரியரின் படிப்பின் விரிவாக்கத்தை இனம் காட்டுகின்றன.

ஆசிரியர் முனைவர் சோ.முத்தமிழ்செல்வனின் மொழிநடை சிறப்பையும் ஆய்வு போக்கையும் விளக்கும் கட்டுரைகளாகப் பாரதியின் குயில் பாட்டு கண்ணன் பாட்டில் மொழி நடை எனும் கட்டுரை அமைந்துள்ளது. பாரதியின் இலக்கணப் புலமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் கட்டுரையாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

பாரதியை அடியொற்றி எழுதிய கவிஞர்கள் யாவர்? அவர்களின் கவிதைகளில் பாரதியின் சிந்தனைகள் எவ்விதம் இளையோடிக் கிடக்கின்றன என்பதைப் பெரும்பரப்பளவில் ஆய்வு மேற்கொண்டு கடைசிக் கட்டுரையான “பிற்காலக் கவிஞர்களில் பாரதியின் தாக்கம்” எனும் கட்டுரை விளக்கின்கிறது.

இந்த நூல் பாரதி குறித்தான ஒட்டுமொத்தமான செய்திகளையும் அறிய உதவும் கலைக்களஞ்சியமாக விளங்குகிறது எனலாம். ஆய்வு நோக்கில், அழகான மொழிநடையில், சொல்ல வந்த கருத்தை ஆழமாக விளக்கி நிற்கும் நூலாகப் பாவேந்தரில் பாரதி எனும் நூல் மலர்ந்துள்ளது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: பாவேந்தரில் பாரதி (2025)
ஆசிரியர்: சோ.முத்தமிழ்செல்வன்
வெளியீடு:
முத்தமிழ் பதிப்பகம், சிவகாசி
விலை: ₹.170
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 முனைவர் செ.சு.நா.சந்திரசேகரன்.(பாரதிசந்திரன்)
தமிழ்ப்பேராசிரியர்,
வேல்டெக் ரங்கா சங்கு கலைக் கல்லூரி,
ஆவடி
chandrakavin@gmail.com

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. MAHESWARI P

    49வது புத்தக விழாவில் வெளியிட்ட புத்தகம் குறித்த மதிப்புரை கேட்டும் பரிசு அறிவித்தும் உள்ளது சிறப்பு. பொதுமக்கள் ஆர்வத்துடன் படிக்கவும் பங்கேற்கவும் செய்யும் செயல்பாடு பாராட்ட தக்கது. 🙏🏼

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *