சால்வே அறிவியல் மாநாடுகள், ஒரு வரலாற்று பார்வை
ஆயிஷா இரா நடராசன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அறிவியல் மந்திரவாதிகளின் கூடுகை என்று அதை அழைத்தார். பேராசிரியர் மற்றும் தனது நண்பர் மைக்கேல் பிளஸ்சோ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் தான் ஐன்ஸ்டீன் இவ்விதம் குறிப்பிட்டிருந்தார். இந்த மந்திரவாதிகளின் கூடுகைக்கு செல்வதற்காக தான் தனது வேலைகளை எல்லாம் சுருக்கிக்கொண்டு விரைவாக முடிக்க வேண்டி இருக்கிறது என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டார் அவர் குறிப்பிடுவது முதல் சால்வே கூடுகை 1911 ல் அது கூட்டப்பட்டது.
அழைப்பு அனுப்பப்பட்டவர்களுக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டு உலகளவில் தலைசிறந்த விஞ்ஞானிகளை ஒன்று கூட்டி இந்த மாநாடுகள் நடத்தப்பட்டன. சால்வே மாநாட்டை நடத்துவதில் பெல்ஜியம் நாட்டின் தொழிலதிபர் எர்னஸ்ட் சால்வே தன்னுடைய இயற்பியல் மற்றும் வேதியியலுக்கான சர்வதேச சால்வே நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட பிரமாண்ட மாநாட்டு அரங்கங்களை இதற்காக ஒதுக்கினார் அங்கு விஞ்ஞானப் பட்டறைகள் கருத்தரங்குகள் உறைகள் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டன.. எர்னஸ்ட் சால்வே இந்த மா நாடுகளுக்கான அனைத்து செலவையும் ஏற்றுக்கொண்டதோடு நிறுத்தவில்லை அவர் இந்த விஞ்ஞானிகளுக்காக தனியாக நிதி உதவியும் அவர்களுடைய ஆய்வுகளுக்காக செய்து வந்தார்.
1911 அக்டோபர் 30 முதல் நவம்பர் மூன்றாம் தேதி வரையில் பிரஸ்ஸல்ஸ் எனும் நகரில் இயற்பியலின் முதல் சால்வே மாநாடு கூட்டப்பட்டது இந்த மாநாட்டின் தலைவராக என்றிகோ லோரன்ஸ் இருந்தார். இந்த மாநாட்டின் தலைப்பு கதிர்வீச்சு மற்றும் குவாண்டம் ஆகும். இந்த மாநாடு அடிப்படை இயற்பியல் மற்றும் குவாண்டம் கோட்பாடு என இரண்டு அணு அணுகுமுறைகளைக் கொண்டிருப்பதிலுள்ள சிக்கல்களை ஆய்வு செய்தது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான் இரண்டாவது இளைய இயற்பியலாளராக இருந்தார் அவரை விட வயது குறைவான லிண்டாமண் என்பவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார். சால்வே காங்கிரசின் மற்ற உறுப்பினர்கள் மேரி கியூரி எர்னஸ்ட் ரூதர்போர்டு ,ஹென்றி பாய்இன்கார் போன்ற மாபெரும் அறிஞர்கள் ஆவர். இவர்கள் அனைவருமே நோபல் பரிசு பெற்றவர்களாகவோ அடுத்து பெற இருப்பவர்களாகவோ இருந்ததால் இன்றைக்கும் இந்த சால்வே மாநாடுகள் பெரிய அளவில் பேசப்படுகின்றன முதல் ஐந்து சால்வே மாநாடுகளுக்கும் என்றிகோ லோரன்ஸ் தலைமை வகித்தார் இரண்டாவது மாநாடு1913 ல் கூட்டப்பட்டது பருப்பொருளின் அமைப்பு என்கிற தலைப்பு இந்த மாநாட்டில் ஓரிருவரை தவிர ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உட்பட யாரும் கலந்து கொள்ளவில்லை ஹென்றி லாரன்ஸ் டச்சுக்காரர்.
இந்த மாநாடுகளுக்கும் ராயல் கழகம் வழக்கமாக நடத்திய கூட்டங்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு இருந்தது அதே காலகட்டத்தில் லண்டனின் உடைய ராயல் கல்வியகம் பெரிய அளவில் விஞ்ஞானத்தில் பேசப்பட்டதை நாம் பார்க்கிறோம் ஆனால் சால்வே கூட்டங்கள் வேறு மாதிரியானவை யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்கிற வகை மாநாடுகள் அல்ல ஒரு குறிப்பிட்ட அறிவியலின் சிக்கலை கையில் எடுத்துக் கொண்டு அதற்குத் தீர்வு காணுகின்ற வகையில் அது தொடர்பான விஞ்ஞானிகளை ஒன்றினைக்கின்ற கூட்டங்களாக அவை நடைபெற்றன ஒருவர் பேச மற்றவர்கள் கேட்பது என்கிற உரைகளாக இல்லாமல் கலந்துரையாடலாக ஜனநாயகத் தன்மையோடு சால்வே மாநாடுகள் நடத்தப்பட்டன கடுமையான விவாதங்கள் தொடர் பேச்சுவார்த்தைகள் சில சமயம் இரவும் பகலும் தொடர்ந்து அதை பார்க்கிறோம்.
ஒரு விஷயத்தின் ஒன்று அல்லது இரண்டு மதிப்புரைகள் உடன் தொடங்கின அதைத் தொடர்ந்து கலந்துரையாடலுக்கான விரிவான நேரம் ஒதுக்கப் பட்டது.. எரிக் லாரன்ஸ் தலைமையில் அக்டோபர் இருபத்திநாலு முதல் 29 ஆம் தேதி வரை நடந்த1927 சால்வே மாநாடு மிகவும் பிரசித்தி பெற்றது இந்த மாநாட்டின் தலைப்பு எலெக்ட்ரான்கள் மற்றும் போட்டான்கள் என்பது. குவாண்டம் இயக்கவியலுக்கு பின்னால் உள்ள கருத்துக்கள் பற்றிய சர்ச்சைகளால் இந்த மாநாடு பெயர் பெற்றது 1925 ல் தொடங்கி டென்மார்க் இயற்பியலாளர் நீல்சு போர் மற்றும் ஜெர்மன் இயற்பியலாளர்கள் ஆன ஏ சன்பார்க் ,மேக்ஸ் போன் என விரிவடைந்து நடந்த தொடர் உரையாடல்கள் குவாண்டம் இயக்கவியலின் கோபன்ஹேகன் விளக்கம் என்று அழைக்கப்பட்டன இது கோட்பாட்டில் உள்ள உறுதி இன்மை அதாவது முடிவின் நிகழ்தகவை மட்டுமே கணிக்க முடியும் என்கின்ற உறுதியின்மை கோட்பாடை அடிப்படையாகக் கொண்டது.
இது விஞ்ஞானிகளால் பெரும்பாலும் ஏற்கப்படவில்லை ஆனால் சால்வே மாநாட்டுக்குப் பிறகு ஓரளவிற்கு விஞ்ஞானிகள் அதை புரிந்து கொண்டனர் அனுவின் துகள் அடிப்படையில் எப்போது அலையாகவும் எப்போது துகள் வடிவிலும் இருக்கிறது என்பதை உறுதியிட்டு கூறமுடியாது என்கிற அறிவியல் சித்தாந்தத்தின் முக்கிய படிநிலையை ஐன்ஸ்டீன் போன்றவர்கள் ஆரம்பத்தில் ஏற்கவில்லை.. இந்தக் கோட்பாட்டு உறுதியற்ற தன்மை என்கின்ற சர்ச்சை1927 ல் முன்வைக்கப்பட்டது இயற்பியலாளர்கள் இடையே கோபன்ஹேகன் விளக்கத்தை பரப்புவது மாநாட்டின் மூலம் துரிதப்படுத்தப்பட்டது.
எனவே சால்வே மாநாடுகள் இல்லாமல் இன்றைய குவாண்டம் இயற்பியல் இல்லை என்றே சொல்லலாம் பங்கேற்பாளர்களால் நடத்தப்பட்ட ஐந்தாவது சால்வே மாநாடு தனித்து நிற்கிறது இந்த 29 பங்கேற்பாளர்களில் 17 பேர் ஏற்கனவே நோபல் பரிசு பெற்றவர்கள் அதில் மேரி கியூரி இரு முறை நோபல் வென்றிருந்தார் முதல் உலகப் போருக்குப் பிறகு நடைபெற்ற இந்த மாநாடுகளில் ஐன்ஸ்டீனையும் மற்றவர்களையும் கலந்து கொள்வதைத் தடுப்பதற்கு ஜெர்மன் எதிர்ப்பு தப்பெண்ணம் வேலை செய்தது.
இது குறித்து ஃபோன் இயக்கவியலின் உறுதியின்மை கோட்பாட்டை முன்மொழிந்தவர்களில் ஒருவரான ஷோஜிஞ்சர் கருத்து சொல்லும் பொழுது வெவ்வேறு ஆய்வுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே பரிமாற்றம் சாத்தியம் என்பதே ஆச்சரியமாக இருந்தது குவாண்டம் கோட்பாட்டின் இயற்பியல் அடித்தளங்களைத் தெளிவு படுத்துவதற்கு அசாதாரணமான பங்களிப்பை அளித்துள்ளது இது குவாண்டம் கோட்பாட்டின் நிறைவை உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்..1927 சால்வே மாநாட்டில் ஐன்ஸ்டீனுக்கும் நீல்ஸ் போர்க்கும் இடையில் நடந்த காரசாரமான விவாதங்கள் இன்று வரையில் உலகளவில் பேசப்படுகின்றன. அறிஞர்கள் அதிகம் கூடிய ஒரு புகைப்படம் என்று இப்போதும் பிரபலமான ஒரு புகைப்படம் இந்த மாநாட்டை ஒட்டி இணையத்தில் வைரலாக பகிரப்படுகிறது.
சால்வே மாநாடுகள்1927 பிரபல புகைப் படத்தோடு முடிந்துவிடவில்லை 1930 ல் காந்தவியல் குறித்த அற்புதமான மாநாடு கூட்டப்பட்டது அது பாரிஸ் நகரில் நடந்தது 1933 அணுக்கருவின் கட்டமைப்பு மற்றும் பண்புகள் குறித்த மாநாடாக சால்வே மாநாடு கூட்டப்பட்டது 1958 கூட்டப்பட்ட லாரன்ஸ் பிராக் எனும் அற்புத கேம்பிரிட்ஜ் அறிஞர் தலைமை வகித்த பிரபஞ்சத்தின் அமைப்பு மற்றும் பரிணாமம் என்கிற மாநாட்டில்தான் முதன் முதலில் பெரு வெடி கோட்பாடு முன்வைக்கப்பட்டது என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும் அதேபோல க்வாண்டம் புல கோட்பாடு குறித்து1961 அதே லாரன்ஸ் பிராக் தலைமையில் மீண்டும் ஒரு அற்புத மாநாட்டை சால்வே காங்கிரஸ் அமைப்பு நடத்திக்காட்டியது.
இயற்பியல் மட்டுமல்ல வேதியியலிலும் சால்வே மாநாடுகள் நடத்தப்பட்டன வேதியியலின் சால்வே மாநாடுகளில் ஒற்றை தலைப்பு என்று இல்லாமல் 23 தலைப்புகளில் விவாதங்கள் நடத்தப்பட்டன கட்டமைப்பு மற்றும் வேதியல் செயல்பாடு மேல் பூச்சு எனும் தனி வேதியியல் குறித்த ஒரு மாநாடு கரிம மூலக்கூறுகளின் அமைப்பு குறித்த ஒரு மாநாடு ஆக்சிஜன் மற்றும் அதன் வேதியியல் உயிரியல் எதிர்ப்ப னைகள் குறித்து ஒரு மாநாடு வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன்கள்க்கு என்றே தனியாக டிரிக்ஸ் வாட்ஸ் தலைமையில் நடந்த 1937 ஆண்டில் சால்வே வேதியியல் மாநாடு பெயர் பெற்றதாகும்.
இன்றும் சால்வே மாநாடுங்கள் தொடர்கின்றன என்றால் நம்புவீர்களா..2016 நானோ வேதியியல் மற்றும் உயிரியலில் வினையூக்கம் என்கிற தலைப்பில் அதே புருசெல்ஸ் நகரில் வேதியியலுக்கான சால்வே மாநாடு கூட்டப்பட்டது சமீபத்தில் 2022 ஆண்டில் இருபத்தோராம் நூற்றாண்டின் வேதியியல் சவால்கள் எனும் தலைப்பில் ஒரு மாநாடு கூட்டப்பட்டது இதில் இதில் சிறப்பானவேடிக்கை என்னவென்றால் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் விஞ்ஞானிகள்..
2023 ஆம் ஆண்டில் நானோ அணுக்களின் அமைப்பு மற்றும் இயக்கவியல் எனும் தலைப்பில் டேவிட் கிராஸ் தலைமையில் இயற்பியல் மாநாடு நடத்தப் பட்டது இதில் நானோ தொழில்நுட்பம் குறித்த முக்கிய அறிவியல் பங்களிப்புகள் பேசப்பட்டன சால்வே மாநாடுங்கள் என்பவை அறிவியலின் ஒரு முக்கியமான பிரச்சனையை பொதுவெளியில் தீர்த்து வைத்தன அறிவியலுக்கு உள்ளே இருக்கக்கூடிய கோட்பாட்டு வேற்றுமைகளை விஞ்ஞானிகள் பேசி தீர்த்துக் கொண்டது என்பது ஒரு விஷயம் தான் இந்த மாநாடுகளின் மூலம் உலகெங்கிலும் அறிவியலை புரிந்து கொள்வதற்கான ஒற்றை மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டது என்பது தான் மிக முக்கியமான திருப்புமுனை.
அதுவரையில் ஜெர்மன் மொழியிலும் பிரெஞ்சு மொழியிலும் டச்சு மொழியிலும் அவரவர்களின் மொழிகளில் ஆய்வுக் கட்டுரைகளை கண்டுபிடிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் அனைவருக்கும் புரிய வேண்டும் என்கிற அடிப்படையில் ஆங்கிலத்தை தேர்வு செய்தார்கள் உலகெங்கிலும் அறிவியல் ஆய்வு இதழ்கள் உருவாவதற்கும் சால்வே மாநாடுகள் முக்கியமான பங்களிப்பை செலுத்தின.. இந்த மாநாடுகளில் பங்கேற்க பல முறை இந்திய விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள் குறிப்பாக 1924 ஆம் ஆண்டு நடந்த சால்வே மாநாட்டிலும் 1027 ல் நடந்த சால்வே இரு மாநாடுகளுக்கும் அழைக்கப்பட்ட இந்திய விஞ்ஞானிகள் இருவர் சத்யேந்திரநாத் போஸ் மற்றும் மேக்னாத் சாகா.. இருவரையுமே இந்த மாநாடுகளில் கலந்து கொள்வதிலிருந்து நம்முடைய ஆங்கிலேய அரசு அனுமதி மறுத்தது என்பது வரலாறு.
உயிரியலுக்கான முதல் சால்வே மாநாடு சமீபத்தில் நடந்தது.. கோவிட 19 காலத்திற்கு பிறகு உயிரியலுக்கும் உண்மையான முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதை சால்வே மாநாட்டுக் குழு ஏற்றுக் கொண்டது 2024 ஏப்ரல் மாதம் உயிரியல் கணக்கீட்டில் அமைப்பு மற்றும் இயக்கவியல் எனும் தலைப்பில் இந்த முதல் மாநாடு நடைபெறுகிறது இதில் கலந்து கொண்ட 32 அறிஞர்களில் இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்கின்ற முக்கிய குறிப்போடு இன்னொரு விஷயத்தையும் சேர்க்க வேண்டும்..1954 வரை சால்வே மானியம் என்கிற ஒன்றை அறிவியலின் கண்டுபிடிப்புகள் நிகழ்த்துவதற்காக கொடுத்துக்கொண்டிருந்தார்கள் 1934 ஆண்டுக்கு முன்பே இயற்பியலில் ஏழு மாநாடுகளையும் வேதியியலில் நான்கு மாநாடுகளையும் நடத்திய சாதனைக்குரிய சால்வே அமைப்பு கொடுத்த மானியத்தில் தான் ஜே ஜே தாம்சன் ரூதர்போர்டு போன்றவர்களின் உடைய அறிவியல் பங்களிப்புகள் நிகழ்த்தப்பட்டன.. எனவே உலக அறிவியலின் எழுச்சிக்கு சால்வே மாநாட்டு குழுவினுடைய பங்களிப்பை உலகம் மறக்கக்கூடாது.
கட்டுரையாளர் :
ஆயிஷா இரா நடராசன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சால்வே அறிவியல் மாநாடுகளில் பங்கேற்க பல முறை இந்திய விஞ்ஞானிகள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக 1924 ஆம் ஆண்டு நடந்த சால்வே மாநாட்டிலும் 1927 ல் நடந்த சால்வே மாநாட்டிலும் இரு இந்திய விஞ்ஞானிகளை பங்கேற்க அழைக்கப்பட்டார்கள். எனினும் இந்திய விஞ்ஞானிகள் சத்யேந்திரநாத் போஸ் மற்றும் மேக்னாத் சாகா.. இருவரையுமே இந்த மாநாடுகளில் கலந்து கொள்வதிலிருந்து அப்பொழுது நம்மை ஆண்ட ஆங்கிலேய அரசு அனுமதி மறுத்தது என்பது வரலாறு.
இப்படி பலவிதமாக நசுக்கப்பட்டுள்ளோம் என்பதை அறியும் பொழுது மனம் வேதனை கொள்கிறது.
ஏன் நம் இந்திய விஞ்ஞானிகள் பழைய விஞ்ஞானிகள் குழு நிழற்படத்தில் இல்லை என்பதற்கு இந்த கட்டுரை பதிலளிக்கிறது.
எல்லா காலத்திலும் அறிவிலும் பண்பாட்டிலும், அறிவியலிலும் நம் இந்திய நாட்டின் விஞ்ஞானிகள் பங்கு அளப்பரியது என்பதை தங்கள் அறிவியல் கட்டுரைகள் மூலமே அறிவியல் அரசியலை புரிந்து கொள்கிறோம்.
மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏