மதுரை, மார்ச் 26- ‘செம்மலர்’ இதழின் ஆசிரியரும், மார்க்சிய எழுத்தாளருமான ச. தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச்சிறு கதையின் தடங்கள்” என்ற ஆராய்ச்சி நூலுக்குச் சாகித்திய அகாடமி விருது கிடைத்துள்ளது. இதையொட்டி, மதுரை தீக்கதிர் வளாகத்தில் மார்ச் 25 புதனன்று தீக்கதிர் இடைக்கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. தீக்கதிர் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்துத் தனது உரையில், எளிய மக்களிடம் மார்க்சிய சிந்தனையை இலக்கியமாகக் கொண்டு செல்லும் அறிவுசார் மரபைத் தமிழ்ச்செல்வன் உறுதியுடன் முன்னெடுத்துச் செல்வதாக குறிப்பிட்டார்.
இயக்கத்திற்கான பெருமை நிகழ்வில் பாராட்டுரை வழங்கிய கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசுகையில், “விருது என்பது வாங்குவது அல்ல, பெறுவது. தற்காலிகமாக தடுக்கப்பட்டுப் பின் தமிழ்ச்செல்வனுக்கு இந்த விருது கிடைத்தது அதன் பெருமையை உயர்த்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கதைகளை வாசித்து அவர் உருவாக்கிய ஆழ்ந்த ஆய்விற்கான அங்கீகாரம் இது. அவரை ‘கட்சி எழுத்தாளர்’ என்று மட்டும் சுருக்கிவிட முடியாது; அனைத்து வாசகர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் இலக்கிய ஆளுமை அவர். புதிய தலைமுறையை வாசிப்புக்கு ஈர்க்கும் சக்தியான அவருக்குக் கிடைத்துள்ள இந்த விருது, தனிநபர் அங்கீகாரம் அல்ல, ஒட்டுமொத்த முற்போக்கு இலக்கிய இயக்கத்திற்குமான பெருமை” என்று புகழாரம் சூட்டினார்.
வாசிப்பே சமூக மாற்றத்தின் திறவுகோல் நிறைவாக ஏற்புரை ஆற்றிய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன், “எனது எழுத்து வாழ்க்கையை உருவாக்கியது ‘செம்மலர்’ இதழும், கம்யூனிஸ்ட் இயக்க அனுபவங்களும்தான். விருது என்பது தற்காலிக அங்கீகாரம் என்றாலும், அதன் மூலம் புதிய வாசகர்களும், பிற மொழியாக்க வாய்ப்புகளும் உருவாகின்றன. அதே போல, ‘திருப்பி அடித்த வரலாறு’ நூல் மூலம் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றைப் பதிவு செய்துள்ளோம். இந்த நூல், இளைஞர்களுக்கு வரலாற்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு முக்கிய ஆவணமாகத் திகழும். எனது எழுத்துக்களில் எனக்கு பெருமிதம் தருவது அந்த நூலுக்காக ஆற்றிய பணிதான். இன்றைய இயக்கங்களின் பலவீனமே வாசிப்பு இல்லாததுதான்.
புத்தகங்கள் என்பவை அலமாரியில் பூட்டி வைக்க அல்ல, வாசிப்பதற்கே! தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும். அரைகுறை அறிவைத் தவிர்த்து, ஒரு படைப்பை முழுமையாக வாசித்து உள்வாங்க வேண்டும். வாசிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும், அப்போதுதான் உண்மையான சமூக மாற்றம் சாத்தியமாகும்” எனத் தனது உரையில் வலியுறுத்தினார். ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு முன்னதாகப் பேசிய விவசாயத் தொழிலாளர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் ஏ. லாசர், கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை ஆவணப்படுத்திய அவரது ‘திருப்பியடித்த வரலாறு’ நூல் எதிர்காலத் தலை முறைக்கான வழிகாட்டி என்றும், இயக்க வரலாற்றைப் புரிந்துகொள்ள இது ஒரு முக்கிய ஆதாரம் என்றும் கூறினார்.
சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா பேசுகையில், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து, பல ஆண்டுகால உழைப்பில் அவர் உருவாக்கிய இந்த ஆய்வு நூல், உயர்நிலை ஆராய்ச்சிக்கு இணையானது எனப் பாராட்டினார். நிகழ்வில் வி. பரமேஸ்வரன், மா. கணேசன், இரா. விஜயராஜன், ஸ்ரீ ரசா, தி.வரதராஜன், அ.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.
நன்றி: தீக்கதிர் நாளிதழ்
*************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
