வெண்மணி தீயில் கருகிய உடல்களை நேரில் பார்த்தேன் :  சோலை.சுந்தரபெருமாள்

வெண்மணி தீயில் கருகிய உடல்களை நேரில் பார்த்தேன் :  சோலை.சுந்தரபெருமாள்

தஞ்சை விவசாய, தொழிலாளர்களின் வாழ்க்கையைத் தீவிரமாக இலக்கியமாக்கி வருபவர் சோலை.சுந்தரபெருமாள். 1980களின் இறுதியில் எழுதத் தொடங்கி, இதுவரை ஐந்து நாவல்கள், நான்கு குறுநாவல்கள், எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் என இவரது படைப்புப் பணி தொடர்ந்துகொண்டிருக்கிறது.

கீழவெண்மணி சம்பவத்தை மையமாக வைத்து இவர் எழுதிய ‘செந்நெல்’ நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. இந்நாவல், பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இவரது எல்லா படைப்புகளும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிப்பவை.

திருவாரூரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சோலை பிறந்த காவனூர் கிராமம். அங்கு வறண்டு கிடந்த வயல்வெளியில் அமர்ந்து இருவரும் பேசினோம்…

உங்கள் ‘செந்நெல்’ நாவலின் முன்னுரையில் நீங்கள் கவிதை எழுதியவராக ஒரு குறிப்பு இருக்கிறது…

நான் ஆரம்பத்தில் கவிதை எழுதியவன்தான். பிரபலமான சினிமா கவிஞர்கள், சில வானம்பாடிக் கவிஞர்கள்… இவர்களின் பாதிப்பில் அந்தக் கவிதைகளை எழுதினேன். எதையும் நான் பத்திரிகைகளுக்கு அனுப்பியதில்லை. நானே பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். அந்தக் கவிதைகளை எல்லாம் தொகுத்து ‘தெற்கே ஒரு இமயம்’ எனும் ஒரு நூலாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டேன்.

RBalachandran.gif

கவிஞர் பாலாவிடம் விமர்சனம் எழுதித் தருமாறு கேட்டேன். என் கவிதைகளைப் படித்த அவர், “உங்கள் கவிதைகளில் உங்கள் முகமே இல்லை. உங்கள் எண்ணத்துக்கும் கவிதைகளுக்கும் அந்நியம் ஏகமாக இருக்கிறது. கவிதை உங்களுக்குச் சரிப்பட்டு வராது போலிருக்கிறது. கதை எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்’’ என்று நேரடியாகவே சொல்லிவிட்டார். 80 பக்கங்களில் புத்தகம் தயாராகிவிட்டது. 1200 பிரதிகளுக்கு 1180 பிரதிகளை அச்சகத்திலிருந்து அனுப்பி இருந்தார்கள். ஐயாயிரத்து சொச்சம் ரூபாய் செலவு. ஆனால், பாலாவின் விமர்சனம் என் நெஞ்சை உறுத்திக்கொண்டே இருந்தது

ஒரு நாள் இரவு தூக்கம் வரவில்லை. என்னுடைய முகமே இல்லாத கவிதைத் தொகுப்பு வெளிவரவே வேண்டாம் என்று காலையில் எழுந்து அத்தனை புத்தகங்களையும் தீ வைத்து எரித்து விட்டேன். இந்த விசயம் பாலாவுக்கும் தெரியும். அதன்பிறகு நான் கவிதையே எழுதவில்லை. என் மண்ணை, என் மக்களை, எங்கள் வாழ்க்கையை, எங்கள் மொழியிலேயே கதைகளாக எழுதுவது என்கிற முடிவுக்கு வந்தேன். என்னை என் மண்ணுக்கான எழுத்தாளனாக திசை திருப்பியது கவிஞர் பாலா அவர்கள்தான்.

கதை எழுதுவது என்று முடிவு எடுத்த பிறகு நீங்கள் எழுதிய முதல் கதை எது?

1987ஆம் ஆண்டு ‘கலைமகள்’ இதழில் ஒரு குறுநாவல் போட்டி அறிவித்திருந்தார்கள். அதற்கு ஒரு குறுநாவல் எழுதி அனுப்பலாம் என்று முடிவு செய்தேன். ‘கலைமகள்’ இதழைப் பொறுத்தவரை, மூத்த தஞ்சைப் படைப்பாளிகளின் உள்ளடக்கமே அதன் உள்ளடக்கமாகவும் இருந்தது. நான் அப்படியான ஒரு குறுநாவலை எழுதி பரிசு வாங்கிவிட முடியும். ஆனால், ஒடுக்கப் பட்ட விவசாயத் தொழிலாளர்களின் வாழ்க்கையை, அவர்களிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதை கருவாக வைத்து ‘மனசு’ என்றொரு குறுநாவலை எழுதி, அனுப்பினேன். அதற்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதான் பத்திரிகையில் பிரசுரமான எனது முதல் படைப்பு.

Tamilonline - Thendral Tamil Magazine - முன்னோடி - கி ...

‘கலைமகள்’ ஆசிரியர் கி.வ.ஜகந்நாதன், ‘சென்னை வந்தால் என்னை சந்திக்கவும்’ என்று ஃபார்மாலிட் டிக்காக ஒரு கடிதம் எழுதியிருந்தார். எழுத்தாளனாகணும் என்கிற ஆர்வத்திலிருந்த நான், உடனே சென்னைக்குப் பஸ் ஏறிவிட்டேன். அவரைச் சந்தித்தேன். அவரின் அணுகுமுறையிலிருந்தே, அவர் என்னை மேட்டுக்குடிக்காரனாய் இருப்பேனென்னு எதிர்பார்த்திருக்கிறார் என்பதை அறிய முடிந்தது. நான் தலித்தாக பிறக்காவிட்டாலும் தலித்தோடு தலித்தாக வாழ்ந்து கொண்டிருப்பவன்.

அவர், “இது போன்ற படைப்பை கலைமகள் வெளியிடுவது இதுதான் முதலும் கடைசியுமாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற பத்திரிகைகளிலே இனி எழுதிக் கொள்ளுங்கள்’’ என்று கூறிவிட்டார். அப்படி அவர் கூறியதும், எனக்கு ஏற்ற பத்திரிகை ‘தாமரை’தான் என்கிற எண்ணம் வந்துவிட்டது. அதன் பிறகு ‘தாமரை’யில் எழுத ஆரம்பித்தேன்.

அதன் பிறகு நீங்கள் ‘கலைமகள்’ இதழில் எழுதவே இல்லையா?

1988ஆம் ஆண்டு குறுநாவல் போட்டிக்கு ‘பொதி’ என்றொரு குறுநாவலை எழுதி ‘கமலநாதன்’ என்ற புனைபெயரில் அனுப்பினேன். அந்தக் குறுநாவல் ஒட்டர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.

தமிழில் ஒட்டர் சமூகத்தை முதல் முதலாக இலக்கியப்படுத் தியவர் நீங்கள்தானென்னு நினைக்கிறேன்…

அப்படித்தான் நானும் நினைக்கிறேன். என் கால் சட்டைக் காலத்திலிருந்து கோடை காலம் வந்துவிட்டால் சாலை போடும் கூலிகள் – ஒட்டர்கள் என் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள புளிய மரத்தடியே வாழ்க்கையாக இருப்பார்கள். அவர்களில் ஒருத்தி கருத்தம்மா. என் மனதில் நீண்ட காலம் வாழ்ந்தவள். அவளைப் பற்றிய என் படைப்புதான் ‘பொதி’. நிறைய பாராட்டுகளை பெற்ற குறுநாவல் அது.
இந்த நாவலுக்கு முன்பே, ஒட்டர்களின் வாழ்க்கையை ‘தலைமுறைகள்’ என்கிற சிறுகதையாக எழுதியிருக்கிறேன். அதுதான் ‘தாமரை’யில் வெளிவந்த என் முதல் சிறுகதை.

தாமரை இதழின் மூலமாகத்தான் நான் பரவலான கவனிப்பைப் பெற்றேன். கே.சி.எஸ்.அருணாசலம் அதன் பொறுப்பாசிரியராக இருந்தார். ‘தலைமுறைகள்’ கதை பிரசுரமான பிறகு அவர் ஒருமுறை திருவாரூருக்கு வந்தார். அப்போது என்னை சந்தித்துப் பேசினார். என்னைத் தொடர்ந்து எழுதச் சொன்னார். ஒவ்வொரு இதழிலும் என் கதை வெளிவந்தது. தாமரையில் ஒவ்வொரு மாதத்திலும் வெளிவரும் கதைகளில் சிறந்த கதைகளைத் தேர்வுசெய்து பரிசு கொடுப்பார்கள். அப்படி என் பல கதைகள் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன.

உங்களின் ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’, ‘ஒரே ஒரு ஊஊர்ல’, ‘நஞ்சை மனிதர்கள்’ ஆகிய மூன்று நாவல்களிலும் உள்ள வித்தியாசமான கதாமாந்தர்களை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள். அம்மூன்று நாவல்களும் எத்தகைய கவனிப்பைப் பெற்றன?

என் முதல் நாவலான ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ நாவலின் நாயகன் அப்புனு மனவளர்ச்சி குன்றியவன். உடன் பிறந்தவனாலேயே புறக்கணிப்புக்கு உள்ளானவன். பண்ணை அடிமையாக உள்ள தாழ்த்தப்பட்ட பெண்ணாகிய ‘செவந்தி’யின் நேசத்திற்கும் அன்பிற்கும் உரியவனாய் வாழத் தொடங்கிய அப்புனுவின் வாழ்வை மையமாக வைத்து அந்த நாவலை எழுதி யிருந்தேன். கும்பகர்ணன் போன்ற குணமுடைய ஒருவன் உறங்க மறந்தான். ஏன் உறங்க மறந்தான் என்பதை அப்புனு என்கிற கதாபாத்திரத்தின் மூலம் விவரித்தேன்.

இந்த நாவலை எழுதி முடித்தவுடன் கவிஞர் பாலாவைச் சந்தித்தேன். அவர், “இதுதான் உங்கள் உண்மையான முகம். தொடர்ந்து எழுதுங்கள்’’ என்று உற்சாகப்படுத்தினார். அவரது மதிப்புரையுடன் அந்த நாவல் வந்தது. பாளையங்கோட்டையில் ‘90ன் சிறந்த நாவல்கள்’ என்றொரு ஆய்வரங்கம் நடந்தது.

படைப்பாளிகளை ஊக்குவித்த தி.க ...

அந்த ஆய்வரங்கத்தில், ஜெயமோகனின் ‘ரப்பர்’ நாவலும், எனது ‘உறங்க மறந்த கும்பகர்ணர்கள்’ நாவலும் சிறந்த நாவல்களாக தி.க.சி. யினால் முன்வைக்கப்பட்டன. இது பற்றிய கட்டுரை ‘சுபமங் களா’வில் வெளிவந்தது.

Noolulagam » சோலை சுந்தர பெருமாள் » Page 1
‘ஒரே ஒரு ஊர்ல’ நாவல், நாகதோஷம் என்கிற மூடநம்பிக்கையால் ஒரு பெண்ணின் வாழ்க்கை எவ்வாறு சீரழிக்கப்படுகிறது என்பதைக் கருவாகக் கொண்டது. எங்கள் ஊரிலே நடக்கும் ‘காமன்விழா’வை அந்த நாவலுக்குள் கொண்டு வந்தேன்.

இன்னொரு முக்கிய அம்சம், என் பாட்டி காலத்திலே, எங்கள் பகுதியில் திருமணத்துக்காக ஜாதகம் பார்க்க மாட்டார்களாம். உடற்கூறு ரீதியாகத்தான் திருமணப் பொருத்தம் பார்ப்பார்களாம். உதாரணமாக, சிறுநீர் கழிக்கும்போது அதன் பறிப்புத் தன்மையை வைத்து, சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்வார்களாம்.

தமிழ் நாவலாசிரியர்களின் முதல் ...

 

இதுபோல ஏராளமான தொன்மங்களை அந்த நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். ‘மிகச்சிறந்த நாவல்’னு தோழர் பொன் னீலன் ‘தாமரை’ விமர்சனத்திலே எழுதியிருந்தார்.

‘நஞ்சை மனிதர்கள்’ என் பாட்டியின் கதை. அந்தக் காலத்தில் பெண்கள் தங்கள் கணவனாலே எல்லாவற்றெல்லாம் ஒடுக்கப் பட்டார்கள் என்பதை என் பாட்டி என்னிடம் கூறியிருக்கிறார்கள். 12 வயதில் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. 80 வயதுக்கு மேலும் அவர்கள் தாம்பத்யம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால், ஒரு முறைகூட என் பாட்டனார் என் பாட்டியை சரிசமமாக உட்கார வைத்ததில்லையாம். தண்ணீரைக்கூட கையால் வாங்க மாட்டாராம். பாட்டி கீழே வைத்துவிட வேண்டும். அவர் எடுத்துக் கொள்வாராம். அந்த அளவுக்கு பெண்களை அப்போது ஒடுக்கி வைத்திருக்கிறார்கள்.  அந்தப் பாட்டி, அவளது மகள், பேத்தி ஆகிய மூன்று தலை முறைப் பெண்களின் வாழ்க்கையை அதில் பதிவு செய்திருக்கிறேன். அதில் ஒரு வரலாற்று நிகழ்வையும் கொண்டு வந்திருக்கிறேன்.

என் பாட்டியின் காலம் திராவிட இயக்கம் தோன்றிய காலம். அடுத்து மகளிர் அமைப்புகள் உருவாகி போராடுகிற காலம். அதற்கு அடுத்ததாக, பெண்கள் வெற்றி பெற்ற காலம் என உருவாக்கி யிருக்கிறேன். மூன்றாவது தலைமுறையாக வரும் காயத்ரி, தன் பெயருக்கு முன்னால் உள்ள இனிசியலில் தனது அப்பாவின் பெயருக்குப் பதிலாக அம்மாவின் பெயரை வைத்துக் கொள்கிறாள். இவள்தான் இந்தச் சமூகத்துக்குத் தேவையான பெண் என்பதை அடையாளம் காட்டியிருக்கிறேன்.

உங்கள் பாட்டியை பல கதைகளில் பாத்திரப்படுத்தியிருக் கிறீர்கள். அவரைப் பற்றி…?

அவர், பள்ளிக்கூடம் இருந்த திசையே தெரியாதவர். ஆனால், அவர் எனக்குச் சொன்ன கதைகள் சின்ன வயதிலேயே என்னை அசைத்தன. “எல்லா பொம்பளைங்களும் வேப்பந்தழை அசையிறத பார்த்துட்டு ‘பேய்’ன்னு சொல்லுவாளுங்க. நான் பேயைப் பார்த்தாலும் வேப்பந்தழை ஆடுதுன்னு சொல்லுவேன்’’னு சொல்லியிருக்காங்க. அவரைப் போலத்தான் இன்றைய சமூகப் பெண்ணினம் இருக்கவேண்டும் என்பதே என் எண்ணமாக இருக்கிறது. சிறு தெய்வங்கள் பெரும் தெய்வங்களாக மாற்றப்படுவதை அப்போதே எதிர்த்தவர் என் பாட்டி. ‘குறி’ சிறுகதையில் வரும் ‘அங்களம்மை’யும் அவர்தான்.

உங்களின் ‘ஒரே ஒரு ஊர்ல’ நாவல் வந்த காலத்தில் நீங்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதே…?

உண்மைதான். என் உறவினர்களிடையே அந்த நாவல் மனக்கொதிப்பை ஏற்படுத்தியது. பண பலம், அதிகார பலம் உள்ள ஒருவரின் துணையோடு என் உறவுக்காரன் ஒருவன், “இதுபோல இனி எழுதினால் கொலை செய்துவிடுவோம்’’ என்று மிரட்டியதோடு அடித்தும்விட்டான். அந்த தாக்குதலுக்கு என் கிராமத்து மக்களின் திரட்சியால் அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள்.

கீழவெண்மணி சம்பவத்தை மையப்படுத்தி ‘செந்நெல்’ நாவலை எழுதியிருக்கிறீர்கள். இதே சம்பவத்தை வைத்து இந்திரா பார்த்தசாதி ‘குருதிப்புனல்’ நாவலை முன்பே எழுதி யிருக்கிறார். அதன்மீது நிறைய விமர்சனங்கள் வந்தன. ரொம்ப காலத்துக்குப் பிறகு அந்தச் சம்பவத்தை இப்போது நாவலாக்கி இருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி…?

1967ல் அன்றைய நாகை மாவட்டத்தில் விவசாயக் கூலிகள் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக 44 பேரை நிலவுடைமையாளர்கள் உயிரோடு எரித்தார்கள். இங்கிருந்து கொஞ்ச தூரத்தில்தான் இருக்கிறது அந்த கீழவெண்மணி கிராமம்.
அந்தச் சம்பவம் நடந்தபோது நான் பள்ளிச் சிறுவன். கரிக் கட்டையாகிப் போன 44 சடலங்களையும் டிராக்டரில் ஏற்றிக் கொண்டு நாகை மருத்துவமனைக்குச் சென்றபோது, பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த நான் அதை நேரில் பார்த்து அதிர்ந்து போனேன். அந்த அதிர்ச்சி இன்னும் என் நெஞ்சை விட்டு அகலவில்லை.

என்னோடு பேருந்தில் பயணம் செய்தவர்கள் அந்தக் கொடூர சம்பவம் பற்றி இரண்டு விதமாக விமர்சித்தது என் காதுகளில் இன்னமும் கேட்டுக்கொண்டிருக்கிறது. “இந்தக் கம்யூனிஸ்ட்காரன்களுக்கு இனிமேலாவது புத்தி வருகிறதா பார்ப்போம்’’ என்றனர் சிலர். “என்னதான் இருந்தாலும் இப்படி செய்யலாமா?’’ என்று பரிதாபமாக ‘இச்’ கொட்டினார்கள் சிலர்.

குருதிப்புனல் [Kuruthi Punal] by Indira Parthasarathy ...

இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ நாவலை எழுதியபோது, அவர் விவசாயத் தொழி லாளர்களின் பக்கம் நிற்கவில்லை. நிலவுடைமையாளர்களின் பக்கமே சாய்ந்திருந்தார். மேலும், அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நையாண்டி பண்ணியிருந்தார்.

Noolulagam » சோலை சுந்தர பெருமாள் » Page 1

ஆகவே, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ‘செந்நெல்’ நாவலை எழுதி னேன். அந்த நாவல் இ.பா.வின் குருதிப்புனலுக்கு எதிர்நிலையிலே இருப்பதை தி.க.சி., அருணன், வீ.அரசு, வெங்கட் சாமிநாதன் போன்ற ஆய்வாளர்கள் விரிவாக ஆய்வு செய்திருக்கிறார்கள்.

செந்நெல் நாவலில் பொதுவுடைமை இயக்கத்தின் மாபெரும் போராட்டத்தையும் தியாகத்தையும் விவரித்துள்ள நீங்கள், அடுத்த படைப்பான ‘தப்பாட்டம்’ நாவலில் அந்த இயக்கத்தை பலகீனப்படுத்துவதுபோல எழுதியிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தனவே?

‘செந்நெல்’லுக்கும் ‘தப்பாட்ட’த்துக்கும் வரலாற்றுரீதியாக ஐம்பது ஆண்டுகால இடைவெளி உண்டு. செந்நெல்லில் ஒரு வர்க்கப் போராட்டம் எப்படி நடந்தது என்பதை அதன் கூறுகளோடு அணுகி இருக்கிறேன்.

Noolulagam » சோலை சுந்தர பெருமாள் » Page 1

தப்பாட்டத்தில் முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் ஒன்றாக இணைந்து நிற்கிற சூழலில் சாதியக் கூறுகளை இடதுசாரிகள் எவ்வாறு அணுகினார்கள் என்பதை சொல்லியிருக்கிறேன். அதில் உள்ள பாத்திரங்கள் எல்லாம் இப்போதும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அதில் வருகிற சுந்தரமூர்த்தி வாத்தியார் என்னுடைய புனைவு.

தப்பாட்டம் நாவலை நடுநிலையோடு படித்த எல்லாருமே, கடைசி அத்தியாயம் நாவலோடு ஒட்டவில்லை என்றார்கள். அங்கேதான் நான் ஒட்டியிருக்கிறேன். முதலாளித்துவ சக்திகளை எதிர்த்து நின்று தியாகம் செய்த பொதுவுடைமை இயக்கத்தை யாரும் வீழ்த்திட முடியாது என்பதை அடையாளப்படுத்துவதற்காகத்தான் அந்த அத்தியாயத்தைச் சேர்த்தேன். பொதுவுடைமைவாதிகள் ஓரிடத்திலும் ஊனப்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

பொதுவாக, தலித் நாவல்கள், சாதிய உள்ளடுக்குகள் அப்படியே இருக்கவேண்டும் என்று விரும்புபவை. தலித் படைப் பாளிகள் அவர்கள் பிரச்சினைகளை அப்படியே பேசுகிறார்கள். நான், சாதிய அடுக்குமுறைகளுக்குள் உள்ள முரண்பாடுகளை பதிவு செய்திருக்கிறேன். சமூகத்தில் பொருளாதாரப் பார்வை என்று ஒன்று இருக்கிறது. பள்ளர், பறையர், அருந்ததியர் என்கிற சாதிகளுக்குள்ளேயே பொருளாதாரப் பார்வை உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்கிற விசயத்தை அந்த நாவலிலே எழுதி யிருக்கிறேன்.

சின்னக்குத்தூசி: தி.மு.க விற்குத் ...
அதைப் படித்துவிட்டு சின்னக் குத்தூசி, “இப்படி ஒரு நுட்பமான விசயம் இருப்பது எனக்கு இதுவரை தெரியாது. வீர விளையாட்டாக எல்லாராலும் அறியப்பட்ட ஜல்லிக்கட்டு – மாடுபிடி திருவிழா பற்றி இதுவரை எழுதியவர்களெல்லாம் பார்த்திராத கோணத்தில் – தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் சாதி பேதங்கள் எந்த அளவுக்கு வெறியுணர்வாக துவேச உணர்வாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது என்பதை சித்திரித் திருக்கிறார்’’ என்று கூறினார்.

“சாதிய நோய்க்கு கம்யூனிச மருந்து’’ என்று இந்தியா டுடே விமர்சனம் வெளியிட்டது.

கரிசக் காட்டுப் பூ... பா.செயப்பிரகாசம்

“தலித்துகள் எந்த இடத்துக்குப் போக வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி அவர்களை அரசியல்படுத்துகிற நாவல்’’ என்று பா.செயப்பிரகாசம் குறிப்பிட்டிருக்கிறார். இப்படியான அபிப்ராயங்களையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.

செந்நெல், தப்பாட்டம் ஆகிய இரண்டு நாவல்களில் இடம் பெற்றுள்ள கிராம மக்களின் அபிப்ராயம் என்னவாக இருக் கிறது?

செந்நெல் நாவலை அச்சேற்றுவதற்கு முன்பே அதன் கடைசி அத்தியாயத்தை அந்தப் பகுதி மக்களிடம் படித்துக் காண்பித்தோம். வயதான பெண்கள், “எங்கள் வாழ்க்கையை அப்படியே சொல்லியிருக்கிறீர்களே’’ என்று வியந்தார்கள். இளைஞர்கள், “எங்கள் சமூகம் கொட்டங்கச்சி, மல்லாவில் சாப்பிட்டதையும் பண்ணையடிமையாக இருந்ததையும் இப்போது சொல்லித்தான் ஆகணுமா?’’ என்று கேள்வி கேட்டார்கள். அவர்களுக்கு இந்த நாவலின் நோக்கத்தை விளக்கினோம். மௌனமாக ஏற்றுக்கொண்டார்கள்.

வெண்மணிக்கு மிக அருகிலுள்ள கீவளூரில்தான் ‘செந்நெல்’ நாவலை வெளியிட்டோம். வெளியிட்ட அன்றே 100 பிரதிகளுக்கு மேலும் அதன்பிறகு 50 பிரதிகளுக்கு அதிகமாகவும் அந்தப் பகுதியிலேயே பரவி விட்டது. வெண்மணி கிராமத்திலிருந்து படித்த சமுதாயம் வந்துவிட்டது. படித்துவிட்டு பலர் கடிதம் எழுதினார்கள். வெண்மணியில் பிறந்த ஒருவர் டெல்லியில் அதிகாரியாக இருக்கிறார். அவர், “எங்கள் மக்களைப் பற்றிய சிறந்த வரலாற்று ஆவணம்’’ என்று பாராட்டினார்.

‘தப்பாட்டம்’ நாவல் இரண்டு விதமான கருத்துகளை எதிர்கொண்டது. அங்கே அரசியல் களத்தில் உள்ள இடதுசாரிகள், இடதுசாரிகளை கேள்விக்கு உட்படுத்திவிட்டீர்கள் என்றார்கள். “ஒரு சின்ன பகுதியில் நடந்த விசயத்தை தமிழ்நாடு முழுவதுமாக இருக்கிற மாதிரி எழுதியிருக்கிறீர்களே’’ என்றார்கள்.

“தமிழ் நாட்டில் பொதுவுடைமை இயக்கமும், பெரியார் இயக்கமும் செய்த போராட்டத்தால் சாதிய ஒடுக்குமுறை குறைந் திருக்கிறது என்பது உண்மைதான். குடியரசு தலைவராக ஒரு தலித் வரமுடிகிறது. ஆனால் பஞ்சாயத்து தலைவராக ஒரு தலித் வர முடியவில்லையே என்பதுதான் என் கவலை’’ என்றேன்.

மூத்த தஞ்சைப் படைப்பாளிகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்களே…

இந்த மண், செங்கொடி இயக்க நிழலும், திராவிட இயக்கத்தின் பிடிப்பும் கொண்ட மண். இங்கே, மக்கள் பிரச்சினைகளோடு அரசியல் கலந்திருக்கும்போது, தஞ்சை இலக்கியவாதிகள் அரசியலை ஒதுக்கி வைத்தது எனக்கு மிகப்பெரிய சோகமாக இருக் கிறது.

 

 

சண்பகப்பூ – தி.ஜானகிராமன் சிறுகதை ...
தி.ஜானகிராமன், மௌனி, க.நா.சு. போன்றவர்கள் எல்லாம் சங்கரரின் மாயாவாதிகளாக இருந்தார்கள்.

மௌனி எனும் தொன்மம்

மௌனியின் படைப் புகள் இன்றைய இந்துத்துவாவை அன்று பேசின. இவர்களை குறை சொல்வதற்கு எனக்கு தகுதி இருக்கிறது என்று கேட்கி றார்கள். தகுதி அல்ல இங்கே முக்கியம். பெரும்பான்மையான மக்களைப் பற்றி எழுதாமல் திட்டமிட்டு அவர்கள் தவிர்த்தார்களா இல்லையா என்பதுதான் கேள்வி.

வேளாண் வாழ்க்கை அனுபவம் அவர்களுக்குப் பிடிபடா திருக்கலாம் அல்லவா?

தி.ஜானகிராமன் மட்டுமே அரசு ஊழியர். மற்றவர்கள் எல்லாம் பண்ணையார்கள். அவர்களுக்கு எங்கள் மக்களின் வாழ்க்கை தெரியும். இருந்தும், வேண்டுமென்றேதான் தவிர்த்தார்கள்.

Indira Parthasarathy

அதை மீறி எழுத வந்த இந்திரா பார்த்தசாரதி ஒடுக்கப்பட்ட தொழிலா ளர்களின் பக்கமில்லாமல் நிலவுடைமையாளரின் பக்கம் சாய்ந்து விட்ட அரசியலை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா!

மூத்த தஞ்சைப் படைப்பாளிகளின் படைப்புகளை விமர் சிக்கும் நீங்கள், அவர்களின் கதைகளைத் தொகுத்து ‘தஞ்சை சிறுகதைகள்’, ‘தஞ்சை கதைக் களஞ்சியம்’ எனும் இரு கதைத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறீர்களே…?

தஞ்சை மண்ணிலிருந்து இதுவரை எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகள் இப்படியானவை. நான் இவர்களின் படைப்புகளிலிருந்து விலகி, அவர்கள் வெளிப்படுத்தும் அழகியலுக்கு எதிர்நிலை கொண்டுள்ள ஒடுக்கப்பட்டுள்ள மக்களின் அழகியலையும் அவர்களின் அரசியலோடு எழுத வந்திருக்கிறேன் என்பதற்கு சாட்சியங்களாகத்தான் அந்தத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்

 ‘வண்டல் எழுத்தாளர்கள்’ என்றொரு அடையாளத்தை உருவாக்கியிருக்கிறீர்களே… அதற்கான அவசியம் என்ன?

‘வண்டல் இலக்கியம்’ என்பது ஒடுக்கப்பட்ட வேளாண் மக்களுக்கான இலக்கியம். சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்டு கிடந்த, கிடக்கிற மக்களின் வாழ்க்கையை அவர்களின் மொழி, சொலவடைகள், தொன்மங்கள், பண்பாட்டுக் கூறுகள், நம்பிக்கைகள், போராட்டங்கள், மருத நிலத்தின் தொன்மை… இவை எல்லாவற்றையும் நசிவுக்கு உட்படுத்திய ஆதிக்க சக்திகளின் தந்திரங்கள் அனைத்தையும் வெளிப்படுத்து வதுதான் வண்டல் இலக்கியம்.

பொத்தாம் பொதுவாக எழுதுகிறவர்களெல்லாம் வண்டல் இலக்கியவாதியாகிவிட முடியாது. சோழநாடு சோறுடைத்து’ என்கிறோம். இன்றைக்கு நிலை என்ன? நாம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிற இந்த மண், முப்பது ஆண்டுகளுக்கு முன், சங்க இலக்கியத்திலே மருத நிலத்தை எப்படி சொல்கிறார்களோ அப்படியான அற்புதமான மண். இந்த மண் மணக்கும். ஆனால், இன்று வறண்டு கிடக்கிறது. நெல் விளைந்த பூமியிலே காட்டாமணியும் கருவேலும் மண்டிக் கிடக்கிறது. விவசாயி பட்டினியாலே சாகிறான். எலிக்கறி தின்று உயிர் வாழ் கிறான்.

இந்தியாவுக்கே சோறு போட்டவன் சோற்றுக்கு தட்டேந்தி நிற்கிறான். இந்த எதார்த்தத்தைச் சொல்கிற இலக்கியம்தான் வண்டல் இலக்கியம்.

புதிய புத்தகம் பேசுது
டிசம்பர் 2004

சந்திப்பு: சூரியசந்திரன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *