சொல் கவிதை  – சாந்தி சரவணன்

சொல் கவிதை – சாந்தி சரவணன்


நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும் அடுத்தவரை
விமர்சனம் செய்வதல்ல!
அது உன்னுடைய
சுயவிமர்சனம் !
உனது மனமெனும்
புதைக்குழியில்
மக்கி நாற்றம்
வீசிக் கொண்டு
இருக்கும்
எண்ணங்கள் தான் சொற்களாக
உன்னிலிருந்து
உதிர்ந்து உன்
அகத்தை
காட்சிப் படுத்துகிறது!
ஆதலால்
சிந்தித்து
சொல் உதிர்!

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 


Show 1 Comment

1 Comment

  1. ச. சாமுண்டீஸ்வரி

    ‘சிந்தித்து சொல் உதிர்’ சிறப்பான‌ வரிகள். கவிதை அருமை.
    வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *