இன்றைய நவீன டிஜிட்டல் உலகத்தில் சிந்தனை மங்கி, தன்னுடைய இயல்புகளை இழந்து கொண்டிருக்கும் குழந்தைகளைப் புத்தக வாசிப்பின் அவசியத்தைத் தூண்டும் வகையில் “சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் ” எனும் நாவல், வாசிப்பவர்களை மாய உலகத்தினுள் அழைத்து செல்கிறது .
பரீட்சை முடிந்து கோடை விடுமுறையில் போரடிக்குது வீடியோ கேம் விளையாட போறனு சொல்ற 12 வயது நிரம்பிய நந்து எனும் குழந்தையை, அவருடைய அம்மா ஒரு பொது நூலகத்திற்கு அழைத்துக்கொண்டு செல்கிறார்.
முதல் நாள், அம்மாவின் வற்புறுத்தலால் நூலகத்திற்குச் செல்லும் நந்து , ஒரு புத்தகம் முழுவதும் படித்துமுடிக்கும் முன்பே, நேரம் முடிந்தது என்று புத்தகத்தை வாங்கிகொண்டு அனுப்பி விட்டார்கள். அவனுக்கு அந்த கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்து மறுநாள் சென்று அதே புத்தகத்தை தேடிக் கண்டுபிடித்து, மீதியைத் தொடர்ந்து படிக்கும் போது அவன் நினைத்த மாதிரியே இருக்க அவனுக்குப் புத்தகம் படிக்க ஆர்வம் அதிகரிப்பதாக நாவல் தொடங்குகிறது.
தொடர்ந்து, பேசும் பேனா , குள்ள மனிதர்கள், முதலுதவி அறை என மாயா நூலகம் படிப்போரை உள்ளே இழுத்துக் கொள்கிறது நாவல்…
எல்லா புத்தகத்திற்கும் உயிர் இருக்கு , அதை முறையாக பராமரிக்கணும் என்று புத்தகத்தின் முக்கியத்துவத்தையும் , அதனுடைய அவசியத்தையும் அழகாக , படிப்பவர்களுக்குப் படிக்கத் தூண்டும் வகையில் புத்தகம் சொல்லுவது போல் நாவல் தொடர்கிறது.
தூக்கி எறியப்பட்ட , கண்டுகொள்ளாமல் விட்ட , கிழிந்த புத்தகங்களையெல்லாம் ஒரு ஐ.சி.யு வில் உள்ள நோயாளிகள் தங்களுடைய துயரங்களை, நலம் விசாரிக்க வந்தவர்களிடம் சொல்வதுபோல் சுவாரசியமாக நாவல் விரிகிறது ….
அடுத்த அறையில், படிப்பின் அவசியத்தை சிந்திக்கவும் சரியாக செயல்படவும் தேவை என்று ஆடு சொல்வது போல் என்னால் பேசவும் , படிக்கவும் , எழுதவும் , சிந்திக்கவும் முடியும் என்று சொல்லி இதுவரை ஒரு ஆடு கூட வயதாகி செத்துப்போனதில்லை , அவை உணவுக்காக கொல்லப்படுகின்றன என்று மனிதர்கள் மனித மாண்போடு செயல்படவில்லை என்றும், தொடர்ந்து மனிதர்கள் எல்லா விலங்குகளையும் எப்படி நடத்துகின்றனர் எனவும், படிக்கும் அனைவரையும் கேள்விக்குள்ளாக்குகிறார் ஆசிரியர்.
மனிதர்கள் அனைவரும் சிந்தித்து , செயல்கள் நேர்பட , செம்மை அடைய , சமூகத்தில் அநீதிகளை, அடக்குமுறைகளை, பாகுபாடுகளை எதிர்த்துக் கேள்வி கேட்க, பொதுச் சிந்தனைகள், நேர்மறை சிந்தனைகள் வளர்த்திட நிறைய தேடிப் படிக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டுகிறது அந்த படிக்கும் ஆடி….
தொடர்ந்து , மிதக்கும் அறைக்குள் படிக்கும் எலி, ஏன் ஒரு பூனைகூட எலியுடன் நட்பு பாராட்டுவதில்லை, பூனை எப்போதும் எலியைக் கொல்லத் துடிக்கிறது என்று கேட்க. எலியும் அதுதான் எனக்கும் தெரியல (அத தெரிஞ்சுக்க தான் படித்து கொண்டிருக்கிறேன் என்று மனசுல நினைச்சுகிட்டு) என சோகமாகச் சொல்கிறது.
படித்து, முற்போக்கு சிந்தனை வளர்ப்பதன் மூலம் ஏற்கனவே சமுதாயத்தில் உள்ள பிற்போக்குப் பழக்க வழக்கங்களைச் சீர் செய்ய எலி தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறது.
தோற்றத்தை வைத்து ஒருவருடைய இயல்புகள் இப்படித்தான் என்று முன்முடிவு செய்யக்கூடாது என்று புலியைக் கொன்று , படிப்பவர்களிடைய மனதில் உள்ள தவறான முன்முடிவுகளை கழுதை உதைத்துத் தகர்த்தெறிகிறது.
இந்த மாயா நூலகம் சாக்ரடீஸ் தான் உருவாக்கினார் என்றும் அவரைத் தேடிய நந்துவுக்கு ஒரு மாயப்பரிசு வழங்கி, வகுப்பில் உள்ள புத்தகத்தோட மேலும் பல அரிய புத்தகங்களை வாசித்து , புதிய பல கதைகள் எழுதவேண்டும் என்று சுவாரசியமாக ஆரம்பம் முதல் இறுதிவரை பல அறிய செய்திகளைக் கதைகளின் வழியாக கடத்திய ஆசிரியர் எஸ் . ராமகிருஷ்ணன் (சாக்ரடீஸ்) அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் , இந்த அரிய புத்தகத்தினை என்னுடைய மகன் சாய்சரணுக்கு (வயது 10) பரிசளித்து அவனைக் கதை சொல்லவும், எழுதவும் ஊக்குவித்த “த.மு.எ.க.ச – அறம் கிளை – முகில் சிறார் குழு”வுக்கும் எனது அன்பான வணக்கமும் , நன்றியும்.
இந்த மாயா நூலகம் சாக்ரடீஸ் தான் உருவாக்கினார் என்றும் அவரை தேடிய நந்துவுக்கு ஒரு மாய பரிசு வழங்கி, வகுப்பில் உள்ள புத்தகத்தோட மேலும் பல அறிய புத்தகங்களை வாசித்து , புதிய பல கதைகள் எழுதவேண்டும் என்று சுவாரிசியமாக ஆரம்பம் முதல் இறுதிவரை பல அறிய செய்திகளை கதைகளின் வழியாக கடத்திய ஆசிரியர் எஸ் . ராமகிருஷ்ணன் (சாக்ரடீஸ்) அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
மேலும் , இந்த அறிய புத்தகத்தினை என்னுடைய மகன் சாய்ச்சரணுக்கு (வயது 10) பரிசளித்து அவனை கதை சொல்லவும், எழுதவும் ஊக்குவித்த “த.மு.எ.க.ச – அறம் கிளை – முகில் சிறார் குழு”வுக்கும் எனது அன்பான வணக்கமும் , நன்றியும்.
– ஞா .ஆனந்தன்,
காட்டுப்பாக்கம்
நூலின் பெயர் : சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
ஆசிரியர் : எஸ் . ராமகிருஷ்ணன்
வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம்
விலை : ரூ.70/-.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

