“குறள் இனிது (சிங்கத்துடன் நடப்பது எப்படி)” – நூல் அறிமுகம்
இந்நூலில் கூறப்பட்டவை அனைத்தும் மிகவும் எதார்த்தமானவை தான். நம்மைச் சுற்றி நிகழும் அல்லது நம்மில் நிகழும் அடிப்படை விடயங்களை தான் அலசி ஆராய்ந்து உள்ளார் நூலாசிரியர்.
சிங்கத்துடன் நடந்து கொள்வது எப்படி என்பதை நாம் சாதாரணமாக கடந்து விட முடியாது.
வளரும் சமுதாயத்திற்கும்
வளர்ந்த சமூகத்திற்கும் வகுப்பெடுக்கும் புத்தகம்.
அனைத்து அலுவலர்களுக்கும், தொழில் முனைவோர்களுக்கும் நிச்சயம் தேவைதான்.
125 குறட்பாள்களை சிறப்பான புரிதல்களோடு தந்துள்ளார் நூலாசிரியர் சோமவீரப்பன் அவர்கள்.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தரைச் சேர்ந்து ஒழுகுவார்
என்ற வள்ளுவத்தின் வரியெடுத்து பாஸுடன் பழகும் பொழுது நாம் குளிர் காயும் நெருப்பில் இருந்து அதிகம் நெருங்காமலும், அதிகம் விலகிச் செல்லாமல் இருப்பது போல இருக்க வேண்டும் என்பதை பதிவிட்டுள்ளார்.
மேலதிகாரிகளை சமாளிப்பதில் வல்லவர்களாக இருப்பவர்கள் என்னவோ வெற்றி பெறலாம். ஆனால் எந்த இடத்தில் எப்படி பழகுவது, பேசுவது என்று தெரிந்தவர் சிங்கத்தோடு நடக்க அவசியம் தேவையில்லை…
சிங்கமாகவே நடைபோடுவர்….
உதாரணமாக ஏர்போட்டில் இறங்கிய பாஸோடு, ஹோட்டல் வரை காரில் நீங்களும் போனால் உங்களை முக்கியமானவர் என மற்றவர்கள் நினைப்பார்கள் என நாம் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உங்களை பெட்டி தூக்கவும், கார் திறக்கவும் எதிர்பார்ப்பாரா? இல்லையா? என்பதை நமது யோசனைக்கு விட்டு விடுகிறார் நூலாசிரியர்.
மன்னர் விழைய விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும்
என்ற குரளின் குரலில்….
அலுவலகத்தில் எல்லோரும் பாஸை புகழ்ந்து பேசுவது இயற்கை தான். ஆனால் நீங்கள் ஆசைப்படக்கூடாது !!
உண்மையிலேயே அவர் புகழ்ச்சிக்கு தகுதியானவர் என்றால் பாராட்டுவதில் தவறே இல்லை. அதுதான் மனித மாண்பு. பிறரை பாராட்டுவதில் தான் மனது வெளிச்சம் அடைகிறது என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான் .
ஆனால் முகஸ்துதிக்காக, பாராட்டினால் ஏதேனும் பலன் கிடைக்கும் என்ற சிந்தனைக்காக செய்வது தான் யோசிக்க வைக்கிறது.
பாஸ் தாமதமாக வரலாம்… நாம் அதை செய்யக்கூடாது…
அவர் மதிய உணவுக்கு வெளியே போவதால், நாமும் போக நினைக்க கூடாது…
அவர் விழாவில் புகைப்படம் எடுத்துக் கொண்டால் நீங்களும் போய் நிற்க கூடாது….
நீங்கள் இவ்விடத்திற்கு தவிர்க்க முடியாதவர் என அவரே அழைத்தால் மட்டுமே தலையீடு காட்ட வேண்டும் என எதற்கும் ஆசைப்படாதே பாலகுமாரா என்ற தலைப்பில் சிறப்பாக பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக அப்பாக்களும் ஆசான்களும் எதிர்காலத்தில் மதிப்பையும் மரியாதையும் எதிர்பார்ப்பார்கள்…… *பாஸ்களும் அப்படித்தான்* என சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்.
எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்கால் கேட்க மறை
என்ற பழந்தமிழ் புலவரின் குரலினால் ….
ஒட்டுக் கேட்காதே என புரியாதவர்களுக்கு புரிய வைத்துள்ளார் .
செவிக்கு உணவில்லாத என்ற வரிகள் நல்லவைகளை தான் கேட்க வேண்டுமே தவிர நமக்குத் தேவையில்லாதவற்றில் மூக்கை மட்டும் அல்ல, காதையும் நுழைக்கக் கூடாது.
உயர் அதிகாரிகள் வெளியில் பேசிக்கொண்டிருந்தால் என்ன பேசிவார்கள் என்று கேட்பதும்? இடத்தை விட்டு நகராமல் நிற்பதும் உங்கள் திறமையை தாழ்த்தும் என்பதை மறக்க வேண்டாம்.
அவர்களே உங்களை அழைத்து பேசும் பொழுது தான் வெளிப்படை தன்மை இருக்கும்.
அலுவலர்களுக்கு தயிர்சாதம், நாரதர் அல்டாப் சுந்தரி , லக்கி ராணி என பெயர் வைத்து பேசுவது அற்ப மகிழ்ச்சியை தரலாம். ஆனால் உங்கள் மேல் உள்ள மதிப்பு சற்று குறையவே செய்யும். மேலதிகாரியிடம் பயனற்றதை பேசக்கூடாது. அவரே பேசினாலும்!@!@@!!
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல்
என்ற தெய்வப் புலவரின் குரலை நினைவுபடுத்தியுள்ளார்.
சட்டி சுட்டதடா என்ற தலைப்பில் என்னை அனுபவத்திற்காக மதியுங்கள் என்று சொல்லும் நிலையை விட எனது திறமைக்காக,
எனது சாதனைகளுக்காக மதியுங்கள் என்ற நிலையே நிலையானது, உண்மையானது,உயர்வானது என்று
பழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும் என்ற குரள் மூலம் விளக்கியுள்ளார்.
கண்டிப்பைக் காட்ட சத்தமாகத்தான் பேச வேண்டும் என்பதில்லை….
ஒருவரின் மௌனம் புரியாவிட்டால் அவரின் வார்த்தைகள் மட்டுமா புரிந்துவிடும்?
பதவி என்பது போட்டுக் கழற்றும் சட்டை போன்றது…
அதற்குள் நாம் இருக்கும் வரை பணியாளர்களிடம் அன்பாய் ஆதரவாக பேசுவோம் என
காட்சிக்கு எளியன் கருஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் என்று குறளால் தெளிவுபடுத்தி உள்ளார்.
சுமாரா வேலை செய்யலாமா குமாரு, திருவள்ளுவரின் பட்ஜெட், மறந்து போனால் நற்பெயரும் போகும், பேச்சைக் குறைங்க, யாரிடம் என்ன பேசுறது, பின் சீட்டிலிருந்து கார் ஓட்டலாமா? போன்ற தலைப்புகளில் தகுந்த திருக்குறளோடு விளக்கம் அளித்துள்ளார்.
இனிதான குறளை மேலும் இனிதாக இப்புத்தகம் தந்துள்ளது. அனைத்து வயதினரும் வாசிக்கும் பொழுது பொருத்தமாகவே அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | குறள் இனிது (சிங்கத்துடன் நடப்பது எப்படி) |
| ஆசிரியர்: | சோம.வீரப்பன் |
| வெளியீடு: | தி இந்து தமிழ் திசை |
| விலை: | ₹.300 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சு.மாரியப்பன் , |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

